மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Saturday 28 April 2018

கணினி அறிவியலுக்கு என தனி ஆசிரியரை நியமிக்குமா தமிழக அரசு? #savetnschools #savecsteacherslife

கணினி அறிவியலுக்கு என தனி ஆசிரியரை நியமிக்குமா தமிழக அரசு?


முதல்வர் தனிப்பிரிவில் கொடுக்கப்பட்ட மனு செய்தியை வெளியிட்ட தினமலர் நாளிதழ்க்கு நன்றி.

வெ.குமரேசன்,
9626545446,
மாநிலப் பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் பதிவு எண்:655/2014
.

அறிவியலில் 'ஐக்கியமானது' கணினி அறிவியல் 6,9ம் வகுப்புகளுக்கு கற்றுத்தர போவது யார்??


➠❄கணினி கல்வியின் புதுமை❄➠

நமது செய்தியை வெளியிட்ட தினமலர் நாளிதழ்க்கு நன்றி.

கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக அனைத்து அரசுப்பள்ளியிலும் கொண்டுவருதல் சார்பு முதல்வர் தனிபபிரிவு பதில்- மனு





தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் திருமதி ஜமுனா ராணி அவர்களின் கேள்விக்கான பதில் மனு...

8-ம் வகுப்பு வரை ஸ்மார்ட் வகுப்பு அமைக்கவும், 9, 10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளில் இணையதள வசதி ஏற்படுத்தவும் திட்டம். #KA_Sengottiyan #Smartclass #Student K.A.Sengottaiyan


பள்ளிகள் மூடும் முடிவு : 7,500 ஆசிரியர் பணியிடங்கள் பறிபோகும்



மாணவர் எண்ணிக்கை குறைவை காரணம் காட்டி அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளை மூடுவது தனியார் பள்ளிகளை மேலும்  ஊக்குவிக்கும் என்றும், கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு திருப்பிவிடப்படும் நிதியை தடுத்து அரசுப்பள்ளிகளை  அந்நிதியில் மேம்படுத்தலாம் என்றும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்

தமிழகத்தில் குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள அரசு பள்ளிகளை மூடும்படி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி  உள்ளது. மேல்நிலைப்பள்ளிகளில் 15 பேருக்கு குறைவாக இருக்கும் குரூப்பை மூட வேண்டும் என்றும், 30 பேருக்கு குறைவாக இருக்கும் குரூப் மாணவர்களை  அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றும், இந்த குரூப்பில் உள்ள முதுநிலை ஆசிரியர்கள் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் சென்று பாடம்  எடுக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வி இயக்குனரின் செயல்முறைகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


அரசுப்பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை ஆங்கிலவழிப்பிரிவில் 15க்கும் குறைவான மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க  வேண்டும். அல்லது தமிழ்வழிக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய பணி நிரவல் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 29  ஆயிரம் தொடக்கப்பள்ளிகளில் ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் மாணவர் குறைவை காரணம் காட்டி மூடப்படும் நிலை ஏற்படும். அதோடு 20க்கும்  குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள 33 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் மூடப்படும். 

அதோடு தொடக்கப்பள்ளிகளில் 7,500 ஆசிரியர் பணியிடங்கள் காணாமல் போவதுடன், அப்படியே பணி நிரவல் செய்யப்பட்டாலும் 5,000 ஆசிரியர்களின்  நிலை கேள்விக்குறியாகும். இது ஒருபுறம் என்றால் கிராமப்புறங்களில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் மாணவர்  எண்ணிக்கை குறைந்தால் அப்பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கவும் பள்ளி கல்வி இயக்குனரின் செயல்முறைகள் வலியுறுத்துகிறது

National ICT Award for School Teachers in India: Advertisements released for invitation of nominations/entries for the year 2018

தமிழக அரசு வருவாயில் 61% அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கே செலவாகிறது - முதல்வர் பரபரப்பு பேச்சு!!


அறிவித்த தேதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும்- அமைச்சர் செங்கோட்டையன்..

Friday 27 April 2018

Breaking News:‘எஸ்எம்எஸ்’ மூலம் 2 நிமிடத்தில் தேர்வு முடிவுகள்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அரசு அறிவித்த தேதியில் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் இரண்டு நிமிடத்தில் மாணவர்களுக்கு அனுப்பப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் தனியார் கல்லூரியில் நடைபெற்றுவரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவ, மாணவிகளுக்கான நீட் தேர்வு பயிற்சி மையத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அரசு அறிவித்த பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் தேதியில் இரண்டு நிமிடங்களில் எஸ்.எம்.எஸ். மூலம் மாணவர்களுக்கு தேர்ச்சி விவரங்கள் குறித்த தகவல் அனுப்பப்படும்.
போட்டித் தேர்வுகளுக்காக நடத்தப்படும் பயிற்சி முகாம்களால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர். தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு பயிற்சி மையங்களில் 3,146 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில், 2 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு பள்ளிகளை மூடும் நோக்கம் ஏதும் அரசுக்கு இல்லை. எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள்.
முதல் வகுப்பு, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மிஞ்சும் அளவுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும். 6, 7, 8 வகுப்புகளுக்கு 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும் என்றார்

"பள்ளிகள் மீது நடவடிக்கை"

இதற்கிடையே திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, கோடைகால விடுமுறையின்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. எங்கேனும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார்கள் வரப்பெற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தமிழ்நாட்டிலேயே நீட் தேர்வை எழுதுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.

இப்படியே போனால் அரசுப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் வேலையில்லாமல் போகலாம்!!



➠❄கணினி கல்வியின் புதுமை❄➠

நாளைய மாணவர்கள் அரசுப்பள்ளியில் சேருவதும் தனியார்ப்பள்ளியில் சேருவதும் தமிழக அரசே உங்கள் கையில் தான் உள்ளது!!! #savetngovtshools #savecsteacherslife

தமிழக அரசே! அரசுப்பள்ளியில் கணினி கல்வி கொண்டு வருவிங்களா? மாட்டீங்களா?

நாளைய மாணவர்கள்  அரசுப்பள்ளியில் சேருவதும் தனியார்ப்பள்ளியில் சேருவதும் தமிழக அரசே உங்கள் கையில் தான் உள்ளது!!!
#savetngovtshools #savecsteacherslife

ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்..

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்...

➠❄கணினி கல்வியின் புதுமை❄➠

நீட் தேர்வு- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!




தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநில தேர்வு மைய உத்தரவு ரத்து,

சிபிஎஸ்இ-வின் உத்தரவை ரத்து செய்தது ஹைகோர்ட்,

தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் மட்டும் தேர்வு மையங்கள்- ஹைகோர்ட்

.

தமிழக கல்வித்துறை வரலாற்றில் முதன் முறையாக AEEO சி. சித்ராவுக்கு அபராதத்துடன் ஒழுங்கு நடவடிக்கை - மாநில மனித உரிமை ஆணையம் தீர்ப்பு ..!

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் உதவித்தொடக்கக்கல்வி அலுவலராக பணிபுரிந்து தற்போது ஆலங்காயம் ஒன்றியத்தில் AEEO ஆக பணிபுரியும் திருமதி. சி. சித்ரா அவர்கள் வாணியம்பாடி சென்னாம்பேட்டையில் பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கி வந்த திரு.வி.க நிதியுதவி நடுநிலைப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி நீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவர் காலனியில் உள்ள பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்ய வழங்கிய தீர்ப்புக்கு கட்டுப்பட்டாததாலும், மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் (DEEO) ஏழை மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள், சத்துணவு, சீருடை வழங்க 5 முறை உத்தரவிட்டும் 
*AEE0 சித்ரா*
வழங்காத காரணத்தினாலும், பள்ளியின் தாளாளர் வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்தார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கும் மதிப்பு அளிக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கும் மதிப்பு அளிக்கவில்லை. எனவே, சென்னையில் உள்ள
மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று (25.04.2018)   மேன்மைப் பொருந்திய மாநில மனித உரிமை ஆணையம் மனித உரிமை மீறலுக்காக ரூ.2,00,000/- இரண்டு இலட்சம் ரூபாய் AEEO சித்ராவுக்கு அபராதம் விதித்ததுடன் அந்த தொகையை AEEO சித்ராவிடம் வசூலித்து பள்ளியின் தாளாளர் சி.மகேந்திரனிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் மேலும் AEE0 சித்ரா மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Thursday 26 April 2018

மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி!!!



தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புதிய பாடத்திட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை, ஆன்லைன் தேர்வு நடத்தும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.தமிழக பள்ளிக்கல்வித்துறையில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது. பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரனின் நேரடி மேற்பார்வையில், புதிய பாடத்திட்ட தயாரிப்பு மற்றும் புத்தக தயாரிப்பு பணிகள், நடந்து வருகின்றன.


வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 ஆகிய பாடங்களுக்கு, புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதில், பிளஸ் 1 தவிர, மற்ற வகுப்புகளுக்கு, முதல் பருவ தேர்வுக்கான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, மாவட்ட வாரியாக பள்ளிகளுக்கு அனுப்பப் பட்டுள்ளன. இந்த புத்தகங்கள், ஜூன், 1ல், பள்ளிகள் திறக்கப்படும் நாளில், மாணவர்களுக்கு வழங்கப்படும்.இந்நிலையில், புதிய பாடத்திட்டத்தில், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆன்லைன் தேர்வு முறையை, பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த உள்ளது.



இதற்கான வழிமுறைகளை, புதிய பாடத்திட்டக்குழு தயாரித்துள்ளது. ஆன்லைன் தேர்வு முறைக்கு ஏற்ப, புதிய பாடத்திட்ட புத்தகங்களில், கேள்விகளும் இணைக்கப்பட்டுள்ளன.முதல் கட்டமாக, ஐந்தாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆன்லைன் தேர்வு முறை அறிமுகமாக உள்ளது. 'ஸ்மார்ட்' வகுப்புகள் முழுமையாக துவங்கிய பின், தொடக்க பள்ளி மாணவர்களுக்கும், ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

போராட்டம் நடத்திய ஆசிரியர்களுக்கு மெமோ!!

 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்திய ஆசிரியர்களுக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது. மெமோ விவகாரம் பற்றி பேச பள்ளிக்கல்வி இயக்குனருடன் நாளை ஆசிரியர்கள் சந்திக்கின்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்துவதை புறக்கணித்திருந்தனர்

ஆசிரியர்கள் பணியிடங்கள் தொடர்பாக பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு...

தமிழகத்தில் அரசு மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 918  தலைமையாசிரியர், 4092 ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரிய வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஆகியோருக்கு  நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது

Monday 23 April 2018

இணையதள வசதிகளுடன் மாணவர்களுக்கு தரமான கல்வி அமைச்சர் செங்கோட்டையன்..


➠❄கணினி கல்வியின் புதுமை❄➠

அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை...



காலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம் | தமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முடிவுசெய்துகொள்ளலாம். அவர்கள் தற்போது இருப்பதுபோல நிதித்துறையிடமோ, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையிடமோ, பணியாளர் குழுவிடமோ ஒப்புதல் பெறத் தேவையில்லை. “தற்போதைய நடைமுறையில், ஆசிரியர் காலியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட அரசு துறைகளிடம் ஒப்புதல் பெற்று அதை இறுதிசெய்வதற்கு அதிக காலம் ஆகிவிடுகிறது. அரசின் புதிய முறை மூலம் அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பமுடியும்” என்று பள்ளிக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்

ஆசிரியர்கள் கைது!!!

டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது...


சென்னை டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டனர். ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள், சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக. அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக டிபிஐ வளாகத்திற்குள் நுழைய முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால், இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

கம்ப்யூட்டர் சய்ன்ஸ் டீச்சர் போஸ்ட் கிரியேட் பண்ணுங்க Memes!

➠❄கணினி கல்வியின் புதுமை❄➠

Sunday 22 April 2018

கணினி அறிவியல் பாடம் தனி அலகாக சேர்ப்பு




முதல்வர் தனிபபிரிவு செய்தியை வெளியிட்ட தினகரன் பத்திரிகைக்கு நன்றி...


வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014

படிக்க விரும்பும் ஆசிரியர்கள் இதையும் கொஞ்சம் படிங்க!!

உயர்கல்வி படிக்கவுள்ள ஆசிரியர்கள், முன் அனுமதி கடிதத்துடன், முக்கிய சான்றிதழ்கள் இணைத்து அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், உயர்கல்வி படிக்கும் பட்சத்தில், ஊக்க ஊதியம் அளிக்கப்படுகிறது. இதற்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம், முன் அனுமதி பெறுவது அவசியம். இதை முறையாக பின்பற்றாதோரிடம், சமீபத்தில் விளக்கம் அளிக்க கோரி, கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், வருங்காலங்களில் உயர்கல்வி படிப்போர், அடிப்படை தகவல்களுடன், சில சான்றிதழ்கள் இணைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'பகுதிநேரமாக எம்.பில்., பி.எச்.டி., படிக்க விரும்பும் ஆசிரியர்கள், முன் அனுமதி பெறுவது அவசியம். இதற்கான ஒப்புதல் கடிதத்தோடு, படிக்கவுள்ள பல்கலை பெயர், கல்வி பயிலும் ஆண்டு, தற்காலிக தேர்வு கடிதம், வழிகாட்டியின் கடிதம் இணைத்து, பணியாளர் தொகுதியில் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், ஊக்கத்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்படாது' என்றனர்.

என்னமோ போடா? கணினி ஆசிரியர்கள் MeMes!!!


தமிழர் அறிவியலை ஆய்வுசெய்த மாணவர்கள்!!


தமிழ்ப் பண்பாட்டையும் வரலாற்றையும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் படைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இடம்பெற்றது மாணவர்களுக்கான " தமிழர் அறிவியல் " எனும் போட்டி.
கட்டடக் கலை, மருத்துவம் போன்ற தலைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உயர்நிலை, தொடக்கக்கல்லூரி மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
30க்கும் மேற்பட்ட குழுக்களிலிருந்து சிறந்த 2 படைப்புகள் நேற்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் படைக்கப்பட்டன.
தொடக்கக் கல்லூரிப் பிரிவில் முதல் பரிசை குளோபல் அனைத்துலக இந்தியப் பள்ளி (Global Indian International) வென்றது. 
உயர்நிலைப் பள்ளிப் பிரிவில் துமாசிக் தொடக்கக் கல்லூரியின் IP திட்டத்தில் பயிலும் உயர்நிலை 2 வகுப்பு மாணவர்கள் முதல் பரிசை வென்றனர். 
இந்தப் போட்டி தங்களுக்குத் தமிழ்மொழியிலும் வரலாற்றிலும் அதிக ஆர்வத்தைத் தூண்டியதாக மாணவர்கள் கூறினர்.
தமிழ்மொழி மாதத்தையொட்டி, அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்திருந்தது.


`காமராஜர் பள்ளிகளை திறந்தார்... எடப்பாடி அரசு அதனை மூடுகிறது' - ஆசிரியர் சங்கம் காட்டம்!

`காமராஜர் ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிகளைத் திறந்தார். ஆனால், தற்போதைய தமிழக அரசுப் பள்ளிகளை மூடி வருகிறது என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

கரூரில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அந்தச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரான அ.சங்கர்,    ``காவிரி மேலாண்மை வாரியத்தினை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு அமைத்திட வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிடவும், ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்தவும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். 
மேலும், அரசு உதவிப் பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும். எட்டாவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட முரண்பாடுகளை நீக்கிடவும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்கிடவும், சி.பி.எஸ் ரத்து செய்திடவும், அனைத்து வகை ஊழியர்களையும் நிரந்தரப்படுத்திடவும் அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறோம். கல்விக்கண் திறந்த காமராஜர் அனைத்துக் கிராமத்திலும் பள்ளிகள் திறந்தார். அனைவருக்கும் கல்வி கிடைக்கப் பாடுபட்டார். 
ஆனால், தற்போது ஒவ்வொரு பள்ளியையும் எவ்வாறு மூடுவது என்றும் ஆசிரியர்களை எவ்வாறு களையெடுப்பது என்றும் எடப்பாடி அரசு ஆலோசித்து வருகிறது. அதற்கான முயற்சிகள் எடுப்பதை அரசு கைவிட வேண்டும். தேர்வு விகிதத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை அறிவிக்க அமைச்சர் செங்கோட்டையன் சொன்னது சிறப்பான விசயம். அதேநிலையில், அந்தக் கட்டுப்பாடு அரசுப்பள்ளிகளில் மட்டுமே கடைப்பிடிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் அதைக் கடைப்பிடிக்கவில்லை" என்று குற்றம்சாட்டினார்.

ஒரு யூனிட்டா சேத்துட்டாங்கமா கணினி ஆசிரியர்கள் Memes!!

➠❄கணினி கல்வியின் புதுமை❄➠


POPULAR POSTS