மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Saturday, 31 March 2018

கல்லூரிக்கு வராத மாணவர்களுக்கும் பி.எட் சான்றிதழ்!! கல்வியியல் பல்கலையில் முறைகேடு!!!

 

மவுனம் காக்கும் துணைவேந்தர் கல்வியியல் பல்கலையில் முறைகேடு.




*கல்லூரிக்கு வராத மாணவர்களுக்கும் பி.எட் சான்றிதழ்
* அடிமைபோல் நடத்தப்படுவதாக ஊழியர்கள் குமுறல்.
கணினி கல்வியின் புதுமை
சென்னை: கல்வியியல் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் தன்னிச்சையாக செயல்படுவதால் தனியார் பி.எட் கல்லூரிகள் ஆய்வுப் பணியில் முறைகேடு நடந்துள்ளது. கல்வியியல் பல்கலைக் கழகத்தின் (பி.எட் பல்கலைக் கழகம்) கீழ் தமிழகத்தில் சுமார் 736 பி.எட் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன. அவற்றில் 14 கல்லூரிகள் நிதியுதவி பெறும் கல்லூரிகள். அரசுக் கல்லூரிகள் 7 செயல்படுகின்றன. மற்றவை தனியார் கல்லூரிகள். தனியார் கல்லூரிகள் அனைத்தும் கல்வியியல் பல்கலைக்கழகத்தில்தான் அங்கீகாரம் பெற்று செயல்பட வேண்டும். அப்போதுதான் அந்த கல்லூரிகள் இணைப்பு பெற்ற கல்லூரிகள் என்று அழைக்கப்படும். இந்த அங்கீகாரம் 3 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். புதுப்பிக்காத கல்லூரிகளின் அங்கீகாரம் செல்லாது. 
கணினி கல்வியின் புதுமை.
கல்வியியல் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் கவுன்சலிங் நடத்தி மேற்கண்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறது. அதேவேளையில், கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா, மாணவர்களிடம் உரிய கட்டணம் வசூலிக்கப்படுகிறதா, யுஜிசி விதிப்படி கல்லூரிகள் செயல்படுகிறதா என்று பார்ப்பதும் பல்கலையின் வேலை. இதற்காக 3 ஆண்டுக்கு ஒருமுறை பல்கலை சார்பில் ஆய்வுப் பணி செய்ய வேண்டியது கடமை. தனியார் கல்லூரிகள் அங்கீகாரம் புதுப்பிக்கும் பணியில் உள்ள பல்கலை ஊழியர்கள்தான் ஆய்வுப் பணிக்கு செல்ல வேண்டும். ஆனால், கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தற்போதுள்ள துணை வேந்தர் தனக்கு வேண்டிய நபர்களை வைத்து இந்த ஆய்வுப் பணிகளை செய்ய சொல்கிறார். ஆனால் அவர்களோ ஆய்வுப் பணி என்ற பெயரில் கல்லூரிகளுக்கு செல்லாமல் சம்பந்தப்பட்ட கல்லூரிகளை சேர்ந்த நபர்களை சென்னையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வரைவழைத்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அதற்கு பிறகு செய்யப்படும் கவனிப்புக்கு ஏற்ப கல்லூரிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கப்படுகிறது. 

உண்மையில், மேற்கண்ட கல்லூரிகளில், யுஜிசி தெரிவித்துள்ள 100 மாணவர்களுக்கு இரண்டு யூனிட் என்ற விகித அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதன்படி இந்த கல்லூரிகளில் ஆசிரியர்கள் இல்லை. அத்துடன் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை. பி.எட் கல்லூரிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் உரிய நேரத்தில் உரிய சம்பளம் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் இருக்கின்ற நிலையில், ஆய்வு செய்யாமலேயே அங்கீகாரம் புதுப்பிக்கப்படுகிறது. குறிப்பாக, யுஜிசி விதிகளின்படி பல கல்லூரிகளில் வசதிகள் இல்லை என்று மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

மேலும், பல பி.எட் கல்லூரிகளில் சேர்க்கப்படும் மாணவர்கள் கல்லூரிக்கே வராமல் பி.எட் பட்டம் பெற்றதாக சான்றிதழ் பெறும் நிலையும் உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி வாரிய (என்சிடிஇ) விதிகளின்படி இவ்வளவு கல்லூரிகள் இருக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கல்வியியல் பல்கலைக்கழகம் அதுகுறித்து கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதனால் பி.எட் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில் மேற்கண்ட கல்லூரிகளில் படித்த மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரின் ஆட்கள் வைத்ததுதான் சட்டம் என்ற நிலையில் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. அங்கு பணியாற்றும் ஊழியர்களையும் அடிமைபோல நடத்துகின்றனர். இதனால் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் நடக்கும் முறைகேடுகளை தமிழக ஆளுநர் விசாரிக்க வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். 
செய்தி:தினகரன்.

4,000 அரசு ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தும் வேலை இல்லை!!

அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால், 4,000 ஆசிரியர்களுக்கு, பாடம் நடத்தும் வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், கல்வித் தரம் மற்றும் கற்பித்தல் முறையில் குறைபாடுகள் உள்ளன.


அரசின் சார்பில், 27 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, ஆசிரியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் என, பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனாலும், அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை சரிந்து வருகிறது. இதற்கு, பல ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு செல்லாமல், 'ஓபி' அடிப்பதும், அலுவலக பணி என, ஊர் சுற்றுவதுமே காரணம்.இதுபோன்ற காரணங்களால், ஐந்து ஆண்டுகளில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால், மாணவர்களின் விகிதாச்சாரத்தை விட, ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால், 4,000 ஆசிரியர்கள் பயிற்றுவிக்க, பள்ளிகளில் மாணவர்கள் இல்லாத நிலை உள்ளது.
இந்த பிரச்னையை அறிந்துள்ள கல்வித்துறை, அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சிக்கவில்லை. மாறாக, அந்த ஆசிரியர்களை, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள, காலியிடங்களில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தால், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த பள்ளிகள் மூடப்படுமோ என்ற அச்சம், பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது:அரசு பள்ளிகளில், கல்வித் தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை குறைய காரணமான, பள்ளி ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதை விடுத்து, ஆசிரியர்களை, வேறு பள்ளிகளுக்கு மாற்றுவதால், அந்த ஆசிரியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், அவர்கள் பணியாற்றிய பள்ளியில், புதிய மாணவர்கள் சேர மாட்டார்கள். அதனால், மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, பள்ளிகளை மூடும் அபாயம் ஏற்படும்.

கல்வி உரிமை – வெற்றுக் கனவா?


அரசுப்பள்ளிகளின் அழிவை நாம் எப்பொழுது ஜனநாயக அமைப்பின் பெரும் பின்னடைவாகப் பார்க்கிறோமோ அப்பொழுது தான் அரசுப்பள்ளிகள் இயற்கை மரணம் அடைய வைக்கும் சதிகளைத் தடுக்கும் வழிகளை எல்லோரும் சேர்ந்தே தேடுவோம். இன்றைக்கு சமத்துவம் பேசுபவர்கள் தான் அரசுப்பள்ளிகள் அழிந்துவிடுமோ என்று அச்சப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் குழந்தைகள் கூட தனியார் பள்ளிகளில் படிக்கும் நிலை தான் உள்ளது. முதற்படியாக, அரசு ஊதியம் பெறுவோர் அனைவரின் குழந்தைகளும் அரசுப்பள்ளிகளில் சேர்க்கவேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தினால் தற்காலிகமாகவேனும் அரசுப்பள்ளிகளைக் காக்க ஒரு வழி ஏற்படும். அடுத்த படியாக, அனைத்துத் தனியார் பள்ளிகளையும் பொதுப்பள்ளிகளாக அறிவித்து அருகமைப் பள்ளி முறையின் மூலம் அனைத்துக் குழந்தைகளுக்கும் சம்மான தரத்திலும் வாய்ப்பிலும் கல்வி கிடைக்க வழிவகை செய்யவேண்டும். ஒரு ஜனநாயக அமைப்பிற்கு ஏற்ற கல்வி முறையை காலம் கடந்தாவது உருவாக்குவதன் மூலமே கல்வி உரிமையை வரும் தலைமுறைக்காவது நனவாக்கிக் கொடுக்க முடியும்.

சு.மூர்த்தி, -கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு, தமிழ்நாடு

படித்தது M.ed விற்ப்பது இளநீர்! கணினி ஆசிரியர்கள் கண்ணீரும்!! கண்டு கொள்ளத அரசாங்கமும்!!!


ஒரு படிப்பு இருந்த அதை படித்தற்கு  வேலை இருக்கனும் வேலையில்லா படிப்பையும் பட்டதாரிகளையும் உருவாக்கிய அரசு!

இதோ எங்க நண்பர்  இரண்டு கால்களை இழந்தும் M.ed படித்த தற்போதய நிலை..


தமிழக அரசின் சாதனை அன்றோ!!!


பானி பூரி கடை வைத்திருக்கும் கணினி ஆசிரியர்!-காரிமங்கலம்.


விவசாயம் செய்யும் கணினி ஆசிரியர்கள் ...!







கணினியை பார்க்காமல் வெளியேறும் அரசுப்பள்ளி மாணவர்கள்...

                        செய்தி:தினமலர்

சி.பி.எஸ்.இ வினாத்தாள் விலை போனது ரூ.35,000 ....

ரூ.35,000 வரை விலை போன சி.பி.எஸ்.இ வினாத்தாள் மறுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்

சி.பி.எஸ்.இ வினாத்தாள்கள் ரூ.35,000 வரை விலை பேசப்பட்டுள்ளது. மறுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மத்திய அரசு கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது.

இதில் கடந்த 26-ந்தேதி நடந்த 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 28-ந்தேதி நடந்த 10-ம் வகுப்பு கணிததேர்வு ஆகியவற்றின் வினாத்தாள் டெல்லி உள்பட வட மாநிலங்களில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


வினாத்தாள் வெளியான இந்த இரு பாடங்களுக்கும் மறுத்தேர்வு நடத்தப்படும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்தது. அதன்படி 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான மறுதேர்வு வருகிற ஏப்ரல் 25-ந்தேதி நடக்கிறது.


10-ம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் டெல்லி மற்றும் அரியானாவில் மட்டுமே அவுட் ஆனதால் அந்த இரு மாநிலங்களில் மட்டுமே மறுதேர்வு நடைபெறும். இதுபற்றி இன்னும் 15 நாட்களில் முடிவு எடுக்கப் படும் என்றும் சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிபிஎஸ்இ மாணவர்கள் மறுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎஸ்இ அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக சிபிஎஸ்இ அலுவலகம் அமைந்துள்ள சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


சிபிஎஸ்இ தலைமை அலுவலகம் அமைந்துள்ள ப்ரீத் விகார் பகுதியில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் சிபிஎஸ்இ மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். மேலும் வினாத்தாள் வெளியானதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.  மேலும் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இல்லம் நோக்கியும் பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் உள்பட பல்வேறு பிரிவினர் கலந்து கொண்டனர்.


சி.பி.எஸ்.இ. வினாத்தாள் அவுட் ஆனது பற்றி டெல்லி போலீசார்  வழக்குப்பதிவு செய்து பலரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று ஜார்கண்டில் இது தொடர்பாக 4 மாணவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப் பட்டனர்.


ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா நகரில் வாட்ஸ் அப்பில் 10-ம் வகுப்பு கணித தேர்வுக்கான வினாத்தாளை வெளியிட்டதாக இவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும் 2 பயிற்சி பள்ளி நிர்வாகிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதற்கிடையே அவுட் ஆன 12-ம் வகுப்பு பொருளாதாரம் வினாத்தாளையும் 10-ம் வகுப்பு கணிதம் வினாத்தாளையும் வாட்ஸ் அப்பில் 6000 பேர் வரை பார்த்து இருப்பதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 10 வாட்ஸ் அப் குரூப்கள் மூலம் இந்த கேள்வித்தாள் வீடியோக்கள் ஒருவருக்கொருவர் அனுப்பி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.


இந்த வினாத்தாள்கள் ரூ.35,000 வரை விலை பேசப்பட்டுள்ளது. இதற்கு சம்மதித்து பணம் கொடுப்பவர்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு கேள்வித்தாள்கள் அனுப்பி வைத்துள்ளனர். தொடக்கத்தில் ரூ.35,000-க்கு விலைபோன வினாத்தாள்கள் பரிட்சை நடைபெறுவதற்கு முதல் நாள் ரூ.500க்கு கூட விற்கப்பட்டுள்ளது.   சி.பி.எஸ்.இ. மண்டல இயக்குனர் கூறும்போது வினாத்தாள் அவுட் ஆனது தொடர்பாக 6 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அந்த புகார்கள் மீது சிறப்பு புலனாய்வுத் துறை விசாரணை நடப்பதாகவும் தெரிவித்தார்

மிககுறைந்த மாணவர் எண்ணிக்கையை கொண்ட தொடக்க/நடுநிலைப் பள்ளிகளை வரும் கல்வியாண்டில் இணைக்க திட்டம்?


Friday, 30 March 2018

தமிழக பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமனம் எப்போது ? அனைவரும் எதிர்பார்ப்பு !!

தமிழக பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமனம் எப்போது ? அனைவரும் எதிர்பார்ப்பு !!




தமிழகத்தில் இப்போது பல்வேறு அரசியல் குழப்பங்கள் இருந்தாலும், அரசு இயந்திரம் இயந்திரகதியாகவே இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆட்சியை மக்கள் விரும்பும் நல்லாட்சியாக காட்டிக் கொள்ள ஒவ்வொரு துறை அமைச்சர்களும் தங்கள் பங்குக்கு ஏதேதோ சொல்லிக் கொண்டும் செய்து கொண்டும் தான் இருக்கிறார்கள்.

குறிப்பாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்த சில மாதங்களுக்கு முன் அதிரடியாக பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார்.  நீட் தேர்வு தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டப் பின் கல்வித் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்துவது போல் அவருடைய அறிப்புகள் இருந்தன என்றால் மிகையில்லை. 

தமிழகத்தில் தொலைதூரப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகமுள்ள இடங்களில் 30 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்.  புதுமையான கற்பித்தல் முறைகளைப் பின்பற்றுதல் உள்பட கல்வி வளர்ச்சிக்காக சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளைக் கண்டறிந்து விருதுகள் அளிக்கப்படும். அதன்படி, ஒரு மாவட்டத்துக்கு ஒரு தொடக்கப் பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி என நான்கு பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சமும், சான்றிதழ்களும் அளிக்கப்படும்.
 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சமும், சான்றிதழ்களும் கொடுக்கப்படும். தமிழக பிளஸ் 2 மாணவர்கள், 'நீட்' தேர்வை எதிர்கொள்ளும் வகையில், மாநில அளவில், 412 பயிற்சி மையங்கள் திறக்கப்படும்.   

அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளிகளுக்கு கணினி ஆசிரியர்கள் (748 காலியிடங்கள் 2 மாதத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்றும் அறிவித்தார். ஆனால் இன்று வரை கணினி ஆசிரியர் பணி நியமனம் குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.  இந்த அரசின் எத்தனையோ திட்டங்கள், திட்டங்களாகவும் அறிவிப்புகள் வெற்று காகிதங்களாகவும் கிடப்பது போல் அமைச்சர் செங்கோட்டையனின் அறிவிப்பும் வெறும் கவர்ச்சி பேச்சாகி இருப்பதாகவே மக்கள் வருத்தம் கொள்கின்றன. 

கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் படி ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் புத்தகங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு வருடம் மட்டும் புத்தகங்கள் கொடுக்கப்பட்டு, அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த 2005-ஆம் ஆண்டில் மாதம் ரூ. 4000 ஊதியத்தில் பகுதி நேரமாக நியமிக்கப்பட்ட 6552 கணினி ஆசிரியர்களுக்குப் பிறகு நியமனம் கிடையாது. ஏற்கெனவே குறைந்த ஊதியத்தில் பணியில் நியமிக்கப்பட்டவர்கள் பல பள்ளிகளுக்கும் சென்று பணியாற்ற வேண்டிய நிலைதான் உள்ளது. தொடர்ந்து நீதிமன்ற வழக்கு, பணி நியமனத்தில் இடஒதுக்கீடு முறை சரியாகப் பின்பற்றப்படவில்லை போன்ற காரணங்களால் பி.எட். முடித்த கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் பாதிப்புக்குள்ளாகினர்


இந்தப் பட்டதாரிகள் ஒருங்கிணைந்து 2014-ஆம் ஆண்டு கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தை ஆரம்பித்திருக்கின்றனர். இச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் குமரேசன் கூறுகையில், 1992-ஆம் ஆண்டுல இருந்தே கம்ப்யூட்டர் சயின்ஸ் பி.எட். இருக்கு. நான் படிச்சது பி.எட். ஆனா,டெக்ஸ்டைல்ல வேலை பாத்துட்டு இருக்கேன். 

இதுவரைக்கும் கிட்டத்தட்ட 39,019கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள்வேலை இல்லாமஇருக்காங்க. ஒரு படிப்புனு இருந்தா அதுக்கான வேலை வாய்ப்பு இருக்கணும். வருஷா வருஷம் ஆயிரக்கணக்கான பேர் படிச்சுட்டு வெளியே வராங்க. ஆனா, ஏற்கெனவே படிச்சுவேலைவாய்ப்பு அலுவலகத்தில பதிவு செய்திருக்கிற யாருக்குமே வேலை இல்லை. பின்ன ஏன் இந்தப்படிப்ப இன்னும் வச்சிருக்காங்கன்னு புரியல" என்று குமுறுகிறார்

பி.எட். படிப்பில் கணினி அறிவியல் படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஜவுளி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலை பார்க்க வேண்டிய நிலை இருக்கிறது. பி.எட். முடித்து வேலையில்லாமல் இருக்கும் 39,019 பேரில் ஏறத்தாழ 27,000 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டமும் போராட்டமும் நடத்தி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கருணை மனு கொடுக்கப்பட்டுள்ளது. மனுக்கள் கிணற்றில் போட்ட கல்லாக இருப்பதாகவே கூறப்படுகிறது. மேலும் ஒரு கொடுமையான விசயம் 

தனியார் பள்ளிகளில் ஒன்றாம்வகுப்பு முதலே கணினி வழிக்கல்வி இருக்கிறது. அதை இன்னும் மேம்படுத்த அரசும் ஊக்குவிக்கிறது என்றும் பொதுமக்கள் கூறுகின்றன. அதே சமயத்தில் அரசுப் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு  பாதி அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லாமல் பயிற்றுவிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையை மாற்றி மக்கள் விரும்பும் அரசுதான் இது என்பதை நிலைநாட்ட வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் விருப்பமாக இருக்கிறது.

புதிய பாடத்திட்டத்தின்படி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் கற்பிக்க வேண்டி இருக்கும்-ஆசிரியர்களுக்கு பயிற்சி ஜூன் முதல் வாரத்தில் அளிக்கப்படும் !!!

புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி ஜூன் முதல் வாரத்தில் அளிக்கப்படும்-தினத்தந்தி.



தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் 5 ஆண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டம்
மாற்றப்படவேண்டும். ஆனால் பல ஆண்டு களாக மாற்றப்படாமல் இருந்தது.

இதன் காரணமாக தமிழக அரசு புதிய பாடத்திட்டத்தை தயாரித்தது. அதன்படி 1-வது வகுப்பு, 6-வது வகுப்பு, 9-வது வகுப்பு, 11-வது வகுப்பு ஆகியவற்றுக்கு 2018-2019 கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.

அவ்வாறு அமல்படுத்தும்போது அந்த பாடத்தை எவ்வாறு கற்பிக்கவேண்டும். அதில் உள்ள கதைகளை எப்படி சொல்லவேண்டும். புதிய தொழில் நுட்பத்தில் எவ்வாறு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி குறித்து சென்னை டி.பி.ஐ. வளாக பள்ளிக்கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

புதிய பாடத்திட்டம் குறித்து மாணவர்-மாணவிகளுக்கு கற்பிக்க பயிற்சி அளிக்கப்படுவது உறுதி. பயிற்சி இல்லாமல் மாணவர்களுக்கு கற்பிக்க முடியாது. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கோடைவிடுறை விரைவில் விட உள்ளது. கோடை விடுமுறையின்போது ஆசிரியர்களை தொந்தரவு செய்யாமல் பள்ளிகள் திறந்த பின்பு ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி ஒரு வாரம் அல்லது 2 வாரம் நடைபெறும்.

மாணவர்கள் மனப்பாடம் செய்வதை முடிந்த அளவுக்கு குறைத்து அவர்களுக்கு புரிந்து கொள்ளும்படி கற்பிக்கவேண்டும். ஏன் என்றால் மனப்பாடம் இல்லாமல் படித்தால் போட்டித்தேர்வு உள்ளிட்ட எந்த தேர்வையும் மாணவர்கள் எதிர்கொள்ளலாம். அதன் காரணமாக புதிய பாடத்திட்டத்தின்படி முடிந்த அளவுக்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் கற்பிக்க வேண்டி இருக்கும்.

அரசு உதவி பெறும் பள்ளியில் காலியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களின் நியமனத்திற்கு 2 வாரங்களில் ஒப்புதல் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு!!


அரசு உதவி பெறும் பள்ளியில் காலியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களின் நியமனத்திற்கு 2 வாரங்களில் ஒப்புதல் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது




வேலூர் மாவட்டம் மாதனூரி்ல் உள்ள அரசு உதவி பெறும் தாகூர் தேசிய உயர்நிலைப் பள்ளியில் காலியாக இருந்த இளநிலை உதவியாளர், கிளார்க், அலுவலக உதவியாளர், இரவுக் காவலாளி பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த இடங்களுக்கு கோபி, ரஞ்சனி, யோகநாதன், சாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் அரசுக்கு மனு அனுப்பப்பட்டது .

இந்த மனுவை அரசு பரிசீலிக்காததால் 4 பேர் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதி டி.ராஜா முன் இன்று (மார்ச் 30) விசாரணைக்கு வந்தபோது அரசு ஒப்புதல் அளிக்காததால் இவர்கள் 4 பேரும் ஊதியம் பெறாமல் இருப்பதாகப் பள்ளி நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் அல்லாத காலியிடங்களை நிரப்பக் கல்வி நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மேற்கோள் காட்டி 2 வாரத்திற்குள் ஒப்புதல் வழங்கத் தமிழக அரசுக்குக் கெடு விதித்து உத்தரவிட்டார்

ஆசிரியர்களை தாக்கும் மாணவர்கள்: காரணம் என்ன? தீர்வு என்ன?

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பள்ளிக்கூட மாணவன், கணிதப்பாடம் கற்பிக்கும் ஆசிரியரை கத்தியால் காயப்படுத்தியதை அடுத்து அந்த ஆசிரியருக்கு தலை பகுதியில் தையல் போடப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார் என்று தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் வேலூரில் நடந்த சம்பவத்தில் தலைமை ஆசிரியர் ஒருவரை இரண்டு மாணவர்கள் தாக்கியதாக செய்திகள் வெளியாகின.
கடந்த 2012ல் சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் ஹிந்தி ஆசிரியரைக் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் இன்னும் பல ஆசிரியர்கள் நினைவில் இருந்து நீங்கவில்லை.
குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் அதிக இடைவெளி



குழந்தைகளுக்கு கற்பிப்பதிலும், குழந்தைகளுடன் பழகுவதிலும் உள்ள குறைபாடு காரணமாக, மாணவர்களால் ஆசிரியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அவ்வப்போது தெரியவந்தாலும், குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும், வாழ்க்கைக் கல்விக்கும் இடைவெளி அதிகரித்துக்கொண்டு வருகிறது என்பதை உணர்த்தும் அபாய சமிக்கையாகவே இதைப் பார்க்கவேண்டும் என்கிறார் தமிழக அரசின் மாநில குழந்தைகள் நல ஆணையர் எம்.பி.நிர்மலா.
திருவள்ளூரில் ஆசிரியரை தாக்கிய மாணவனுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும் என்றும் நடந்த சம்பவத்திற்கான காரணம் என்றும் விசாரிக்கப்படும் என்றும் கூறுகிறார்.
''திடீரென ஒரு நாளில் ஒரு மாணவனுக்கு ஆசிரியரை தாக்கவேண்டும் என்று எண்ணம் வர வாய்ப்பில்லை. மாணவனுக்கு பள்ளியில், வீட்டில், நண்பர்கள் வட்டத்தில் என்ன பிரச்சனைகள் இருந்தன என்று ஆராயவேண்டும்,'' என்கிறார்.

திருவள்ளூரில் நேற்று நடந்தது, முந்தைய ஆண்டு வேறு ஊரில் நடந்தது என தனிப்பட்ட சம்பவங்களாகவும், ஒரு சில மாணவர்கள் ஆசிரியர்களை தாக்குகிறார்கள் எனவும் இந்த சம்பவங்களை தட்டையாகப் பார்க்கக்கூடாது. குழந்தைகளின் நம்பிக்கையைப் பெற நாம் அனைவரும் தவறிவிட்டோம் என்பதையே இந்த வன்மமான செயல்கள் நமக்கு உணர்த்துகின்றன. குழந்தைகளிடம் உரையாடவும், அவர்களின் அச்சங்களைப் போக்கவும் நமக்குத் தெரியவில்லை. குழந்தைகளிடம் வெற்றிகளை மட்டுமே எதிர்பார்க்கிறோம். படிக்கவேண்டும், சம்பாரிக்கவேண்டும் என்று மட்டுமே சொல்லி வளர்க்கிறோம்,'' என்று கூறினார்.
வகுப்பறையில் ஆசிரியரை கொலைசெய்த மாணவன் 

குற்றம் இழைத்த சிறுவர்கள் சிறார் சீர்திருத்த மையத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், பல கட்ட ஆலோசனைக்குப் பிறகே குற்றம் புரிந்ததற்கான காரணங்களை அவர்கள் சொல்வதாகக் கூறுகிறார் கிரிஜா குமார் பாபு.
சிறார் சீர்திருத்த மையத்தின் உறுப்பினரான கிரிஜா கடந்த 2012ல் சென்னையில் ஒரு தனியார் பள்ளிஆசிரியரை வகுப்பறையில் கொலைசெய்த மாணவனிடம் நடத்தப்பட்ட ஆலோசனை சந்திப்புகளை நினைவுகூர்ந்தார்.
''சுந்தருக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஹிந்தி மொழிப்பாடத்தில் நாட்டம் இல்லை. தினமும் குறிப்புபுத்தகத்தில், படிப்பதில் முன்னேற்றம் இல்லை என்று எழுதப்பட்டதால், வீட்டில் அவனுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் குறைந்தது. தினமும் ரூ.500 வரை செலவுக்கு பணம் கொடுத்த அப்பா, அதை நிறுத்திவிட்டார். நண்பர்களிடம் மரியாதை இழப்பு என கோபத்தின் உச்சத்தில் ஆசிரியரை தாக்க திட்டமிட்டு கொலைசெய்ததாக கூறினான். தண்டனைக் காலத்தில் மனம் வருந்தினாலும், அவனது ஆரம்பகட்ட மனஉளைச்சல்களை அறிந்து, அவனுக்கு குடும்பம், பள்ளிக்கூடம் என அவனை வழிநடத்த யாரும் கிடைக்கவில்லை என்பதை நாம் ஒப்புகொள்ளவேண்டும்'' என்று விவரித்தார்.
குழந்தைதனத்தை தொலைத்த பிள்ளைகள்:
பெயர் குறிப்பிட விரும்பாத அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் குழந்தைகளின் வீட்டுச்சுழலில் அவர்கள் நடத்தப்படும்விதம், அவர்களின் நண்பர்கள் வட்டத்தில் கற்பிக்கப்படும் நியாயங்கள் போன்றவையும் வன்முறை செயல்களில் ஈடுபட ஒரு காரணம் என்கிறார்.
''அதிகமாக புறக்கணிக்கப்படுகிற குழந்தைகள், அவர்களின் குழந்தைதன்மையை இழந்து, தன்னைச் சுற்றியுள்ள பெரியவர்களின் நடத்தையை தானும் பின்பற்றுகின்ற நிலை ஏற்படுகிறது. ஒரு வளர் இளம்பருவக் குழந்தை, வன்முறையில் ஈடுபட துணிச்சல், சம்பவத்தின் விளைவைச் சிந்திக்காமல் செயல்பட தூண்டும் நபர் யார் அல்லது செயல்கள் எவை என்பதை ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டியுள்ளது. மாணவர்களை ஆசிரியர்கள் புரிந்துகொண்டு செயல்படவேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல, குழந்தையைக் குழந்தையாக வளர பெற்றோர்கள், சுற்றுப்புறம் அனுமதிக்கவேண்டும்,'' என்றார்.
தன்னுடைய பள்ளியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சேர்ந்த வளர் இளம்குழந்தைகள் பலரும் குழந்தைதன்மையை இழந்து, பெரியவர்களாக நடந்துகொள்வதைப் பார்க்கமுடிகிறது என்கிறார்.
''குழந்தைதன்மையை இழந்த பிஞ்சுகளாகவே இவர்களை பார்க்கிறேன். அவர்களை படிக்கவைத்து மதிப்பெண் எடுக்கவைக்கவேண்டிய வேலைகளை மட்டுமே செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பள்ளிக்கூடங்களில் அழுத்தம் என்பத்தைத்தாண்டி, தற்போது பெற்றோர்கள் ஏன் தன்னுடைய குழந்தையால் மார்க் வாங்க முடியவில்லை என்று சண்டை போடுகிற காட்சிகள் பள்ளிகளில் அரங்கேறுகின்றன,'' என்றும் அந்த ஆசிரியர் தெரிவித்தார்.
தனியார்,அரசு பள்ளி என்ற வித்தியாசம் இல்லை


தனியார் பள்ளி, அரசுப்பள்ளி என்ற வித்தியாசமின்றி எல்லா பள்ளிகளிலும் மாணவர்கள் தேர்வுக்கு மட்டுமே தயார் செய்யப்படுகிறார்கள் என்றும் அன்றாட பிரச்சனைகளை எவ்வாறு சமாளிப்பது என்பதை அறியாமல் வளர்க்கப்படுகிறார்கள் என்பதால் ஆசிரியர்களை தாக்கும் அளவுக்கு அவர்கள் முடிவு எடுக்கிறார்கள் என்கிறார் சுடர் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த நடராஜன்.

வாழ்க்கை கல்வி, தன்னுடைய சுற்றுப்புறத்தில் உள்ளவர்களிடம் எவ்வாறு பழகுவது, தனக்கு பிரச்சனை வந்தால் யாரிடம் உதவி கேட்கலாம், தன்னுடைய எல்லா பிரச்சனைக்கும் யார் காதுகொடுப்பார்கள் என மாணவர்கள் தேடாமல், அவர்களுக்கு ஆசிரியர்கள் தென்படவேண்டும். ஆசிரியர்கள் மீது நம்பிக்கை வரவேண்டும். சமூகத்தில் மாணவர்களை ஈர்க்கும் தலைவர்கள் இல்லை, பள்ளிக்கூடத்தில் தனக்கு பிடித்தமான சூழல் இல்லாதபோது, பதின்பருவ குழந்தைகள் வன்முறை செயல்களில் ஈடுபடுகிறார்கள்'' என்கிறார் நடராஜ்.
ஆசிரியர்களுக்கும் பயிற்சி வேண்டும்
ஆசிரியர்களுக்கு பாடம் நடத்துவதற்கான திறன் மட்டுமல்லாமல், மாணவர்களின் பிரச்சனைகளை அறிந்துகொள்ள உதவும் பயிற்சியை ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்தில் அளிக்கப்படவேண்டும் என்று இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த கண்ணன் திருவாய்மொழி கூறினார்.
''சில மாணவர்கள் வன்செயல்களைச் செய்வதற்கான எண்ணம் துளிர்விடும்போதே அவற்றை ஆசிரியர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதுதான் அடிப்படை. ஆசிரியர்களுக்கு அளிக்கவேண்டிய பயிற்சி பெரும்பாலும் ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகின்றது. ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுபோன்ற பயிற்சிகளை அளித்தால், ஆசிரியர்களுக்கு உதவும். ஒரு நிபுணரின் ஆலோசனையில் செயல்படும், உடல் மற்றும் மனநலத்திற்காக மன்றம் பள்ளிகளில் நிறுவப்படவேண்டும்,'' என்றார் கண்ணன்.
தனது முப்பது ஆண்டு கால ஆசிரியர் பணியில் தினமும் கற்கும் பாடமாக மாணவர்கள் இருக்கிறார்கள் என்று கூறும் கண்ணன், ''காலத்துக்கு ஏற்றவாறு மாணவர்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஆசிரியர்களுக்கு தேவை. இன்றைய மாணவர்களிடம் எப்படி பழகுவது என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளவேண்டியுள்ளது,'' என்று கூறுகிறார் கண்ணன்.

JIO அதிரடி சலுகை: ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு ஆண்டு இலவச சேவை :

ரிலையன்ஸ் ஜியோ பிரைம் உறுப்பினர் திட்டத்தில் ஏற்கெனவே ரூ.99 செலுத்தி உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு கூடுதலாக ஒரு ஆண்டு இலவச சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிலையனஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

  


அதாவது, 2018-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் ரூ.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ஒரு ஆண்டு சேவை வழங்கப்பட உள்ளது.

டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும் ஜியோ நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தையில் 4ஜி சேவையை அறிமுகம் செய்தது. வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் அறிவித்த கேஷ்பேக் ஆஃபர் குறைந்த அளவில் அதிக டேட்டா கிஃப்ட் வவுச்சர் என அனைத்து சலுகைகளும் மக்களை வெகுவாகக் கவர்ந்தது.
2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜியோவின் கட்டண சேவை ஆரம்பித்தது. அதில் ஜியோ வாடிக்கையாளர்கள் பிரைம் வாடிக்கையாளராக ரூ. 99 கட்டி இணைந்தனர். பிரைம் உறுப்பினர் என்ற திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரில் மேலும் மூன்று மாதங்கள் இலவச சேவை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன்படி பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால், எஸ்டிடி, எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துடனும் ரோமிங் வசதி, நாடுமுழுவதும் இலவச ரோமிங், நாள்ஒன்றுக்கு 1ஜிபி 4ஜி டேட்டா, எஸ்எம்எஸ் ஆகியவை அளிக்கப்பட்டன.
இந்நிலையில், பிரைம் உறுப்பினர் சேவை வரும் மார்ச் 31-ம் தேதியோடு முடிய உள்ளது. இதையடுத்து, அடுத்து உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டுமா அல்லது ரீசார்ஜ் செய்ய வேண்டுமா என்பது குறித்த கேள்வி எழுந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஜியோ நிறுவனத்தில் 17 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
ஜியோ பிரைமில் ரூ.99 செலுத்தி ஏற்கெனவே வாடிக்கையாளர்களாக இருப்பவர்களுக்கு மேலும் ஒரு ஆண்டு சேவை நீட்டிக்கப்படுகிறது. இந்த சலுகை வரும் 31-ம்தேதிக்குள் ரூ.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் சேர்பவர்களுக்கும் பொருந்தும்.
ஏற்கனவே ரூ.99 செலுத்திய உறுப்பினர்கள் மார்ச்31-ம்தேதிக்கு பின் மீண்டும் ரூ.99 செலுத்தத் தேவையில்லை. அதேசமயம், ஏப்ரல் 1-ம் தேதிக்கு பின் ஜியோ பிரைமில் இணையும் வாடிக்கையாளர்கள் மட்டும் ரூ.99 உறுப்பினர் கட்டணமாக செலுத்த வேண்டும்.

பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவைகள் அடுத்த 12 மாதங்களுக்கு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்?

உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்?


12% பென்சனுடன் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள்:-மத்திய அரசு அதிரடி திட்டம்!

12% பென்சனுடன் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள்:-மத்திய அரசு அதிரடி திட்டம்!


லஞ்சம் பெற்றுக் கொண்டு நிரப்பப்படும் ஆசிரியர் பணியிடங்கள்:-அன்புமணி கண்டனம்!!



லஞ்சம் பெற்றுக் கொண்டு நிரப்பப்படும் ஆசிரியர் பணியிடங்கள்; வட மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு துரோகம் - அன்புமணி கண்டனம்



“தமிழ்நாட்டில் நடப்பாண்டில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 2018-19 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையிலும் புதிய ஆசிரியர்கள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை. தமிழக அரசின் மேல்நிலைப் பள்ளிகளில் 1,640 ஆசிரியர் பணியிடங்கள், உயர்நிலைப் பள்ளிகளில் 2,405 பணியிடங்கள் உட்பட 4,963 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் புதிய ஆசிரியர்களை நியமிக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் கல்வித் தரத்திலும், பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விகிதத்திலும் வட மாவட்டங்கள் மற்றும் காவிரி பாசன மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் போதிய கட்டமைப்புகள் இல்லாததாலும், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும்தான் இந்த நிலைக்கு காரணம் என்று பாமக கடந்த பல ஆண்டுகளாக ஆதாரங்களுடன் குற்றம்சாட்டி வருகிறது.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படியும், தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கை மனுவுக்கு அளித்த பதிலிலும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ள புள்ளிவிவரங்கள் மூலம் இக்குற்றச்சாட்டுகள் உண்மை என்பது உறுதியாகியுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் 349 தமிழ் ஆசிரியர்கள், 273 ஆங்கில ஆசிரியர்கள், 490 கணித ஆசிரியர்கள், 773 அறிவியல் ஆசிரியர்கள், 520 சமூக அறிவியல் ஆசிரியர்கள் என மொத்தம் 2,405 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அளித்துள்ள புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது 05.03.2018 அன்றுள்ள நிலவரமாகும். 01.12.2017 அன்று நிலவரப்படி காலியிடங்கள் எண்ணிக்கை 2,084 ஆகும்.
இதில் மாவட்ட வாரியான காலியிடங்களைப் பார்த்தால் 78% காலியிடங்கள் வட மாவட்டங்களில்தான் உள்ளன. அதிலும் குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 383 காலியிடங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 381, வேலூர் மாவட்டத்தில் 335, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 271 என 4 மாவட்டங்களில் மட்டும் 1,370 காலியிடங்கள் உள்ளன. இது மொத்த காலியிடங்களில் மூன்றில் இரண்டு பங்காகும். மாநிலத்தின் மொத்த காலியிடங்களில் 66% காலியிடங்களை 4 மாவட்டங்களில் மட்டும் வைத்திருப்பது அந்த மாவட்டங்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்பதைத் தவிர வேறில்லை.


இந்த நிலை 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்த காலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளின் தேர்ச்சி விகிதங்களில் இந்த மாவட்டங்கள்தான் கடைசி 5 இடங்களில் மாறி மாறி வருகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆக, இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் போதிய அளவில் தேர்ச்சி பெற முடியாததற்கு அவர்கள் காரணமல்ல, அவர்களுக்கு பாடம் கற்பிக்க போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்காத அரசு தான் காரணம்.
அதுமட்டுமின்றி, இது இயல்பாக நடந்த ஒன்றல்ல. ஆட்சியாளர்களின் ஊழல்வெறிதான் இதற்குக் காரணமாகும். வழக்கமாக ஆசிரியர்கள் நியமிக்கப்படும்போது எந்தெந்த பள்ளிகளில் அதிகளவில் காலியிடங்கள் உள்ளனவோ, அங்கு தான் அவர்களை நியமிக்க வேண்டும். அந்த நேரங்களில் இந்த மாவட்டங்களில் ஆசிரியர்கள் போதிய அளவில் நியமிக்கப்படுவதில்லை.
மாறாக இந்த மாவட்டங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக கணக்குக் காட்டப்பட்டு, அவ்வாறு கணக்குக் காட்டப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஏற்கனவே இந்த மாவட்டங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியர்களிடம் கையூட்டு வாங்கிக்கொண்டு, நிர்வாக இடமாற்றம் என்ற பெயரில் அவர்களை நகர்ப்புறங்களுக்கும், அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கும் அனுப்பி வைப்பதை ஆட்சியாளர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
இதனால் சில மாவட்டங்களில் தேவைக்கும் அதிகமாக ஆசிரியர்கள் உள்ளனர். உதாரணமாக சென்னை, திண்டுக்கல், தேனி, நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காலியிடங்களே இல்லை என்பதுடன், அங்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாகவும் ஆசிரியர்கள் உள்ளனர். மதுரை, தூத்துக்குடி (தலா 2), கோவை, கரூர், திருச்சி (தலா 3), சிவகங்கை (4), (8) ஆகிய மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் தான் காலியிடங்கள் உள்ளன.
ஆசிரியர்களை நியமிப்பதில் மாவட்டங்களுக்கிடையே பாகுபாடு காட்டுவது எந்த வகையில் நியாயம்? பின்தங்கிய மாவட்டங்களின் மாணவர்கள் முன்னேற வேண்டாமா? பின்தங்கியே கிடக்க வேண்டுமா?
இந்த நிலையை மாற்ற தமிழக அரசு தயாராகக் கூட இல்லை என்பதுதான் கொடுமை. இப்போது கூட பிற மாவட்டங்களில் உள்ள உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் முறையில் காலியாக உள்ள இடங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், முதன்மைச் செயலரும் கூறியுள்ளனர். கடந்த காலங்களில் இத்தகைய வாக்குறுதிகள் பலமுறை அளிக்கப்பட்ட போதிலும், ஒருமுறை கூட அவை செயல்படுத்தப்பட்டதில்லை.
இப்போதும் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இல்லை. காரணம் நிர்வாக இடமாற்றம் செய்ய ஆட்சியாளர்கள் தலா ரூ.5 லட்சம் வரை கையூட்டு வாங்கியிருப்பதால் அவர்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். இதே நிலையே தொடர்ந்து நீடிக்கும். வரும் மே மாதத்துடன் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதால் நிலைமை மோசமாகும்.
தமிழ்நாட்டில் கடந்த 2013, 2017-ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்ற 30 ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர்களுக்கு இன்னும் பணி வழங்கப்படவில்லை. அவர்களுக்கும் வேலை வழங்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
எனவே, இப்போது காலியாக உள்ள பணியிடங்கள், விரைவில் காலியாகும் பணியிடங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டு உடனடியாக நிரப்ப வேண்டும். கிராமப்புற பகுதிகள், தொலைதூரப் பகுதிகள் ஆகியவற்றில் பணியாற்ற ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு சிறப்புப் படி, பதவி உயர்வில் முன்னுரிமை ஆகியவற்றையும் வழங்க வேண்டும்”
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
                                                  -செய்தி :இந்து தமிழ் நாளிதழ்.

Thursday, 29 March 2018

புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்ட 1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்ய அரசு ஆலோசனை

புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்ட 1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்ய அரசு ஆலோசனை



தமிழகத்தில் பள்ளி பாடத்திட்டம் பல ஆண்டுகளாக மாற்றப்படாததால், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் புதிய பாடத்திட்டத்தை தயாரித்தனர். அதன்படி 2018-2019-ம் கல்வி ஆண்டு முதல் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் க.அறிவொளி புதிய பாடப்புத்தகங்களின் சி.டி.யை அனுப்ப தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்தில் அச்சடிக்கப்பட்டு வருகிறது. அதன் நிர்வாக இயக்குனர் ஜெகன்நாதன் மற்றும் செயலாளர் பழனிசாமி இந்த பணிகளை கவனித்து வருகிறார்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:வருகிற கல்வி ஆண்டில் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கும் நாளில் பாடப்புத்தகங்களை வழங்க ஏதுவாக 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன.

இப்போது புதிய பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படுகிறது. இதில் ஏற்கனவே உள்ள புத்தகத்தைவிட அதிக பக்கங்கள் இருக்கும். நிறைய படங்கள் சேர்க்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம். 9 மற்றும் 11-ம் வகுப்பில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலான பாடங்கள் உள்ளன.

பாடப்புத்தகங்கள் அனைத்தும் பள்ளிகள் திறக்கும் முன்பாக அனுப்பப்பட்டுவிடும்.பக்கங்கள் அதிகமாக இருப்பதால் புத்தகங்கள் பிரிந்துபோகாமல் இருக்க முன்பைவிட கனமான, பளபளப்பான அட்டையால் பைண்டிங் செய்யப்படுகிறது. புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்தால் பக்கங்கள் பிரிந்துபோகாது என்பதால் லேமினேசன் செய்து வழங்கலாமா? என்று அரசு ஆலோசித்து வருகிறது.

பி.எட் பட்டமானது மற்ற அனைத்து பாடங்களுக்கும் பொதுவானதா -RTI தகவல்!!!

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பெற்ற பி.எட் பட்டமானது மற்ற அனைத்து பாடங்களுக்கும் பொதுவானதா? தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்..

RTI:தகவல்.

எங்களுக்கு இல்லையா கணினி கல்வி ஏங்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்!!!


கல்வியில் சமம் எங்கே???


புதிய பாடத்திட்டத்தில் கணினி பாடம் துணைப்பாடம் அரசுப்பள்ளியில் !!!



தனியார் பள்ளியில் அனைத்து நிலைகளிலம் ஆறாவது பாடமாக கற்றுத் தருவதற்கு அங்கிகாரம் வழங்குவது எதற்க்காக...





கேரளாவில் தொடரும் புரட்சி.... சான்றிதழில் ஜாதி, மதம் இல்லை என பிரகடனம் செய்த 1.24 லட்சம் மாணவர்கள்!!!!

கேரளாவில் தொடரும் புரட்சி.... சான்றிதழில் ஜாதி, மதம் இல்லை என பிரகடனம் செய்த 1.24 லட்சம் மாணவர்கள்!!


கணினியிலும் புரட்சி! கல்வியிலும் புரட்சி!!

கேரளாவில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகராதல் உள்ளிட்ட அடுத்தடுத்த சமூக சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 
.http://csthalaimurai.blogspot.in


இந்த வரிசையில் தற்போது சான்றிதழ்களில் ஜாதி, மதம் எதுவும் எங்களுக்கு இல்லை என 1.24 லட்சம் மாணவர்கள் கேரளாவில் பிரகடனம் செய்துள்ளனர்.  கல்வி அமைச்சர் சி. ரவீந்தரநாத்அளித்த பதில்:
சான்றிதழ்களில் ஜாதி, மதம் இல்லை என 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மொத்தம் 1,23,630 மாணவர்கள் தெரிவித்துள்ளனர். .http://csthalaimurai.blogspot.inஇதேபோல் 11-ம் வகுப்பில் 278, 12-ம் வகுப்பில் 239 பேர் ஜாதி, மதம் எதுவும் எங்களுக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளனர். 2017-18 கல்வி ஆண்டின் அடிப்படையிலான புள்ளி விவரங்கள் இவை.
மாநிலம் முழுவதும் உள்ள 9,000 பள்ளிகளில் இருந்து இந்த புள்ளி விவரங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் மாவட்டம் அல்லது மண்டல வாரியாக எத்தனை பேர் இதேபோல் பதிவு செய்துள்ளனர் என்கிற விவரங்கள் இல்லை. இவ்வாறு அமைச்சர் ரவீந்தரநாத் கூறினார் .http://csthalaimurai.blogspot.in

ஒரு கணினி ஆசிரியரின் மகன் இந்த உலகை மாற்றினான்!!!!!

ஒரு கணினி ஆசிரியரின் மகன் இந்த உலகை மாற்றினான் - லேரி பேஜை கூகுள் செய்வோம்!  



 சென்னையில்  இருந்து கொண்டு கேப்டவுனில் தண்ணீர் இல்லையென்பது நமக்குத் தெரிகிறது. கிறிஸ்டோபர் நோலனின் இரண்டாவது படம், புத்தாண்டைக் கொண்டாட சிறந்த இடம், பாங்காக்கின் பெஸ்ட் ஹோட்டல், ஃபிரான்ஸின் சிறந்த மாடல்... என நாம் தெரிந்து கொள்ள நினைக்கும் 
அனைத்தையும் தன் வழி கொண்டுவந்து இன்று நம் அறிதலின் வாயிலாக இருப்பது கூகுள். ஒரு வகையில் நம்மை சோம்பேறியாக்கி இருந்தாலும், ஒருவரது சிந்தனை இந்த உலகத்தின் வாழ்க்கை முறையையே மாற்ற முடியும் என்பதன் நிகழ்கால உதாரணம் கூகுள்.


                                'லேரி பேஜ்'
கூகுளின் இந்த வெற்றிக்கு இருவர் தான் காரணம், ஒருவர் 'லேரி பேஜ்' மற்றொருவர் 'செர்ஜி பிரின்'. இவர்கள் இருவரும் இல்லையெனில் இந்த கூகுள் என்ற ஒன்றை நாம் பார்த்திருக்கவே மாட்டோம். வேண்டுமானாலும் வேறொரு பெயரில் வேறு யாராவது கண்டுபிடித்திருக்கலாம். தற்போது இவர்கள் தானே கண்டுபிடித்திருக்கிறார்கள்? அதிலும் லேரிக்கு இன்று நாற்பத்தி ஐந்தாவது பிறந்தநாள் வேறு. எல்லோரும் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லிவிட்டு அவரைப் பற்றிய சுவாரசிய தகவல்களை தெரிந்துகொள்வோம்.
  • கூகுளின் தாய் நிறுவனத்தின் பெயர் அல்ஃபபெட். அந்த நிறுவனத்தை நிறுவிய இருவரில் ஒருவர் லேரி பேஜ். அதுமட்டுமில்லை, இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் (CEO - Chief Executive Officer). சுந்தர் பிச்சையையும் இவரையும் குழப்பி கொள்ளாதீர்கள். சுந்தர் கூகுளுக்கு சிஇஓ, ஆனால் இவரோ அல்ஃபபெட் என்னும் கூகுளின் மேலிடத்துக்கு சிஇஓ.http://csthalaimurai.blogspot.in
  •  
  • கூகுள் என்ற வலைதளத்தை இன்று 300 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்துகின்றனர். ஒரு நாளில் கூகுளில்  இரண்டு பில்லியனுக்கும் மேற்பட்ட விஷயங்களைத் தேடிப் பார்க்கிறார்கள். இணையத்திலேயே அதிகமாக பார்வையாளர்களை கொண்டுள்ளது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அல்ல, நொடிக்கு நொடி அதிகமாகிறது
http://csthalaimurai.blogspot.in
  • லேரி பேஜ்ஜூம் ஆப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சும் நல்ல நண்பர்கள். தொழில் நிமித்தமாகவும் தனிப்பட்ட முறையிலும் இருவருக்கும் நல்ல உறவு இருந்தது என்கின்றனர்.
     
  • லேரியின் பெற்றோர்களும் கல்லூரி கணினி ஆசிரியர்களாக இருந்ததால் லேரிக்கும் கணினியின் மீது சிறு வயதிலிருந்தே மோகம் இருந்துள்ளது. போகப் போக அதில் வல்லுனராக வருவார் என்று அன்று யார் கண்டது?
     
  • அந்தக் காலகட்டத்தில் அரிதாக இருந்த கணினியை தன் பள்ளிப் படிப்பின் போதே வீட்டில் வைத்து கற்றுக்கொள்ளும் அளவுக்கு இவருக்கு வசதி இருந்தது. பெற்றோரும் கல்லூரி ஆசிரியர்கள் என்பதால் அறிவியல், கணினி சார்ந்த புத்தகங்களையும் வாசிக்க வாய்ப்பிருந்தது.
     
  • மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதே இன்க்ஜட் பிரின்டரை உருவாக்கியுள்ளார். 'மேஸ் அண்ட்  ப்ளூ' என்ற  சோலார் கார் குழுவில் கல்லூரிப் படிப்பின் போது சேர்ந்து, அந்த சோலார் கார் உருவாக்கத்திற்காக உதவியுள்ளார்.http://csthalaimurai.blogspot.in

  • லேரியும், பிரினும் 1995 ஆண்டில் தான் முதல் முறையாக சந்தித்துக்கொண்டனர். முதல் சந்திப்பில் இருந்து, கூகுளை நிறுவியது முதல் தற்போதுவரை அவர்களுக்குள் வாக்குவாதம் என்ற ஒன்று இல்லாமல் எந்த முடிவும் எடுக்கப்படமாட்டாது என்று சொல்கின்றனர்.     
     
  • ஒரு சின்ன குடோனில் ஆரம்பிக்கப்பட்ட இவர்களது நிறுவனம் இன்று உலகமெங்கும் படர்ந்துள்ளது. இவர்கள் முதல் முதலில் வாடகைக்கு எடுத்த குடோன் யாருடையது தெரியுமா? யூ-ட்யூப் நிறுவனத்தின் தற்போதைய சிஇஓ சூசனுடையது.  
     
  • 45 வயதாகும் லேரி ஒரு நோய் காரணமாக தன் குரலை சிறிது சிறிதாக இழந்து வருகிறார்.

ஒரு தனி மனிதனின் எண்ணம், கனவு இந்த உலகத்துக்கே பயன்படும், ஒரு நிறுவனம் இந்த உலகின் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படும் என்று நிறுவி ஆசைகளுக்கு எல்லை எதுவுமில்லை என்று உணர்த்தியிருக்கிறார் லேரி.
http://csthalaimurai.blogspot.in

POPULAR POSTS