தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம். Reg No:655/2014. வெ.குமரேசன் , பொதுச் செயலாளர், EMail: tnbedcsvips@gmail.com WhatsApp: 9626545446
மலர்கள்
678325
BREAKING NEWS
Flash News
Saturday, 21 April 2018
54ஆயிரம் கணினி பாட ஆசிரியர்களுக்கு அரசாணை எப்போது???
![]() |
➠❄கணினி கல்வியின் புதுமை❄➠ |
திரு வெ.குமரேசன்,
பொதுச்செயலாளர்,
9626545446,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.
உலகிலயே அதிக தனியார் பள்ளிகளை கொண்ட நாடு எது தெரியுமா? சுவாரஸ்யமான தகவல்களுடன்
உலகிலயே அதிக அளவில் தனியார் பள்ளிகளைக் கொண்ட நாடு, உலகில் அதிக அளவில் தற்கொலை நடக்கும் நாடு போன்ற கேள்விகளுக்கு எல்லாம் தயங்காமல் இந்தியா என்று பதில் அளிக்கலாம்.
இப்படி நாடு முழுக்க தனியார் பள்ளிகள் பெருகிக் கிடப்பதற்கான காரணம் தான் என்ன? என்ற கேள்வி எழுப்பினால் அதற்கு அரசுப்பள்ளி ஆசிரியர்களின் அலட்சியம் அல்ல அது அரசின் அலட்சியமே
இப்படி நாடு எங்கும் காசு வசூலிக்கும் தனியார் பள்ளிகள் நிரம்பி விட்டால் அரசுப்பள்ளிகள் வெறும் கட்டிடங்களாக மட்டுமே இருக்கும். மாணவர்கள் இருக்கும் போதே பாடம் நடத்தாத ஆசிரியர்கள் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டால் ஐ ஜாலி என்று வெட்டி நாயம் பேசித் திரியப் போகிறார்கள்.
இதனால் தான் நகரங்களில் ஐம்பது சதவீத குழந்தைகளும், கிராமங்களில் முப்பது சதவீத குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். கடந்த 2011 ம் ஆண்டு முதல் 2015 ம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில் மட்டும் அரசுப் பள்ளிகள் 1.1 கோடி மாணவர்களை இழந்துள்ளது. அதே சமயம் 1.6 கோடி மாணவர்கள் தனியார் பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ளனர். இந்த கால கட்டத்தில் 8337 அரசுப் பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளது. அதே காலத்தில் பதினொரு மடங்கு அதிகமாக 96 ஆயிரத்து 416 தனியார் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலை தொடர்ந்தால் பள்ளியில் ஆசிரியர்கள் மட்டுமே மாதம் ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டு இருப்பார்கள். தற்போது மட்டும் இந்தியாவில் உள்ள 6174 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவன் கூட இல்லை.
இந்த லட்சணத்தில் இருக்கிறது அரசுப் பள்ளிகள். இந்த வருடம் நீட் தேர்வில் எத்தனை
அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் வெளியே பணம் கொடுத்து பயிற்சி பெறாமல் அரசு கொடுத்த
இலவச நீட் பயிற்சி மையத்தில் படித்து தேர்வு பெறுகிறார்கள் என்று பார்ப்போம். பத்து
மாணவர்களுக்கும் மேல் தேர்ச்சி பெற்றுவிட்டால் தமிழகம் உருப்படும் என்றும் இந்தியாவில்
ஏழைகளுக்கான கல்விக்கு இன்னமும் ஆயுசு இருக்கிறது என்றும் கருத்தில் கொள்வோம்.
இன்னும் நிறைய மாற்றம்..!! பள்ளிக்கல்வித்துறைக்கு தேவை..!! அமைச்சர் செங்கோட்டையன்..!!
மூச்சு நின்றால் மட்டும் மரணம் அல்ல முயற்சி நின்றாலும் மரணம்தான் எனவே மாணவர்கள் முயற்சி மேற்கொண்டு வெற்றிபெற வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறையில் இன்னும் பல மாற்றங்கள் செய்ய வேண்டிய கடமை தனக்கு உள்ளதாக கூறிய செங்கோட்டையன்,சிபிஎஸ்இ மாணவர்கள் கூட, அரசுப் பள்ளிகளில் படிக்கும் நிலைமையை உருவாக்கி உள்ளோம் என்றும் கூறினார்.
Friday, 20 April 2018
அரசு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் பெயர் பட்டியலில் பிழைகளை திருத்த மீண்டும் வாய்ப்பு..
தமிழ்நாட்டில் 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 16 முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரையிலும், 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 7 முதல் ஏப்ரல் 16-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 1 முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரையிலும் நடைபெற்றது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது.
தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல், அந்தந்த பள்ளிகளின் மூலம், தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் தான் மதிப்பெண் சான்றிதழ்களில் அச்சிடப்படும் என்பதால், அதில் உள்ள பிழைகளை திருத்துவதற்கு தேர்வுத்துறை கடைசி வாய்ப்பு வழங்கி உள்ளது.
10, 11 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், தங்கள் பெயர் உள்ளிட்டவற்றில் எழுத்துப் பிழை இருப்பின், கடைசி வாய்ப்பை பயன்படுத்தி சரி செய்யலாம் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
பெயர் திருத்தம் தொடர்பான விபரங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வரும் 23-ம் தேதிக்குள் சிஇஓ-க்களிடம் அளிக்க வேண்டும். சிஇஓ-க்கள், வரும் 25 முதல் 27-ம் தேதிக்குள் அந்த விபரங்களை, தேர்வுத்துறை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தேர்வுத்துறை கூறியுள்ளது.

நிர்மலாதேவி கேள்விக்கு கையெடுத்து கும்பிட்டு எஸ்கேப் ஆன அமைச்சர்..
கடந்த சில நாட்களாகவே அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்ட நிர்மலாதேவி விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த பிரச்சனை குறித்து கருத்து கூறாத அரசியல்வாதிகளே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிர்மலாதேவி விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்விகேட்டபோது அவர்களை கையெடுத்து கும்பிட்டு பதில் சொல்லாமல் சென்றுள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
இன்று செய்தியாளர்களை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தபோது நிர்மலாதேவி விவகாரம் குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் செங்கோட்டையன், என்னை பொருத்தவரை என்னுடைய துறையான பள்ளிக்கல்வித்துறை சம்பந்தமான கேள்விகளை தவிர பிற துறையின் கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேன். அதற்கு வேறு அமைச்சர்கள் இருக்கின்றார்கள். அவரக்ளிடம் கேளுங்கள் கூறி பத்திரிகையாளர்களை கையெடுத்து கும்பிட்டு அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்
ஆசிரியர் செல்லாத தீவு: பள்ளிக்கு தினம் படகில் செல்லும் மாணவர்கள்...
தமிழக-ஆந்திர எல்லையோரத் தீவுக் கிராமத்தில் வாழும் மாணவர்கள், ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு செல்ல படகில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது
இந்த கிராமத்தில் அமைந்துள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
தமிழ் நாட்டுக்கும், ஆந்திரப் பிரதேசத்திற்கும் இடையிலான எல்லையில் அமைந்திருக்கும் பழவேற்காடு ஏரிக்கு நடுவில் அமைந்துள்ள தீவுதான் "எருக்கம்".
எருக்கம் பஞ்சாயத்தின்கீழ் வரும் இரண்டு கிராமங்களில் மொத்தம் 2000 பேர் வாழ்கின்றனர்.
13 கிலோமீட்டர் பரப்புடையதான இந்த தீவில் வாழும் பெரும்பான்மையான மக்கள் தமிழ் பேசுகின்றனர்.
எருக்கம் என்கிற இந்த தீவிலுள்ள பீமுனிவாரி பாலம் மற்றும் உன்னாம்பு குளம் என்ற இரு ஆற்றங்கரைகளும் ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ் நாடு மாநிலங்களின் எல்லைகளில் உள்ளன.
8 கிலோமீட்டர் படகில் செல்லுகின்ற இந்த கிராமத்தை சேர்ந்த குழந்தைகள், மேலும் 5 நிமிடங்கள் சகதியான நிலப்பகுதியை கடந்து பள்ளியை சென்றடைய வேண்டியுள்ளது.
தமிழ் மொழியில் படிக்க விரும்புவோர் தமிழ் நாட்டில் அமைந்துள்ள ஒரு பள்ளியிலும், தெலுங்கு மொழியில் படிக்க விரும்புவோர் ஆந்திர பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிக்கும் செல்கிறார்கள்.
இந்த தீவில் இருக்கின்ற இரண்டு பள்ளிகளில் ஒன்று 1931ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இருப்பினும், இந்த இடத்தில் ஆசிரியர்கள் பணியாற்ற விரும்பாததால், இந்தப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை.
"தண்ணீரில் பயணம் மேற்கொள்வது ஆபத்தானது என்பதால், குழந்தைகள் வீடு வந்து சேரும் வரை பதற்றமாக இருக்கும். இங்குள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால், எங்கள் குழந்தைகளை படகில் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம்" என்று அந்த கிராமத்தை சேர்ந்த லாவண்யா பிபிசியிடம் தெரிவித்தார்
இதே கவலையை வெளியிட்ட மணவர் அபி, கிராமத்திலுள்ள பள்ளியில் ஆசிரியர் நியமிக்கப்பட்டால் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்று கூறியுள்ளார்.
படகில் பயணிப்பது ஆபத்து என்பதால், தமிழ் மொழியில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு தமிழ் நாடு அரசு உயிர்க் காப்பு ஆடைகளை வழங்கியுள்ளது.
தெலுங்கு மெழி படிக்கின்ற மாணவர்களுக்கு இத்தகைய உயிர்க் காப்பு ஆடைகளை வழங்க ஆந்திரப் பிரதேச அரசிடம் இருந்து முயற்சிகள் எதுவும் இல்லை.
படகில் அதிக இடம் இல்லாமல் இருப்பதால், பயணம் மேற்கொள்கிறபோது பெரும்பாலான மாணவர்கள் தங்களின் உயிர் காப்பு ஆடைகளை கழற்றி வைத்துகொள்வர் என்று அபி குறிப்பிடுகிறார்.
மழை காலங்களில் நீர்மட்டங்களில் ஏற்படுகின்ற மாற்றம் படகில் பயணம் மேற்கொள்வதில் ஏற்படும் ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது.
இதன் காரணமாக, சில பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை தடா மற்றும் அரும்பாக்கம் கிராமங்களில் வாழும் உறவினர்களின் வீடுகளில் தங்கியிருக்க செய்து பள்ளிக்கு அனுப்பி கல்வியை தொடர்வதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த எரிக்கு மேல் பாலம் ஒன்றை கட்டுவதில், தொழில்நுட்ப, நிதி மற்றும் சுற்றுச்சூழல் சவால்கள் நிறைந்துள்ளன
தங்கள் குழந்தைகள் ஆற்றை கடந்து செல்வதை நிறுத்துவதற்கு, இந்த கிராமத்திலுள்ள பள்ளியில் ஆசிரியர்களை நியமிப்பதே ஒரே தீர்வு என்று இந்த கிராமத்தினர் கூறுகின்றனர்.
கடந்த காலத்தில் நிகழ்ந்த படகு விபத்துகளை நினைவுகூர்ந்த தனசேகர், 5 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் தங்கி கல்வி கற்றுகொடுக்க யாருக்கும் மனம் வராததால், ஆற்றை தாண்டி பிற கிராமங்களில் படிக்க குழந்தைகளை அனுப்புவதாக தெரிவிக்கிறார்.
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும், அவர்கள் கடமையை மேற்கொள்ளாமல், விடுமுறைக்கு விண்ணப்பிப்பதாக நெல்லூர் மாவட்ட கல்வி அதிகாரி சாமுவேல் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்
இந்த கிராமத்திலுள்ள பெரும்பாலான மீனவர்கள் தமிழ் மொழி பேசுபவர்களாக இருப்பதால், இங்கு தமிழ்ப் பள்ளிக்கூடம் ஒன்றை நிறுவ வேண்டுமென்று இந்த எருக்கம் கிராமத்தினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மறுபுறம், தெலுங்குப் பள்ளிக்கூடம் வேண்டும் என்று இந்த கிராமத்திலுள்ள தலித்துக்கள் கேட்கின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பாடங்களை தேர்வு செய்துகொள்ளும் வசதி கொண்ட ஆங்கில மொழி வழிப் பள்ளி வேண்டும் என்று சிலர் கோரி வருகின்றனர்.
கல்வியை தனியாருக்கு தாரை வார்த்த அரசு!
அரசுப் பள்ளிகள் என்றொரு அடையாளம்!
கல்வியை தனியாருக்கு தாரை வார்த்துவிட்ட மத்திய – மாநில அரசுகள் அரசு கல்வி நிறுவனங்களை எட்டி பார்க்க அஞ்சுகின்றன. ”தேசத்தின் எதிர்காலம், வகுப்பறையில் நிர்மாணிக்கப்படுகிறது” என்கிற மகாத்மா காந்தியின் வார்த்தைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. அறிவியல் பூர்வமான, வாழ்க்கைக்கான கல்வியை பெறும் சமூகமாக உருவாக்காமல் பணம் பண்ணும் எந்திரங்களாக மாணவர்களை மாற்றுகிற கல்விக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன. அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தில்1960ல் காமராஜர் துவக்கிய இலவசக்கல்வி, மதிய உணவுத் திட்டம் லட்சகணக்காணவர்களை அன்றைக்கு பள்ளியில் சேர்த்து படிக்கும் சூழலை உருவாக்கி 37 சதவீதத்தினரை படிக்க வைத்தது. அதன் வளர்ச்சியும், நீட்சியும் கல்வி கற்றோரின் விகிதம் 2011ல் 80.33% ஆக உள்ளது.
அவற்றின் வளர்ச்சியில் ஆரோக்கியமாக இருக்க வேண்டிய அரசுப்பள்ளிகள் அன்றைக்கும் இன்றைக்கும் தூய்மையான குடிநீர், கழிவறை, ஆய்வகம், நூலகம், அமரும் இருக்கைகள், போதிய வகுப்பறைகள், ஆசிரியர் பற்றாக்குறை, தூய்மையான உணவு இல்லாமை என இல்லாமைகளின் கூடாரங்கள் என்ற அடையாளத்தோடு இயங்கி வருகின்றன. இன்றைக்கும் 90 சதவீத அரசுப்பள்ளிகளில் லட்சகணக்கான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இவர்கள் பயின்று வருகிற கல்விச் செலவுக்காகவும், கட்டமைப்புகளை மேம்படுத்தவும் 2012-2013 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பள்ளி கல்விக்காக ரூ. 16,965.3 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் செலவிடப்பட்டதா? இல்லை. செலவிடப்படாமல் ஓரங்கட்டப்பட்டுள்ளது.
அரசின் மெத்தனம் முதல் தலைமுறை கல்வி பயிலும் மாணவர்களின் கற்றலில் விளையாடுவதாகத்தான் தெரிகிறது. அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தாமல், கல்வியை பெற்றோர்கள் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளட்டும் என தன்னுடைய செலவுகளை வெட்டிச் சுருக்கிக் தன்னுடைய பொறுப்பில் இருந்து நழுவிக் கொள்கிறார்கள். எதிர்கால சமுதாயம் சரியான திசையில் நடைபோட வேண்டுமானால் கல்வியறிவு அவசியமானது, அவை பற்றாக்குறையோடு வழங்கப்படுவது எதிர்கால சமூகத்தை இருட்டில் விடும் போக்கிற்கு கொண்டு செல்லும் என்பதை அறியாதவர்கள் அல்ல ஆட்சியாளர்கள்.
65 ஆண்டுகளுக்குப் பிறகு கல்வியை அனைவருக்கும் கொடுக்கும் உரிமையை 2009 ம் ஆண்டு இயற்றியது ஐமுகூ அரசு. இப்போதுதான் இதன் அவசியம் தெரியும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அவற்றிலும் வியாபாரத்திற்கு வழிவகுத்து தனியார் கல்வி நிறுவனங்களில் சாதாரண நலிந்த பிரிவு குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு என்று அறிவித்தது. தனியார் பள்ளிகள் இவற்றை ஏறேடுத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் தங்களுடைய மேதமையை இவ்வாறு வெளிப்படுத்தினார்கள் தனியார் கல்வி நிறுவனங்கள் நலிந்த பிரிவு குழந்கைள் உயர்தர பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் பயின்றால் அவர்களும் நலிந்த பிரிவு குழந்தைகளைப் போலவே நடந்துகொள்வார்கள் என தங்கள் பள்ளியில் பயிலும் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதி அச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க கடிதம் எழுதியது.
மனித மாண்புகளை சீர்குலைக்கும் நோக்கத்தை நம்மால் விளங்கிக் கொள்ள முடியும். இச்சட்டத்தின் மூலம் அரசு ஆரம்பப் பள்ளிகளின் அருகாமையில் உள்ள கிராம குழந்தைகளுக்கு கல்வி அளிக்க அவர்கள் குறிப்பிட்ட வயதுக்குள் இருப்பின் அந்த வயது குழந்தைகளை சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தி சேர்க்கையை துவக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எவ்வாறு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் உயிர்ப்புடன் இருக்கும்.
கடந்த 2012 ம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம் வருகிற 6 மாத காலத்திற்குள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அனைத்து மாநில அரசுகளும் குடிநீர், இருபாலருக்கான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று உத்தரவிட்டது. அவற்றை செயல்படுத்த மாநில அரசுகள் எந்த அவைவையும் ஏற்படுத்த வில்லை. தமிழகத்தில் பள்ளிக் கல்வியை அறிவியல் பூர்வமாக வழங்க இந்த அரசு தயாரில்லை.
ஆரம்ப பள்ளியில் ஆங்கிலம் புகுத்தியவுடன் சேர்கை அதிகரித்திருப்பதாக கூறுவது அரசுப்பள்ளிகளில் ஏற்கனவே ஆண்டாண்டு காலமாக அடிப்படை வசதிகள் இல்லா நிலையை முடி மறைத்து மொழிதான் முக்கிய பிரச்சை என மழுப்புவதற்கான வேலை. புகழ்பெற்ற விஞ்ஞானி ஏ.பி.ஜே. அப்துல்காலம், மயில்சாமி அண்ணா துரை, உச்சமன்ற நீதிபதி பி.சதாசிவம் போன்றோர் தமிழ்வழியில் பயின்று உயர்நிலையை அடைந்தவர்கள் தான். இன்னும் ஏராளமானவர்கள் தாய்மொழியில் பயின்று பல்வேறு துறைகளில் கோலோச்சுகின்றனர் அவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாணவர்களின் கற்றலுக்கு உறுதுணையாக இருப்பது கற்பிக்கும் ஆசிரியர்கள். ஆசிரியர்களும் மாணவர்களைப் போலவே கற்றுக் கொண்டே இருக்க வேண்டும், இல்லையானால் அவர்கள் ஆசிரியர்களாக இருக்க முடியாது என புகழ்பெற்ற மூலதனம் புத்தகம் எழுதிய காரல் மார்க்ஸ் குறிப்பிடுவார். இப்போது இருக்கும் ஆசிரியர்கள் கடந்த கால எந்திரத்தனமான கல்வியை பயின்றவர்களே, மனப்பாடம் செய்து படிக்கும் முறையை அறிந்தவர்களே அவர்களும் அதே மனநிலையில் தான் இருப்பார்கள். சிலரில் மாற்றம் உண்டு, ஆசிரியரின் போதனை தான் மாணவர்களை வளப்படுத்தும், மாணவரும் ஆசிரியருக்கும் இடைவெளி இல்லாமல் கலந்ரையாடும் போது மாணவர்கள் தங்களின் கேள்விகளுக்கு உரமிடும் இடத்தில் ஆசிரியர் இருப்பர்.
இன்றும் மெக்காலேவின் குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வி முறையே பின்பற்றப்படுகிறது. கற்றலிலும் கற்பித்தலில் மாற்றம் இல்லாமல் வாழ்க்கைக்கான, சமூகத்திற்கான கல்வி வழங்கப்படவில்லையானால் எதிர்காலம் சமுதாயம். நேசம், அரவணைப்பு, சமூக பொறுப்பு, அரசியல் இல்லாமல் இயந்திரத்தனமாகவே இருக்கும். இப்போதே அதை பல இடங்களில் காண முடிகிறது. இவற்றை கருத்தில் கொண்டு அரசுப் பள்ளிகளில் வறட்சியாக இருக்கிற நிலையை மாற்றி தரத்தை உயர்த்தி கல்வியை வசந்தமாக மாற்ற வேண்டியது அரசின் கடமை.
ஆக்கம்:
Sekar Arivu

Thursday, 19 April 2018
புதிய பாடத்திட்டத்தில் 6,9-ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் தனி அலகாக கணினி அறிவியல்!
![]() |
➠❄கணினி கல்வியின் புதுமை❄➠ |
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெ.குமரேசன் முதல்வர் தனிப்பிரிவில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில்கள் பின் வருமாறு..
*புதிய பாடத்திட்டத்தில் 6,9-ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் தனி அலகாக கணினி அறிவியல் பாடத்தை சேர்க்கப்பட்டுள்ளது.
**அடுத்த ஆண்டு மற்ற வகுப்புகளிலும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
***கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது தனிப்படமாக கொண்டு வருவது அரசின் கொள்கை முடிவாகும்
பள்ளி கல்வி இயக்குநரின் விடுமுறை அறிவிப்பால் ஆசிரியர்கள் குழப்பம்!!
தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிந்த நிலையில் 20- ந் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பள்ளிகல்வி துறை இயக்குநரின் பள்ளி விடுமுறை பற்றிய அறிவிப்பில் 21 ந் தேதி முதல் விடுமுறை என்ற அறிவிப்பால் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறையில் தொடக்கக்கல்வி துறையின் கீழ் இயங்கும் 1 முதல் 8 வகுப்பு வரை இயங்கும் தொடக்கக்கல்வி அலகில்
19 /04/2018 அன்று பள்ளி கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்ட வேலை நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை பொறுத்தவரை
20/04/2018 அன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பதால் பள்ளி விடுமுறை 21/04/2018 தொடங்குகிறது, இதை மட்டுமே தனது சுற்றிக்கையில் குறிப்பிட்டுவிட்டு, தொடக்கல்வி அலகின் கீழ் இயங்கும் , தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை தனியாக 19/04/ 2018 கடைசி வேலை நாள் என குறிப்பிடாத காரணத்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் குழப்பமடைந்துள்ளனர்.
19 /04/2018 அன்று பள்ளி கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்ட வேலை நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
20/04/2018 அன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பதால் பள்ளி விடுமுறை 21/04/2018 தொடங்குகிறது, இதை மட்டுமே தனது சுற்றிக்கையில் குறிப்பிட்டுவிட்டு, தொடக்கல்வி அலகின் கீழ் இயங்கும் , தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை தனியாக 19/04/ 2018 கடைசி வேலை நாள் என குறிப்பிடாத காரணத்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் குழப்பமடைந்துள்ளனர்.
`ஒரு கண்ணில் வெண்ணெய்... மற்றொன்றில் சுண்ணாம்பு' - அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் ஆசிரியர் சங்கம்
![]() |
➠❄கணினி கல்வியின் புதுமை❄➠ |
``எங்களது பல கோரிக்கைகளை நிறைவேற்றும் எந்த முயற்சிகளையும் இந்த அரசு எடுக்கவில்லை. அதற்கான அறிகுறியும் தெரியவில்லை. எனவே, திட்டமிட்டபடி வரும் மே 8-ம் தேதி கோட்டை முற்றுகைப் போராட்டம் நடக்கும்" என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது.
மேலும், 40 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரியர்களைக் கணக்கிட்டு இதரப் பணியிடங்களை உபரிப் பணியிடங்களாக அரசு கணக்கிட முடிவெடுத்திருக்கிறது. இந்தப் போக்கு, மாணவர்களின் உயர்கல்வி கனவை தகர்ப்பதோடு எதிர்காலத்தில் கல்வி கற்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதைக் கவனத்தில் கொண்டு தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும். தேவையான புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஒரு கண்ணில் வெண்ணெய் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்ற மாற்றான்போக்கு மனநிலையை அரசு செயல்படுவதைத் தவிர்த்துவிட்டு, அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர் அனைவருக்கும் ஊதியக்குழு நிலுவையை வழங்கிட அரசு முன்வர வேண்டும். சத்துணவு திட்டம் 10 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையை மேலும், விரிவுபடுத்தி பசியோடு கல்வி கற்கும் ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
ஏனைய பாடங்களைப்போல, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களுக்கும் ஒரே தாள் முறையை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். நடுநிலைப்பள்ளிகளில் கடந்த காலங்களில் நேரடி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முறையான பதவி உயர்வு வாய்ப்பு கிடைக்காத சூழ்நிலை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, நேரடியாக நியமிக்கப்படும் முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 50 சதவிகித பணியிடங்களாக வகைமாற்றம் செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும். கல்லூரிகளில் முழுவதுமாக நேரடி நியமனங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. உரிய அனைத்து தகுதிகளுடன் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களைக் கல்லூரி விரிவுரையாளர்களாக ஈர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்திட அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்
குறைந்த மாணவர்கள் உள்ள வகுப்புகளை மூடுவது கல்வி வாய்ப்புகளை பாதிக்கும்! அன்புமணி ராமதாஸ்!!
![]() |
➠❄கணினி கல்வியின் புதுமை❄➠ |
குறைந்த மாணவர்கள் உள்ள வகுப்புகளை மூடுவது கல்வி வாய்ப்புகளை பாதிக்கும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் 30 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள மேல்நிலைப்பள்ளி வகுப்புகளை மூட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. இது ஊரக மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பறிக்கும் வகையிலான பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் இந்த ஆணை கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழக அரசு பள்ளிகள் இப்போது எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய பிரச்னை உட்கட்டமைப்பு பற்றாக்குறையும், ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமையும் தான். அதிலும் குறிப்பாக ஆசிரியர்களைப் பொறுத்தவரை வட மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில் தென் மாவட்டங்களில் ஆசிரியர்கள் எண்ணிக்கை தேவைக்கும் அதிகமாக உள்ளது. கூடுதலாக உள்ள ஆசிரியர்களை பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு இடமாற்றம் செய்வது; அதன்பிறகும் நிரப்பப்படாத பணியிடங்களுக்கு புதிய ஆசிரியர்களை நியமிப்பது ஆகியவற்றின் மூலம் இந்தப் பிரச்னையை சரி செய்ய முடியும். ஆனால், ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கு பதிலாக மாணவர்களை இடமாற்றம் செய்து இந்த பிரச்னைக்கு குறுக்கு வழியில் தீர்வு காண்பதற்கு பள்ளிக்கல்வித்துறை முயல்வது பாதிப்பை ஏற்படுத்தும்.
ஊரகப்பகுதிகளில் மேல்நிலை வகுப்புகளில் 30-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடப்பிரிவுகள், நகர்ப்பகுதிகளிலும், ஆங்கில வழிக் கல்வி முறையிலும்
15-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடப்பிரிவுகள் ஆகியவற்றை மூட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பரிந்துரைத்துள்ளார். இதன்மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல ஆசிரியர் பணியிடங்களை உபரியாக்கி, அவர்களை அந்த மாவட்டத்திலேயே பணியமர்த்தி ஆசிரியர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பது தான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். மேலோட்டமாகப் பார்க்கும் போது இது சிறப்பான திட்டமாகத் தோன்றினாலும் ஊரக மாணவர்களின் கல்வி வாய்ப்பை திட்டமிட்டு பறிக்கும் செயலாகும். இதை அனுமதிக்க முடியாது.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும், கணிதப் பிரிவு, அறிவியல் பிரிவு, கணினி அறிவியல் பிரிவு, வணிகவியல் பிரிவு, தொழில்பிரிவு உள்ளிட்ட அனைத்துப் பாடப்பிரிவுகளும் இருக்க வேண்டும். அதுதான் சமமான கல்வி வாய்ப்பு ஆகும். இதற்கு மாறான எந்த நடவடிக்கையும் கல்வி வாய்ப்பை பறிக்கும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும். உதாரணமாக, ஊரகப் பகுதிகளில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் கணிதப் பிரிவில் 25 மாணவர்கள் மட்டுமே இருந்தால், அந்தப் பாடப்பிரிவு மூடப்பட்டு, அருகிலுள்ள பள்ளியில் அந்த மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டுமாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சராசரியாக 8 கிலோமீட்டருக்கு ஓர் அரசு மேல்நிலைப்பள்ளி மட்டுமே செயல்பட்டு வருகிறது. ஒரு பள்ளியில் போதிய எண்ணிக்கையில் மாணவர்கள் இல்லை என்பதற்காக, இருக்கும் மாணவர்களை இன்னொரு பள்ளிக்கு மாற்றினால் அவர்கள் அதிகபட்சமாக தினமும் 16 கிலோ மீட்டர் பயணம் செய்து தான் படிக்க வேண்டும். போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் தினமும் 16 கிலோமீட்டர் பயணம் செய்து பள்ளி சென்று திரும்புவது எளிதான காரியமல்ல. இதன் காரணமாகவே பலர் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி விடும் ஆபத்துகளும் உள்ளன.
'கணினி வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு'
![]() |
➠❄கணினி கல்வியின் புதுமை❄➠ |
''பள்ளி மாணவர்களுக்கு, இணையம் வழியே கல்வி வழங்க, 463 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,''என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
சென்னை, அம்பத்துார் அருகே, சோழபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், புதிய கட்டடத்தை திறந்து வைத்தபின், அவர் கூறியதாவது: 'நீட்' தேர்வை எதிர்கொள்ளும் வகையில், மாணவ - மாணவியருக்கு, சிறந்த ஆசிரியர்களால், சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, வரும் நீட் தேர்வில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெற்றி பெறுவர். பள்ளிக் கல்வித் துறையை பொருத்த வரை, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆறாம் வகுப்பில் இருந்து, 3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்புக்களை ஏற்படுத்த, நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக, 463 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Wednesday, 18 April 2018
பள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது - அமைச்சர் செங்கோட்டையன்..
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார்.
![]() |
➠❄கணினி கல்வியின் புதுமை❄➠ |
அதில் அரசு, நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1.8.2017 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது தொடர்பான தகவல்கள் இடம்பெற்று இருந்தன.
மேலும், சுற்றறிக்கையில் மேல்நிலை பிரிவுகளை பொறுத்தவரை பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்சி, மாநகராட்சி பகுதியாக இருப்பின் குறைந்தபட்சம் 30 மாணவர்களும், ஏனைய ஊரக பகுதியாக இருப்பின் குறைந்தபட்சம் மாணவர் எண்ணிக்கை 15 ஆக இருத்தல் வேண்டும். குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு அதில் பயிலும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-
அரசு ஆணை 2010-ன் படி ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிந்த பிறகு, மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்காக சில தகவல்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். அந்த அடிப்படையில் தான் இது வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் பள்ளிகள் மூடுவது தொடர்பாக எந்தவித கருத்தும் பதிவிடப்படவில்லை.
ஒரு பள்ளியை மூடுவது என்பதை அரசு ஆராய்ந்து, ஆலோசனை செய்து அதன் பின்னர் தான் முடிவு செய்யும். எனவே பள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்
பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளது..
![]() |
➠❄கணினி கல்வியின் புதுமை❄➠ |
பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: 1 முதல் 10ம் வகுப்பு வரையும், 1 முதல் பிளஸ் 2 வரையும் இயங்கும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையில் உள்ள பிரிவுகளில் 60 மாணவர்கள் இருந்தால் அந்த பள்ளிகளில் 2 ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். 61 முதல் 90 மாணவர்கள் இருந்தால் 3 ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். 91 முதல் 120 மாணவர்கள் இருந்தால் 4 ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். இதேபோல ஒவ்வொரு 30 மாணவர்களுக்கும் 1 ஆசிரியர் கூடுதலாக அனுமதிக்க வேண்டும். நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை குறைந்தபட்சம் 3 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்க வேண்டும். ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் இருந்தால் ஒரு பிரிவாக கணக்கிட்டு ஒரு ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்ய வேண்டும். 50 மாணவர்கள் இருந்தால் இரண்டு பிரிவாக கணக்கிட்டு கூடுதல் பிரிவு ஏற்படுத்தலாம். 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் 5 ஆசிரியர்கள் அனுமதிக்க வேண்டும். 9 மற்றும் 10ம் வகுப்புகளில் தலா 40 மாணவர்கள் இருந்தால் (1:40) ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமிக்க வேண்டும்.
60க்கு அதிகமாக இருந்தால் கூடுதல் பிரிவு ஏற்படுத்த வேண்டும். ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளில் 15 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால் அவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேனிலை பிரிவுகளை பொறுத்தவரையில் பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்சி, மாநகராட்சி பகுதியாக இருந்தால் குறைந்தபட்சம் 30 மாணவர்களும் மற்ற ஊரக பகுதியாக இருந்தால் குறைந்தபட்சம் 15 மாணவர்களும் இருக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏண்டா திருட வேற இடமே இல்லையா?? அரசுப்பள்ளியில் தொடர்ச்சியாக திருடும் ஆசாமி !!!
![]() |
➠❄கணினி கல்வியின் புதுமை❄➠ |
நெல்லை அருகே அரசு பள்ளி விஷமிகளின் கூடாரமாகிவிட்டது. இதனால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். ஆசிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர். நம்ம நாட்டில் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில் கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து செல்வார்கள். இதைத்தான் நாம் கேள்விபட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம் ஆனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் விஷமிகள் அடிக்கடி புகுந்து பொருட்களை சூறையாடி செல்வதுடன் அவர்களுக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துச்சென்று விடுகிறார்கள். இந்த பள்ளி பற்றிய அவல நிலைதான் கீழே தரப்பட்டுள்ளது.
நெல்லை அருகே சுத்தமல்லி போலீஸ் எல்கையில் உள்ளது நடுக்கல்லூர் கிராமம். இங்கு அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி என 3 பள்ளிகள் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். 1 முதல் 5ம் வகுப்புவரை உள்ள தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகள் சேர்ந்து படிக்கிறார்கள். 6 முதல் 10ம் வகுப்புவரை மாணவர்களுக்கு தனி வகுப்பறையும் மாணவிகளுக்கு தனி வகுப்பறையும் உள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்பு இருபாலரும் சேர்ந்து படிக்கிறார்கள்.
இதில் மேல் வகுப்புற்கு ஆண், தலைமை ஆசிரியரும், தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளுக்கு பெண் தலைமை ஆசிரியர்களும் உள்ளனர். மொத்தம் 45 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த பள்ளியின் காம்பவுண்ட் சுவர் 2 அடி உயரம் மட்டுமே. இதனால் ஆடு, மாடுகள் மற்றும் விலங்குகள் எளிதாக சுவர் ஏறி குதித்து உள்ளே வந்து விடுகின்றன. மேலும் சமூக விரோதிகளும் இரவு நேரங்களில் இங்கு குடித்து கும்மாளமிடுவதாகவும் தெரிகிறது. இந்த பள்ளிக்கு வந்த சோதனை என்னவென்றால் கடந்த 6 மாதத்தில் 5 தடவை விஷமிகள் புகுந்து வகுப்பறை பூட்டுகளை உடைத்து அங்கிருக்கும் பொருட்களை சிதறடித்துவிட்டு செல்கிறார்கள். சில நேரங்களில் மட்டும் பொருட்களை எடுத்து செல்கின்றனர்.
இதனால் இங்கு வருபவர்கள் திருடும் நோக்கத்தில் வருபவர்கள் அல்ல என்பது உறுதியாக தெரிகிறது. விஷமிகள்தான் இந்த வேலையில் ஈடுபடுகிறார்கள். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் பல தடவை சுத்தமல்லி போலீசில் புகார் செய்தும் இதுவரை விஷமத்தில் ஈடுபடும் விஷமிகள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று முன்தினம் இரவு கூட விஷமிகள் உள்ளே புகுந்து சில பொருட்களை எடுத்து சென்றுள்ளனர். இதுபோல் தண்ணீர் குழாய்களை அடிக்கடி சேதப்படுத்துவதும், மின் சப்ளையை துண்டிப்பதும் இவர்களின் வாடிக்கை.
இது போதாதென்று மாணவிகளுக்கு வழங்கப்படும் நாப்கின் பணம் உண்டியலில் போட்டு வைப்பது வழக்கம். அதையும் விட்டு வைப்பதில்லை. ஒரு தடவை ஆபீஸ் அறைக்குள் நுழைந்த விஷமிகள் விடைத்தாளை எரித்துள்ள சம்பவமும் நிகழ்ந்துள்ளது. விஷமிகளின் அட்டகாசத்திற்கு முடிவே இல்லையா? இதை செய்பவர்கள் மாணவர்களுக்கு தெரிந்தவர்களா என ஒரு முடிவுக்கு வர முடியாமல் பள்ளி நிர்வாகம் திணறுகிறது. இதற்கு முடிவு கட்ட சில வழிமுறைகளும் முன் வைக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த பள்ளியின் காம்பவுண்ட் சுவரை உயர்த்தி கட்டவேண்டும். இரவு காவலாளி போடவேண்டும். சிசிடிவி கேமிரா பொருத்தவேண்டும்.
இந்த மூன்றும் இருந்தால் விஷமிகள் அடையாளம் தெரிந்து விடும். சிசிடிவி கேமிரா பொருத்த ரூ.80 ஆயிரம் ஆகும் என கொட்டேஷன் போட்டு பள்ளி நிர்வாகம் கல்வித்துறைக்கு அனுப்பி உள்ளது. ஆனால் இதுவரை கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேற்கண்ட மூன்று திட்டங்களை செயல்படுத்தாதவரை இங்கு படிக்கும் மாணவர்கள் அச்சத்துடனும் ஆசிரியர்கள் கலக்கத்துடன்தான் பணியாற்றவேண்டிய சூழ்நிலை வரும்
Breaking News: பள்ளி கல்வித்துறை இயக்குனரின் அதிரடி உத்தரவால்பல பள்ளிகள் மூடப்படும் அபாயம்!!
Breaking:அரசுப்பள்ளிகள் மூடப்படும் அபாயம்- பள்ளி கல்வித்துறை இயக்குனர் அதிரடி உத்தரவால்!!
நகர்ப்புற அரசு மேல்நிலை பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள வகுப்புகளை மூட வேண்டும்
"கிராமப்புற அரசு மேல்நிலை பள்ளிகளில் 15 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால் வகுப்புகளை மூட வேண்டும்"
குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள வகுப்புகளை மூடவேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி..
![]() |
அரசுப்பள்ளிக்கு விரைவில் பூட்டு |
தமிழகத்தில் அனைத்து மாணவர்களும் கல்வி கற்கவேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் அரசு பள்ளிகளை நடத்தி வருகிறது. நிதி இல்லாமல் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது.
பல்வேறு அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்து வருவதால், ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாக அரசுக்கு புகார்கள் வந்தன.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உள்ள வகுப்புகளை மூடவேண்டும் என பள்ளிக்கல்வி துறை இன்று உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற அரசு மேல்நிலை பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள வகுப்புகளை மூட வேண்டும். இதேபோல், கிராமப்புற அரசு மேல்நிலை பள்ளிகளில் 15 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால் வகுப்புகளை மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை இயக்குனரின் இந்த அதிரடி உத்தரவால் பல பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்
Subscribe to:
Posts (Atom)
POPULAR POSTS
-
14663 கணினி ஆசிரியர் பணியிடங்கள். * 6 to 10th 38 மாவட்ட கணினி ஆசிரியர்கள் குழு* *38 மாவட்டங்களும் சங்கமிப்போம்* *சென்னை* மாவட்ட6-10 கண...
-
கூகுளின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தொடங்கி உலகின் பல டெக் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் தமிழர்கள் கோலோச்சுகிறார்கள். சென்னை டை...
-
தமிழக அரசு நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிக்கு ஓர் கணினி பயிற்றுநர் பணி நியமனம் செய்ய உள்ளது. தமிழக அரசு வருகின்ற கல்வியாண்டு ஜீன் முதல் 6992...
-
சமச்சீர் கல்வியில் கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிக்கு கொண்டுவர அரசுப்பள்ளி மாணவர்கள் ,60000வேலையில்லா கணினி ஆசிரியர...