தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம். Reg No:655/2014. வெ.குமரேசன் , பொதுச் செயலாளர், EMail: tnbedcsvips@gmail.com WhatsApp: 9626545446
மலர்கள்
BREAKING NEWS
Flash News
Friday, 1 March 2019
Wednesday, 27 February 2019
கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு?
தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள புதிய அரசாணை முதுகலை பட்டம் பயின்ற கணினி ஆசிரியர்களிடம் வரவேற்பை பெற்ற போதிலும் 40,000கணினி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் இதுவரை 54,000 கணினி ஆசிரியர்கள் பி.எட் பட்டம் பெற்றுள்ளனர். இதில் 40000த்திற்கும் மேற்பட்டோர் இளங்களை பட்டத்துடன் பி.எட் பட்டம் பெற்றவர்கள். மீதமுள்ள 10000க்கும் மேற்பட்டோர் முதுகலை பட்டத்துடன் பி.எட் பட்டம் பெற்றவர்கள். இந்நிலையில், புதிய அரசாணையில் கணினி ஆசிரியர்களின் கல்வித்தகுதி மாற்றப்பட்டுள்ளது. மற்ற பாடங்களை கற்பிக்கும் அதே கல்வித் தகுதி கொண்ட ஆசிரியர்களை முதுகலை ஆசிரியர்கள் என்றும், கணினி பாடப்பிரிவில் முதுகலை படிப்புடன் பி.எட் பட்டம் பெற்றாலும் பயிற்றுனர் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் தான் கணினி அறிவியல் பாடம் நடைமுறையில் உள்ளது. என்சிஇஆர்டி விதியின் படி தனிப் பாடமாக தமிழகத்தில் கணினி பாடம் முதல் வகுப்பிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவில்லை.
புதிய பாடத்திட்டத்தில் 6 மற்றும் 9ம் வகுப்பில் மத்திய அரசின் நிதிக்காக கணினி என்ற பாடம் பெயரளவில் மட்டும் மூன்று பக்கங்களை அறிவியல் பாடத்துடன் இணைத்துள்ளது.
இதனை முறையாக செயல்படுத்தியிருந்தால் இளங்கலை படித்த அனைத்து ஆசிரியர்களும் பயன்பெறுவர்.2011ம் கல்வியாண்டில் தமிழகத்தில் கணினி அறிவியல் பாடம் 6ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடியாக கொண்டுவரப்பட்டது; அதற்காக புத்தகங்களும் பல கோடி செலவில் அச்சடிக்கப்பட்டது; ஆனால் இதுவரை மாணவர்களுக்கு வழங்காமல் குப்பைக் கழிவாக மற்றப்பட்டுள்ளது. மேலும் கணினி கல்விக்காக 2011-12ம் ஆண்டு மத்திய அரசு ரூ. 900 கோடி நிதி வழங்கிய போதிலும் கடந்த 8வருடங்களாக நிதியை பயன்படுத்தாமல் நல்ல திட்டத்தை அரசு இன்று வரை கிடப்பில் போட்டுள்ளது.
இந்நிலையில், புதிய அரசாணையால் இளங்கலை பட்டத்துடன் பி.எட் படித்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வோ, பதிவு மூப்போ எதிலும் கலந்து கொள்ள இயலாத நிலை உருவாகியுள்ளது. 2014ம் ஆண்டில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி இளங்கலை பட்டத்துடன் கணினி பாடத்தில் பி.எட் பட்டம் பெற்றவர்களை பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது யுஜிசி அறிவிப்பால் குறிப்பிட்ட சில பல்கலைக்கழகத்தில் எம்சிஏ., எம்.எஸ்சி (ஐடி) படித்தவர்கள், எம்எஸ்சி சிஎஸ் (கம்ப்யூட்டர் சயின்ஸ்)க்கு இணையான கல்வி பெறவில்லை என்ற அறிவிப்பால் 5000க்கும் மேற்பட்ட முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு காலியாக உள்ள 814 கணினி ஆசிரியர் பணியிடங்களை தேர்வோ, பதிவுமூப்பின் வாயிலாகவோ நியமனம் செய்தால் மொத்தம் 54,000 ஆசிரியர்களில் 7000பேர் மட்டும் தான் கலந்துகொள்ளும் சூழல் உருவாகும். இந்த அரசாணை எண் 26 என்பது 50000 கணினி ஆசிரியர்கள் குடும்பத்தின் வாழ்வை முற்றிலும் பாதிக்கும் என்று மேற்கண்ட ஆசிரியர் சங்கம் கூறுகிறது.
புறக்கணிக்கப்படும் கணினி ஆசிரியர்கள்
மற்ற பாட ஆசிரியர்கள் போன்று அல்லாமல் டிஇஓ, ஏஇஇஓ போன்ற தேர்வு எழுதவும் கணினி ஆசிரியர்களுக்கு அனுமதி இல்லை.
மத்திய அரசின் நிதியை முறையாக பயன்படுத்தி (தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை)பள்ளிகள் தோறும் குறைந்த பட்சம் 30 கணினிகளுடன் கணினி ஆய்வகங்கள் அமைத்து, பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியர் நியமனம் செய்து கணினி அறிவியல் பாடத்தை ஆரம்ப கல்வி முதலே நடைமுறைப்படுத்தினால் தமிழகத்தின் கிராமப்புற அரசுப் பள்ளி ஏழை எளிய மாணவர்களும், அரசுப்பள்ளிகளும் மேன்மையடைவார்கள் என்றும் அச்சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜமுனா ராணி வெளியிட்டுள்ள செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்..
SOURCE:
http://www.theekkathir.in/2019/02/27/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/
Tuesday, 26 February 2019
அரசுப்பள்ளி மேன்மை பெற மக்களவைத் தேர்தல் அறிக்கைக்கு கணினி ஆசிரியர்களின் ஐந்து கோரிக்கை
அரசுப்பள்ளி கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வியில் மேன்மை அடையவும் ,அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்தவும், 60000 கணினி ஆசிரியர் குடும்பத்தின் கோரிக்கையை தேர்தல் அறிக்கையாக வெளியிட..
***
அ.அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டும். .
**
*"சமச்சீர் கல்வியில் கொண்டுவந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டும்"
ஆ, சமச்சீர் கல்வியில் 2011ம் ஆண்டு(6 முதல் 10ம் வகுப்பு வரை)கொண்டுவரப்பட்ட கணினி பாட புத்தகம் பல கோடி செலவில் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு பயன்படாத வண்ணம் இன்று வரை முடக்கப்பட்டுள்ளதை நடைமுறை படுத்த வேண்டும்.
**
*"கணினியும்,ஆய்வகமும் இல்லாத தமிழக அரசுப்பள்ளிகள்:"
இ.அனைத்து பள்ளிகளிலும் 50கணினிகளுடன் கணினி ஆய்வகங்களை உருவாக்கிட வேண்டும்.(இலவச மடிக்கணினி கொடுப்பதை காட்டிலும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் கல்வியாக வழங்கிட)
**
*"அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் கணினி பாடப்பிரிவை கட்டாயமாக்க வேண்டும்".
ஈ).கணினி பாடத்திற்கு மூன்று புத்தகங்கள் வழங்கிய அரசு 2011லிருந்து இன்று வரை தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளில் கணினி பாடப்பிரிவு உருவாக்கித்தரவேண்டும்.
**
*"பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும்".
உ).கணினி இன்றியமையாத சூழலில் தொடக்க(1-5), நடுநிலை(6-8), உயர்நிலை(9-10), மேல்நிலைப்) பள்ளிகளுக்கு(11-12 குறைந்தது பட்சம் ஓர் கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்யவேண்டும்.
**
*"மத்திய அரசின் நிதி வீண்"
(NCERT விதியின் படி முதல் வகுப்பிலிருந்து கணினி பாத்தை தனிப்பாடமாக கொண்டுவர ஆய்வகம் அமைக்க 2011-2012கல்வியாண்டில் வழங்கப்பட்ட நிதி மாநிலத்தை ஆளும் அரசு இன்று வரை பயனபடுத்தவில்லை"
ஊ).மத்திய அரசு (ICT)அரசுப்பளளி ஏழை மாணவர்களின் கணினி கல்விக்காக வழங்கப்பட்ட ரூ900 கோடியை நிதியை மாற்ற மாநிலங்கள் போல் முறையாக பயன்படுத்தி கணினி பாடத்தை ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டும்.
**
"கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழகத்தில் வாழும் கோடிக்காணக்கான கிராமப்புற அரசு பள்ளி ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவார்கள்".
****&&****
திருமதி ஜமுனாராணி,
மாநிலச் செய்தித் தொடர்பாளர்,
8675959594,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.
Sunday, 24 February 2019
கணினி ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்பும் நடவடிக்கை தள்ளி்போகும்:பள்ளிக் கல்வித்துறை..
ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, தேர்தலுக்கு பின் நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.'
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வு நடத்தப்படும்' என, தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தது.
ஆசிரியர் தகுதி தேர்வான, 'டெட்'டில், தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, இந்த தேர்வை எழுத முடியும்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, பின்னடைவு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., இரு வாரங்களுக்கு முன் அறிவிக்கை வெளியிட்டது.
பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் பணியில், 148 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இவற்றில், பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு மட்டும், போட்டி தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, டி.ஆர்.பி., அறிவித்தது.
ஆனால், லோக்சபா தேர்தல் நெருங்கி விட்டதால், தற்போதைய நிலையில், போட்டி தேர்வை நடத்த வேண்டாம் என, டி.ஆர்.பி., முடிவெடுத்துள்ளது
.தேர்தல் முடிந்த பின், ஜூன், ஜூலையில் போட்டி தேர்வை நடத்தலாம் என, பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளும் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
அதேபோல, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணிக்கான காலியிடங்களை நிரப்பும் நடவடிக்கையும் தள்ளி போகும் என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)
POPULAR POSTS
-
14663 கணினி ஆசிரியர் பணியிடங்கள். * 6 to 10th 38 மாவட்ட கணினி ஆசிரியர்கள் குழு* *38 மாவட்டங்களும் சங்கமிப்போம்* *சென்னை* மாவட்ட6-10 கண...
-
கூகுளின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தொடங்கி உலகின் பல டெக் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் தமிழர்கள் கோலோச்சுகிறார்கள். சென்னை டை...
-
தமிழக அரசு நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிக்கு ஓர் கணினி பயிற்றுநர் பணி நியமனம் செய்ய உள்ளது. தமிழக அரசு வருகின்ற கல்வியாண்டு ஜீன் முதல் 6992...
-
சமச்சீர் கல்வியில் கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிக்கு கொண்டுவர அரசுப்பள்ளி மாணவர்கள் ,60000வேலையில்லா கணினி ஆசிரியர...