பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 16ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வு இயக்ககம் கூறியுள்ளது. பிளஸ் 2 தேர்வு குறித்த புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையை தருவதில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் சார்ந்த விவரங்களை இணையதளத்தில் டவுன்லோட் செய்யும் வகையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம்.
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம். Reg No:655/2014. வெ.குமரேசன் , பொதுச் செயலாளர், EMail: tnbedcsvips@gmail.com WhatsApp: 9626545446
மலர்கள்
BREAKING NEWS
Flash News
Saturday, 12 May 2018
FLASH NEWS:பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 16ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும்: அரசு தேர்வு இயக்ககம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 16ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வு இயக்ககம் கூறியுள்ளது. பிளஸ் 2 தேர்வு குறித்த புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையை தருவதில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் சார்ந்த விவரங்களை இணையதளத்தில் டவுன்லோட் செய்யும் வகையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம்.
கணினியின் மனக்குமுறல்! #savetncsteacherslife
ஊரு உலகமே கம்ப்யூட்டர்ல தான் இப்போ இயங்கிட்டு இருக்கு!
மூலை முடுக்கெல்லாம் கணினி மயமா மாறிட்டு இருக்கு. அப்புறம் ஏன் இந்த கவர்மெண்ட் மட்டும் இந்த விஷயத்தில் இவ்வளவு அசட்டையா இருக்கு.
அவங்களுக்கு கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல படிக்கிற பசங்களை பற்றி அக்கறையே இல்லியா?
நாமெல்லாம் கம்ப்யூட்டர் சயின்ஸ்ல பி.எட். படிச்சதனால் வேலை வேணும்னு கேட்கிறதை இரண்டாம்பட்சமா வச்சிகட்டும். ஒவ்வொரு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியுளும் தேவையான அளவுக்கு கணிணி ஆசிரியர்களை ஏன் நியமிக்காம இருக்காங்க.
கண்கெட்ட பிறகு எதுக்கு சூர்ய நமஸ்காரம் அப்படீங்கிற மாதிரி இந்த கணிப்பொறி யுகத்தில் வாழ்ந்துகிட்டு, ஒரு முன் யோசனை இல்லாமலா ஒரு கல்வித்துறை இயங்கிட்டு இருக்கு?
இதெல்லாம் பெரிய கொடுமை, நம்மளை மாதிரி கிராமப்புற, ஏழை குடும்பங்கள் எல்லாம் நிறைய அரசாங்க பள்ளிக்கூடங்களை நம்பி தான் அவங்க பசங்களை படிக்க அனுப்பறாங்க. அவங்களுக்கு இப்போதைக்கு அடிப்படை தேவையான கணினி அறிவியலை கற்பிக்க வைக்கணும்னு ஏன் ஒரு கல்வியாளருக்கும், கல்வித்துறையில் இருக்கும் உயரதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் தோன்றவே இல்லை.
இப்போ கணினி இல்லாத துறை எது இருக்கு? அப்படி இருக்கறப்போ அதை பள்ளியில் கற்பிக்கணும்னு ஏன் ஒருத்தருக்கும் தோணலை?-உங்களில் ஒருவன்..
TET' தேர்வில் தேற ஓராண்டு அவகாசம்
அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்வில் தேர்ச்சியடைய, ஓராண்டு கால அவகாசமே இருப்பதால், பணிப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக, பலரும் புலம்புகின்றனர்.மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி, ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டுமென, கடந்த 2010ல் உத்தரவிடப்பட்டது. இதை பின்பற்றி, கடந்த 2011ல் மாநில அரசு அரசாணை வெளியிட்டது.
இவ்விரு உத்தரவுகளுக்கு இடைப்பட்ட ஓராண்டு காலத்திற்குள் பல ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டனர். இவர்கள் 'டெட்' தேர்வு எழுதுவதா, தேவையில்லையா என, கல்வித்துறையும் தெளிவுப்படுத்தவில்லை.இதோடு,ஆண்டுதோறும் முறையாக, 'டெட்' தேர்வும், நடத்தப்படவில்லை. இந்நிலையில் மத்திய அரசு, 2019க்குள், ஆசிரியர் தகுதித்தேர்வில், வெற்றி பெறாதவர்கள் கற்பித்தல் பணிகளில் ஈடுபட முடியாது என உத்தரவிட்டுள்ளது. இது, ஆசிரியர்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக, சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பள்ளிகளில் பணியில் உள்ள, 'டெட்' எழுதாத ஆசிரியர்களுக்கு, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும், 320 ஆசிரியர்களுக்கு மட்டும், எந்த விலக்கும் அளிக்காமல், கல்வித்துறை மவுனம் சாதிப்பதாக, பலரும் புலம்புகின்றனர்.
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'அரசு மற்றும் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்வில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களோடு ஒரே சமயத்தில் பணியில் சேர்ந்த, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும், விலக்கு அளிக்கப்பட வேண்டுமென, ஏழு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஜூன் மாதம் நடக்கவுள்ள, சட்டசபை கூட்டத்தில், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றினால், பயனுள்ளதாக இருக்கும்' என்றனர்

தமிழக அரசுப்பள்ளியில் ‘இன்பர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி’
'
அடுத்த தலைமுறை ‘ஸ்மார்ட்’ தலைமுறையாக உருவாக தமிழக அரசு பள்ளி பாடத்திட்டத்தை நவீனப்படுத்தி விட்டது.
பாட முறைகளிலும், பாட விவரங்களை அறிந்து கொள்வதிலும் இந்த தலைமுறைக்கு பரிச்சியமான பல பாடப்புத்தகத்திலும் வந்துவிட்டது. தமிழக அரசு வெளியிட்ட 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டத்தில் நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள் தொடர்பான தகவல்கள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டுள்ளன. பாடநூல்களில் வழக்கமாக இடம்பெற்றிருக்கும் தகவல்களுடன் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதி பெட்டிச் செய்தி போன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட பாடத்தில் உள்ள விஷயங்கள்நமது அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு மாணவர்களுக்கு எளிய முறையில் விளக்கம்அளிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு பாடத்துக்கும் இரண்டு க்யூ.ஆர்.குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. அதை ஆண்ட்ராய்டு வசதி கொண்ட செல்லிடப்பேசியில் ஸ்கேன் செய்வதன் மூலம் பாடம் குறித்து இணையதளத்தில் ஏற்கெனவே உள்ள கருத்துகள், காணொலிக் காட்சிகள் (யு-டியூப்), படங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும்.
மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் ‘டேப்லெட்’, கணினி, கணினி தொடுதிரை போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்காக ‘இன்பர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி’ என்ற தொழில்நுட்பம், வகுப்பறைகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளது
டிஎன்பிஎஸ்சி, வங்கி, ரயில்வே தேர்வுகளுக்கு இலவச பயிற்சி: சென்னையில் அளிக்க அரசு ஏற்பாடு!!
டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே மற்றும் வங்கித் தேர்வுகளுக்கு சென்னையில் இலவச பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் நேற்று வெளியிட்ட ஓர் அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:படித்த இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பு பெறும்வகையில் அவர்களை டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, வங்கி தேர்வு, ரயில்வே தேர்வு உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்த சென்னையில் கட்டணமில்லா பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம்.
வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் ஜுன் மாதம் முதல் 3 மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்கான வகுப்புகள் தினமும் பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5 மணி வரை நடை பெறும்.இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர் மே 14 முதல் 31-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களை www.civil servicecoaching.com என்ற இணையதளத்தில்அறியலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Friday, 11 May 2018
கணினி ஆசிரியர்கள் நியமனத்திற்கு 742 பேர் தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன்
கணினி ஆசிரியர்கள் நியமனத்திற்கு 742 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி மேலாண்மை, திட்டமிடல் பல்கலைகழகம் மற்றும் தமிழ்நாட்டின் தொடக்க கல்வி இயக்ககமும் இணைந்து மாநிலத்தில் உள்ள 32 மாவட்ட தொடக்க கல்வி அலுவர்களுக்கும், 413 உதவி தொடக்க அலுவலர்களுக்குமான 2 நாள் கருத்தரங்கு இன்று தொடங்கியது.
சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்றுவரும் மாநில அளவிலான இந்த கருத்தரங்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளிக்கல்வி துறை செயலர் ப்ரதீப் யாதவ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், தமிழகத்தில் கணினி ஆசிரியர்கள் நியமனத்திற்கு 742 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் தேர்வு முடிந்ததும் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
NEWS SOURCE::http://www.cauverynews.tv/கணினி-ஆசிரியர்கள்-நியமனத்திற்கு- 742-பேர்-தேர்வு-அமைச்சர்-செங்கோட்டையன்
3000 ஆசிரியர் பணியிடங்கள் ஒழிப்பு!
* 3000 ஆசிரியர் பணியிடங்கள் ஒழிப்பு!
*வருகின்ற கல்வியாண்டில் தொடக்கத்திலே 80,000மாணவர்கள் தனியார் பள்ளியில்
*1800அரசுப்பள்ளிகள் மூடும் நிலை உருவாகும்.
இலவச கட்டாய கல்வி சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25% இலவசகல்வி பயில இன்றுவரை சுமார் 80,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால் இந்த கல்வியாண்டில் மட்டும் சுமார் 3000 ஆசிரியர் பணியிடங்களை ஒழிக்கும் என ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
பள்ளி கல்வியில் பின்தங்கிய தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள்!!!
'நாஸ்' தேர்வால் வெளிச்சத்துக்கு வந்தது..
தேசிய கற்றல் அடைவுத்தேர்வு முடிவுகள் அடிப்படையில், கோவை மாவட்டத்தில், 5, 8ம் வகுப்பு மாணவர்கள், கல்வியில் மிகவும் பின்தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், கடந்த நவ., 13ம் தேதி, நாடு முழுவதும், தேசிய கற்றல் அடைவுத்தேர்வை (நாஸ்) நடத்தியது. தமிழகத்தில், இத்தேர்வு மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நடந்தது. இதன் முடிவுகள், (www.mhrd.gov.in) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், இத்தேர்வு 104 பள்ளிகளில் நடந்தது. எட்டாம் வகுப்புக்கான தேர்வை, 30 பள்ளிகளை சேர்ந்த, 629 பேர் மட்டுமே எழுதினர். ரேண்டம் முறையில், 389 அரசுப்பள்ளி மாணவர்களும், இத்தேர்வில் பங்கேற்றனர்.தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு, அப்ஜெக்டிவ் முறையில், தலா 50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, கணிதப்பாடத்தில், 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு, 10 மாணவர்கள் மட்டுமே சரியாக பதில் அளித்துள்ளனர். பெரிய எண்களை பெருக்குதல், கூட்டல், கழித்தல் போன்ற கணக்குகளுக்கு கூட, மாணவர்கள் திணறுவதாக, ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.அறிவியல், சமூக அறிவியல் பாடத்தில், 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு, ஏழு மாணவர்கள் மட்டுமே சரியாக பதில் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேரிடர் மேலாண்மை, நகரமயமாதல் குறித்த கேள்விகளுக்கு, பல மாணவர்கள் விடையளிக்கவில்லை. தினசரி வாழ்வில் கணிதம், அறிவியல், சமூக அறிவியலின் பயன்பாடு குறித்து, பல மாணவர்களுக்கு தெரியவில்லை என்பதே, இன்றைய கல்விமுறையின் சாபக்கேடாக உள்ளதாக, கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதேபோல், ஐந்தாம் வகுப்பில், 34 பள்ளிகளில் இருந்து, 596 மாணவர்கள், நாஸ் தேர்வு எழுதினர். கணிதம், சுற்றுச்சூழல் அறிவியல் பாடத்தில், மாணவர்கள் பின்தங்கியிருப்பதாக, தேர்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கட்டுரை வாசித்தல், தமிழ் எழுத்துகளின் ஒலி வேறுபாடு, நீளம், அகலம் அளத்தல் ஆகிய கேள்விகளுக்கு, 30 சதவீத மாணவர்களால், பதில் அளிக்க இயலவில்லை. தொடக்க, நடுநிலை வகுப்புகளில், பாடத்தின் அடிப்படை புரிதலே இன்றி, மனப்பாட முறையில், மாணவர்களை தயார்படுத்துவது, இத்தேர்வு முடிவுகள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
பயிற்சியை மாற்றுவோம்!
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'தேசிய கற்றல் அடைவுத்தேர்வு, அனைத்து பள்ளிகளுக்கும் நடக்கவில்லை. ரேண்டம் முறையில் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டதால், இம்முடிவுகளை ஒட்டுமொத்த மாவட்டத்தின், கல்விகுறியீடாக எடுத்து கொள்ள முடியாது. ஆனால், இம்முடிவுகளை புறக்கணிக்கவும் முடியாது. அடுத்த கல்வியாண்டில், ஆசிரியர்களுக்கு மாறுபட்ட முறையிலான கற்பித்தல் பயிற்சிகள் அளிக்கப்படும்' என்றனர். -நமது நிருபர்
புதிய பாடப் புத்தகத்தில் பிழை!
11-ம் வகுப்பு புதிய தமிழ் பாடப் புத்தகத்தில் பிழை... இளையராஜா குறித்து தவறான தகவல்...!
சென்னை: புதிய தமிழ் பாடப்புத்தகங்களில் இளையராஜா குறித்த பாடத்தில் பிழைகள் இருக்கின்றன.
இசைத்தமிழர் இருவர் என்ற பெயரில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் குறித்த பாடம் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் இளையராஜா 1995-ம் ஆண்டில் கேரளம்-நிஷாகந்தி சங்கீத விருது வாங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் 2013-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட அந்த விருதை 2016-ம் ஆண்டு இளையராஜா வாங்கியுள்ளார்.
1998-ல் லதா மங்கேஷ்கர் வாங்கிய விருது 1988-ம் ஆண்டு வாங்கியதாக பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இளையராஜா தேசிய விருது வாங்கிய ஆண்டுகளிலும் குழப்பங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
பாடப்புத்தகங்கள் பள்ளி மாணவர்கள் மட்டும் இன்றி போட்டி தேர்வுக்கு தயாராகுவோருக்கும் அடிப்படையாக உள்ளது.
பல ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட்டுள்ள பாடப்புத்தகம், மாணவர்களுக்கு பல வகையில் உதவும் முறையில் உள்ளதாக பல பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், இதுபோன்ற தவறுகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
பள்ளிகளுக்கு இன்னும் புத்தகம் விநியோகம் செய்யப்படவில்லை. ஆதலால் தவறுகளை திருத்துக் கொண்டு புத்தகங்களை விநியோகம் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

கல்வியில் முன்னோடி தமிழகம் !முதலமைச்சர் பழனிச்சாமி.
இந்தியாவிலேயே கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு தமிழக அரசு ..
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கல்வி சிறந்து விளங்குகிறது என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும், வல்லரசு நாடுகளில் கூட மாணவர்களுக்கு இலவச மடிக்கணினியை வழங்கியதில்லை, ஆனால் தமிழகத்தில் 36 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கி, உலகச்செய்திகளை வீட்டில் இருந்து பார்க்க வழிவகை செய்து இருக்கிறோம் எனத் தெரிவித்தார்

BREAKING NEWS:1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள் வரும் 23-ம் தேதி இணையத்தில் வெளியீடு..!
சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள்,
http://www.tnscert.org என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnscert.org என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்
Thursday, 10 May 2018
நவீனத்தை கற்று தரும் பள்ளிப் பாடம் வந்துவிட்டது...!
எத்தொழில்துறையில் நுழைந்தாலும் அதில் கணினி அறிவு நிச்சயம் தேவைப்படுகிறது!கணினி படித்த 60000 ஆசிரியர்களக்கு தமிழகத்தில் வேலையில்லை!!!
அடுத்த தலைமுறை ‘ஸ்மார்ட்’ தலைமுறையாக உருவாக தமிழக அரசு பள்ளி பாடத்திட்டத்தை நவீனப்படுத்தி விட்டது. பாட முறைகளிலும், பாட விவரங்களை அறிந்து கொள்வதிலும் இந்த தலைமுறைக்கு பரிச்சியமான பல பாடப்புத்தகத்திலும் வந்துவிட்டது.
தமிழக அரசு வெளியிட்ட 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டத்தில் நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள் தொடர்பான தகவல்கள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டுள்ளன.
பாடநூல்களில் வழக்கமாக இடம்பெற்றிருக்கும் தகவல்களுடன் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதி பெட்டிச் செய்தி போன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட பாடத்தில் உள்ள விஷயங்கள் நமது அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு மாணவர்களுக்கு எளிய முறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடத்துக்கும் இரண்டு க்யூ.ஆர்.குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. அதை ஆண்ட்ராய்டு வசதி கொண்ட செல்லிடப்பேசியில் ஸ்கேன் செய்வதன் மூலம் பாடம் குறித்து இணையதளத்தில் ஏற்கெனவே உள்ள கருத்துகள், காணொலிக் காட்சிகள் (யு-டியூப்), படங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும்.
மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் ‘டேப்லெட்’, கணினி, கணினி தொடுதிரை போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்காக ‘இன்பர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி’ என்ற தொழில்நுட்பம், வகுப்பறைகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
பாடநூல்களில் ஒவ்வொரு பாடங்கள் தொடர்பாகவும் கூடுதல் விவரங்களைப் பெறுவதற்காக இணையதள முகவரிகள் இடம்பெற்றுள்ளன.
பாடநூலின் பின்பகுதியில் முக்கிய கலைச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் சொற்களஞ்சியம் பகுதியில் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பகுதியில் அந்தப் பாடம் இடம் பெற்றதற்கான காரணம் – பாடத்தில் குறிப்பிட்டுள்ள விஷயம் தொடர்பாக உயர் கல்வியில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்ற தகவல் இடம்பெற்றுள்ளன.
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு தொழில்துறையில் பெற்றுள்ள வளர்ச்சியையே சார்ந்து இருக்கும். அதை தான் சீனா, ஜப்பான் நாடுகளில் பார்த்து வியக்கிறோம்.
தொழில் வளர்ச்சிக்கு மிக அவசியமானது கல்வி, அதில் தொழிற்கல்வி மிக அவசியமான அங்கமாகும்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏதேனும் ஒன்றில் ஈடுபாடு காட்ட வைத்துவிட்டால் பிற்காலத்தில் அம்மாணவன் எதை படித்தால் நல்லது? என யோசிக்கும்போது, தனது ஆர்வம் எதில் இருக்கிறது என்பதை தெளிவாக கூறும் நாள் வரும்!
இன்றைய சமுதாயம் கணினி புரட்சியால் இயங்கிக் கொண்டு இருப்பதால் எத்தொழில்துறையில் நுழைந்தாலும் அதில் கணினி அறிவு நிச்சயம் தேவைப்படுகிறது.
விவசாயம், மருத்துவம், பொறியியல், வரலாறு என்று எந்த படிப்பை மேற்கொண்டாலும் இனி கணினி பயிற்சியின்றி செயல்பட முடியாத நிலை இருப்பதால் தமிழக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எடுத்துள்ள புதிய முயற்சியை நாடே பாராட்டி வரவேற்கிறது

பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை மீறி சிறப்பு வகுப்பு தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்ததில், 20 மாணவர்கள் காயமடைந்தனர்...
திருவண்ணாமலையில், சிறப்பு வகுப்புக்கு மாணவர்களை அழைத்து சென்ற, தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்ததில், 20 மாணவர்கள் காயமடைந்தனர்.
திருவண்ணாமலை மணலூர்பேட்டை ரோட்டில், முருகையா மெட்ரிக்குலேசன் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. மாணவ, மாணவியருக்கு கோடை விடுமுறையை விடப்பட்டாலும், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்காக, பள்ளி பஸ் நேற்று காலை, 9:00 மணிக்கு, 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை ஏற்றி கொண்டு, திருவண்ணாமலை - மணலூர் பேட்டை சாலையில், தச்சம்பட்டு அருகே சென்று கொண்டிருந்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில், எட்டு மாணவியர், 12 மாணவர்கள் என, 20 பேர் காயமடைந்தனர். அனைவரும், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை மீறி, கோடை விடுமுறையில், சிறப்பு வகுப்புகள் நடத்தியது குறித்து, விளக்கம் கேட்டு, பள்ளி நிர்வாகத்துக்கு, அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்
Flash News:New Syllabus Textbooks Uploaded Shortly
Flash News:
New Syllabus Textbooks Uploaded Shortly
தமிழ்நாடு பாடநூல் வெளியீடு இணையதளம் சென்று பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
Wednesday, 9 May 2018
கட்டாயம் பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்
கணினி ஆசிரியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய காணொளிப்பதிவு ...
CLICK HERE:https://youtu.be/2t4zVQZEVSg
தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் வேண்டுகோள்..
ஆசிரியர்கள் பள்ளி நேரத்தில் செல்போன் பேச தடை: CEO தகவல்
விழுப்புரம்:விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டிற்கான ஆயத்த கூட்டம் நடைபெற்றது.விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடந்த கூட்டத்தில், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் உள்ள 133 அரசு பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு தலைமை தாங்கி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பேசியதாவது:அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் சேர்க்கையை அதிகபடுத்துவதோடு, அது சம்பந்தமாக விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்த வேண்டும். அதில், அரசு பள்ளிகளின் பெருமை மற்றும் மாணவர்களின் சேர்க்கை, பள்ளி வளாகத்தை துாய்மையாக வைத்து கொள்ளுதல் ஆகியவற்றை வெளிப்படுத்த வேண்டும். பள்ளிகளின் சுற்றுசுவற்றில் ஒட்டப்பட்டுள்ள சினிமா மற்றும் அரசியல் சுவரொட்டிகளை அகற்றி விட்டு, திருக்குறள் வாசகங்களை எழுதி வைக்க வேண்டும்.அது மட்டுமின்றி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த வழிவகை செய்ய வேண்டும். ஆறு முதல் 9ம் வகுப்புகள் வரையுள்ள மாணவர்களின் தேர்வு முடிவுகளை வரும் 14ம் தேதி வெளியிட வேண்டும். இந்த கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் மட்டுமின்றி, வகுப்பறைகளில் ஆசிரியர்களும் கூட மொபைல் பயன்படுத்துதல் கூடாது என தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் நீலாம்பாள், சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர்கள் ராஜேந்திரன், காளிதாஸ், பள்ளி துணை ஆய்வாளர் இருதயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்
10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் புதிய முறையில் வெளியீடு - பள்ளிக்கல்வித்துறை ..
10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளைபுதிய முறையில் பள்ளிகளுக்கான இமெயிலில் நேரடியாக அரசுத் தேர்வுத்துறை இந்த ஆண்டு வெளியிடுகிறது.
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை அரசுத் தேர்வுத்துறை நடத்தி வருகிறது. தமிழக அரசுத் தேர்வுத்துறை 1972-ம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறையில் இருந்து பிரிக்கப்பட்டு, அரசுத் தேர்வுகள் ஆணையரகம் என உருவாக்கப்பட்டது. 11 ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கான தேர்வினை நடத்தித் தேர்வு முடிவினை வெளியிட்டனர்.
அப்போது தேர்வு முடிவுகள் வெளியிடும் போது அதனை செய்தித்தாள்களில் தேர்வர்களின் பதிவு எண்களை பிரசுரம் செய்வர். தேர்வு எழுதியவர்கள் தங்களின் தேர்வு முடிவினை அறிவதற்காகவும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் தேர்வு முடிவினை அறியவும் ஆவலுடன் செய்தித்தாள்களை வாங்கித் தேர்வு பதிவு எண்களைப் பார்த்து அறிந்து கொள்வர். 11 ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அதன்பின்னர் பியுசி படிப்பைக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும்.
இந்த முறை 1978-ம் ஆண்டில் மாற்றப்பட்டு, 10 ம் வகுப்பு, 12ம் வகுப்பு எனப் பிரித்தனர். அது வரை 11 ம் வகுப்பு வரை நடைபெற்ற தேர்வானது, 10-ம் வகுப்பிற்கு(எஸ்.எஸ்.எல்.சி) ஒரு பொதுத் தேர்வும், 12 ம் வகுப்பிற்கு(பிளஸ்-2) ஒரு பொதுத் தேர்வும் நடத்தப்பட்டது.
தேர்வு முடிவுகள் வெளியான இரு தினங்களுக்குள் மாணவர்கள் தேர்வு எழுதிய பள்ளிகளுக்கு அவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பதிவேடு அனுப்பப்பட்டன. மாணவர்கள் மதிப்பெண் பதிவேட்டில் கையெழுத்திட்டு, தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழில் மாணவரும், பெற்றோர் அல்லது பாதுகாவலரும் கையெழுத்திட வேண்டும்.
இந்த முறையில் தொடர்ந்து 1998 ம் ஆண்டு வரை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. ஆனால் 1999 ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடும் போது புதிய முறையாக அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் அன்றே மாணவர்கள் தங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலோ அல்லது பள்ளியிலோ தங்களின் பாடவாரியான மதிப்பெண்களை அறிந்து கொள்ள முடிந்தன.
அப்போதும் தொடர்ந்து தேர்வு முடிவுகள் செய்தித்தாள்களுக்கு பதிவு எண்களை வெளியிட அளிக்கப்பட்டு வந்தன. ஆனால் 2002-ம் ஆண்டு செய்தித்தாள்களுக்கு பதிவு எண்களை வெளியிடுவதற்கு சிடி அளிக்கப்பட்டு வந்த முறை நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2003-ம் ஆண்டு முதல் அரசுத் தேர்வுத்துறையின் தேர்வு முடிவுகளை வெளியிட விரும்பும் இணையதளத்தினை நடத்தும் நிறுவனங்கள் பணம் செலுத்தித் தேர்வு முடிவுகளைப் பெற்று வெளியிடும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த முறையின் மூலம் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை இணையதளங்களின் மூலம் உடனடியாக அறிந்தனர். ஆனால் 2013-ம் ஆண்டு முதல் தனியார் நிறுவனங்கள் இணையதளம் மூலம் தேர்வு முடிவினை வெளியிடுவதற்கு வழங்கப்பட்டு வந்த சி.டி.கள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் 2014-ம் ஆண்டு முதல் அரசுத் தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் மட்டும் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 10,12ம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மதிப்பெண் சான்றிதழுக்கு பதிலாகத் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நாட்களில் இருந்து 90 நாட்கள் செல்லும் வகையில் அரசு அறிவித்தது. இதன் மூலம் 10,12-ம் வகுப்புத் தேர்வில் ஒரு சில பாடத்தில் தோல்வி அடைந்து, சிறப்புத் துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்களின் மதிப்பெண்களும் மதிப்பெண் பட்டியலில் இடம் பெற்றது.
கடந்த 2017ம் ஆண்டு முதல்முறையாக 10,12-ம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ்.மூலம் வெளியிடப்பட்டன. மேலும் மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் பெயர் விபரம், மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் விபரம், பாடவாரியாக முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் விபரம் தரவரிசை (ரேங்க்) அளிக்கும் முறை ஒழிக்கப்பட்டது.
இந்நிலையில் இதில் அடுத்தக்கட்ட முன்னேற்றமாக இந்த ஆண்டு பள்ளி மாணவர்களின் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்.மூலமும், பள்ளியின் இ-மெயில் முகவரிக்கு நேரடியாக அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த முடிவுகள் வரும் 16-ம் தேதி வெளியிடப்படுகிறது. 11-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 7-ம் தேதி துவங்கி ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைந்தது. இதன் தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதி வெளியிடப்படுகிறது.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச்16-ம் தேதி துவங்கி ஏப்ரல் 20-ம் தேதி முடிவடைந்தது. இதன் மே 23-ம் தேதி வெளியிடப்படுகிறது. அரசுத் தேர்வுத்துறை இயக்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் ஆன்லைன் முறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே எந்தப் பள்ளியும் அறிந்து கொள்வதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை பள்ளிகளுக்கு அனுப்பும் புதிய முறையை அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஏற்கனவே வெளியிட்ட அரசாணையில், மார்ச் 2018 முதல் 11,12,10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் மூலமாக அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வழிவகை செய்வதற்கு அரசுத் தேர்வுத்துறைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அதற்கான பணிகளை அரசுத் தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. வரும் 16 ந் தேதி காலையில் பள்ளிகளுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் மூலம் அனுப்பப்படுகிறது. அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளின் விவரங்கள் வெளியிடப்படுகிறது என அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
Tuesday, 8 May 2018
திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் -ஸ்டாலின்
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டார்.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் நியாயமானது என்று கூறினார்.மேலும் ஜாக்டோ ஜியோவினர் போராட்டம் அறிவித்தவுடன், அவர்களுடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத்தீர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று கூறிய ஸ்டாலின், போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கைது செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தும் முன்பே தமிழக அரசு அழைத்து பேசியிருக்க வேண்டும் என்றும் அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார். இதனிடையே போராட்டம் நடத்திய ஜாக்டோ- ஜியோவினரை வலுக்கட்டாயமாக கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை காவல்துரையினர் கைது செய்வது பண்பாடற்ற ஜனநாயக விரோத செயல் என்று கூறிய ஸ்டாலின், அரசு ஊழியர்களை பயங்கரவாதிகளைபோல் வலைவீசி தேடி கைது செய்வதா என்றும் கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்.
இதையடுத்து தமிழகத்தில் அரசாங்கம் ஒன்று இருப்பதாகவே நான் கருதவில்லை என்றும் கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார். மேலும் அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்குவதை விளம்பரம் செய்து ஜெயக்குமார் இழிவுப்படுத்துகிறார் என்றும் துப்பாக்கி , தடியை காட்டி அரசு ஊழியர்களை வழிக்கு கொண்டு வர முதல்வர் பகல் கனவு காண்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.அரசு ஊழியர்களும்,ஆசிரியர்களும் அரசு நிர்வாகத்தை தாங்கி நிற்கும் தூண்கள் என்பதை உணர மறுக்க கூடாது என்றும் ஸ்டாலின் எடுத்துரைத்தார்
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி வகுப்பு - வரும் கல்வி ஆண்டு முதல் அறிமுகம்!!
இந்தாண்டு முதல் 670 அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி வகுப்புகள் குறைந்தது மூன்று மணி நேரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. |
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க மத்திய அரசின் கல்வி திட்டங்கள் எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் ஆசிரியர் கல்வி (டி.இ.) ஆகியவை மூலம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் விருப்பத் திறனை அறிந்து அவர்களுக்கு தொழில் பயிற்சி அளிப்பதன் மூலம் தொழில் சார்ந்த அறிவும், ஆற்றலையும் வளர்க்க முடியும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பள்ளிக் கல்வித் துறையின் மூலம் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க தமிழகம் முழுவதும் 670 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 67 பள்ளிகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் அனுமதி கிடைத்துவிட்டது.
பள்ளி வளாகத்திலேயே மாணவர்கள் விருப்பத்தை அறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வெவ்வேறு பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு சமமான தொழில் கல்வி அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின்படி ஒரு பள்ளியில் குறைந்தபட்சம் 80 மாணவர்களை தேர்வு செய்து தொழில் பயிற்சி அளிக்கப்படும்.
விவசாயம், ஆட்டோ மொபைல், ஜவுளி, எலக்ட்ரானிக், ஹார்டுவேர், சுகாதாரம், சுற்றுலா, அழகு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு தொழிற் பயிற்சிகள் மாணவர்கள் விருப்பம் அறிந்து அளிக்கப்படும்.
இப்பயிற்சி 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும். ஒரு மாணவனுக்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கிறது என்பதை கேட்டறிந்து அதற்கேற்றவாறு இத்தொழில் பயிற்சி அளிக்கப்படும். ஒரு வாரத்துக்கு குறைந்தது 3 மணி நேரம் தொழில் சார்ந்த பயிற்சி அளிக்கப்படும்.
உதாரணத்திற்கு வேளாண்மை துறையில் இன்றைய காலகட்டத்தில் நவீன மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. புதிய தொழில்நுட்பம், ஆர்கானிக் பயிர் வகைகள் போன்ற விவசாயத்தில் நவீன மாற்றங்களை மாணவர்களுக்கு பள்ளியில் கற்றுக் கொடுத்தால் உயர்கல்வி பெறும் நிலையில் ஒரு பெரிய தொழில் முனைவோராக உருவாக்க முடியும் என்ற நோக்கத்தில் மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பிக்கப்பட உள்ளது.
தொழிற்கல்வி பயிற்சி வருகின்ற கல்வி ஆண்டு முதல் மாணவர்களுக்கு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொழில் சார்ந்ததாகவும் இப்பயிற்சி அளிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பயிற்சி நிறைவு பெறும் ஆண்டில் மாணவர்களுக்கு தொழிற்கல்வி சான்றிதழ் வழங்கப்படும். 9-ம் வகுப்பில் அளிக்கப்படும் பயிற்சி தொடர்ந்து அடுத்த வகுப்பிற்கு மாறி செல்லும்போது தொழிற் பயிற்சியும் இடைவிடாமல் அளிக்கப்பட உள்ளது. இதற்காக அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி சிறப்பு ஆசிரியர்களையும் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பள்ளியில் 2 வகுப்பறைகள் இதற்காக வடிவமைக்கப்படுகிறது.
கோவை வருவாய் மாவட்டத்தில் 23 அரசு மற்றும் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் இத்திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
வேளாண்மை தொழிற் பயிற்சிக்கு 8 பள்ளிகளும், ஜவுளி தொழிற்பயிற்சிக்கு 5 பள்ளிகளும், எலக்ட்ரானிக் மற்றும் ஹார்டுவேர் பயிற்சிக்கு 7 பள்ளிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 2 அரசு பள்ளியும், ஒரு மாநகராட்சி பள்ளியும் கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டன. ஆனால் அவை ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
மாணவர்களின் ஆர்வத்தை பார்த்துதான் தொழிற்பயிற்சி திட்டம் தொடங்கப்படும். இதற்காக விரைவில் ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்க திட்டமிட்டுள்ளது
"கணினி ஆசிரியர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல் "
ஆசிரியர் -அரசு ஊழியர்கள் சென்னை போராட்டத்தில் பங்கேற்ற தஞ்சாவூர் பாபநாசத்தை சேர்ந்த பார்வையற்ற ஆசிரியர் தியாகராஜன் மரணம் ஆசிரியர் சமுதாயத்தினரிடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரின் மறைவிற்கு தமிழ்நாடு பி .எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
திரு வெ.குமரேசன்,
பொதுச் செயலாளர்,
9626545446 ,
தமிழ்நாடு பி .எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.
பதிவு எண்:655/2014 .
Monday, 7 May 2018
Flash News : JACTTO GEO - போராட்டத்தில் ஆசிரியர் உயிரிழப்பு
.
* சென்னையில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டபார்வையற்ற சிறப்பாசிரியர் தியாகராஜன் உயிரிழப்பு.
* இவர் தஞ்சை மாவட்டம் பாவநாசம் அரசுப் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
* போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு சென்னை எழும்பூர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் போது உயிரிழந்தார்
சிபிஎஸ்இ, என்சிஇஆர்டிக்கு இணையாக பாடத்திட்டத்தை கொண்டுவர: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!!
நீட் போன்ற தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (என்சிஇஆர்டி) இணையாக மேம்படுத்த கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய அளவில் நடத்தப்படும் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளுக்கும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் போன்ற போட்டித் தேர்வுகளுக்கும், மத்திய அரசு பாடத் திட்டங்களான சிபிஎஸ்இ மற்றும் என்சிஇஆர்டி பாட திட்டங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.
தமிழக பாட திட்டத்தின் கீழ் நன்றாக படிக்கும் மாணவர்களால் இந்த போட்டித் தேர்வுகளில் வெற்றியடைய முடியவில்லை எனக் கூறி, சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி பாட திட்டத்துக்கு இணையாக பாட திட்டத்தை மேம்படுத்த கோரி வக்கீல் மார்ட்டின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன், நீதிபதி சேஷசாயி அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் வாதிடும்போது, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகள், மாநில பாட திட்டத்தை சிபிஎஸ்இக்கு இணையாக மேம்படுத்தியுள்ளன.
தமிழக பாடத் திட்டத்தை மேம்படுத்த கோரிய போது, அது மாநில அரசின் கொள்கை சார்ந்த விஷயம் என்பதால் எதுவும் செய்ய முடியாது என்று வாதிட்டார். மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் தள்ளிவைத்தனர்.
கொலை குற்றவாளிகளைப் போல ஆசிரியர்கள் மிரட்டி கைது செய்யப்படுகின்றனர்!!
"கொலை குற்றவாளிகளைப் போல ஆசிரியர்கள் மிரட்டி கைது செய்யப்படுகின்றனர்!" அரசு ஊழியர் சங்க நிர்வாகி
வி.எஸ்.சரவணன் வி.எஸ்.சரவணன்
நாளை (மே - 8) ஒரு லட்சம் அரசு ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிடப் போகிறார்கள் எனும் அறிவிப்பு ஆளும் அரசைக் கடுமையாக உலுக்கியிருக்கிறது. அந்த முற்றுகைப்போராட்டத்தை நிறுத்தவோ, நீர்த்துப்போகச் செய்யவோ தனது நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியிருக்கிறது. வாட்ஸ் அப், முகநூல் வழியாக அரசு ஊழியர்களை ஒருங்கிணைக்கும் பணிகளைச் சங்க நிர்வாகிகள் மும்முரமாகச் செய்துவருகின்றனர்.
ஆசிரியர்
நாளைய போராட்டம் குறித்து ஜாக்டோ - ஜியோ சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மு.அன்பரசுவிடம் பேசினோம்.
"எங்களின் போராட்டம் பற்றிச் சொல்வதற்கு முன், எங்களின் முதன்மையான நான்கு கோரிக்கைகளைச் சொல்லிவிடுகிறேன். ஒன்று, CPS திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். இரண்டாவது, இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி! ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்களுக்கு ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். பல்கலைக்கழக கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் அமல்படுத்துதல். மூன்றாவது, சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், மற்றும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள், தொகுப்பூதியம், கணினி ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும். நான்காவதாக, 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடன் ரொக்கமாக வழங்கிட வேண்டும்.
அன்பரசு இந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில்தான் நாங்கள் போராட்டத்துக்கு அழைப்புக்கொடுத்தோம். வழக்கமாக இப்படியான போராட்ட அறிவிப்புக்குப் பின் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும். ஆனால், இப்போதைய அரசு அதற்கும் முன் வரவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 - விதியின் கீழ் அறிவித்ததைக் கூட இப்போது ஆள்பவர்கள் செய்வற்குத் தயாராக இல்லை. இதற்கென, 2016 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அமைக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட வல்லுநர் குழு தனது அறிக்கையை இன்னும் கொடுத்தபாடில்லை. 21 மாத அரியர் தொகையை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட மேல் மட்டத்தில் உள்ளவர்களுக்குக் கொடுத்தவர்கள், எங்களுக்குக் கொடுக்க வில்லை. அவர்களோடு ஒப்பிடும்போது எங்களுக்கான தொகை குறைவுதான். சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் அமைச்சர்களோடு நடத்திய பேச்சு வார்த்தையில் தீர்வு எட்டாததால் முதல் அமைச்சரோடு சந்திப்பை ஏற்பாடு செய்தனர். ஆனால், அவர், 'விவசாய பஞ்சத்தைப் பாருங்க, நிதிநிலையைப் பாருங்க' என்பதாகப் பேசினார். நிதி நிலைமை சிக்கலில் இருக்கிறது என்றால், எம்.எல்.ஏக்களுக்கு இவ்வளவு ஊதிய உயர்வு அளித்தது ஏன் என்று கேள்வி எழுப்பினோம். அந்தப் பேச்சு வார்த்தையும் எங்களுக்குத் திருப்தி தருவதாக இல்லை. எவ்வளவு நாள்கள்தான் காத்திருப்பது. அதனால்தான் 114 அமைப்புகள் ஒருங்கிணைந்து இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளோம். எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும்பட்சத்தில் 12 லட்சத்துக்கும் மேல் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.
எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை இந்த அரசு முன்னெடுப்பதற்குப் பதில், தமிழ்நாடு எங்கிலும் ஆசிரியர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஆசிரியர்கள் என்றும் பாராமல் கொலை குற்றவாளிகளைப் போல மிரட்டி கைது செய்யப்படுகின்றனர். வீட்டில் உள்ள குழந்தைகளையும் மிரட்டுகின்றனர். இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இப்போதும் காலமிருக்கிறது. அரசு சங்கங்களோடு பேசுவதற்குத் தயாராக வேண்டும். இல்லையெனில், திட்டமிட்டபடி நாளை எண்ணற்ற அரசு ஊழியர்கள் கோட்டையை முற்றுகையிடுவோம். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தொடர் போராட்டத்தையும் நடத்துவோம்" என்கிறார் ஆவேசத்துடன்.
ஆசிரியர்
ஆசிரியர், அரசு ஊழியர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை சிஐடியூ தலைவர் அ.செளந்தரராஜன் கடுமையாகக் கண்டத்தைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், 'கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்க தயங்கிய முன்னெச்சரிக்கை கைது அணுகுமுறையை மீண்டும் உயிர்ப்பிக்க எடப்பாடி அரசு துணிந்துள்ளதற்கு தமிழக உழைப்பாளி மக்கள் தக்கபாடம் புகட்டுவார்கள் என எச்சரிக்கை செய்கிறோம். தமிழக அரசு தரப்பில் அமைச்சர் ஜெயகுமார், அரசுக்கு வரும் வருவாயில் 70 சதமானம் அரசு ஊழியருக்குச் செலவிடப்படுவதாக உண்மைக்குப் புறம்பான கருத்தை அரசு செலவிலேயே விளம்பரமாகக்கொடுத்துள்ளார். இது பிரச்னையைத் திசைதிருப்பும் மோசமான செயலாகும். தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக அரசின் அடக்குமுறையை மீறிப் போராடும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்குத் தமிழக தொழிலாளி வர்க்கத்தின் சார்பில் முழு ஆதரவை சிஐடியு தெரிவித்துக்கொள்கிறது. தமிழக அரசு தனது தவறான அணுகுமுறையைக் கைவிட்டு, போராடும் தொழிற்சங்கத்தினரை அழைத்துப் பேசி சுமூக தீர்வு காணவும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்கள் கைது நடவடிக்கையைக் கண்டித்து, சமூக ஊடகங்களில் சக ஆசிரியர்கள் தங்களின் எதிர்ப்புகளைப் பதிவுசெய்துவருகின்றனர். ஆசிரியர்களுக்கான வாட்ஸ் அப் குரூப்களில் இது குறித்த உரையாடல்களே நடக்கின்றன. சில பகுதிகளில் கைது செய்தவர்களை விடுவிக்கக்கோரி துண்டறிக்கைகளை அடித்து விநியோத்தும் வருகின்றனர்.

FLASH NEWS:ஆசிரியர்கள் தொடர் கைது! மண்டபத்தில் தண்ணீர் கூட இல்லாமல் அவதி!
சென்னை வந்து இறங்கிய நம் தோழர்கள் செந்துரை திரு.அன்பழன் உட்பட 100 மேற்பட்டவர்களை சேப்பாக்கத்தில் 5:30 am போலீஸ் கைது நடவடிக்கை செய்துள்ளது
மண்டபத்தில் அடைப்பு
தண்ணீர் வசதி இல்லை தோழர்கள் அவதி காலைக் கடன் முடிக்க முடிவில்லை என்று கவலையில் உள்ளனர்.
*கீழ்பென்னாத்தூரில் ஜக்டோ ஜியோ போராளிகள் 30 பேர் கைது செய்யப்பட்டு ஜெயராம கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கபட்டுள்ளனர்

அரசு ஊழியர்கள் போராட்டத்தை முடக்க சங்கத் தலைவர்களை கைது செய்யும் காவல் துறை: அன்புமணி கண்டனம்!
நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் அரசு ஊழியர்களின் போராட்டத்தை முடக்க சங்கத் தலைவர்களை காவல் துறை கைது செய்வதாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி வழங்கப்பட வேண்டிய 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் நாளை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
அந்தப் போராட்டத்தை முறியடிக்கும் நோக்குடன் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் இரவோடு, இரவாக கைது செய்து வருவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கதாகும். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் முன்வைத்துள்ள கோரிக்கைகள் மிகவும் நியாயமானவையாகும். அதுமட்டுமின்றி, இந்தக் கோரிக்கைகளை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இப்போது புதிதாக முன்வைக்கவில்லை.
கடந்த பல ஆண்டுகளாக இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து ஏராளமான போராட்டங்களை நடத்தினார்கள். ஒவ்வொரு முறை போராட்டம் நடத்தும் போதும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்து வந்த தமிழக அரசு, அதற்கான நடவடிக்கைகளை எடுக்காததால் தான் வேறு வழியின்றி இறுதி கட்டமாக கோட்டை முற்றுகையை அறிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்களின் போராட்டத்தைக் களைய வேண்டுமானால், அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து அமைச்சரோ, முதலமைச்சரோ பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாத தமிழக அரசு மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தி அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளை கைது செய்யும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டிருக்கிறது.
அரசு ஊழியர்களிடம் நியாயமும், நேர்மையும் இருப்பதால் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராட்டம் நடத்துகின்றனர். அரசிடமும் அதே நேர்மையும், நியாயமும் இருந்திருந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அத்தகைய நேர்மையும், நியாயமும் இல்லாததால் தான் அடக்குமுறையை அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது.
அரசு ஊழியர்களை கைது செய்வதற்கு மட்டுமின்றி, அவர்களின் போராட்டம் தேவையற்றது என்று கூறுவதற்கும் தமிழக அரசுக்கு எந்த தகுதியும், உரிமையும் இல்லை. தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது இதுவரை விளக்கப்படவில்லை.
அது தொடர்பான கணக்கு வழக்குகளும் அரசு ஊழியர்களிடம் காட்டப்படவில்லை. இதற்கெல்லாம் மேலாக பல ஊழியர்கள் ஓய்வூதியம் பெறாமலேயே ஓய்வு பெற்றுவிட்டனர். இதுதொடர்பான அரசு ஊழியர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி ஆராய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஒரு வல்லுநர் குழுவை அமைத்தார்.
இந்தக் குழு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளைப் பல்வேறு கட்டங்களாக அழைத்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து வந்தது. அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்டும் இன்று வரை அதன் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட வில்லை. இனியும் காத்திருக்க முடியாது என்ற நிலையில் தான் ஊழியர்கள் போராடத் தயாராகின்றனர்.
அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், அவர்களின் கோரிக்கைகளை ஏற்பது குறித்தோ, அவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயம் குறித்தோ எதையும் கூறவில்லை. மாறாக, அரசு ஊழியர்களுக்கு அள்ளிக் கொடுப்பதால் தான் அரசு கடன் சுமையில் சிக்கியிருப்பதைப் போன்றும், அதனால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதை ஏற்க முடியாது.
அரசு ஊழியர் ஊதியம் உயர்த்தப்பட்டது பிரச்சினையில்லை. அதற்கு இணையாக அரசின் வருமானத்தை உயர்த்தாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணமாகும். இதையெல்லாம் மறைத்து விட்டு, அரசின் தோல்வியை அதிகாரிகள் மீது சுமத்தி சிக்கலை திசைதிருப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
2003-ம் ஆண்டு இதைவிட கடுமையான அடக்குமுறைகளை அரசு ஊழியர்கள் மீது ஜெயலலிதா கட்டவிழ்த்து விட்டது. இறுதியில் அவர்களிடம் அரசு பணிந்ததை தமிழகம் அறியும். எனவே, வீணாக கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்” என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்
Sunday, 6 May 2018
ரூ.5 கோடி செலவு' நீட் தேர்வு பயிற்சிக்கு-பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்.
நீட் தேர்வு பயிற்சிக்கு, ஐந்து கோடி ரூபாய் செலவானது, என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், மொடச்சூரில் நேற்று, அவர் அளித்த பேட்டி: நடப்பாண்டு, பள்ளிக்கல்வித் துறைக்கு, 27 ஆயிரத்து, 205 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையால் உருவாக்கப்பட்ட, 'ஹெல்ப் லைன்' எண்ணுக்கு, 3,860 பேர் தொடர்பு கொண்டனர். இதில், சந்தேகங்கள் தான் நிவர்த்தி செய்யப்பட்டன. எந்த குற்றச்சாட்டும் வரவில்லை.தமிழகத்தில், 412 மையங்களில், நீட் தேர்வுக்காக பயிற்சி அளிக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பயிற்சிக்காக, 72 ஆயிரம் பேர் ஆன்லைனில் பதிவு செய்தனர்; 8,226 பேர் மட்டுமே வந்தனர். இவர்களில் நல்ல மதிப்பெண் பெற்ற, 3,154 பேருக்கு, 26 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு, ஐந்து கோடி ரூபாய் செலவானது. இந்தியாவிலேயே இம்முயற்சியை நாம் தான் மேற்கொண்டோம். மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளியை, சீர் செய்வது குறித்து, துறை ரீதியாக ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

நீட் தேர்வு எழுதுவதற்காக சுவர் ஏறி குதித்த மாணவர்கள் வெளியே துரத்திய அதிகாரிகள்

பெங்களூரு: பெங்களூருவில் நீட் தேர்வு எழுதுவதற்காக சுவர் ஏறி குதித்த 3 மாணவர்களை தேர்வு கண்காணிப்பாளர்கள் வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்தது. பெங்களூரு காமராஜர் சாலையில் உள்ள ராணுவ அரசு பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் காலை 9.30 மணிக்கு நடைபெற்ற தேர்வில் கலந்து கொள்வதற்காக மாணவர்கள் அனைவரும் முன்கூட்டியே காத்திருந்தனர். சரியாக 9.30 மணிக்கு அனைவரும் தேர்வு அறைக்கு அனுப்பபட்டனர்.
இந்நிலையில் ஹுப்பளி, பீதர், கலபுர்கியை சேர்ந்த 2 மாணவிகள் உள்பட 3 பேர் 2 நிமிட தாமதமாக தேர்வு மையத்திற்கு வந்தனர். அவர்களை நுழைவாயிலின் வெளியே நிறுத்திய பாதுகாப்பாளர்கள், தேர்வு கண்காணிப்பாளர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்களும், அங்கிருந்தவர்களும் மாணவர்களை சுவர் ஏறி குதித்து சென்று தேர்வு எழுதும்படி கூறினர்.
இதையடுத்து, 3 பேரும் பள்ளியின் நுழைவாயில் கேட் மற்றும் சுவரை ஏறி குதித்து சென்று தேர்வு அறைக்குள் சென்றனர். அங்கிருந்த தேர்வு அதிகாரிகள் 3 பேரையும் இழுத்து வந்து வெளியே விட்டு சென்றனர். இந்த காட்சிகள் அங்கிருந்த பெற்றோர் மற்றும் பிற மாணவர்களின் தாய், தந்தையை அதிர்ச்சி அடைய செய்தது. தேர்வு அதிகாரிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பிய அவர்கள், மாணவர்களை வெளியே துரத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்

கல்வியில் கணினி, தகவல் தொழில்நுட்ப கல்வி முறை !!!
கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்பித்தல் முறை குறித்த ஆசிரியர்களுக்கான பயிற்சி ஆம்பூர் இந்து ஆரம்பப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாதனூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாதேஷ் தலைமை வகித்து பயிற்சியைத் தொடங்கி வைத்தார். இந்து ஆரம்பப் பள்ளித் தலைமை ஆசிரியர் கே. சீனிவாசன் வரவேற்றார். சிந்தகாமணிபெண்டா பள்ளி ஆசிரியர் ஏ. அருண்குமார் பயிற்சி அளித்தார்
“இப்படியெல்லாம் பண்ணுவாங்கன்னு நினைத்துக்கூடப் பார்க்கல” புலம்பிய நீட் தேர்வு எழுதிய மாணவர்கள்
மருத்துவ படிப்புக்கான ‘நீட்’தேர்வு நேற்று நடந்தது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 12 மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் வயலூர் அமிர்தா வித்யாலயா பள்ளியில் 540 பேரும், வயலூர் பாரதியார் நகர் காவேரி குளோபல் பள்ளியில் 660 பேரும், திருச்சி கமலா நிகேதன் பள்ளியில் 840 பேரும், துப்பாக்கி தொழிற்சாலை அருகில் உள்ள எண்-01 கேந்திர வித்யாலயா பள்ளியில் 600 பேரும், எண் 2 கேந்திர வித்யாலயா பள்ளியில் 1,200 பேரும், தென்னூர் மகாத்மா காந்தி நூற்றாண்டு நினைவு வித்யாலயா பள்ளியில் 480 பேரும், காட்டூர் மாண்ட்போர்ட் பள்ளியில் 660 பேர், திருச்சி காஜா நகர் சமத் மேல்நிலைப்பள்ளியில் 1,200 பேர், பஞ்சப்பூர் சாரநாதன் என்ஜினீயரிங் கல்லூரியில் 1,440 பேர், ஸ்ரீரங்கம் ஸ்ரீவிகாஷ் வித்யாஸ்ரமம் முதுநிலை இடைநிலைப்பள்ளியில் 720 பேர், திருச்சி சென்னை ரிங் ரோடு அருகே உள்ள ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளியில் 600 பேர், திருவானைக்கோவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி வித்யாலயா பள்ளியில் 480 பேர் என மொத்தம் திருச்சி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 420 மாணவ- மாணவிகள் தேர்வு எழுத ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டது.
வெளிமாநிலத்திற்கு ‘நீட்’ தேர்வு எழுதச் சென்ற மாணவ-மாணவிகளுக்குத் தேவையான உதவிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறினாலும், பலர் தன்னார்வலர்கள் உதவியுடனும், சொந்த செலவிலும் கேரளா மாநிலம் எர்ணாகுளம், திருப்பதி போன்ற பகுதிகளுக்குச் சென்றனர்.
இன்று காலை 10 மணிக்குத் தேர்வு துவங்கியது. தேர்வு எழுத மத்திய மண்டலத்தில் உள்ள புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் எனப் பல மாவட்டங்களில் இருந்து மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்குப் பெற்றோர்களுடன் குவிந்தனர். இதனால் காலையில் இருந்தே பரபரப்பு நிலவியது. காலை 9.30 மணிக்குப் பிறகு வருபவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்காததால் பலர் தடுமாறிப் போனார்கள். ‘நீட்” தேர்வு மையங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தாலும், மாணவிகளுக்குத் தேர்வு அறைக்குள் செல்ல அதிகரித்த நெருக்கடிகளால் மாணவர்கள் தவித்தார்கள்
அதுமட்டுமல்லாமல் காதணிகள், கொலுசுகள் அணிந்திருந்த மாணவிகள், அவற்றைக் கழற்றிய பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களுக்கான சோதனைகள் கடுமையாக நடைபெற்றது. கலாச்சாரம் சார்ந்த உடைகள் அணியும் மாணவர்கள் 8.30 மணிக்கு முன்பாகவே அனுமதிக்கப்பட்டனர். இந்தக் கட்டுப்பாடுகளாலும், நெருக்கடிகளாலும் திருச்சி நீட் தேர்வு மையங்களில் மிக நீண்ட கியூ நின்றது. கம்பல், தோடு என அனைத்தையும் பெற்றோரிடம் கழட்டிக் கொடுத்த மாணவிகள், ஜடைகளை அவிழ்த்து தலைவிரி கோலமாக தேர்வறைக்குள் சென்றனர். தேர்வு முடித்து வெளியே வந்த மாணவர்கள் நம்மிடம்,“வினாத்தாள் எளிமையாக இருந்தது. சமச்சீர்க் கல்வி திட்டத்தில் கேள்விகள் வந்தது. தேர்வை நல்ல முறையில் எழுத நினைத்தாலும், இந்த அதிகாரிகள் தேர்வு எழுதுவதற்கு முன்பு செய்த நெருக்கடிகள் அதிகமான மன உலைச்சலுக்கு ஆளாக வைத்தது. இப்படியெல்லாம் செய்வாங்க என நாங்கள் நினைத்துக் கூட பார்த்தது இல்லை”எனப் புலம்பினார்கள்.
இன்று திருச்சி மாவட்டத்தில் நீட் தேர்வு 12 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வு எழுதுவதற்காக 9420 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இன்று நடைபெற்ற நீட் தேர்வில் 9056 நபர்கள் தேர்வு எழுதினர். 364 நபர்கள் ஆப்சென்ட் ஆனார்கள். நீட் தேர்வு முடிந்தாலும் அதிகாரிகள் கொடுத்த நெருக்கடிகள் பரபரப்பை ஏற்படுத்தியது
Subscribe to:
Posts (Atom)
POPULAR POSTS
-
தமிழக அரசு நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிக்கு ஓர் கணினி பயிற்றுநர் பணி நியமனம் செய்ய உள்ளது. தமிழக அரசு வருகின்ற கல்வியாண்டு ஜீன் முதல் 6992...
-
கூகுளின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தொடங்கி உலகின் பல டெக் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் தமிழர்கள் கோலோச்சுகிறார்கள். சென்னை டை...
-
60,000 கணினி ஆசிரியர்களும் ஒரே மாதிரியான (subject)தலைப்புகளில் ஈமெயில் செய்வோம்.. Subject: கலைஞரின் கனவு திட்டமான கணினி அறிவியல் பாடத்தை அரச...
-
சமச்சீர் கல்வியில் கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிக்கு கொண்டுவர அரசுப்பள்ளி மாணவர்கள் ,60000வேலையில்லா கணினி ஆசிரியர...