மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Saturday 19 May 2018

அரசுப் பணிகளில் பணியிடங்களை குறைப்பதற்கான கடிதம்..



அரசுப் பணிகளில் பணியிடங்களை குறைப்பதற்கான அரசாணை.. நடவடிக்கையை அரசு துவங்கியுள்ளது.... இக்கடிதமே அதற்கான ஆரம்பம்...

ஆனால் "தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்'" இவற்றை எல்லாம்
முழுமையாக ஆராய்ந்து....

அனைத்து தரப்பு மக்களின் ஆதி முதல் அந்தம் முடிய அனைத்து சேவைகளையும் செய்து வரும் வருவாய்த்துறையில் ஏற்கனவே, பணித்தன்மைக் கேற்பவும், பணிப்பளுவிற்கேற்பவும் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படாமல் துறையானது பல ஆண்டுகளாக திணறிக் கொண்டிருக்கும் வேளையில், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர் திரு.எஸ்.ஆதிஷேசையா, அவர்கள் தலைமையில், அரசாணை எண்: 56, நிதி (சி.எம்.பி.சி.) துறை,நாள்: 19.02.2018ன்படி அமைக்கப்பட்;டுள்ள பணியாளர் மறுசீரமைப்பு குழு (Staff Rationalisation Committee)) என்பது துறையின் நிர்வாகத்தை முழுமையாக முடக்கிவிடும் அபாயம் உள்ளது என்றும், பொது மக்களின் சமூக வாழ்க்கையோடு, சட்டம் ஒழுங்கு, அரசின் சிறப்பு திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லுதல், பேரிடர் மேலாண்மை, தேர்தல், முக்கிய பிரமுகர் வருகை என அனைத்து நுண்ணிய பணிகளையும் வருவாய்த்துறையில் மேற்கொண்டு வருவதால், இவை தேவையற்ற பணியிடங்கள் ((Non-essential posts) என்று வகைப்பாடு செய்வதோ, புறஒப்படைப்பு முறையிலோ (Outsourcing) ஒப்பந்த அடிப்படையிலான (Contract) நியமனம் என்பது நிர்வாகத்தை பாதிப்படைவதாக அமைவதோடு பொது மக்கள் நலனையும் வெகுவாக  பாதிப்படையச் செய்யும் என்பதை தெரிவித்தும்... 

ஏற்கனவே, தமிழக அரசால் அரசாணை எண்: 467, நிதித் (சி.எம்.பி.சி.) துறை, நாள்: 26.11.2001ன்படி அமைக்கப்பட்ட முனைவர்.ஏ.எம்.சுவாமிநாதன், இ.ஆ.ப. குழு மற்றும் பல நிர்வாக சீர்திருத்தக் குழுக்களிலிருந்து காவல் துறை மற்றும் வருவாய்த்துறை ஆகியவை சட்டம் ஒழுங்கு, மாநிலத்தின் பாதுகாப்புத் தொடர்பானது எனக் கருதி, விலக்களிக்கப்பட்டதைப் போன்றே, தற்போது அமைக்கப்பட்டுள்ள பணியாளர் மறுசீரமைப்பு குழுவிலிருந்து (Staff Rationalisation Committee) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைக்கு முழுமையாக விலக்களிக்க வேண்டும் என தெரிவித்தும், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில்  அரசுக்கு விரிவாக முறையீடு அளித்துள்ளோம்....

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஊழியர்களின் எதிர்கால நலன்களை சரியாக புரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்பட்டு வருகிறது.

"STAFF RATIONALISATION COMMITTEE" பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டால்
வருவாய்த்துறையில் பதவி உயர்வு என்பது  "கானல் நீர்" போல் ஆகிவிடும் என்பதை வருவாய்த்துறையில் பணிபுரியும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்....

நமக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகளை தெரிவித்து, அதிலிருந்து விடுபடுவதற்கான நடவடிக்கைகளை
சரியாக திட்டமிட்டு மேற்கொள்வது தான் ஊழியர் நலன் காக்கும் அமைப்புகளின் கடமையாகும்...
அந்த கடமையை சரியாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மேற்கொண்டு வருகிறது....

எனவே, சரியான திசைவழியில் வருவாய்த்துறை ஊழியர்களை பாதுகாப்பாக  பயணிக்க வைக்க பல்வேறு இயக்க நடவடிக்கைகளை
மேற்கொண்டு வரும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவிக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் முழுமையாக பங்கேற்று, நமது உரிமையை நிலை நாட்டுவோம்.....
நமது பணியினை பாதுகாப்போம்....


மாணவர்கள் இனி வகுப்புக்களை ‘கட்’ அடித்து வெளியே சுற்ற முடியாது..


கேரளாவில் மாணவர்களுக்கு போலீஸ் செக்: வகுப்புக்கு ‘கட்’ அடித்து வெளியே சுற்ற முடியாது

திருவனந்தபுரம்:  வகுப்புகளுக்கு கட் அடித்து விட்டு சினிமா, பார்க் என சுற்றும் மாணவர்களை நாம் பல இடங்களில் பார்த்திருக்கிறோம்.


 சில மாணவர்கள் யாரும் சந்தேகப்படாமல் இருப்பதற்காக வீட்டிலிருந்து கிளம்பும்போதே புத்தகப்பையில் ரகசியமாக ஒரு சட்டையை மறைத்து வைத்து விட்டு பின்னர் அந்த சட்டையை போட்டு ஊர் சுற்றுபவர்களும் உண்டு.

 நகர்ப்புறங்களில் பல பள்ளிகளில் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தால் அதை கண்டுகொள்வதில்லை. இதனால் அந்த மாணவர்கள் பல தவறான வழிக்கு சென்று விடுகின்றனர்.

 கேரளாவில் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தல், கொலை, கொள்ளை, பலாத்காரம் உட்பட பல கிரிமினல் வழக்குகளில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டது போலீசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புத்தகப்பையுடன் புறப்படும் இவர்கள் பள்ளிக்கு செல்லாமல் சினிமா, பார்க் என ஊர் சுற்றி வந்தனர்.

இதன் மூலம் கஞ்சா கும்பல்கள் மற்றும் கிரிமினல்களின் வலையில் சிக்கி நாளடைவில்  கிரிமினல்களாக மாறிவிடுகின்றனர்.

 ஆனால் இந்த விவரம் அவர்களது பெற்றோருக்கு தெரியாது.

 திருவனந்தபுரம், கொச்சி உட்பட நகரங்களில் இதுபோல மாணவர்கள் கிரிமினல்களாக மாறும் சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து அதை கட்டுக்குள் கொண்டுவர கேரள போலீஸ் கடும் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது.

 இதன்படி அனைத்து பள்ளிகளையும் தொடர்பு கொண்ட கேரள சைபர் கிரைம் போலீசார் மாணவர்களின் வருகை பதிவேடுகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்ய கூறினர்.

பின்னர் அவை கேரள சைபர் கிரைம் போலீசின் புதிய சாப்ட்வேருடன் இணைக்கப்பட்டன.

 தினமும் வகுப்புகள் தொடங்கிய உடன் ஆசிரியர்கள் மாணவர்களின் வருகையை பரிசோதிப்பார்கள்.

 பின்னர் அந்த விவரங்கள் உடனடியாக கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். அந்த நொடியே மாணவர்கள் வருகை தொடர்பான அனைத்து விவரங்களும் போலீசுக்கு கிடைத்து விடும்.

தொடர்ந்து பள்ளிக்கு தாமதமாகவோ. அல்லது வராமலோ இருக்கும் மாணவர்களை போலீசார் கண்காணிக்க தொடங்குவார்கள்.

 தகுந்த காரணம் இல்லாமல் வகுப்புகளுக்கு வராமல் இருக்கும் மாணவர்கள் குறித்து போலீசார் உடனடியாக அவர்களது வீடுகளுக்கு தகவல் கொடுப்பார்கள்.


 இதேபோல சினிமா தியேட்டர்கள், பார்க்குகள் உட்பட பொது இடங்களிலும் போலீசின் கண்காணிப்பு இருக்கும்.

சந்தேகப்படும்படியாக மாணவர்கள் சுற்றுவது தெரிந்தால் உடனடியாக அவர்களை பிடித்து விசாரிப்பதும் உண்டு.

 கடந்த சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தில் இந்த திட்டத்தை போலீசார் அறிமுகப்படுத்தினர்.

 இது வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த கல்வியாண்டு முதல் கேரளா முழுவதும் அமல்படுத்த போலீசார் தீர்மானித்துள்ளனர்.

 இதற்காக பெரும்பாலான பள்ளிகள் அந்தந்த உள்ளூர் போலீஸ் நிலையத்துடன் கணினி மூலம் இணைக்கப்பட்டு விட்டன.(மின்னல் கல்விசெய்தி)
கேரள போலீசின் இந்த நடவடிக்கை மூலம் இனி தங்களது குழந்தைகள் ஒழுங்காக பள்ளிக்கு செல்கிறார்களா என்று கவலைப்பட தேவையில்லை என பெற்றோர்கள் நிம்மதி தெரிவித்துள்ளனர்.

BREAKING NEWS: 10ம் வகுப்பு, 'ரிசல்ட்' அறிவித்த தேதியில் வெளியாகும் : அமைச்சர் திட்டவட்டம்



கோபிசெட்டிபாளையம்: ''அறிவித்தபடி, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட தேதியில் வெளியாகும். இதில் எவ்வித மாற்றமில்லை,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.



ஈரோடு மாவட்டம், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில், கொடிவேரி தடுப்பணை வளாகத்தில், விழிப்புணர்வு மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. மையத்தை திறந்து வைத்த அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், ஜூன், 1ல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். ஏனெனில்,


புதிய பாடத்திட்டத்தின் படி, குறைந்தது, 185 நாள், மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டியுள்ளது.



 அதனால், ஜூன், 1ல், பள்ளிகளை திறக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இந்தியாவே வியக்கும் அளவில், பாடத்திட்டம் அமைந்துள்ளது. இதை, அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.



 எழுத்துக்களின் அச்சு வடிவங்கள், மல்டி கலரில் படங்கள் என, மாணவர்களிடம் பயிலும் ஆர்வத்தை துாண்டும் வகையில், புதிய பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
(மின்னல் கல்விசெய்தி)
சீருடைகளை மாற்றி அமைக்க, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்க, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.



பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், குறிப்பிட்ட தேதியில் முறையாக அறிவிக்கப்படும்.



இவ்வாறு அவர் கூறினார்.வரும், 23ம் தேதி, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.



இதில், மாற்றம் இருக்கும் என செய்திகள் வெளியானதால், மாணவர்கள், பெற்றோர் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில், 'திட்டமிட்டபடி வெளியாகும்; மாற்றமில்லை' என அமைச்சர் கூறியுள்ளதால், மாணவர், பெற்றோர் நிம்மதி அடைந்துள்ளனர்.


புதிய பாடத் திட்டத்துக்கு ஏற்ப ஆசிரியர்களைத் தயார்படுத்த நடவடிக்கை: பிரதீப் யாதவ்.


ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப அவர்களைத் தயார் செய்யும் வகையிலும் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ("எஸ்சிஇஆர்டி') செயல்பாடுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட உத்தரவு:தமிழகத்தில் புதிதாகப் பணியில் சேரும் ஆசிரியர்களுக்கும், ஏற்கெனவே பணியில் உள்ளோருக்கும் தேவையான பயிற்சிகளை மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அளித்து வருகிறது. இதற்காக மாவட்டங்களில் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.பயிற்சியின் அவசியம் என்ன? இப்போது பாடத் திட்டங்களில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் ஆசிரியர்களுக்கு போதியளவு பயிற்சி அளிப்பது அவசியமாகிறது.எனவே, இப்போதுள்ள மாவட்ட அளவிலான கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகங்களை இரண்டு வகைகளாகப் பிரித்துப் பயிற்சி அளிக்க தமிழக அரசுக்கு மாநிலக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார்.அதன்படி, பணிக்கு முந்தைய பயிற்சிகளை மட்டும் அதிகளவு அளிக்க 12 மாவட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றுடன் அதன் அருகேயுள்ள மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த 12 மாவட்ட நிறுவனங்கள், பணிக்கு முந்தைய பயிற்சிகளை அளிப்பதில் கவனம் செலுத்தும்.மாவட்டங்களை ஒருங்கிணைத்துப் பயிற்சி: சென்னை மாவட்ட கல்வி ஆராய்ச்சி நிறுவனத்துடன் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டத்துடன் வேலூர், கடலூருடன் விழுப்புரம், கிருஷ்ணகிரியுடன் சேலம், தருமபுரி, ஈரோடு மாவட்டத்துடன் நாமக்கல், கரூர் , பெரம்பலூருடன் திருச்சி, அரியலூர்,திருவாரூர் மாவட்டத்துடன் தஞ்சாவூர், நாகப்பட்டினம்,புதுக்கோட்டையுடன் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகருடன் மதுரை, தேனியுடன் திண்டுக்கல் மாவட்டமும், கோத்தகிரியுடன் கோவை, திருப்பூரும், திருநெல்வேலியுடன் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஒவ்வொரு மாவட்ட கல்வி ஆராய்ச்சி நிறுவனத்துடன் அண்டை மாவட்டங்களை இணைத்துப் பயிற்சி அளிக்கப்படும்.ஆனாலும், இந்த 12 மாவட்ட கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களைத் தவிர்த்து தமிழகத்தில் ஏற்கெனவே உள்ள20 மாவட்ட நிறுவனங்கள் பணியில் உள்ள ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சிகளை மட்டுமே அளிக்கும். அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், சேலம், தருமபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை மட்டுமே அளித்திடும்.மொத்தம் 704 பேரின் மேற்பார்வையில்...ஒவ்வொரு மாவட்ட பயிற்சி நிறுவனத்தில் ஒரு முதல்வர், ஒரு துணைமுதல்வர், 5 மூத்த விரிவுரையாளர்கள், 14 விரிவுரையாளர்கள், ஒரு நூலகர் இருப்பார். ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 22 பேர் வீதம் அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து 704 பேர் பணியில் இருப்பர

பள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாட வகுப்பு நடத்த:அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு


புதிய  பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால்  ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில் 170 நாட்களுக்கு பதில் 185 நாள் பாடம் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


தமிழக பள்ளிகளில் பழைய பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் எனப் பல்வேறு கல்வி அமைப்புகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தன. அந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வகையில், அனைத்து வகுப்புகளுக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு இந்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.


இதற்கான வரைவுப் பாடத்திட்டத்தைக் கடந்த நவம்பர் மாதம் 20-ம் தேதி வெளியிட்டு, பாடத்திட்டம் குறித்த கருத்துகளைத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்குத் தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து தயார்நிலையில் உள்ளன. இதுகுறித்து கோபி அருகே உள்ள கொடிவேரியில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:


புதிய  பாடத்திட்டம் வருடத்துக்கு 185 நாட்கள் நடத்தும் வகையில்  அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 170 நாட்கள்தான் பாடம் நடத்தப்பட்டது.  அதனால்தான் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் மாணவர்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் ஒரு பள்ளியில் 29 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதுபற்றி  விசாரித்தபோது, அங்குள்ள மாணவர்கள் தெலுங்கு மொழி அதிகம் பேசுவதால்தான்  என்பதும், நமது ஆசிரியர்களுக்கு தெலுங்கு மொழி குறித்த பயிற்சி இல்லை  என்பதும் தெரியவந்தது.

தெலுங்கு மொழி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், தகுதி தேர்வில் கலந்து கொண்டால் முன்னுரிமை அளிக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படும். 1 முதல் 5, 6 முதல் 8, 9 மற்றும் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு நான்கு வகையான சீருடைகள் மாற்றப்பட்டுள்ளது.


அதேபோன்று க்யூஆர் கோடு மூலம் மாணவர்கள் புத்தகங்களை செல்போனிலேயே டவுன்லோட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து, முடிவுகளை வெளியிட தயார் நிலையில் உள்ளது. அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, செப்டம்பர் மாதம் வரை சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பிளஸ் 2க்கும் இனி 600 மதிப்பெண்தான்

பிளஸ் 2 படிப்பில் 6 பாடங்களுக்கு தலா 200 மதிப்பெண்கள் என 1200  மதிப்பெண்கள் என்று மதிப்பிடப்பட்டது. இந்த மதிப்பெண் முறை இந்த ஆண்டுடன்  முடிவுக்கு வருகிறது. வரும் கல்வியாண்டில் பிளஸ் 2வில் உள்ள 6 பாடத்திற்கும் இனிமேல் தலா 100 மதிப்பெண் வீதம் 600 மதிப்பெண் மட்டுமே கணக்கிடப்படும்.

ஏற்கனவே பிளஸ்1 வகுப்பில் ஒரு பாடத்துக்கு 200  மதிப்பெண்கள் என்பதை மாற்றி 100 மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறை கடந்த கல்வி  ஆண்டிலேயே அமல்படுத்தப்பட்டது.

அதேபோல் பிளஸ்2 வகுப்பிலும் 2018-19ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்ட பள்ளிக்கல்வித்துறை  திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன் பிளஸ்2க்கு  மட்டும் தனியாக மதிப்பெண் சான்றிதழ் என்பதை மாற்றி பிளஸ்1க்கு என்று  தனியாகவும், பிளஸ்2க்கு என்று தனியாகவும் மதிப்பெண் சான்றிதழ்  வழங்கப்படும். முடிவில் இரண்டு வகுப்புகளுக்கும் சேர்த்து ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ப்ளஸ் டூ தேர்வில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறாத அரசுப் பள்ளி..!


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை. இது கல்வி அதிகாரிகளுக்கும் பெற்றோர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..



கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கல்வி மாவட்டத்தில் மத்திகிரி என்ற இடத்தின் அருகில் உள்ளது மாசிநாயக்கனபள்ளி. இங்குள்ள அரசு தெலுங்கு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ வகுப்புகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், உயிரியல் ஆகிய பாடப்பிரிவுகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. தெலுங்கு மொழியில்தான் பாடங்கள் நடத்தப்படும். இந்தக் கல்வி ஆண்டில் ப்ளஸ் டூ வகுப்பில் 30 மாணவ, மாணவிகள் பயின்றனர். அவர்களில் 29 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய ஒட்டுமொத்த மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை. இது கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  
இதுகுறித்து தகவலறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, நேற்று சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்தார். எதற்காக ஒட்டுமொத்த மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை என்று விசாரித்தார். தொடர்ந்து தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு மெமோ வழங்கியுள்ளார். 
 
இதுகுறித்து மகேஸ்வரியிடம் பேசினோம். 'ஓசூர் கல்வி மாவட்டத்தில் மட்டும் தெலுங்கு மொழியில் கற்றுக்கொடுக்கப்படும் நான்கு அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் மற்ற மூன்று பள்ளிகளில் நல்ல ரிசல்ட் வந்துள்ளது. மாசிநாயக்கனபள்ளி அரசு தெலுங்கு மேல்நிலைப்பள்ளியில் மட்டும்தான் ப்ளஸ் டூ தேர்வு எழுதியவர்களில் ஒருத்தர்கூட தேர்ச்சி பெறவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளேன். குறிப்பாக கணிதம், இயற்பியல் பாடங்களில்தான் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர். இதனால், அந்தப் பாடப்பிரிவு ஆசிரியர்களிடமும் தலைமை ஆசிரியரிடமும் விசாரணை நடத்தியுள்ளேன். அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து மாணவிகளிடமும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தினேன். இந்தப்பள்ளி கடந்த  கல்வி ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளது. ஆனால், ப்ளஸ் டூ தேர்வில் மட்டும் ஏன் இந்த நிலைமை என்று விசாரிக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.  
ப்ளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகள், விரைவில் நடைபெற உள்ள சிறப்புத் தேர்வை எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளைத் தேர்வுக்குத் தயார்படுத்த சிறப்பு வகுப்புகள் நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளோம். இதனால் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார். 
இதுகுறித்து பள்ளி வட்டாரங்கள் கூறுகையில், 'ப்ளஸ் டூ தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் இயற்பியல் பாடத்தில் ஐந்து பேரும், உயிரியல் பாடத்தில் இரண்டு பேரும் ஆங்கிலப் பாடத்தில் 18 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாகத்தான் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை. தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். கடந்த கல்வி ஆண்டில் ப்ளஸ் டூ தேர்வில் இந்தப்பள்ளி 33 சதவிகிதம் தேர்ச்சி பெற்றது. இந்தமுறைதான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது" என்றனர்

முதல் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அழகிய ஸ்மார்ட் போன்...


Friday 18 May 2018

அரசுப்பள்ளியில் இந்தாண்டு முதல் 'LKG,UKG' துவங்கப்பட உள்ளது...

மதுரையில் 40 இடங்களில் இந்தாண்டு மாநகராட்சி 'பிளே ஸ்கூல்' துவங்கப்படுகிறது.



மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக குறைந்த நிலையில், ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டது. இதனால் மாணவர் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் உயர்ந்தது. தற்போது 6 - 8ம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வியில் தான் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளனர்.இதன் தொடர்ச்சியாக நடுநிலைப்பள்ளிகள் மற்றும் ஆரம்ப பள்ளிகளில் இந்தாண்டு முதல் 'பிளே இதில் 3 - 5 வயது வரை மாணவர்கள் சேர்க்கை துவங்கி உள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,''தற்போது வரை 1,000 மாணவர்கள் சேர்க்கை முடிந்துள்ளது. தொடர்ந்து சேர்க்கை நடக்கிறது. இக்கல்வி முழுவதும் இலவசம். குறிப்பிட்ட சில பள்ளிகளுக்கு வாகன வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது,'' என்றனர்.' துவங்கப்படுகிறது

தொழிற்கல்வி பாடத்தில் சரிவு..


ICT - கணினி அறியியல் பாடபுத்தகம்..

  முதல் வகுப்பிலிருந்து 10 வகுப்பு வரை கணினி அறிவியல் பாடபுத்தகத்தின்  -LINK .

அனைத்து புத்தகங்களின் LINK -ஐ பெற
CLICK HERE ICT COMPUTER SCIENCE BOOK



ஆறாம் வகுப்பு பாடபுத்தகத்தின் பாடப்பொருள்.


அனைத்து புத்தகங்களின் LINK -ஐ பெற
CLICK HERE ICT COMPUTER SCIENCE BOOK




கணினி பாடபுத்தகத்தின் LINK

CLICK BELOW LINK:
https://itschool.gov.in/downloads.php


வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014 .

அரசுப்பள்ளி மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பிய விபரம் இதோ?


RTE ன்படி அரசு நிதி உதவி அளித்து ஆண்டு தோறும் 25% மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பிய விவரப்படி:

2013-14 கல்வியாண்டில் 49,864 மாணவர்கள் 

2014-15 கல்வியாண்டில் 89,954 மாணவர்கள்

2015-16 கல்வியாண்டில் 90,300 மாணவர்கள்

2017-18 கல்வியாண்டில் 11.05.2018 தேதி வரை 90,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள்.

மொத்தம் கூட்டி பாருங்கள் இப்ப உருவாகி இருக்குற உபரி ஆசிரியர் பணியிடம்  உருவாகும் நிலை புரியும்.....

அரசுப்பள்ளிகள் மூடப்படும் நிலை.... ஏன் வராது??

Flash News : G.O MS 101 - CEO, DEO, DEEO, AEEO உள்ளிட்ட பள்ளிக்கல்வி அதிகாரி பணியிடங்கள்/பணிகளை சீரமைத்து அரசாணை வெளியீடு 18.05.2018..


கல்வித்துறையில் நிர்வாக மாற்றம்புதிய அரசாணை



இனி..
C. E. O,
D. E. O,
B. E. O.

A. E. E.O.வுக்குப் பதில் இனி...

B. E. O. Block Educational Officer

Thursday 17 May 2018

FLASH NEWS:மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு


மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்று மருத்துவ கல்வி இயக்குநர் கூறியுள்ளார். www.tnhelth.org.
www.tnmedicalselection.org ஆகிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

அரசுப்பள்ளிகளில் ரூ.480 கோடி செலவில் இணையதள வசதி..


பள்ளி மாணவர்களின் அறிவு திறன் மேம்பட, 480 கோடி ரூபாய் மதிப்பில், பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

திருப்போரூர் ஒன்றியம், தாழம்பூரில் உள்ள, தனியார் பொறியியல் கல்லுாரியில், நேற்று நடைபெற்றது.விழாவில், பங்கேற்ற, அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது:


அண்ணா பல்கலைக்கழக, 'ஆன்லைன்' கலந்தாய்வு முறைக்கு மாணவர்கள் மற்றும் பிற தரப்பினரிடையே வேண்டாம் என்ற கருத்து நிலவுகிறது. இதுகுறித்து, உயர் கல்வி துறை அமைச்சரிடம் பேசி, பரிசீலனை செய்யப்படும்.தமிழகத்தில், வரும் காலத்தில், பிளஸ் 2 படித்தாலே வேலை வாய்ப்பு கிடைத்துவிடும். அந்தளவிற்கு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்.




மேலும், மூன்று லட்சம் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் மேலை நாடுகளுடன் இணைந்து அரசு சார்பாக மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச வகுப்புகள் நடத்தப்படும்.பள்ளி மாணவர்களின் அறிவு திறன் மேம்பட, 480 கோடி ரூபாய் மதிப்பில் பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்படும்.


பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு கிடைக்க திட்டமிடப்பட்டுள்ளன.மேலும், தமிழக மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச, மூன்று லட்சம் ஆங்கில பயிற்சி வகுப்புகள் தொடங்கவும், 3,000 பள்ளி மாணவ - மாணவியருக்கு, 'ஸ்மார்ட்' பயிற்சி வகுப்புகள் துவங்கவும், அரசு சார்பில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.

Students TC Request Letter..


TNPSC குரூப்-1 தேர்வில் மிகப்பெரிய மோசடி அம்பலமானது..


அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி குறைய காரணம் யார்?? காட்டத்தில் கல்வியாளர்கள் !


அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள் இல்லாமல் போனதன் விளைவு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை எட்ட தவறவிட்டதாக நாகை மாவட்ட கல்வி ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்காவில் 17 அரசு மேல்நிலைப் பள்ளிகள் இருக்கின்றன. அதில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் காலியாகவே இருக்கின்றன, ஆங்கிலம், கணிதம், உள்ளிட்ட முக்கிய பாடப்பிரிவுக்கான ஆசிரியர்களே இல்லாமல் போனதால், தேர்ச்சியின் விகிதம் குறைந்துவிடுகிறது.

அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர் சேர்க்கை மற்றும் நூறு சதவீத தேர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்பட்டாலும் இலக்கை எட்டமுடியாமல் போகிறது.

வேதாரண்யம் பகுதியில் உள்ள ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வெழுதிய 295 மாணவ, மாணவியரில் ஒரு மாணவி மட்டும் தோல்வியடைந்தார். ஆனாலும் இப்பள்ளி 99.6 சதவீத தேர்ச்சியே பெற முடிந்தது. அந்த பள்ளியில் இயற்பியல் மற்றும் ஆங்கில ஆசிரியர் பணியிடங்கள் கடந்த 7 ஆண்டுகளாகவும், தமிழாசிரியர் மற்றும் தாவரவியல் ஆசிரியர் பணியிடங்கள் 4 ஆண்டுகளாகவும் காலியாகவே உள்ளன. அந்த இடங்களுக்கான ஆசிரியர் பணியை பெற்றோர் ஆசிரியர் கழகம் நியமிக்கும் ஆசிரியர்களே ஈடுசெய்கின்றனர்.

இதேபோல், தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வெழுதிய 244 மாணவ, மாணவியரில் வரலாறு மற்றும் பொருளாதாரப் பாடப் பிரிவுகளில் படித்த 2 மாணவிகள் தேர்ச்சிப் பெறவில்லை. இதனால், இப்பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 97-ஆக உள்ளது.மேலும் தமிழ், ஆங்கிலம், இயற்பியலுக்கான ஆசிரியர் பணியிடங்களும் இப்பள்ளியில் பல ஆண்டுகளாகவே நிரப்பப்படவில்லை.

ஆயக்காரன்புலம் நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வெழுதிய 234 பேரில் 6 பேர் தேர்ச்சி பெறவில்லை. இதனால், 97.4 சதவீத தேர்ச்சியே பெற முடிந்தது. அங்கு வரலாறு, தமிழ், பொருளாதாரப் பாடங்களுக்கான ஆசிரியர்கள் பணியிடம் பல ஆண்டுகளாக காலியாக இருக்கிறது.

வேதாரண்யம் சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 149 மாணவர்களில் 140 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 94 ஆகும். தேத்தாக்குடி தெற்கு எஸ்.கே. அரசு மேல்நிலைப் பள்ளியில் 93 சதவீதத்தினரும், வேதாரண்யம் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 95.7 சதவீதத்தினரும், கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் 92 சதவீதத்தினரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

ஆக அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைய ஆசிரியர்கள் பற்றாக்குறையே என்கிறார்கள் அங்குள்ள ஆசியிரியர்கள்

மாவட்ட வாரியாக அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விபரம்..


Wednesday 16 May 2018

இவ்வாண்டு கணினி ஆசிரியர் நியமனம் இல்லை - CM CELL REPLY :

கணினி ஆசிரியர்கள் கவன்த்திற்கு

அரசுப்பள்ளியில் ஆசிரியர் பணியிடம் காலி



விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரை மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் 176 பேர் இருக்க வேண்டும். இதில், மூன்று பணியிடங்கள் காலியாக உள்ளது. அதே போல், கணிதம் பாட வகுப்பு ஆசிரியர் 4, இயற்பியல் 26, வேதியியல் 51, உயிரியல் 9, தாவரவியல், விலங்கியல் தலா ஒரு பணியிடம், வணிகவியல் 4, பொருளியல் 15, வரலாறு 5, உடற்கல்வி இயக்குநர் நிலை 1, அரசியல் அறிவியல் 1, மனையியல் 1 உள்பட மொத்தம் 122 ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் காலியாகவுள்ளது.இதில், தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களை, கூடுதல் பொறுப்புகளில் நியமித்தாலும், பணிச்சுமை காரணமாக அவர்கள் சரிவர வகுப்புகளுக்கு செல்லாததால், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் இந்தாண்டு குறைய காரணமாகியுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறையை போக்க பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2,000 பேருக்கு பணி : தபால் துறையில் வாய்ப்பு




தபால் துறையில் காலியாகவுள்ள, 2,000 கிராம தபால் ஊழியர் பணியிடங்கள்
விரைவில் நிரப்பப்படவுள்ளன. நாட்டில், 80 சதவீத தபால் நிலையங்கள் கிராமப்புறங்களில் உள்ளன.

இந்நிலையங்களில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பணியிடங்கள், நேர்முக தேர்வு அடிப்படையில், ஆண்டுதோறும் நிரப்பப்படுவது வழக்கம். அவ்வகையில், 2018 - 19ம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் சமீபத்தில் கணக்கிடப்பட்டன. இதில், நாடு முழுவதும், 2,286 பணியிடங்கள் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது.

இப்பணியிடங்களுக்கு, தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தபால்துறை அறிவித்துள்ளது. இதன்படி, குறைந்தபட்சம், 10ம் வகுப்பு அல்லது இளநிலை பட்டதாரிகள் அனைவரும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு, 18 - 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரும்புவோர், 'http://www.appost.in/gdsonline/Home.aspx' எனும் இணையதள முகவரியில், வரும், 24ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தபால் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பணியாளர்கள் இல்லாததால் கிராமப்புறங்களில் தபால் பட்டுவாடா செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதை கருதி, பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 'கிராம தபால் ஊழியர் பணிக்கான, அதிகபட்ச வயது வரம்பை, 30லிருந்து, 40 ஆக இந்திய தபால் துறை உயர்த்தியுள்ளதால், அதிகம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது' என்றார்

தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த தினேஷ், பிளஸ் டூ தேர்வில் எடுத்த மதிப்பெண்!



தந்தை குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததால் மனமுடைந்து நெல்லை வண்ணாரப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் தற்கொலை செய்து கொண்ட பிளஸ் டூ மாணவன் தினேஷ் எடுத்துள்ள மதிப்பெண்ணைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. கூலித் தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். அவரது மகன் தினேஷ் நல்லசிவன், நாமக்கல் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ தேர்வு எழுதி முடித்துவிட்டு, நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்தார்.


தந்தையின் குடிப்பழக்கத்தை திருத்த முடியாத சோகத்தில் இருந்த அவர், கடந்த 2-ம் தேதி நெல்லை வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச் சாலை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


தற்கொலை செய்து கொண்ட தினேஷ், தற்கொலைக்கு முன் தனது தந்தைக்கு மனமுடைந்த நிலையில் எழுதிய கடிதத்தில், ``அப்பா.. நான் இறந்த பிறகாவது நீ குடிக்காமல் இரு. நான் இறந்த பிறகு எந்தக் காரியமும் செய்யக் கூடாது.

இதன் பிறகாவது குடிக்காமல் இருந்தால்தான் எனது ஆன்மா சாந்தியடையும். நான் இறந்த பிறகாவது நாட்டின் பிரதமர், முதலமைச்சர் ஆகியோர் மதுபானக்கடைகளை அடைக்கிறார்களா என்று  பார்ப்போம் இல்லாவிட்டால் ஆவியாக வந்து மதுபானக் கடைகளை ஒழிப்பேன்’’ என்று எழுதப்பட்டிருந்தது.


இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. தினேஷ் மரணம், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக இளைஞர்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், மாணவன் தினேஷ் நல்லசிவன் எடுத்துள்ள மதிப்பெண் விவரம் தெரியவந்துள்ளது.

அவர் 1024 மார்க் எடுத்துள்ளார். அவர் தமிழ்ப் பாடத்தில் 194 மதிப்பெண் எடுத்துள்ளார். ஆங்கிலத்தில் 148 மதிப்பெண்ணும் இயற்பியலில் 186 மதிப்பெண்ணும் எடுத்துள்ளார். வேதியலில் 173, உயிரியலில் 129 மதிப்பெண், கணிதத்தில் 194 மதிப்பெண் எடுத்துள்ளார்.

தந்தை குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததால் மனமுடைந்து நெல்லை வண்ணாரப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் தற்கொலை செய்து கொண்ட பிளஸ் டூ மாணவன் தினேஷ் எடுத்துள்ள மதிப்பெண்ணைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. கூலித் தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்.

பிளாட்பாரத்தில் பள்ளி ஆசிரியர் - வாட்ஸ் அப் மூலம் கண்டுபிடித்த மாணவர்கள்

போபால் பிளாட்பாரத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் அநாதையாகக் கிடந்துள்ளார். அவரை வாட்ஸ் அப் வீடியோ மூலம் அடையாளம் கண்ட மாணவர்கள், குடும்பத்தினருடன் ஆசிரியரைச் சேர்க்க முயற்சி செய்துவருகின்றனர். 
விஜய் சோபி ஆசிரியர்
(PC -TOI)
இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ் அப் மூலம் அடையாள காணப்படுபவர்கள் அதிகமாகிவிட்டனர். அந்ததளவுக்கு வாட்ஸ் அப் மக்களுக்குப் பயனுள்ளதாக அமைந்துள்ளது. 
மத்திய பிரதேசத்தில் போபாலில் பிளாட்பாரத்தில் முதியவர் ஒருவர் மயங்கிக் கிடந்தார். அவரை அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்தும், பார்க்காதப்படி கடந்து சென்றனர். முதியவர் மீது இரக்கப்பட்ட ஒருவர், தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து, அதை வாட்ஸ்அப் பில் பதிவிட்டுள்ளார். அந்த வாட்ஸ் அப் வீடியோ பல குரூப்களுக்கு ஷேர் செய்யப்பட்டது. 

இந்தச் சமயத்தில் முதியவரின் வீடியோவைப் பார்த்த ஒருவர் அதிர்ச்சியடைந்தார். வீடியோவில் இருக்கும் முதியவர், தனக்கு இயற்பியல் பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியர் விஜய் சோபி என்று அடையாளம் கண்டார். உடனடியாக தன்னுடைய பள்ளி நண்பர்களுக்கு அந்த வீடியோவை ஷேர் செய்தார். அதோடு ஆசிரியரை மீட்கும் நடவடிக்கையில் நண்பர்களுடன் ஈடுபட்டார். 
பிளாட்பாரத்திலிருந்த ஆசிரியர் விஜய் சோபியை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். பிறகு, ஆசிரியரின் குடும்பத்துடன் அவரைச் சேர்க்க நடவடிக்கை எடுத்துவருகின்றனர். ஆனால், ஆசிரியரின் குடும்பம் எங்கு இருக்கிறது. அவர் எப்படி இங்கு வந்தார் போன்ற விவரங்கள் கிடைக்கவில்லை. 
 இதுகுறித்து விஜய் சோபியிடம் கல்வி கற்ற மாணவர்கள் கூறுகையில், ``ஆசிரியர் விஜய் சோபி, 1990 ல் நாலந்தா பள்ளியில் பணியாற்றினார். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். போபால் நகரில் உள்ள கதார் சாலை பிளாட்பாரத்தில் பிச்சைக்காரர் போல மயங்கிக் கிடந்துள்ளார். அந்த வீடியோவைப் பார்த்து அவரை மீட்டுள்ளோம். விரைவில் அவரின் குடும்பத்தினருடன் சேர்த்துவிடுவோம். தற்போது ஆசிரியர் பேசும் நிலையில் இல்லை. இதனால் அவரின் குடும்ப விவரங்களைச் சேகரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது'' என்றனர்.

மதிப்பெண் குறைவாக எடுத்ததால் -மாணவி, தற்கொலை முயற்சி

மதிப்பெண் குறைவாக எடுத்ததால் கோவையில் பிரியா என்ற மாணவி, தற்கொலை கடற்கரை செய்துள்ளார். 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தலைமையாசிரியர்கள் இல்லாததால் கிராமப்புற அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பாதிப்பு..



மதுரை: கிராமப்புற அரசு பள்ளிகளில் போதிய தலைமையாசிரியர்கள் இல்லாததால் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் ஆண்டுதோறும் மே மாதம் தொடக்கக்கல்வி துறையின் இடைநிலை, பட்டதாரி  ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிப்பதற்கான கலந்தாய்வும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கான பதவி உயர்வு கலந்தாய்வும் நடத்தப்படும். ஜூன் முதல் தேதி இவர்கள் பணியில் சேர வேண்டும். ஆனால் தற்போது ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கூட கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதனால் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை பாதிக்கப்படுகிறது. ஜூன் மாதம் புதிய மாணவர்கள் சேர்க்கை, கல்வித்துறை பல புள்ளி விவரங்கள் கேட்பது, விலையில்லா பொருட்களை மாணவர்களுக்கு வழங்குதல் என பல்வேறு பணிகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்வர்

12 ம் வகுப்பு மாணவி தீக்குளிப்பு - 2 பாடங்களில் தோல்வி.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தினைச் சேர்ந்த பனைத் தொழிலாளியான பொன்பலவேசம் என்பவரது மகள் முத்துச்செல்வி. இவர் குளத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் பிரிவில் படித்து வந்தார்.

இன்று காலை வெளியான 12 ம் வகுப்பு தேர்வு முடிவில் கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல் ஆகிய 2  பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. 
இதனால் மனவேதனையடைந்த முத்துச்செல்வி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். முத்துச்செல்வியின் அலறல் சப்தம் கேட்ட பக்கத்து வீட்டினர், அவரை உடனடியாக சிகிச்சைக்காக விளாத்திக்குளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 
மாணவி தற்கொலை
அதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முத்துச்செல்வி கொண்டு வரப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவி முத்துச்செல்வியின் அண்ணன் முத்துராஜிடம் பேசினோம்., ``இன்னைக்கு காலையில கூட படித்த மாணவிகளுடன் ரிசல்ட் பார்க்க, பள்ளிக்குப் போயிருந்தா.., ரிசல்ட்டில் 2 பாடம் ஃபெயிலானது தெரிஞ்சதும் அழுதாளாம். மற்ற மாணவிகள் என் தங்கை பெயிலானதை வெச்சு, கிண்டல் செஞ்சிருக்காங்க.  
ஃபெயிலான என்ன.., அடுத்த தடவை எழுதிக்கிடலாம்னு வீட்டுல எல்லாரும் சமாதானப் படுத்தி வெச்சோம். ஆனாலும், அழுதுகிட்டுதான் இருந்தா. தோட்டவேலைக்கு எல்லாரும் போயிருந்ததுனால, வீட்டில தனியா இருந்தவள்.., மண்ணெண்ணைய ஊத்தி தீ வச்சுக்கிட்டா.." எனக் கூறியபடியே விம்மி அழுதார். 
``85% தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது முத்துச்செல்வியின் நிலை குறித்து எதுவும் செல்ல முடியாது. 2 மணி நேரம் கழித்தே முத்துச்செல்வியின் உடல் நிலை குறித்து தெரிவிக்க முடியும்." என மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

238 அரசு பள்ளிகள் மட்டுமே 100% தேர்ச்சி..



தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவு இன்று வெளியாகியுள்ள நிலையில் தேர்வு எழுதியவர்களில் 91.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 1907 பள்ளிகள் 100% தேர்ச்சி 
 2574 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் 238 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது


Tuesday 15 May 2018

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்டம் வாரியாக மற்றும் பாடவாரியாக தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை சதவீதத்தில்


பிளஸ் 2 பொதுத்தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை சதவீதத்தில்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது. www.tnresults.nic.in, dge1.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தேர்வு முடிவை அறியலாம். பிளஸ் 2 தேர்வினை 8,60,434 மாணவர்கள் எழுதினர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 1% குறைந்துள்ளது.

 வழக்கம் போலவே இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ்-டூ தேர்வில் 97% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

ஈரோடு மாவட்டம் 96.3%, திருப்பூர் மாவட்டம் 96.1% தேர்ச்சி பெற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளது.

⚡1) விருதுநகர் 97.05%
⚡2) ஈரோடு 96.35%
⚡3)திருப்பூர் 96.18%
⚡4) இராமநாதபுரம் 95.88%
⚡5) நாமக்கல் 95.72%
⚡6) சிவகங்கை 95.60%
⚡7) தூத்துக்குடி 95.52%
⚡8) கோயம்புத்தூர் 95.48%
⚡9) தேனி 95.41%
⚡10)திருநெல்வேலி 95.15%
⚡11)கன்னியா குமரி 95.08%
⚡12) பெரம்பலூர் 94.10%
⚡13)கரூர் 93.85%
⚡14) சென்னை 93.09%
⚡15)திருச்சி 92.90%
⚡16) தரும்புரி 92.79%
⚡17) மதுரை 92.46 %
⚡18)சேலம் 91.52%
⚡19)ஊட்டி 90.66%
⚡20) தஞ்சாவூர் 90.25%
⚡21) திண்டுக்கல் 89.78%
⚡22)புதுக்கோட்டை 88.53%
⚡23) திருவண்ணாமலை 87.97%
⚡24)காஞ்சீபுரம் 87.21%
⚡25)திருவள்ளூர் 87.17%
⚡26) கிருஷ்ணகிரி 87.13%
⚡27)வேலூர் 87.06 %
⚡28) கடலூர் 86.69%
⚡29) நாகப்பட்டினம் 85.97%
⚡30) திருவாரூர் 85.45%
⚡31) அரியலூர் 85.38%
⚡32) விழுப்புரம் 83.35%

 தமிழகத்தில் 1907 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 238 அரசுப் பள்ளிகள் ஆகும்.

தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்

இயற்பியல் பாடத்தில் 96.4% மாணவர்கள்

 மொழிப்பாடத்தில் 96. 85% மாணவர்களும்,

ஆங்கிலத்தில் 96.97% மாணவர்களும்,

வேதியியல் பாடத்தில் 95% மாணவர்களும்,

 உயிரியல் பாடத்தில் 96.3% மாணவர்களும்,

 கணித பாடத்தில் 96.1%


 தாவரவியல் பாடத்தில் 93.9% மாணவர்களும்,

 விலங்கியலில் 91.9% மாணவர்கள்,

கணினி அறிவியலில் 96.1% மாணவர்கள்,

 வணிகவியலில் 90.3% மாணவர்கள்,

 கணக்குபதிவியலில் 91%

மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.


புள்ளியியல்- 98.31%,

புவியியல்- 99.21%,

நுண் உயிரியல்-98.96%,

உயிர் வேதியியல்-98.53%,

 நர்சிங்-97.86%,

 நியூட்ரிசியன் மற்றும் டையடிக்ஸ்-99.87%,

 கம்யூனிகேட்டிவ் இங்கிலீஸ்-98.09%,

 ஹோம் சயின்ஸ் - 99.78%,

இந்திய கலாசாரம் - 96.08%,

 அட்வான்ஸ்ட் மொழிப்பாடம்-91.89%,

 வணிக கணிதம்-95.99%

 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அறியந்து கொள்ள!


தமிழகத்தில் இன்று வெளியாகும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை 3 இணையதளங்களில் அறியலாம்.      காலை 9.30 மணிக்கு

1. www.tnresults.nic.in

2. www.dge1.tn.nic.in

3. www.dge2.tn.nic.in

இந்த மூன்று இனையதளத்தில் முடிவை அறியலாம்...!

பிளஸ் 2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 21ல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது...!




காலை 9.30 மணிக்கு dge.tn.nic.in , dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன..


சென்னை: பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை இணைய தளத்தில் வெளியாகிறது.

 முடிவுகள் வெளியான 5 நிமிடத்தில் மதிப்பெண்களுடன்  கூடிய தேர்வு முடிவுகள் மாணவர்களின் பெற்றோர்களின் செல்போனுக்கே அனுப்பி வைக்கும் வசதியை தேர்வுத்துறை செய்துள்ளது. பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி முடிந்தது.

இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த  6,903 பள்ளிகளில் படித்த 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவர்களும் மற்றும் தனித்தேர்வர்கள் 40 ஆயிரத்து 686 பேர் என மொத்தம் 9 லட்சத்து 7  ஆயிரத்து 620 பேர் எழுதினர்.

அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் 5 லட்சத்து 47 ஆயிரத்து 664 பேர் எழுதினர். வணிகவியல் பாடத் தொகுதியின் கீழ் 2 லட்சத்து 42ஆயிரத்து 290  பேர் எழுதினர். கலைப் பாடத் தொகுதியில் 14 ஆயிரத்து 228 பேர் எழுதினர்.

 சென்னையில் 50 ஆயிரத்து 584 பேரும், புதுச்சேரியில் 15 ஆயிரத்து 142  பேரும் எழுதினர். மேற்கண்ட தேர்வுக்காக தமிழகம் புதுச்சேரியில் மொத்தம் 2794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வின் விடைத்தாள் கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் 77 மையங்களில் திருத்தத் தொடங்கி, மே மாதம் முதல் வாரத்தில் பணி முடிந்தது.

இதையடுத்து, தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள டேட்டா மையத்தில் மேற்கொள்ளப்படுகிறது. பிளஸ்  2 தேர்வு முடிவுகள் வெளியிடும் போது, மாநிலத்தில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவர்களின் பட்டியல் தனியாக தேர்வு முடிவின் போது  வெளியிடுவது வழக்கம். கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை மாற்றப்பட்டு, முதல் 3 இடங்கள் ரத்து செய்யப்பட்டு, கிரேடு முறை அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது.

 இந்த ஆண்டும் அதே நடைமுறையின் கீழ் தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளது.
தேர்வு முடிவுகள் வழக்கமாக சென்னையில் உள்ள தேர்வுத்துறையில் ஒவ்வொரு ஆண்டும் 9.30 மணிக்கு தேர்வுத்துறை இயக்குநர் வெளியிடுவார்.
அதற்கு பிறகு அந்தந்த பள்ளியில் காலை 10 மணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தகவல் பலகையில் ஒட்டுவார்கள்.

ஆனால், சில பள்ளிகளில் முன் கூட்டியே தேர்வு முடிவு விவரங்களை வெளியில் சொல்லிவிடுவதால், தேர்வுத் துறை இயக்குநர் வெளியிடுவதற்கு  முன்னதாகவே வெளியில் தகவல் பரவிவிடுகிறது.

 அதனால், இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகளின் புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு  பட்டியல் தேர்வுத்துறை இணைய தளத்தில் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

இது குறித்து தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

 ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் ெவளியிடும் நாளில் பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் நேரில்  சென்று முடிவுகளை அறிந்து கொள்ள வசதியாக மதிப்பெண் பட்டியல்கள் அச்சிட்டு பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு பள்ளிகளில்  ஒட்டப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் நாளை 9.30 மணிக்கு(16ம் தேதி) வெளியிடப்பட உள்ளது.

 இதையடுத்து, அனைத்து மேனிலைப்  பள்ளிகளுக்கும் தேர்வு முடிவுகள் குறித்த பட்டியல்கள்

www.tndge.in,


www.dge.tn.gov.in 


ஆகிய இணைய தளங்களில் வெளியிடப்படும்.



 அந்தந்த பள்ளிகள் அவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள user ID, password ஆகியவற்றை பயன்படுத்தி ஆன்லைன் வழியாகவே  பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.


அதற்கான ஏற்பாடுகளை முன்னதாகவே செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.



 இது குறித்த விவரங்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலர்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 இதையடுத்து நாளை,  காலை 9.30 மணி அளவில் பள்ளிகளுக்கு மாணவர்கள் நேரில் சென்று மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.


மேலும்,  தேர்வு முடிவுகள் வெளியான 5 நிமிடம் முதல் 10 நிமிடத்தில் அந்தந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோரின் செல்போனுக்கும் முடிவுகள் வந்து  சேரும்.

பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் ! பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியீடு !


தமிழகத்தில் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வுகள் மே 16 ஆம் தேதி (புதன்கிழமை) காலை வெளியிடப்படும் நிலையில், அதை மாணவர்களுக்கு வெளியிடுவது குறித்து பள்ளிகளுக்கு கல்வித் துறை சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வுகள் மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் 3 இடங்கள் வரிசைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு முதல் மதிப்பெண் தரவரிசைப்படுத்தும் முறை கைவிடப்பட்டது. மேலும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல்கள் அனுப்பிவைக்கப்பட்டு, அதன்பின் பள்ளிகளுக்கு வழங்கும் முறையும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.நடப்பாண்டில் மதிப்பெண் தரவரிசை கைவிடப்பட்டதால், தேர்வு முடிவுகள், மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்கள், அந்தந்தப் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் நேரடியாகவே அனுப்பி வைக்கப்படவுள்ளன.
மே 16 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவியரின் தேர்வு முடிவுகளை மின்னஞ்சல் மூலம் பதிவிறக்கம் செய்து, அதை அறிவிப்புப் பலகைகளில் ஒட்டவேண்டும் என கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. அதேநேரம், தனித்தனியாக மாணவ, மாணவியரின் செல்லிடப்பேசிகளுக்கும் குறுந்தகவல்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. செல்லிடப்பேசி இல்லாதவர்கள் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று தேர்வு முடிவுகளை அறியலாம். மேலும், அனைத்துப் பள்ளிகளும் தேர்வு முடிவுகளை சாதனைபோல் மாணவர்களின் மதிப்பெண்ணைக் குறிப்பிட்டு விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது. தேர்வு முடிவு சதவிகிதத்தை குறிப்பிட்டும் அறிவிப்புகள் வெளியிடக்கூடாது என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மதிப்பெண், தேர்ச்சி விகிதம் போன்றவற்றை குறிப்பிட்டு தங்கள் பள்ளிகளை முதன்மைப்படுத்தும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 39,889 மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் பள்ளி ஆசிரியர் பணிக்கு மெகா வேலைவாய்ப்பு முகாம் 21.05.2018


Monday 14 May 2018

கேரள அரசு செய்தவை என்ன? இரண்டு வருடத்தில் 3.5 இலட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளியில் இணைந்த ரகசியம் இதோ!!!



அரசுப்பள்ளியில் 1முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் தனியார் பள்ளிக்கு மேலாக கல்வியை வழங்கும் கேரள அரசு!


 அரசுப்பள்ளிகளில் 1முதல் 10ம் வகுப்பு வரை 6வது பாடமாக கணினி அறிவியல் பாடமும் கேரள மாநில அரசுப்பள்ளி பாடபுத்தகமும் தங்கள் அனைவரின் பார்வைக்கு,,,,


கணினிக் கல்வி பயின்றவர் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் கேரளம்...

2016-2017ஆண்டு அறிக்கை:
 கல்வி அறிக்கையில் கல்வி சார்ந்த பல முக்கிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் 22 சதவீத குடும்பங்களில் வீட்டுக்கு ஒருவர் கணினிக் கல்வி பயின்றவராக உள்ளனர்.

கேரளாவில் 49 சதவீதத்தினர் அதாவது 39.17 லட்சம் குடும்பங்களில், தலா ஒருவர் கணினி அறிவு பெற்றிருப்பதால் அம்மாநிலம் கணினி கல்வி அறிவில் முதன்மை மாநிலமாக உள்ளது. பஞ்சாப், சிக்கிம் மாநிலங்கள் 47% மற்றும் 43% பெற்று அடுத்தடுத்த இடத்தை பெற்றுள்ளன.

1-ம் வகுப்பு

2-ஆம் வகுப்பு

3-ஆம் வகுப்பு

வெற்றிக் கதை!!!


கேரள அரசுப்பள்ளியின் கணினிக் கல்வி: 

அரசுப்பள்ளியில் குவியும் மாணவர்கள் சேர்க்கை!
2017-2018
.


கேரள அரசாங்கத்தின் "பொதுக்கல்வி பாதுகாப்பு இயக்கம்" என்ற முதன்மைத் திட்டம்தான் இத்தகைய மாற்றத்திற்கான காரணமாகும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களின் உள்கட்டமைப்பு மற்றும் பயிற்றுவிப்புத்தரம் ஆகிய இரண்டையும் உலகத்தரத்திற்கு இணையாக உயர்த்துவதை இந்தஇயக்கம் இலக்காகக் கொண்டது. கடந்த ஆண்டில், வழக்கத்தை விட 1 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் அதிகமாக அரசுப்பள்ளிகளில் சேர்ந்தனர்.அனைவரும் தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்கள் என்பது குறிபிடத்தக்கது.

2018-2019ம் கல்வி ஆண்டில்:இரண்டு இலட்சத்திற்கு அதிகமான தனியார் பள்ளி மாணவர்கள் அரசுப்பள்ளியை நோக்கி !



நடப்பாண்டைப் பொறுத்தவரை, அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படும்போது இரண்டு லட்சம் அதிக மாணவர்கள் என்பதையும் தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எட்டாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான 45 ஆயிரம் வகுப்பறைகள் உயர்தர தொழில்நுட்பம் கொண்டவையாக மாற்றப்பட்டுள்ளன. பெரும்பாலான வேலைகள் நிறைவு பெற்று விட்ட நிலையில், இதன் பலன்களைஅனுபவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது
4-ஆம் வகுப்பு


5-ஆம் வகுப்பு

கேரளம் கணினி கல்வியில் வழங்கு வதிலும் முதலிடம்:

 கேரள அரசு கணினி கல்வியும் ,கணினி வழிக்கல்வியும் வழங்கி வருகின்றது.2011-2012ஆம் ஆண்டில்   தமிழகத்தில் சமச்சீர் கல்வி அறிமுகமானது அதில் 6-10 வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வரப்பட்டது. அந்த திட்டமும் ஆச்சி மாற்றத்தில்  கானல் நீரானது அச்சிடப்பட்ட புத்தகமோ குப்பை தொட்டியில் உருங்கும் நிலையை உருவாக்கிவிட்டது அரசு.அதற்கு பின் கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் கொண்டுவந்த கேரள அரசு இன்று இந்தியா அளவில் கணினி அறிவியல் கல்வி வழங்குவதில் முதல் மாநிலமாக உள்ளது.

6-ஆம் வகுப்பு

2018 ஆண்டு மத்திய அரசு தகவல்:
கேரள அரசுப்பள்ளியில் 70.19%கணினிகள் உள்ளன.

தமிழக அரசு!

36 இலட்சம் மாணவர்களுக்கு  மடிக்கணினியை இலவசமாக வழங்கிய தமிழக அரசு !

   கடந்த 2016-17ம் கல்வியாண்டில் மட்டுமே 5.6 இலட்சம்    மடிக்கணினிக்கு ஒப்பந்தப்புள்ளியை வழங்கியுள்ளது இதுவரை 36 இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினியை வழங்கியுள்ளது .
 "ஒரு மடிக்கணினியின் சராசரி விலை ரூ 16,785"  ஆகும். மத்திய அரசின் தகவலின் படி தமிழக அரசுப்பள்ளியில் 36.72% கணினிகள் உள்ளன என்ற அதிர்ச்சி தகவலை தந்துள்ளது வேதனைக்குறியது.

"பல இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி மட்டும் இலவசம்  பள்ளி ஆய்வகத்தில் கணினி எங்கே??"

தொடக்க,நடுநிலை,உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகள் என தமிழகத்தில் 50000 அரசுப்பள்ளிகள் உள்ளன பள்ளிகளில் 10கணினியை கொண்ட ஆய்வகம் அமைத்திருந்தால் அதாவது (50000*10=500000கணினி )ஒரு வருடாத்திற்கு இலவசமாக வழங்கும் மடிக்கணினியை அரசுப்பள்ளிக்கு வழங்கியிருந்தால் தமிழகம் 100%  அரசுப்பள்ளிகள் கணினி பள்ளியாக மாற்றம் பெற்று இருக்கும்.

7-ஆம் வகுப்பு


8-ஆம் வகுப்பு

9-ஆம் வகுப்பு

பத்தாம் வகுப்பில் கணினி பாடத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

 கேரளத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற மற்ற பாடங்களைப் போன்று கணினி அறிவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், அம்மாநிலத்துக்கு முன்னோடியாக 2011-ம் ஆண்டே அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை தமிழக அரசு தொடங்கியது. ஆனால், தற்போது தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களிான அந்திர தெலுங்கான கர்நாடக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் கட்டாயப் பாடமாக உள்ளது. ஆனால்,இன்று வரை  தமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்தை பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்த முடியவில்லை இன்றுவரை
10-ஆம் வகுப்பு

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புத்தகம்



கணினியும் அதற்கான ஆசிரியர்களும் இல்லாமல் கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் வெறும் பெயருக்காக மட்டும் அறிவியல் பாடத்துடன் இணைக்கும் தமிழக  அரசு!!


தமிழகத்தில் புதிய பாடத்திட்டம் கூட பொய்த்து போனது! புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் ஏமாற்றம்.!!!



        2018-2019ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் 1, 6வகுப்பு மற்றும் 9வகுப்பு மாணவர்களுக்கு நடைமுறைக்கு வர உள்ளது.இதில் அறிவியல் பாடத்தின்  இணைப்பு பாடமாகவும் பருவத்திற்கு இரண்டு பாடங்களை மட்டும் TWO UNIT ஆக இணைத்துள்ளது     மாணவர்கள் எதிர்கால வாழ்வில் அங்கமான கணினி அறிவியல் பாடத்தை துணைப்படமாக இணைத்துள்ளது. செய்முறை பயிற்சியின்றி ,முறையான கணினி ஆசிரியர்கள் இன்றி   வெறும் பாடத்தை மட்டும்  இணைத்து மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த நினைக்கிறது தமிழக அரசு.
#savetngovtshools 
#savetncsteacherslife 
#savetngovtstudent 

வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014
.

POPULAR POSTS