மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Saturday, 3 March 2018

கணினி பாடத்திற்கு கணினி அறிவியலில் பி.எட் படித்த ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் தமிழக அரசுக்கு வலியுறுத்தில்

கணினி பாடத்திற்கு(computer science) கணினி அறிவியலில்  பி.எட் படித்த ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியல்

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்திற்கும் மற்றும் கழகத்தின்  கோவை மாவட்டதலைவர்
திரு அருளானந்தம் ஐயா அவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நன்றிகள் பல.

கணினி அறிவியல் பாடத்தை கணினி ஆசிரியர்கள் கொண்டுதான் கற்றுக் கொடுக்க வேண்டும்..

Soon, CS to be allied with science ...
news:Indian Express.

3000ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி..

மாவட்டத்திற்கு 200 ஆசிரியர்கள் வீதம் 3000 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு Digital content creation மற்றும் Digital Assessment creation ICT பயிற்சி!!!


3000அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு Digital content creation மற்றும் Digital Assessment creation
தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து சுமார் 200 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் இருந்து ஓர் மாவட்டத்திற்கு 100 ஆசிரியர்கள் வீதம் குறைந்தபட்ச கணினி அறிவு மதிப்பிடப்பட்டு  தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

 இவர்களில் இருந்து ஓர் மாவட்டத்திற்கு 50 ஆசிரியர்கள் என்ற வீதம் Digital content creation க்கும், 50 ஆசிரியர்களுக்கு Digital Assessment சார்ந்த பயிற்சிகளும் வழங்கப்படும்.

இதில் இருந்து சிறப்பான முறையில் Digital content மற்றும் Digital Assessment பங்களிப்பை வழங்கும் ஆசிரியர்களுக்கு மேலும் மெருகேற்றும்  பயிற்சிகள் மாநில அளவில் நடத்தப்படுகின்றன. இவர்கள் இனி வரும் நாட்களில் தங்கள் மாவட்டங்களில் MRP களாக Digital content , மற்றும் Digital assessment creation காக  பயிற்சி வழங்கும் ஆசிரியர்களாக இருப்பார்கள்.

இவ்வகையான selection ஆனது ஒளிவு  மறைவு இன்றி மாவட்டங்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டே ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இதுவரை, காஞ்சிபுரம், திருச்சி, கோவை, மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து 400 ஆசிரியர்கள் இவ்வகை பயிற்சிகளை முடித்து தயார் நிலையில் உள்ளனர்.

அனைத்து மாவட்டங்களிலும் இவ்வகை தேர்ந்தெடுத்தல் மற்றும் பயிற்சி வழங்குதல் முதல் கட்டமாக இந்த கல்வியாண்டுக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தங்கள் மாவட்டங்கிளில் இவ்வகை தேர்ந்தெடுப்பு முறை குறித்த தகவல்களை உங்கள் BRC மூலம் அறிந்துக்கொள்ள முடியும்.

இப்படி உருவாகும் 3000 ஆசிரியர்களை கொண்டே தமிழகம் முழுதிலும் உள்ள ஆசிரியர்களுக்கு TNTP குறித்தும் அதில் பங்களிப்பது  குறித்தும் இனி பயிற்சிகள் அமையும்.

எனவே ICT பயிற்சி என்பது குறிப்பிட்ட சில ஆசிரியர்களுக்கே அளிக்கப்படுகிறது என்ற மாயையை  உடைத்தெரியவும். இது அனைவருக்கும் சென்று சேரவேண்டிய , அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஓன்று என்பதை உணர்ந்து பயிற்சி பெற்று சிறப்பாக நம் பங்களிப்பை நல்க முயல்வோம்

Friday, 2 March 2018

பிஏட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்கள் நாற்பதாயிரம் பேர் வேலையற்ற நிலையில் காத்திருப்பு..


பிஏட் படிப்பில் கணினி படித்து முடித்த ஆசிரியர்கள் நாற்பாதாயிரம் ஆசிரியர்கள் பணிக்காக காத்திருக்கின்றனர் . தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தின் மூலம் கணினி ஆசிரியர் படிப்புகள் முடித்து 40000 பிஏட் பட்டம் பெற்று ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். 





தமிழக அரசு அங்கிகரித்து நடவடிக்கை எடுத்தால்தான தனியார் பள்ளிகளிலாவது ஆசிரியராக பணியாற்ற முடியும் . பிஏட் பட்டம் கணினியில் பெற்ற ஆசிரியர்களுக்கும் வேறுஎங்கும் பணி வாய்ப்பற்ற நிலையில் உள்ளனர் .
இவர்களால் பகுதிநேரமாக கூட எங்கும் பணியாற்ற இயலவில்லை. இளங்கலை பட்டத்துடன் பிஏட் மற்றும் முதுகலை பிஏட் பெற்றவர்களே அதிகம் வாய்ப்பு பெறும் நிலையில் அதுவே கட்டாயமான நிலையில்  ஆனால் பிஏட் கணினி முடித்தவர்களுக்கான வாய்ப்பு எனபது துளியும் இல்லை . அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை . இதுவரை அரசு பள்ளி , தனியார் பள்ளிகளில் கணிணி அறிவியல் ஆசிரியர்க்கான எந்த சரியான கல்வித்தகுதியும் நிர்ணயிக்கவில்லை .


அரசு இது குறித்து நடவடிக்கையெடுத்தால்தான படித்து முடித்து காத்திருக்கும் 40 ஆயிரம் பேருக்கும் ஒரு வழிகிடைக்கும் இல்லையெனில் படித்தும் பயணின்றி வேலையற்ற நிலையில் இருக்கும் நிலையே ஏற்டுகின்றது . ஆகவே கணினி ஆசிரியர்கள் படிப்பு முடித்து பிஏட் பட்டம் பெற்றவர்களின் எதிர்காலம் குறித்து அரசு சிந்தித்து அவர்களுக்கான அங்கிகாரம் வேலையில் கிடைக்கபெற முன் வரவேண்டும் . தமிழகத்தில் 2011 முதல் பள்ளிகளில் அச்சிடப்பட்ட கணினி பாடபுத்தகங்கள் குப்பையில் போடும் நிலையில் இருப்பதாக ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது . கணினி அறிவியல் பாடம் கற்றுத்தர நடவடிக்கையெடுத்தும் அரசு அதனை முழுமையாக முடிக்காமல் பாதியிலே கைவிட்டுள்ளது . இதனால் அரசு அச்சடிப்புக்கு செய்த செலவு தான் இறுதியில் நட்டக்கணக்கில் நிற்க்கின்றன. தமிழக அரசு இதுகுறித்து விரைந்து நடவடிக்கையெடுக்க வேண்டி 40ஆயிரம் ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.

வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

Thursday, 1 March 2018

TRB தேர்வு பட்டியலில் கணினி ஆசிரியர்கள் பணியிடம் இல்லாத காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்

கணினி ஆசிரியர்கள் வாழ்வு
765பணியிடங்களுக்கு வழக்கு தொடரப்பட்ட காரணத்தால் இந்த ஆண்டு TRB தேர்வு வாரிய அறிக்கையில் இடம் பெறவில்லையா??

765 பணியிடங்களில் கூட ஏமாற்றமா???

அரசு அறிவித்த   765கணினி ஆசிரியர்கள் பணியிடங்களில் கூட ஏமாற்றம் தான் மிஞ்சியது...
TRB  Annual Recruitment Planner - 2018 
மேலும் TRB பற்றிய  தகவல் அறிந்து கொள்ள:
           http://trb.tn.nic.in/

Tuesday, 27 February 2018

​கணினி இல்லாத நாட்டில் கூட கணினி அறிவியல் கல்வி இங்கு இலவச மடிக்கணினி கொடுத்து என்ன பயன் ??

​கணினி இல்லாத நாட்டில் கூட கணினி அறிவியல் கல்வி இலவச மடிக்கணினி கொடுத்து என்ன பயன் ??

பள்ளியில் கணினி இல்லாததால், microsoft word-இன் வரைபடத்தை, கரும்பலகையில் வரைந்து பாடம் கற்பித்த ஆசிரியர்.


தமிழகத்தில் பல  கோடி செலவில் இலவச மடிக்மடிக்க கணினி அறிவியல் பாடம் எங்கே???

தென் ஆப்பிரிக்காவின் கானா பகுதியில் உள்ள பள்ளியில், கணினி வசதி இல்லாததால், microsoft word இன் வரைபடத்தை, கரும்பலகையில் வரைந்து பாடம் நடத்திய ஆசிரியரின் செயல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

க்வாட்வோ ஹாட்டிஷ் என்பவர், கானா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அந்த பள்ளியில், கணினி மற்றும் ப்ரொஜெக்டர் இல்லாத காரணத்தால், மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்.

எனினும், அவரிடம் படிக்கும் மாணவர்களுக்கு புரியும் வகையில் பாடம் நடத்த வேண்டும் என்பதற்காக, microsoft word-ன் வரைபடத்தை முழுவதுமாக கரும்பலகையில் வரைந்து, அதனைப்பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், அவர் வரைந்து பாடம் நடத்துவது போன்ற புகைப்படங்களை, அவரது ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார். அதில் “நான் என் மாணவர்களை மிகவும் நேசிக்கிறேன், அதனால் அவர்களுக்கு எப்படி சொல்லித்தந்தால் புரியவைக்க முடியும் என்பதை அறிவேன்” என்று பதிவிட்டுள்ளார்.

பதிவு செய்த சிலமணி நேரங்களிலேயே, அவரது புகைப்படங்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாக மாறியுள்ளது.

2018-ல் கூட, பள்ளிகளில் கணினி இல்லாதது ஆச்சரியத்தை தருகிறது என்று விமர்சித்து வரும் பொதுமக்கள், அந்த பள்ளிக்கு கணினி மற்றும் மடிக்கணினி வழங்க முன்வந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில், பல பள்ளிகள் இதுபோன்று உள்ளதாகவும், அவைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்யப்போவதாகவும், ஆசிரியர் க்வாட்வோ ஹாட்டிஷ் தெரிவித்தார்.

2 ஆண்டுகளில் பள்ளிகள் 100 விழுக்காடு கணினி மயமாக்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்

2 ஆண்டுகளில் பள்ளிகள் 100 விழுக்காடு கணினி மயமாக்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்..




கிராமப்புற பள்ளிகளில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைநபார்டு திட்டத்தின் மூலம் மேற்கொள்ள உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மொளச்சூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இரண்டு ஆண்டுகளில் பள்ளிகள் 100 விழுக்காடு கணிணி மயமாக்கப்படும் என்றார்.

தமிழக அரசுப்பள்ளியில் மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் இலவசமாக கணினி அறிவியல் பாடத்தை கற்றுக் கொடுக்கிறது.. CM CELL பதில்.

தமிழக அரசுப்பள்ளியில் மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும்
இலவசமாக கணினி அறிவியல் பாடத்தை கற்றுக் கொடுக்கிறது..
CM CELL பதில்.
இலவசத்தை நிராகரித்த தமிழக அரசு!

ஏற்கப்பட்டது கணினி ஆசிரியர்கள் கோரிக்கை மனு.

ஏற்கப்பட்டது கணினி ஆசிரியர்கள் கோரிக்கை மனு CM CELL பதில்.



இராண்டாவது முறையாக கணினி ஆசிரியர்கள் கோரிக்கை மனுவை தமிழக அரசு ஏற்றுள்ளது  இனியாவது  கணினி ஆசிரியர்கள் வாழ்வில் விடியல் கிடைக்குமா???

Monday, 26 February 2018

புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் ஏமாற்றம்..!!!

உலகம் வியக்கும் 41 அறிவிப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக அரசுப்பள்ளியில் கொண்வருவதாக அறிவித்தனர்  ஆனால் கடந்த கல்வி மான்ய கோரிக்கையில் அந்த அறிவிப்பும் கானல் நீராய் போனது கணினி ஆசிரியர்களுக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும்..

புதியபாடத்திட்டம் குறித்து
ஜகோர்ட்டில் அறிக்கை தாக்கல் :

  புதிய பாடத்திட்டம் குறித்த அறிக்கை
24/08/2017.


நீதிபதி கிருபாகரன் தலைமையில் விசாரணைக்கு வந்த போது மதிப்புமிகு கல்விச்செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில் மாநிலத்தின் புதியபாடத்திட்டம் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை விட சிறப்பாக அமையும் வகையில் 6ம் வகுப்பிலிருந்து 10வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை இணைத்து புதியபாடத்திட்டம் வகுக்க மாநில கல்வி ஆராய்ச்சிமற்றும் பயிற்சி மையத்திறக்கு ஆலோசனை வழங்கியுள்ளது..இதுவும் கூட பொய்த்து போனது .ஏழை மாணவர்களின் கணினி அறிவியல் பாடத்திட்டதில் வரைவு அறிக்கையில் கூட வெற்று அறிக்கையாக போனது.

கணினி அறிவியல் பாடம் குறத்து 
 28/7/2017 அன்று முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டது அந்த மனுவிற்கு பதில் மனு தந்த முனைவர் K.S.மணி துணை இயக்குநர்  (மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) அவர்கள் கணினி அறிவியல் பாடத்தை 3ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்புவரை கணினி அறிவியல் பாடத்தில் சேர்ப்பதற்க்காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்  .

                  முதல்வர் தனிப்பிரிவு பதில் மனு.

வரைவு பாடத்திட்டத்தில் தமிழக கல்வித்துறை மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் காத்திருந்த வேலையில் கணினி அறிவியல் பாடம் துணைப்படமாக இணைத்துள்ளது. அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்
நீண்ட நாள் போராடி வரும் 40000 கணினி ஆசிரியர்களக்கும் ஏமாற்றத்தை தரும் வகையில்  அமைந்துள்ளது .

மாணவர்கள் எதிர்கால வாழ்வில் அங்கமான கணினி அறிவியல் பாடத்தை துணைப்படமாக இணைத்துள்ளது.பருவத்திற்கு இரண்டு பாடமாகவும் மூன்று பருவத்திற்கு ஆறு பாடமாக கொண்டுவந்துள்ளது.செய்முறை பயிற்சியின்றி வெறும் பாட்த்தை கற்றுக் கொண்டு மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த நினைக்கிறது மாண்புமிகு அரசு.




தமிழக அரசு பணிகள் இனி தனியாரிடம் ஒப்படைப்பு..

தமிழக அரசு பணிகள் இனி தனியாரிடம் ஒப்படைப்பு...

நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி..

Sunday, 25 February 2018

மைக்ரோசாப்ட்’ நிறுவனத்துடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒப்பந்தம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 500 பேருக்கு சிறப்பு பயிற்சி.

தமிழக பள்ளி ஆசிரியர்கள் 500 பேருக்கு சிறப்பு பயிற்சி – Microsoft நிறுவனத்துடன் பள்ளிக்கல்வித்துறை ஒப்பந்தம்.



தமிழகத்தில் 7 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்கும் அனுமதியையும், பள்ளி ஆசிரியர்கள் 500 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தத்தையும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தமிழக பள்ளிக் கல்வித்துறையிடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் 500 பேருக்கு சிறப்பு பயிற்சியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழங்குகிறது. மேலும் தமிழகத்தில் 7 அரசுப் பள்ளிகளையும் அந்நிறுவனம் தத்தெடுக்கிறது. இதுகுறித்து இன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், மைக்ரோசாஃப்ட் அதிகாரி மணீஷ் பிரகாஷ், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்தார். சிறப்புப் பயிற்சிக்கான ஒப்பந்தம் இரு தரப்பிலும் கையெழுத்தானது.

மேலும், கரூர், கன்னியாகுமரி, திருப்பூர், ஓசூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் 7 பள்ளிகளைத் தத்தெடுப்பதற்கான அனுமதியையும் மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிகாரி பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழகஅரசு பல்வேறு மாற்றங்களை பள்ளி கல்வித்துறை சார்பில் செய்து வருவதாகவும்,500 அரசு ஆசிரியர்களுக்கு மைக்ரோசாப்ட் ஈ புக் மூலம் பயிற்சி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்

*👨🏻‍💻கணினிகல்வியின்புதுமை👩🏻‍💻*
http://csthalaimurai.blogspot.com/

90நாட்கள் கடந்தும் பதில் தராத பள்ளிக்கல்வித்துறை...

90நாட்கள் கடந்தும் பதில் தராத பள்ளிக்கல்வித்துறை...



மக்களின் கருத்துக்கு இனியாவது மதிப்பளிக்குமா???

POPULAR POSTS