தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம். Reg No:655/2014. வெ.குமரேசன் , பொதுச் செயலாளர், EMail: tnbedcsvips@gmail.com WhatsApp: 9626545446
மலர்கள்
BREAKING NEWS
Flash News
Saturday, 7 April 2018
இத்தனை நோய்களுக்கும் ஒரே தீர்வு நெல்லிக்காய்....!
நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. வெல்லத்தில் மிகுந்துள்ள இரும்பு சத்தும், நெல்லிக்காயில் உள்ள கால்சியம் சத்தும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ரத்த சோகை உள்ளவர்கள் இதைதொடர்ந்து பயன்படுத்தினால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கூடி இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவு வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் தினமும் நெல்லிக்காய் சாப்பிடலாம். இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி உடல் எடையைக் குறைக்க உதவும்.
நெல்லிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இது தீர்வாக அமைகிறது.
நெல்லிகாயை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். நெல்லி பொடியை தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
நெல்லிகாயில் வைட்டமின் சி வளமாக இருப்பதால் கண் பார்வை மேம்படும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கண் ரெட்டினாவை பாதுகாக்கிறது.
1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் சாற்றுடன் சிறிது பாகற்காய் சாற்றினை சேர்த்து கலந்து குடித்து வந்தால் உடலின் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். இதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.
நெல்லிக்காயில் உள்ள இரும்புச்சத்து புதிய இரத்த செல்களை உருவாக்கி மறைமுக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பைத் தடுக்கும்
இலவசமாக கிடைக்கும் ‘அம்மா வை-பை’ வசதியை எப்படி பயன்படுத்துவது?
மறைந்த ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது தமிழ்நாட்டில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் 50 இடங்களில் ‘வை-பை’ சேவை தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி முதல் கட்டமாக சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை பகுதியில் ‘வை-பை’ மண்டலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
இதேபோல் கோவை காந்திபுரம் பஸ்நிலையம், சேலம் மத்திய பஸ் நிலையம், மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ்நிலையம் ஆகிய இடங்களிலும் ‘வை-பை’ சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தொடக்க நாளான நேற்று மெரினா கடற்கரை வந்த இளைஞர்கள் உழைப்பாளர் சிலை பகுதியில் சென்று ‘வை-பை’ வசதியை ஆர்வத்துடன் பயன்படுத்திக் கொண்டனர்.
‘அம்மா வை-பை’ வசதியை எப்படி பயன்படுத்துவது என்ற விவரம் வருமாறு:-
ஆண்டிராய்டு செல்போன் வைத்திருப்பவர்கள் உழைப்பாளர் சிலை பகுதியில் சென்றதும் அவர்களது செல்போன் ‘வை-பை’ ஆன் செய்ததும் பல நெட்ஒர்க் சேவைகளை காட்டும். அதில் ‘அம்மா வை-பை’ என்ற நெட் ஒர்க்கை இணைப்பில் எடுத்துக் கொண்டால் உள் நுழையும் பக்கம் காண்பிக்கும். அதை கிளிக் செய்து திறந்ததும் பதிவு செய்யும் பக்கம் வரும்.
அதில் செல்போன் எண் மற்றும் இ.மெயில் முகவரியை பதிவு செய்ததும் எஸ்.எம்.எஸ். மூலம் ஓ.டி.பி. எண் வரும். அந்த ஓ.டி.பி. எண்ணை பதிவு செய்ததும் ‘வை-பை’ இணைப்பு கிடைத்து விடும்.
அதன்பிறகு கூகுள், வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இங்கு ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் மட்டுமே ‘வை-பை’ இலவசமாக கிடைக்கும். 20 நிமிடம் முடிந்ததும் தானாகவே இணைய தள இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும்.
தொடர்ந்து கட்டணம் செலுத்தும் பக்கம் செல்போனில் தோன்றும். அதில் 1 மணி நேரம், 2 மணி நேரம் பேக்கேஜ் காண்பிக்கும். அதில் தேவையான பேக் கேஜ்ஜை தேர்வு செய்து கொள்ளலாம். அதற்கு ரூ.10, ரூ.20 என்ற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும்.
தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு துணை போகும் அரசு... அன்புமணி கண்டனம்!!!
- தமிழகத்தின் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் ரூ. 10 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில்.
உயர்த்தப்பட்டுள்ள கல்விக்கட்டணம்
- ரூ.5000 முதல் ரூ.40,000 வரை கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கூட வெளியிடாமல், பெற்றோரை மிரட்டி, கட்டணங்களை எந்தக் கணக்கிலும் வராமல் வசூலிக்கும் பணியில் பள்ளிகள் ஈடுபட்டிருக்கின்றன. கிராமப்புறங்களில் உள்ள சாதாரண பள்ளிகளில் கல்விக் கட்டணக் கொள்ளை ஓரளவு குறைவாக உள்ள நிலையில், நகர்ப்புற பகுதிகளில் உள்ள பெயர் பெற்ற பள்ளிகளில் தான் கட்டணக் கொள்ளை மிக அதிகமாக உள்ளது. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகரங்கள் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள பள்ளிகளில் மழலையர் வகுப்புக்கு ரூ.40,000 முதல் ரூ.60000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு கட்டணத்துடன் ஒப்பிடும்போது ரூ.10,000 வரை அதிகம். மேல்நிலை வகுப்புகளுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
3 மடங்கு அதிக கட்டணம்
தமிழக அரசின் கல்விக் கட்டணக் குழு நிர்ணயித்த கட்டண விகிதங்களின்படி தமிழகத்தில் உள்ள வெகுசில பள்ளிகளுக்கு மட்டும் தான் ரூ.50,000 அளவுக்கு கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள் அதைவிட 3 மடங்கு அளவுக்கு கட்டணம் வசூலிக்கின்றன. தனியார் பள்ளிகள் அரசுக்குத் தெரியாமல் கட்டணக் கொள்ளையை நடத்தவில்லை. ஆட்சியாளர்களின் முழு ஒத்துழைப்புடன் தான் கட்டணக் கொள்ளையை அரங்கேற்றுகின்றன. தமிழக அரசே கட்டணக் கொள்ளைக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது என்பது தான் கொடுமையிலும் கொடுமை ஆகும். - இதனை கண்டுகொள்ளாமல் தமிழக அரசு மெத்தனமாக இருக்கும். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்றும் அன்புமணி கூறியுள்ளார்..
- தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : தமிழ்நாட்டில் 2018-19 ஆம் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே கல்விக் கட்டணக் கொள்ளை தொடங்கி விட்டது. எந்த விதிகளுக்கும் உட்படாமல் சில பள்ளிகளில் ஆண்டுக் கல்விக்கட்டணம் ரூ.40,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கல்விக்கட்டண கொள்ளையால் ஏழைகள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதைத் தடுக்க வேண்டிய தமிழக அரசு பள்ளிகளின் சுரண்டலுக்கு துணை போகிறது.
கடைசியாக 2014ல் கட்டண நிர்ணயம்
தமிழகத்தில் சுமார் 10,000 தனியார் பள்ளிகள் உள்ள நிலையில், எந்த ஒரு பள்ளிக்கும் முறைப்படியாக கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை என்பது தான் உண்மை. ஒவ்வொரு பள்ளிக்கும் மூன்றாண்டுக்கு ஒரு முறை புதியக் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். பெரும்பாலான பள்ளிகளுக்கு கடைசியாக 2014-ஆம் ஆண்டில் தான் கல்விக்கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டன. அவை 2016-17ஆம் ஆண்டுடன் காலாவதியாகிவிட்டன. சில பள்ளிகளுக்கு மட்டும் 2017-18 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை
கட்டண நிர்ணயக்குழுவின் தலைவராக இருந்த நீதிபதி சிங்காரவேலு கடந்த 2015-ஆம் ஆண்டு ஓய்வு பெற்று விட்ட நிலையில் அவருக்குப் பதிலாக புதிய தலைவரை உடனடியாக நியமித்து, அடுத்து வரும் ஆண்டுகளுக்கான கட்டணங்களை நிர்ணயித்திருக்க வேண்டும். ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் திட்டமிட்டே கட்டண நிர்ணயக்குழுவின் தலைவர் பதவிக்கு நீதிபதி மாசிலாமணியை ஒன்றரை ஆண்டுகள் தாமதமாக 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தான் நியமித்தனர். ஆனால், புதிய தலைவர் பொறுப்பேற்று ஓராண்டாகி விட்ட நிலையில் இதுவரை ஆக்கப்பூர்வமாக எதையும் சாதிக்கவில்லை..உச்சத்தில் கல்விக் கட்டண கொள்ளை
இதனால் தமிழகத்தில் எந்தப் பள்ளிக்கும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டண விகிதம் நடைமுறையில் இல்லை. அதுமட்டுமின்றி கல்விக்கட்டணக் குழு கடந்த 3 ஆண்டுகளாகவே செயல்படாமல் முடங்கிக் கிடப்பதால் தனியார் பள்ளிகள் வசூலிப்பது தான் கட்டணம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கட்டணக் கொள்ளை உச்சத்தை அடைந்துள்ளது. அதுமட்டுமின்றி, புதிய கல்வியாண்டில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாகவே முழுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று பள்ளிகள் கட்டாயப்படுத்துவதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வட்டிக்கு கடன் வாங்கி செலுத்தும் நிலை உள்ளது. முழுக் கட்டணத்தையும் ஒரே நேரத்தில் செலுத்தும்படி கட்டாயப்படுத்தக் கூடாது; பருவ வாரியாகவோ, மாதவாரியாகவோ கட்டணத்தை வசூலிக்கலாம் என்று விதிகளில் கூறப்பட்டிருக்கும் போதிலும் அதை எந்த தனியார் பள்ளிகளும் பின்பற்றுவதில்லை.மணல் கொள்ளை போல
தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணக் கொள்ளையை கட்டுப்படுத்தும் பெரும் பொறுப்பு அரசுக்கு தான் உள்ளது. ஆனால், மணல் கொள்ளைக்கு அடுத்தப்படியாக தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை கண்டு கொள்ளாமல் இருப்பதன் மூலம் தான் ஆட்சியாளர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது என்பதால், அவர்கள் கட்டணக் கொள்ளையின் பங்குதாரர்களாக மாறி விடுகின்றனர். தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்ட இரு வழிகள் தான் உள்ளன.அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
முதலாவது கல்வியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்குவது. அதன்படி தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் அரசே செலுத்தலாம் என்பது தான் பா.ம.க.வின் கொள்கை ஆகும். இரண்டாவது ஒவ்வொரு பள்ளிக்கும் கட்டண நிர்ணயக்குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை அதற்காக கல்வித்துறையால் நிர்வகிக்கப்படும் வங்கிக் கணக்கில் மாணவர்களை செலுத்த வைத்து, அதை பள்ளிகளின் கணக்குக்கு மாற்றுவது. இதன்மூலம் மாணவர்களிடம் பள்ளி நிர்வாகங்கள் மிரட்டிக் கட்டணம் வசூலிக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இந்த இரண்டில் ஒரு முறையை நடப்பாண்டிலிருந்து பின்பற்றி கல்விக்கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டும். இதை செய்ய அரசு தவறுமானால் மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
இலவச கல்வி திட்டத்தில் படிக்க ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு!!!
இலவச கல்வி திட்டத்தில் சேர்ந்து இளங்கலை பட்டப் படிப்பு படிக்க ஏழை மாணவர் கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் இராம.சீனுவாசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஏழை மாணவர்கள் இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் கடந்த 2010 முதல் சென்னை பல்கலைக்கழக இலவச கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வருகிற கல்வி ஆண்டில் (2018-19) சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற தனியார் சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருப்பவை) சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், விவசாயம் மற்றும் இதர சிறு வேலை செய்யும் பெற்றோரின் பிள்ளைகள், குடும்பத்தில் பட்டப் படிப்புக்கு வரும் முதல்தலை முறையைச் சேர்ந்தவர்கள், கைம்பெண், கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் பிள்ளை கள் ஆகியோருக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப் படும். மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
இலவச கல்வி திட்டத்தில் சேர்ந்து படிப்பதற்கான விண்ணப்பத்தையும் விவரங்களை யும் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.unom. ac.in) இருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அரசுப்பள்ளிக்கு கணினி மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கு உதவி.....!
கடலூர் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் முன்னாள் மாணவர்கள் சார்பில் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
கடலூர் முதுநகர் சான்றோர்பாளையத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 1952-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் சராசரியாக 750 பேர் வரை படித்து வந்தனர். கடந்த 20 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த நிலை, தற்போது 149 மாணவர்கள் என்ற அளவுக்கு சுருங்கி விட்டது.
எனவே, இந்தப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 40 பேர் ஒன்றிணைந்து மாணவர் சேர்க்கைக்காக வெள்ளிக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடத்தினர். "நாங்களும் இந்தப் பள்ளியில் படித்து உயர்ந்தவர்களே' என்ற கோஷத்துடன் அந்தப் பகுதியில் உள்ள பெற்றோர்களிடம் தங்களது பிள்ளைகளை அரசு நடுநிலைப் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தினர். இதன்படி ஒரே நாளில் 15 மாணவர்களையும் சேர்த்தனர். அரசுப் பள்ளியில் சேருபவர்களுக்கு கூடுதலாக அரசு சலுகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
பேரணியில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜுலியா மேரி, கல்வி மேற்பார்வையாளர் சிவராமன், ஆசிரியைகள், சமூக ஆர்வலர் ரோஜா, பாரதி, காந்திமதி, உமா மகேஷ்வரி, யோகேஷ்வரி, வழக்குரைஞர் லெனின் ஆகியோர் கலந்துகொண்டனர். கணினி வழிக் கல்வி, தொழில்நுட்பக் கல்விக்கு உதவி புரிவதாக முன்னாள் மாணவர்கள் தெரிவித்ததாக பள்ளி ஆசிரியர்கள் கூறினர்.
Friday, 6 April 2018
கணினி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு!!!
கணினி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பதாக அறிவிப்பு...
கோவை: பிளஸ்1 கணினி அறிவியல் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கப்போவதாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து மாநில துணை ஒருங்கிணைப்பாளர் கலைவாணன் கோவையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: 11ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் இயற்பியல், வேதியியல் போன்ற 70 மதிப்பெண் கொண்ட பாடங்களை திருத்துவதற்கு ஒரு வேளைக்கு 10 விடைத்தாள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அதே 70 மதிப்பெண்கள் கொண்ட கணினி அறிவியல் பாடத்திற்கு ஒரு வேளைக்கு 15 விடைத்தாள் வழங்க ஒரு தலைப்பட்சமாக உத்தரவிடப்பட்டுள்ளது.
இது கணினி ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இயற்பியல், வேதியியல் போன்று கணினி அறிவியல் விடைத்தாள் திருத்துவதற்கு, ஒரு வேளைக்கு 10 விடைத்தாள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கத்தலைவர் செல்வக்குமார் தலைமையிலான நிர்வாகிகள் கடந்த மாதம் 22ம் தேதி அரசுத்தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்திராதேவி நேரில் சந்தித்து தெரிவிக்கப்பட்டது. எங்கள் கோரிக்கை ஏற்காதபட்சத்தில் தமிழகம் முழுவதும் 11ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் கணினியில் மதிப்ெபண் பதிவேற்றும் பணி ஆகியவற்றை புறக்கணிப்போம். இதுதொடர்பாக தேர்வுத்துைறக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது கணினி ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இயற்பியல், வேதியியல் போன்று கணினி அறிவியல் விடைத்தாள் திருத்துவதற்கு, ஒரு வேளைக்கு 10 விடைத்தாள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கத்தலைவர் செல்வக்குமார் தலைமையிலான நிர்வாகிகள் கடந்த மாதம் 22ம் தேதி அரசுத்தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்திராதேவி நேரில் சந்தித்து தெரிவிக்கப்பட்டது. எங்கள் கோரிக்கை ஏற்காதபட்சத்தில் தமிழகம் முழுவதும் 11ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் கணினியில் மதிப்ெபண் பதிவேற்றும் பணி ஆகியவற்றை புறக்கணிப்போம். இதுதொடர்பாக தேர்வுத்துைறக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசுப்பள்ளியை காக்கும் ஆசிரியர்கள்!!சில தனியார் பள்ளிகளுக்கு அங்கிகாரம் பல அரசுப்பள்ளிகளின் மூடு விழா?? அரசு என்ன தான் செய்கின்றது?
➠❄கணினி கல்வியின் புதுமை❄➠ |
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கணினிப் பயன்பாடு எட்டாக்கனியாகவே இருந்தது. அந்த எட்டாக் கனியை எட்டும் கனியாக மாற்றி இருக்கிறார்கள். ஆசிரியர்கள்!அரசு அல்ல!
"இதுவரை, தமிழ்நாட்டில் எந்த அரசு நடுநிலைப் பள்ளியிலும் கம்யூட்டர் ஆய்வக வசதி என்பது இல்லை. (ஓரிரு கம்யூட்டர்கள் இருக்கக்கூடிய பள்ளிகள் இருக்கின்றன.) ஆங்கில வழியில் படிக்கக் கூடிய பணம் படைத்தவர்களின் பிள்ளைகள் யுகேஜி முடிப்பதற்குள், கணினி போன்ற அத்தியாவசிய தொழில்நுட்ப அறிவைப்பெறத் தொடங்கி விடுகிறார்கள். அரசு நடுநிலைப் பள்ளிகளில் மூன்று மடிக்கணினி மற்றும் கணினி தரப்பட்டு கற்றல் கற்பித்தலுக்கு பயன்படுத்துங்கள் என்று அரசே சொல்லும். ஆனால், பல பள்ளிகள் முறையாக பயன்படுத்தப்படுகின்றனவா என்பது பெரும் கேள்விக் குறி."
தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி போன்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கக்கூடிய ஆசிரியர்களின் ஈடுபாடு குறிப்பிடத்தக்கது..
23 கம்யூட்டர்கள்... ஏ.சி. வகுப்பறை... இன்வெட்டர்... மக்களைக் கவரும் கிராமத்து அரசுப் பள்ளி..
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கணினிப் பயன்பாடு எட்டாக்கனியாகவே இருந்தது.
அந்த எட்டாக் கனியை எட்டும் கனியாக மாற்றி இருக்கிறார் கடலூர் மாவட்டம் கீழப்பாலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் ப.வசந்தன்.
சர்வதேச தரத்தில் ஒரு அரசு பள்ளி... தலைமை ஆசிரியர் சொல்லும் சக்சஸ் ஃபார்முலா!
”மதுரை மாவட்ட ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி"
நெல்லை அருகேயுள்ள பாலாமடை அரசு பள்ளி..
கணினி செயலி மூலம் கற்பித்தல்: மதகரம் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியரின் புதிய முயற்சி
திருவாரூர் அருகேயுள்ள மதகரம் அரசு தொடக்கப் பள்ளி.
கணினிவழி கல்விப் புரட்சியில் அரசு பள்ளி ஆசிரியர்.
கொத்தவாசல் அரசு பள்ளியில் நவீன கணினி ஆய்வகம்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.
அரசுப்பள்ளியை கணினி பள்ளியாக மாற்றிய ஆசிரியர்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அடுத்த மேலூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி.
ரோட்டரி கிளப் மூலம் புரொஜக்டரை நன்கொடையாகப் பெற்று அதன்மூலம் பாடங்களை திரையிட்டுக் காண்பிக்கிறோம்.
3 மாணவர்களுடன் மூடு விழா காணும் நிலையில் இருந்த அரசுப் பள்ளியை தரம் உயர்த்திய ஆசிரியர்!
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அரசு பள்ளிகளை தேடி வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பள்ளிகளின் தரம் உயர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் ஆனால் தற்போது மாணவர் எண்ணிக்கை குறைவால் பல பள்ளிகள் மூடு விழா காண உள்ளது.
அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவு!!
அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பெருமளவு சரிந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில், மாணவர் எண்ணிக்கை, 1.40 லட்சம் குறைந்திருப்பது, கல்வித்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நடுநிலைப்பள்ளிகள்மூடும் அபாயம் !
தொடக்கல்வியில் மட்டும் அல்ல மாணவர் சேர்க்கை சரிகின்ற கவலை ஒரு புரம் இருக்க நடுநிலைப் பள்ளிகளிலும் இதே நிலை தான் காணப்படுகிறது.
மொத்தமுள்ள 9587 அரசு நடுநிலைப் பள்ளிகளில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 3378 பள்ளிகளில் மட்டுமே 80&க்கும் அதிகமான மாணவர்கள் உள்ளனர். மீதமுள்ள 6209 பள்ளிகளில் 80-க்கும் குறைவானவர்களே படிக்கின்றனர். அதாவது இப்பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் சராசரியாக 10 மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர்.
மொத்தமுள்ள 9587 அரசு நடுநிலைப் பள்ளிகளில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 3378 பள்ளிகளில் மட்டுமே 80&க்கும் அதிகமான மாணவர்கள் உள்ளனர். மீதமுள்ள 6209 பள்ளிகளில் 80-க்கும் குறைவானவர்களே படிக்கின்றனர். அதாவது இப்பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் சராசரியாக 10 மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர்.
"மேலும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் மாற்றப்பட உள்ளனர்"
இதற்கு மிக முக்கிய காரணம் தனியார் பள்ளிகள் தொடங்க அரசே வழங்கும் அங்கிகாரமும் தனியாரக்கு பள்ளிக்கும் அரசுப்பள்ளிகளுக்கும் தனித்தனி கலைத்திட்டம் ஏன் ? அரசு வழங்குகின்றது 5பாடங்களுக்கு மேல் கட்டுப்பாடு அற்ற கல்விக்கு அங்கிகாரம் வழங்குவது தான் முக்கிய காரணம்.
""தனியார் பள்ளியின் கலைத்திட்டம்"" |
இந்நிலையே தொடர்ந்தால் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை விரைவில் மூடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது அரசு கருத்தில் கொண்டு சமமாக கல்வி மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும் .
இந்த நிலை மாற மத்திய அரசு கொடுத்த கோடி நிதியை முறையாக பயன்படுத்தி அரசுப்பள்ளியை மாண்புமிகு தமிழக அரசு காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'ஆசிரியர் பணி என்பது அறப் பணி; அதற்கு உன்னை அர்ப்பணி'
திருவெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச்செயலாளர் ,
9626545446
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள்சங்கம்655/2014.
வகுப்பறையில் மது போதையில் படுத்து உருண்ட ஆசிரியர்..!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, மேலப்பூவந்தியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் மது அருந்திவிட்டு பள்ளிக்குவந்து போதையில் உருண்ட சம்பவம் அப்பகுதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, மேலப்பூவந்தியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. அங்கு சுமார் 220 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் 13 ஆசிரியர்கள் பணியாற்றிவரும் இப்பள்ளியில் சிவகுருநாதன் என்ற ஆசிரியர் பொறுப்பு தலைமை ஆசிரியராக உள்ளார்.
இந்நிலையில், இன்று காலை பள்ளிக்கு முழு போதையில் வந்த விளையாட்டு ஆசிரியர் ரஜினிகாந்த் வகுப்பறையில் படுத்து உருண்டபடியே இருந்தார். இதை கண்டு மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, மேலப்பூவந்தியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. அங்கு சுமார் 220 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் 13 ஆசிரியர்கள் பணியாற்றிவரும் இப்பள்ளியில் சிவகுருநாதன் என்ற ஆசிரியர் பொறுப்பு தலைமை ஆசிரியராக உள்ளார்.
இந்நிலையில், இன்று காலை பள்ளிக்கு முழு போதையில் வந்த விளையாட்டு ஆசிரியர் ரஜினிகாந்த் வகுப்பறையில் படுத்து உருண்டபடியே இருந்தார். இதை கண்டு மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்
2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள்
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக
இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு சரிந்து வருகிறது.
மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாதால் ஓரிரு ஆசிரியர்களை வைத்து கொண்டு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 31ம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 84 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் அதிகபட்சமாக 696 அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வரும் கல்வி ஆண்டிற்குள் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு சேர்த்து காலியாக உள்ள ஆசிரியர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 26 மாவட்டங்களுக்கு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில்,
அரியலூர் 61,
கோவை 3,
கடலூர்82,
தர்மபுரி11,
ஈரோடு20,
காஞ்சிபுரம்33,
கரூர்3,
கிருஷ்ணகிரி271,
மதுரை2,
நாகப்பட்டினம்145,
பெரம்பலூர்19,
புதுக்கோட்டை62,
ராமநாதபுரம்8,
சேலம்12,
சிவகங்கை4,
தஞ்சாவூர்33,
நீலகிரி76,
தூத்துக்குடி2,
திருப்பூர்11,
திருவள்ளூர்23,
திருவண்ணாமலை381,
திருவாரூர்70,
திருச்சி3,
வேலூர்335,
விழுப்புரம்383,
விருதுநகர்11
என மொத்தம் 2 ஆயிரத்து 84 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
அதில் தமிழ்பாடத்திற்கு 270 பணியிடங்களும், ஆங்கிலத்திற்கு 228 பணியிடங்களும்,
கணிதத்திற்கு 436 பணியிடங்களும்,
அறிவியல் பாடத்திற்கு 696 பணியிடங்களும்,
சமூக அறிவியல் பாடத்திற்கு 454 பணியிடங்களும் நிரப்பபட உள்ளது.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்
ஜியோவின் அடுத்த அட்டாக்: ரூ. 251 க்கு 102 ஜிபி டேட்டா!
இந்த போட்டியையை முன்னிட்டு தான் ஜியோ கிரிக்கெட் ஆஃபர் என்ற பெயரில் புதிய ரீசார்ஜ் திட்டத்தையும் அறிமுகப்படுத்தவுள்ளது.
4ஜி நெட்வொர்க் நிறுவனமான ஜியோ, வாடிக்கையாளர்களுக்கு அடுத்த அறிவிப்பாக ரூ. 251 க்கு ரீசார்ஜ் செய்தால், 102 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
டெலிகாம் சந்தையில், தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டு, மற்ற நிறுவனங்களுக்குய் கடுப்போட்டியாக மாறியுள்ள ஜியோ நிறுவனம் அடுத்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் தான் ஜியோவின் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து 1 வருடம் இலவச சேவையை வழங்குவதாக அறிவித்து அனைவரையும் திகைத்து வைத்தது.
தற்போது, மற்றொரு அறிவிப்பும் வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், ஜியோ நிறுவனம், ” ஜியோ கிரிக்கெட் பெளே அலாங்’ மற்றும் “ஜியோ தண் தானா லைவ்” என இரண்டு பரிசுப் போட்டியை அறிவித்துள்ளது.
இந்த போட்டியில், பங்குப்பெற்று வெற்றி அடையும் வாடிக்கையாளர்களுக்கு கார், வீடு, கிஃபுட் வவுச்சர்கள், பரிசுத் தொகை என ஏகப்பட்ட பரிசுகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த போட்டியையை முன்னிட்டு தான் ஜியோ கிரிக்கெட் ஆஃபர் என்ற பெயரில் புதிய ரீசார்ஜ் திட்டத்தையும் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த திட்டத்தில் படி, ரூ. 251 க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 51 நாட்கள் செயல்படும் 102 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அத்துடன், மை ஜியோ ஆப் வாயிலாக நடைபெற உள்ள பரிசு திருவிழாவில் 11 மொழிகளில் வழங்கப்பட உள்ளது.
சிறப்பு விருந்தினர்களாக, ஷில்பா ஷிண்டே, அலி ஆஸ்கார், சுகந்த மிஸ்ரா, சுரேஷ் மேனன், பரேஷ் கணத்ரா, ஷிபானி டண்டேகர் மற்றும் அர்ச்சனா விஜய். கபில்தேவ் மற்றும் வீரேந்திர சேவாக் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்
வேலை... வேலை... வேலை... பட்டதாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 82 சிறப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 82
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Personal Assistant to the Honorable Judges - 71
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500 + இதர சலுகைகள்
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500 + இதர சலுகைகள்
பணி: Personal Assistant (to the Registrars) - 10
சம்பளம்: மாதம் ரூ.36,400 - 1,715,700 + இதர சலுகைகள்
சம்பளம்: மாதம் ரூ.36,400 - 1,715,700 + இதர சலுகைகள்
பணி: Personal Clerk (to the Deputy Registrars) - 01
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500 + இதர சலுகைகள்
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500 + இதர சலுகைகள்
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம், ஆங்கிலம் மற்றும் தமிழில் சுருக்கெழுத்து, தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மற்றும் கணினி துறையில் சான்றிதழ் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிசி, எம்பிசி பிரிவினருக்கு ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை சென்னையில் மாற்றத்தக்க வகையில் Registrar General, High Court of Madras என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்டி, எஸ்டி பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறியஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
முதன்முறையாக தேசியத் தரவரிசையில் 22 தமிழகப் பல்கலைக்கழகங்கள்.....
மத்திய மனிதவளத் துறை, ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவில் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுவருகிறது. இந்த ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன
கல்வி நிறுவனங்கள் | ரேங்க் |
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி | 2 |
அண்ணா பல்கலைக்கழகம் | 10 |
அமிர்தா வித்யாபீடம் | 15 |
பாரதியார் பல்கலைக்கழகம் | 20 |
வி.ஐ.டி | 24 |
சென்னைப் பல்கலைக்கழகம் | 29 |
திருச்சி நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி | 31 |
பாரத் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹையர் எஜுகேஷன் & ரிசர்ச் | 35 |
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் | 40 |
அழகப்பா பல்கலைக்கழகம் | 43 |
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் | 54 |
ஶ்ரீராமச்சந்திரா நிகர்நிலை மருத்துவக் கல்லூரி | 62 |
எஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் | 63 |
பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி | 64 |
சத்யபாபா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் | 68 |
எஸ்.எஸ்.என் கல்லூரி | 73 |
பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி | 75 |
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் | 81 |
தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கல்லூரி | 92 |
பாரதிதாசன் பல்கலைக்கழகம் | 94 |
தியாகராஜர் தொழில்நுட்பக் கல்லூரி | 95 |
பி.எஸ்.ரஹ்மான் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரி | 101 |
பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி | 102 |
கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி | 112 |
பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் தமிழ்நாட்டைச் சார்ந்த 26 பல்கலைக்கழகங்களும், பொறியியல் பிரிவில் 29 கல்வி நிறுவனங்களும், கலைக்கல்லூரி பிரிவில் 57 கல்வி நிறுவனங்களும், மேலாண்மைப் பிரிவில் 11 கல்வி நிறுவனங்களும், பார்மசி பிரிவில் 9 கல்லூரிகளும், மருத்துவக் கல்வியில் 5 கல்லூரிகள் எனப் பட்டியலில் அதிக இடத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரிகளே இடம்பிடித்துள்ளன.
சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, பொறியியல் பிரிவில் முதல் இடத்தையும், ஒட்டுமொத்தப் பிரிவில் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறது. பல்கலைக்கழக வரிசையில அண்ணா பல்கலைக்கழகம் 4-வது இடத்தையும், பொறியியல் பிரிவில் 8-வது இடத்தையும், ஒட்டுமொத்தப் பிரிவில் 10-வது இடத்தையும், மேலாண்மை படிப்பில் 28-வது இடத்தையும், கட்டடக் கலைப் படிப்பில் 6-வது இடத்தையும் பிடித்திருக்கிறது.
கோவையில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகமான அமிர்தா வித்யாபீடம், பல்கலைக்கழகங்கள் வரிசையில் 8-வது இடத்தையும், ஒட்டுமொத்தப் பிரிவில் 15-வது இடத்தையும் பெற்றிருக்கிறது. பாரதியார் பல்கலைக்கழகம் பல்கலைக்கழக தரவரிசையில் 13-வது இடத்தையும், ஒட்டுமொத்த வரிசையில் 20-வது இடத்தையும் பெற்றுள்ளது.
1, 2ம் வகுப்புகளுக்கு கணினியில் தேர்வு!!!
ராமநாதபுரம், அரசுப்பள்ளி முதல், 2ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் கையடக்க கணினியில் தேர்வு நடத்தப்படவுள்ளது.தமிழக அரசின் புதிய கல்வித்திட்டத்தின் கீழ்,
ஜனவரி முதல் 13 மாவட்டங்களை சேர்ந்த 173 அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஒன்று, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கையடக்க கணினியை பயன்படுத்தி கற்பித்தல், தேர்வுக்கானபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இந்த புதிய முறையில் பயின்ற மாணவர்களுக்கு ஏப்.,9, 10, 11, 12 தேதிகளில் ஆண்டுத் தேர்வு நடக்கிறது.இதுவரை, 40 மதிப்பெண்கள் கல்வி இணை செயல்பாடுகளுக்கும், 60 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் 40 மதிப்பெண்களுக்கு மட்டுமே எழுத்து தேர்வு நடத்தப்படும்.
20 மதிப்பெண்களுக்கு கையடக்க கணினி வழியாக மாணவர்கள் விடையளிக்க வேண்டும்.பதில்கள் இணையதள உதவியுடன் திருத்தப்படும். தமிழ், ஆங்கிலம், கணக்கு, சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய நான்குபாடங்களுக்கும் இதுபோல், புதிய முறையில் தேர்வு நடத்தஉள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
Thursday, 5 April 2018
மே 16ல் வெளியாகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு ரிசல்ட்!
பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு.. மே 16ல் வெளியாகிறது ரிசல்ட்!
சென்னை: ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வந்த, பிளஸ் 2 தேர்வு, இன்றுடன் நிறைவு பெறுகின்றன. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கியது. தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 66,934 மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை எழுதிவருகின்றனர்.
முதல் நாளில் நடைபெற்ற மொழித்தாள் தேர்வுகளை தொடர்ந்து, முக்கிய பாட தேர்வு, குறிப்பிட்ட இடைவெளியில் நடந்து முடிந்தன. கணிதம், அறிவியல், பொருளியல், வணிகவியல் உட்பட, அனைத்து பாடப்பிரிவு மாணவர்களுக்கும், பாட வாரியாக தேர்வுகள் நடந்தன. பெரும்பாலான பாடங்களின் வினாத்தாள் எளிதாக இருந்தன. இந்நிலையில், கடந்த ஒன்றரை மாதமாக நடந்து வந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இறுதி நாளான இன்று கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாச்சாரம், கணினி அறிவியில், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி வரும் 9ஆம் தேதி தொடங்க உள்ளன. ஏற்கனவே அறிவித்தபடி தேர்வு முடிவுகள் மே 16-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களின் நியமனங்களுக்கு அரசு ஒப்புதல்: பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியீடு
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களின் நியமனங்களுக்கு அரசு ஒப்புதல்: பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியீடு
அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள ஓர் அரசாணையில் (அரசாணை எண் 64, நாள்: 3.4.2018) கூறப்பட்டி ருப்பதாவது:அரசு நிதியுதவி பெறும் உயர் நிலைப்பள்ளிகள்மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை (இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், ஆய்வக உதவியாளர்) நிரப்புவது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநருக்கு வழங்கப்பட்ட உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 15.3.2016-ல் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டபடி, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அனுமதியளிக்கப்பட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களின் நியமனங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்பு தல் அளிக்கவேண்டும்.
ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்களை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளின்படி, மதிப்பீடு செய்து மிகுதியான பணியிடங்கள் திரும்பப் பெற வேண்டும். அந்த பணியிடங்களில் தற்போது பணி புரிவோர் ஓய்வுபெற்ற பின்னர் அந்த பணியிடங்கள் ரத்துசெய்யப்பட வேண்டும்.
நூலகர், நூலக உதவியாளர், தோட்டக்காரர், தண்ணீர் கொண்டு வருபவர் உள்ளிட்ட பணியிடங்கள் அரசு பள்ளி களுக்கே ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உள்ள மேற்கண்ட பணியிடங்களைத் திரும்ப எடுத்துக்கொள்வதுடன் தற்போது அந்த பணியிடங்களில் பணி புரிந்து வருவோர் ஓய்வுபெற்ற பின்னர் அல்லது பதவி உயர்வு பெற்ற பின்னர், அப் பணியிடங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புதலைத் திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அந்த அரசாணை யில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)
POPULAR POSTS
-
தமிழக அரசு நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிக்கு ஓர் கணினி பயிற்றுநர் பணி நியமனம் செய்ய உள்ளது. தமிழக அரசு வருகின்ற கல்வியாண்டு ஜீன் முதல் 6992...
-
கூகுளின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தொடங்கி உலகின் பல டெக் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் தமிழர்கள் கோலோச்சுகிறார்கள். சென்னை டை...
-
60,000 கணினி ஆசிரியர்களும் ஒரே மாதிரியான (subject)தலைப்புகளில் ஈமெயில் செய்வோம்.. Subject: கலைஞரின் கனவு திட்டமான கணினி அறிவியல் பாடத்தை அரச...
-
சமச்சீர் கல்வியில் கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிக்கு கொண்டுவர அரசுப்பள்ளி மாணவர்கள் ,60000வேலையில்லா கணினி ஆசிரியர...