மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Saturday 14 April 2018

சரியும் மாணவர் சேர்க்கை குறையும் அரசுப்பள்ளிகள்!

 
➠❄கணினி கல்வியின் புதுமை❄➠

அரசுப்பள்ளியில்
இரண்டு ஆண்டுகளில், மாணவர் எண்ணிக்கை, 1.40 லட்சம் குறைந்திருப்பது, கல்வித்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.


பெற்றோர் தயக்கம்
தமிழக அரசின் தொடக்கப் பள்ளிகளில், ஆண்டுதோறும், மாணவர் சேர்க்கை சரிந்த வண்ணம் உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், ஓராசிரியர் அல்லது இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும், அடிக்கடி விடுமுறை எடுப்பதும், அலுவலக பணிகளை கவனிப்பதுமாக உள்ளனர்.இந்த பிரச்னைகளால், அரசின் தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க, பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், மாணவர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் குறைகிறது.
இரண்டு ஆண்டுகளில், புதிய மாணவர்கள் சேர்க்கையால், எண்ணிக்கை உயர்வதற்கு பதிலாக, ஏற்கனவே இருந்த மாணவர்களில், 1.40 லட்சம் பேர் வெளியேறியிருப்பது தெரிய வந்துள்ளது.தொடக்கப் பள்ளிகளில், எத்தனை மாணவர்களுக்கு, எத்தனை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என, கணக்கெடுக்கும்போது, இந்த உண்மைகள், அரசுக்கு தெரிய வந்துள்ளன. 
இதைத் தொடர்ந்து, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர்; ஒரு பள்ளிக்கு, குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்கள் என்ற விதிகளின்படி, நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
எதிர்ப்பு
அதன்படி, 4,400 ஆசிரியர்கள், உபரியாக உள்ளது கண்டறியப்பட்டு, அவர்களை, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு மாற்ற, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, எதிர்ப்பு கிளம்பிஉள்ளது.'மாணவர் எண்ணிக்கை குறைந்ததால், ஆசிரியர்களை இடமாற்றம் செய்வோம் என்பது, ஆரோக்கியமான நிலையை ஏற்படுத்தாது.'சரிந்த மாணவர் எண்ணிக்கையை மீட்கும் வகையில், தற்போதுள்ள ஆசிரியர்களை வைத்து, கூடுதல் பயிற்சி தருவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தேர்வுத்துறை கட்டுப்பாடு நீக்கம்!




➠❄கணினி கல்வியின் புதுமை❄➠

ஐகோர்ட்டில் உயர் கல்வி செயலர் ஆஜர்!!பி.எட் கல்வி தொடர்பாக!!


➠❄கணினி கல்வியின் புதுமை❄➠

இனி தனியார் பள்ளிகளுக்கு டாடா! பெற்றோர்கள் அரசுப்பள்ளிக்கு கணினி வழங்கி மாணவர் சேர்க்கை.!


➠❄கணினி கல்வியின் புதுமை❄➠

திருத்தணி: அரசு பள்ளிக்கு பீரோ, கணினி மற்றும் 20 வகையான பொருட்களை சீர்வரிசையாக கொடுத்து, 14 பெற்றோர், தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர்.திருத்தணி ஒன்றியம், பாகவதாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை ஊர்வலம் மற்றும் பேரணி நடந்தது.மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஞானசேகரன், திருத்தணி உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் பாபு, மோகன், பள்ளி தலைமை ஆசிரியர் ரவி ஆகியோர் பங்கேற்றனர்.கல்வி அதிகாரிகள் முன்னிலையில், நேற்று, 14 மாணவ -- மாணவியர், வரும் கல்வியாண்டில் சேர்க்கப்பட்டனர்.மாணவர்களின் பெற்றோர் பீரோ, கணினி, பிரின்டர், நாற்காலிகள், மேஜை, கடிகாரம் உட்பட, 20 வகையான பொருட்களை, சீர்வரிசையாக பள்ளிக்கு அளித்தனர்.ஆசிரியர்கள், புதிய மாணவர்களுக்கு மலர் மாலை அணிவித்து, வரவேற்றனர். சிலேட், புத்தகங்களையும் வழங்கினர்.இது தவிர, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஞானசேகரன், புதிய மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் வாங்குவதற்கு, 1,000 ரூபாயை, பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.உதவி தலைமை ஆசிரியர் ஏழுமலை உட்பட, கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தை நாடிய தமிழக மாணவர்கள்!


      ➠❄கணினி கல்வியின் புதுமை❄➠



தமிழகத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திடம் இருந்து பூமியின் நிழற்படங்களை கேட்டுள்ளனர்

தமிழகத்தை சேர்ந்த சென்னை பப்ளிக் ஸ்கூல் மாணவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திடம் பூமியின் மிக நுடப்பமான புகைப்படங்களை கேட்டுள்ளனர்.

இந்த புகைப்படங்களை புவி அறிவியல், பூகோளம் சம்பந்தமான நிகழ்வுகள் முதலியவற்றுக்கு பயன்படுத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

விண்வெளி சம்மந்தமான கண்காட்சி நடைபெற இருப்பதால் அந்தப் பள்ளியின் மாணவர்கள் அதற்கான ஏற்பாட்டை செய்து வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி நிலையத்திடம், அங்கிருந்து எடுக்கப்பட்ட பூமியின் பல்வேறு கோண புகைப்படங்களை கேட்டுள்ளனர்.

இந்த கண்காட்சி மிகவும் நுட்பமாகவும் மாணவர்களுக்கு அறிவியல் ரீதியாக பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்ளும் திறனை அதிகரிக்கும் என்றும் பள்ளியின் தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார்

ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட ஆசிரியர்கள்!!!




➠❄கணினி கல்வியின் புதுமை❄➠

விருத்தாசலம் அரசு பள்ளியில் தேர்வுத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆசிரியர்கள் மத்தியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உரை நிகழ்த்தினர். 

அப்போது யார் கருப்பு பேஜ் கொடுப்பது என்பதில் ஏற்பட்ட வாக்குவாதம் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதில் முடிவடைந்தது. இதனால் விடைத்தாள் திருத்தும் பணி அரை மணி நேரம் தாமதமாக தொடங்கியது. 

கோடை விடுமுறை எக்காரணத்தை கொண்டும் நீட்டிக்கப்படாது-கல்வி அமைச்சர் திட்டவட்டம்!!


➠❄கணினி கல்வியின் புதுமை❄➠
கோடையில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்படுமா?
சென்னை: கோடையில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்

கடந்த கோடை மிகவும் உக்கிரமாக இருந்ததால் வழக்கம் போல் ஏப்ரல் முழுவதும் இயங்கும் பள்ளிகளுக்கு 20 தேதியுடன் விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டது. அதுபோல் இந்த ஆண்டு வெப்பம் தகிக்கும் என்பதால் கோடையில் ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதியுடன் தேர்வுகளை முடித்துக் கொண்டு அனைத்து தனியார், அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

இதனால் கோடை விடுமுறை 44 நாட்கள் ஆனது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் தொடக்கத்திலேயே வெயில் சென்ட்சுரி அடிப்பதால் பள்ளி விடுமுறை மேலும் நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகம் நிலவியது

இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், அரசு பள்ளிகளில் மே 2 முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.
அன்றைய தினமே மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள் வழங்கப்படும். கோடை விடுமுறை எக்காரணத்தை கொண்டும் நீட்டிக்கப்படாது என்றார் அவர்

FLASH NEWS:பிளஸ் 2 வரைஇனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள்துவக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது..


➠❄கணினிகல்வியின்புதுமை❄➠


பிளஸ் 2 வரைஇனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள்துவக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய  அரசு  உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் ஒரேவிதமான கல்வித்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும்இடைநிலைக்கல்வி இயக்கம் ஆகியவற்றை இணைத்து, ஒருங்கிணைந்த கல்வி இயக்கமாக (சமந்த்ரா சிக்சா அபியான்) மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


தற்போதுள்ள தொடக்கப்பள்ளி, நடு நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளுக்கு பதில் ஒன்று முதல்பிளஸ் 2 வரை கொண்ட ஒரே பள்ளியாக துவக்கப்பட உள்ளது. இந்தபள்ளிகளில், எந்த வகுப்பிலும் மாணவர்களை சேர்க்கமுடியும்.இதற்காக, தமிழகத்தில் 413 ஊராட்சி ஒன்றியங்களில் மிகவும்பின் தங்கிய 75 ஒன்றியங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுபுதிய பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கானசாத்தியக்கூறுகள், பள்ளிகள் தேவைப்படும் இடம் குறித்தவிவரங்களை ஆய்வு செய்து, மே 5க்குள் விரிவான அறிக்கை தர, அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள், அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

புதிய கணினி பாடத்தில் கலக்குமா இல்லை கலங்கடிக்குமா? ??

ஓர் ஆசிரியர் மூன்று பாடபுத்தகம்! கணினி அறிவியல் பாடத்தில்
 கலக்குமா அரசு! இல்லை ஆசிரியர்களை,மாணவர்களை கலங்கடிக்குமா?

தமிழகத்தில்  5000க்கும் மேற்ப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகள்   இயங்கி வருகின்றன.அங்கு பணிபுரியும் மொத்த கணினி ஆசிரியர்கள் எண்ணிக்கை 1850 மட்டுமே  அதிர்ச்சியல்ல உண்மை!

தற்போது பிளஸ் ஒன் வகுப்பிற்கும்   பொதுத் தேர்வை அரசு அறிவத்துள்ளது.

புதிய பாடத்திலும் கணினி அறிவியல் பாடத்திற்கு மூன்று பாட புத்தகங்களை  வெளியுட்டுள்ளது தமிழக அரசு!

மற்ற பாடப்பிரிவில் இல்லாத தனி சிறப்பு என்னவென்றால்
வெறும் 1800 ஆசிரியர்களை வைத்துக் கொண்டு இதில்  பிளஸ் -1,பிளஸ் -2 மாணவர்களுக்கும்  பொதுத் தேர்வும் 3விதமான கணினி பாடபுத்தகங்களையும் அறிமுகம் செய்துள்ளது தற்போது. போதுமான ஆசிரியர்கள் இன்றி இதில் இந்த வருடம் பிளஸ் 1 மாணகளுக்கு கணினி தேர்வு கடினம் வேறு.
  புதிய பாடத்திட்டத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் இன்றி கலக்குவர்களா இல்லை ??கலங்குவார்களா?? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...

திரு வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச்செயலாளர் ,
9626545446,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்.பதிவு எண்:655/2014.

நிழல் விழாத நாள் : ராமேஸ்வரத்தில் மாணவர்கள் உற்சாகம்!!




➠❄கணினி கல்வியின் புதுமை❄➠

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நேற்று பகல் 12.13 அளவில் சூரியனில் இருந்து வரும் வெளிச்சம், ராமேஸ்வரம் கடலோர பகுதியில் மட்டும் செங்குத்தாக மண்ணில் விழும் என்பதால், பொருட்களின் நிழல் பூமியின் மீது விழாது என விஞ்ஞானிகளால் கணிக்கப்பட்டு இருந்தது. 

இதனை புதுரோடு அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பாத்திரங்களை கொண்டு செய்முறையாக செய்து பார்த்தனர். பாத்திரங்களின் நிழல், பூமியில் விழாதது கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். இதனை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்

பிளஸ்-1 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு சற்று கடினமாக இருந்தது- மாணவ-மாணவிகள் கருத்து...


➠❄கணினி கல்வியின் புதுமை❄➠

சென்னை:பிளஸ்-1 பொதுத்தேர்வில் நேற்று கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு நடைபெற்றது.
தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் சிலரிடம் தேர்வு குறித்து கேட்டதற்கு, ‘3 மதிப்பெண் கேள்விகளில் 3 வினாக்கள் பதில் அளிக்கும்படி இல்லை. அந்த கேள்விகள் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டவை. அவை அனைத்தும் சற்று கடினமாக இருந்தன. மற்ற அனைத்து வினாக்களும் எளிதாகத்தான் கேட்கப்பட்டிருந்தன’ என்றனர்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு மாணவர்களுக்கு நேற்றுடன் தேர்வுகள் முடிவடைந்தது. இதனால் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். நேற்று நடைபெற்ற தேர்வில் காப்பி அடித்ததாக திருச்சி மாவட்டத்தில் ஒரு மாணவர் பிடிபட்டுள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்

Friday 13 April 2018

very simple !!கணினி ஆசிரியர்கள் MemeS!!


➠❄கணினி கல்வியின் புதுமை❄➠

இடஒதுக்கீட்டில் எல்.கே.ஜி., அட்மிஷன்! வரும் 20ல் விண்ணப்பிக்கலாம்....

➠❄கணினி கல்வியின் புதுமை❄➠
மத்திய அரசின், 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர, வரும் 20ம் தேதி முதல், அனைத்து கல்வித்துறை அலுவலகங்களிலும், ஆன்லைன் முறையில்விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தெரிவித்தார்.
கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்கள் படிக்க, 25 சதவீத இடஒதுக்கீடு முறை, கடந்த 2013ல் கொண்டுவரப்பட்டது. இதன்படி, ஆண்டு வருமானம், 2 லட்சத்திற்குட்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கியோர், நலிவடைந்த பிரிவை சேர்ந்த குழந்தைகள், தனியார் பள்ளிகளில் இலவசமாக படிக்கலாம். இவர்களுக்கான கல்விக்கட்டணம், அரசே செலுத்தி வருகிறது.
கடந்தாண்டு முதல் இத்திட்டத்திற்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. வரும் கல்வியாண்டிற்கு, இலவச எல்.கே.ஜி., அட்மிஷன், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், வரும் 20 முதல் மே 18ம் தேதி வரை, விண்ணப்பிக்கலாம் என, கல்வித்துறை அறிவித்துள்ளது.இதில், தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள், மே 23ம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படவுள்ளது. அனைத்து கல்வி அலுவலகங்களிலும், பெற்றோர் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறுகையில், ''மத்திய அரசின், 25 சதவீத இடஒதுக்கீடு திட்டத்தில், சிறுபான்மையற்ற அனைத்து மெட்ரிக், சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளிலும் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆன்லைன் முறையில், பள்ளிகள் தேர்வு செய்யலாம். முதன்மை கல்வி அலுவலகம் உட்பட அனைத்து கல்வித்துறை அலுவலகங்கள், இ-சேவை மையங்களில், விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், மே 29ம் தேதிக்குள், தகுந்த ஆவணங்களுடன் உரிய பள்ளிக்கு நேரில் சென்று, அட்மிஷன் உறுதி செய்து கொள்ளலாம். இதுசார்ந்த புகார்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை நேரிலோ அல்லது, 0422 - 2391062 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்

"இலவச கணினி கல்வி- அரசுப்பள்ளியில் அற்புதக்கல்வி "-கல்வித்துறை தீவிர பிரசாரம்.



➠❄கணினி கல்வியின் புதுமை❄➠

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த சுற்றறிக்கை!




தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப்  பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், "தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் வரும்போது, தங்களது உடல்நிலை, குடும்ப சூழ்நிலை காரணமாகச் சம்பந்தப்பட்ட, தகுதியுள்ள ஆசிரியர்கள், தங்களுக்கான பதவி உயர்வை தற்காலிகமாக வேண்டாம் என்று கூறலாம். இதனால் மூன்று ஆண்டுகளுக்கு அவர்களுக்கு பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படும். அதேசமயம், ஒவ்வோர் ஆண்டு தயாரிக்கப்படும் முன்னுரிமைப் பட்டியலில் இவர்கள் பெயர் முதலாவதாக இருக்கும். அவர்களது பெயருக்கு அருகிலேயே மூன்று ஆண்டுகள் பதவி உயர்வு துறப்பு என எழுதி வைத்திருப்பார்கள். பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தும்போது, பதவி உயர்வு வேண்டாம் என்பவர்கள். கலந்தாய்வு நடைபெறும் இடத்திற்குச் சென்று 3 ஆண்டுகள் பதவி உயர்வு துறப்பு செய்வதாக எழுதித் தர வேண்டும்

2015-2016ல் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு கடந்த 2015 மே மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மாநிலம் முழுவதும் காலதாமதமாக 17.8.2015-ம் தேதி நடைபெற்றது. அப்போது சிலர் தங்களது சூழ்நிலை காரணமாகப் பதவி உயர்வை  வழக்கத்தின்படி தற்காலிகமாக 3 ஆண்டுகளுக்கு வேண்டாம் என எழுதிக் கொடுத்துள்ளார்கள். எழுதிக் கொடுத்த 2015-16, 2016-17, 2017-18 ஆகிய மூன்று கல்வியாண்டு இந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், 17.8.2015 தேதியன்று 3 ஆண்டுகளுக்கு பதவி உயர்வு துறப்பு செய்தவர்களுக்கு வரும் மே மாதம் நடைபெறும் 2018-19 கல்வியாண்டுக்கான கலந்தாய்வில் பதவி உயர்வு தர வேண்டும். ஆனால், இவர்கள் 2019-20-ம் கல்வியாண்டு பதவி உயர்வுக்குதான் அழைக்கப்படுவார்கள் என்று சுற்றறிக்கை தற்போது வந்துள்ளது. அரசாங்கத்தின் உத்தரவு 3 ஆண்டுகள் பதவி உயர்வு துறப்பு என்று இருந்தாலும், 4 கல்வியாண்டுகள் கழித்தே பதவி உயர்வு வழங்கப்படுவது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் பதவி உயர்வு பட்டியல் ஜனவரி 1-ம் தேதி தயாரிக்கப்படும். எனவேதான் ஆசிரியர்கள் 3 ஆண்டு பதவி உயர்வு துறப்பு என்று எழுதிக் கொடுத்தாலும் 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. 17.8.15 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் 3 ஆண்டுகள் பதவி உயர்வு வேண்டாம் என்று எழுதிக் கொடுத்தவர்கள் 17.8.2018-க்குப் பின் வரும் தலைமை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் மே மாதம் நடைபெறும் கலந்தாய்விலிருந்து இதை நடைமுறைப்படுத்தி மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையைத் தொடக்கக் கல்வி இயக்குநர் நிறைவேற்ற வேண்டும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்றார்

தமிழ் மகளே வருக புத்தாண்டில் புத்தொளி தருக!




➠➠❄கணினி கல்வியின் புதுமை❄➠➠

தமிழ்  புத்தாண்டு வாழ்த்துக்கள் :
பனித்துளியில் சிலிர்த்து 
படும்வெயிலில் சினந்து 
மகிழ்ச்சியில் மலர்ந்து 
மனமுடைகையில் வாடி 
பலகாலம் கடத்தியாயிற்று 
கண்ணுக்கு தெரியா 
கடவுளையும் 
கண்ணுக்கு தெரியா 
தன்னிம்பிக்கையும் 
கெட்டியாக பிடித்துக்கொண்டு 
கண்ணுக்கு தெரியும் 
சக மனிதனை 
நம்மைப்போல 
நேசித்து வாழ 
நித்தமும் நீளும் 
மகிழ்ச்சி எப்பக்கமும் 
அன்பில் அழகாகட்டும் ஆண்டின் முதல்நாளும் 
அடுத்து வரப்போகும்  அத்தனை நாட்களும்
!

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

திரு வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச்செயலாளர் ,
9626545446,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்.பதிவு எண்:655/2014.

Students School TC Request Letter - Format



➠➠❄கணினிகல்வியின் புதுமை❄➠➠

அசாமில் லாட்டரி டிக்கெட்டுக்கு அடித்தது யோகம்!!

.
கல்வி மேம்பாட்டு செலவை ஈடுகட்டுவதற்காக அசாமில் விரைவில் லாட்டரி டிக்கெட்

!

➠❄கணினி கல்வியின் புதுமை❄➠
* 28 சதவீதம் வரி கிடைப்பதால் மாநில அரசு நடவடிக்கை
கவுகாத்தி: லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி கிடைக்கும் என்பதால் லாட்டரி விற்பனை செய்வதற்கான மசோதாவை அசாம் மாநில அரசு தயாரித்து வருகிறது. ஜிஎஸ்டி வரி திட்டத்தின் கீழ் லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு 28 சதவீதம் வரி என்பதால் ்அதன் மூலம் மத்திய மாநில அரசுக்கு அதிக நிதி கிடைக்கின்றன. கேரள மாநிலத்தில் லாட்டரி தொழில் சிறப்பாக நடைபெறுகிறது.

 லாட்டரி டிக்கெட் விற்பனை செய்வதன் மூலம் ரூ.2450 கோடி வருவாய் தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவுக்கு கிடைத்துள்ளது. இதுபோல் மேற்கு வங்க மாநிலத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடியும், மகாராஷ்டிராவுக்கு ரூ.700 கோடியும் லாட்டரி டிக்கெட் விற்பனையின் மூலமாக கிடைத்துள்ளது. பஞ்சாப் உள்ளிட்ட வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையின் மூலமாக மொத்தம் ரூ.5150 கோடி வருவாய் கிடைத்துள்ளதால் தற்போது அசாம் மாநில அரசும் லாட்டரி விற்பனைக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. 

இதற்கான மசோதா தயார் செய்யும் பணியில் அம்மாநில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு பிறகு பல்வேறு மாநிலங்களின் நிதி வருவாய் குறைந்துவிட்டது. லாட்டரிக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி  விதிக்கப்பட்டுள்ளதால் அதன் மூலமாக கிடைக்கும் வருவாய் கல்வி மேம்பாட்டு செலவினங்களை ஈடுகட்ட பயன்படுத்தலாம்  என்ற நோக்கத்தில் அசாம் மாநில அரசு லாட்டரிக்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது.

தனியார் பள்ளி கட்டண நிர்ணயம்: கமிட்டி அறிவிப்பு

 தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழு 5500 பள்ளிகளுக்கு 2018-2019ம் ஆண்டுக்குரிய கட்டணத்தை


நிர்ணயம் செய்துள்ளது. இன்ன,  ஏப்ரல் 13ும் 4500 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது.  கட்டண குழுவிடம் இதுவரை விண்ணப்பிக்காத பள்ளிகள் ஆன்லைன்  மூலம் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன் 2017-2018ம் ஆண்டின் பள்ளி வரவு செலவு கணக்குகளை  கட்டண நிர்ணய குழு சரிபார்த்து ஆன்லைன் மூலமே கட்டணம் நிர்ணயம் செய்ய உள்ளது. பள்ளிகள் விண்ணப்பிக்கும் போது அதில் தவறு ஏதாவது  இருந்தால் கட்டண குழு அதற்கான விளக்கம் கேட்கும்

Thursday 12 April 2018

புதிய பாடத்திட்டம்: மக்களிடம் ஆலோசனை கேட்கும் -NCERT

புதிய பாடத்திட்டம்: மக்களிடம் ஆலோசனை கேட்கும் -NCERT


சமகால கல்வி முறையை மாற்றி அமைக்க ஒவ்வொரு ஆண்டும் அரசுகள் பல்வேறு அறிவிப்புகளை செய்து புதிய கல்வித்திட்டங்களை அறிவிக்கின்றன,  ஆனால், நாம் எதிர்பார்த்த மாற்றம் முழுமையாக வந்தபாடில்லை. அதற்குக் காரணம், தனியார் பள்ளிகள் மீதான மக்களின் ஈர்ப்பு. அவர்கள் செய்யும் விளம்பரம். முழுக்க முழுக்க கல்வியை வியாபாரமாக்கி மாணவர்களை இயந்திரக்களாக்கிய கல்வி முறைதான்.
இந்தநிலையில் பள்ளி மாணவர்களின், பாடத்திட்டம், பாடச்சுமையை குறைக்க மத்திய அரசின் தேசிய கல்வி அராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம், பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகளைக் கேட்டுள்ளது. நம்முடைய ஆலோசனைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குச் சில உதாரணங்களை தெரிவித்துள்ளார்கள்

கல்வி என்பது ஏட்டறிவு மற்றும் தேர்வில் விறுவிறுப்பாக பதில்களை எழுதவது மட்டும் ஆகாது, விளையாட்டு, வாழ்க்கைத் திறன்கள், படைப்புத் திறன்களுடன் அனுபவ பயிற்சி ஆகியவையே ஆளுமை மேம்பாட்டுக்கு அவசியமானது, மாணவர்கள் இன்று பாடத்திட்டம் சுமை காரணமாக மன அழுத்தத்தை உணர்கிறார்கள். இதுபோன்ற விஷயங்ககளை கவனத்தில் எடுத்துக்கொண்டு மாணவர்களின் அனைத்து மேம்பாட்டுக்காக முடிந்தளவு நடப்பிலுள்ள பாடத்திட்டத்தை ஆய்வுசெய்ய என்.சி.இ.ஆர்.டி. முடிவெடுத்துள்ளது. இது சம்பந்தமாக மக்களின் ஆலோசனைகளை அவர்களின் http://mhrd.gov.in/suggestions/ என்ற இணையதள முகவரிக்கு அனுப்புமாறு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் அறிவித்துள்ளது.

புதிய பாடத்திட்டப் புத்தங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

புதிய பாடத்திட்டப் புத்தங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..

Click Here:https://youtu.be/05tPepFE0eM

சொல்லவே இல்லை!கணினி பாடத்திற்கு- MeMeS


ஓர் கணினியின் கண்ணீர்!!


ஓர் ஆயிரம் குடுபத்தின் கண்ணீர்!


கட்டுரையாளர்
திரு வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச்செயலாளர் ,
9626545446,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்.பதிவு எண்:655/2014.

FLASH NEWS:தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆசிரியர்களுக்கு 2 % அகவிலைப்படி உயர்வு! அரசாணை வெளியீடு


2% DA G.O





தனியார் பள்ளிகள் மோகத்தால்!அரசுப்பள்ளிகள் மூடு விழா!!!

சேலம் மாவட்டம்,  வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள காளியம்மன்புதூர் மற்றும் செல்லப்பன்நகர்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் போதியளவு மாணவ - மாணவியர் இல்லாததால்,  எதிர்வரும் கல்வியாண்டில் இந்த இரு பள்ளிகளையும் மூடிவிட்டு,  அருகிலுள்ள பள்ளிகளோடு  இணைக்க கல்வித் துறை பரிசீலனை செய்து
வருகிறது.


வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 11 நடுநிலைப் பள்ளிகள் உள்பட மொத்தம் 62 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.  232 ஆசிரியர்கள், ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.  4,600 மாணவ-மாணவியர் பயின்று வருகின்றனர்.

வாழப்பாடி பேரூராட்சிக்கு உள்பட்ட செல்லப்பன்நகர் கிராமத்தில் கடந்த 1973-ஆம் ஆண்டு ஆரம்பப்பள்ளி துவக்கப்பட்டது. அப் பகுதி மக்களுக்கு தனியார் பள்ளிகள் மீதான மோகத்தால்,  50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் படித்து வந்த  அப் பள்ளியில், கடந்த சில

ஆண்டுகளாக படிப்படியாக எண்ணிக்கை குறைந்து,  ஒற்றை இலக்கமானது.
நடப்பு கல்வியாண்டில் ஒரு  தலைமையாசிரியை,  ஒரு  உதவி ஆசிரியை என, இருவர் பணிபுரிந்து வரும் அப் பள்ளியில், 3 மாணவ,

மாணவியர் மட்டுமே பயின்று வருகின்றனர். அதேபோல,  வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி,   காளிம்மன்புதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும்,  இரு ஆசிரியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில்,  கடந்த சில ஆண்டுகளாகவே 5 மாணவ,  மாணவியர் மட்டுமே படித்து வருகின்றனர். இந் நிலையில்,  ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மாணவ,  மாணவியர் படித்து வரும் பள்ளிகளை மூடிவிட்டு, அப் பள்ளியில் படிக்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவ, மாணவியரை,  அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்க பள்ளிக் கல்வித் துறை
திட்டமிட்டுள்ளது.
இத் திட்டத்தின் கீழ், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் ஒற்றை இலக்கத்தில் மாணவ, மாணவியர் எண்ணிக்கை கொண்ட காளியம்மன்புதூர் மற்றும் செல்லப்பன் நகர் ஆகிய இரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளையும் மூடிவிட்டு,   அந்த இரு பள்ளிகளிலும் படித்து வரும் 8 மாணவ-மாணவியரையும்,  அவர்களது பெற்றோர் விருப்பப்படி அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் இணைத்து கற்பிக்க கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியது:
வாழப்பாடி ஒன்றியத்தில் காளியம்மன்புதூர்,  செல்லப்பன்நகர் தொடக்கப் பள்ளிகள் மட்டுமின்றி,  ஜம்பூத்துமலை  தொடக்கப் பள்ளியிலும் ஒற்றை இலக்கத்திலேயே மாணவ, மாணவியர் எண்ணிக்கை உள்ளது.
ஜம்பூத்துமலை தொடக்கப்பள்ளி,  மலை கிராமத்தில் அமைந்துள்ளதாலும், அது புதிய ஆசிரியர்களுக்கான மலை சுழற்சிப் பள்ளி என்பதாலும்,  அப் பள்ளியைத்  தவிர்த்து மற்ற இரு பள்ளிகளையும், எதிர்வரும் கல்வியாண்டில் மூடிவிட்டு, அப் பள்ளி மாணவ, மாணவியரை அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் இணைக்க கல்வித் துறை திட்டம் வகுத்துள்ளது.
இரு பள்ளிகள் மூடப்படுவதால்,  இரு தலைமையாசிரியர் பணியிடங்கள் மற்றும் இரு உதவி ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.  அதனால், ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வு கிடைப்பது தாமதமாகும்.
அதுமட்டுமின்றி,   இந்த ஒன்றியத்தில் ஆசிரியர் பணியிடம் குறைக்கப்பட்டால்,  வேறு ஒன்றியத்தில் இருந்து இந்த ஒன்றியத்துக்கு மாறுதலாகி வந்த இரு ஆசிரியர்கள்,  மீண்டும் அதே ஒன்றியத்துக்கு திரும்பிச் செல்ல வேண்டிய நிலையும் ஏற்படும் என்றனர்.

மதிப்பீட்டு பணி-கணினிஅறிவியல் பாடத்திற்கான விடைத்தாட்கள் எண்ணிக்கை குறைத்தல் சார்பு

Wednesday 11 April 2018

FLASH NEWS: +1 கணினி அறிவியல் விடைத்தாள் எண்ணிக்கை 12 ஆக குறைப்பு!!!

FLASH NEWS:
+1 கணினி அறிவியல் விடைத்தாள் எண்ணிக்கை 12 ஆக குறைப்பு.
TNHSSPGCTA NEWS

'தண்ணீர் கொடு தேசமே'!! ஆசிரியர்கள் நூதன போராட்டம்!!

 'தண்ணீர் கொடு தேசமே'!!
 ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தினர் நூதன போராட்டம்!!


காவிரி நதிநீர்  மேலாண்மை வாரியம் அமைக்கவும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் இந்திய வரைபடத்திடம், தமிழ்நாடு வரைபடம் மனு அளிப்பது போன்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.

காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்துக்கு ஆதரவாகவும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், மாணவர்கள் முன்னெடுத்திருக்கும் போராட்டங்கள்  மிகத் தீவிரநிலையை அடைந்திருக்கின்றன. அந்தவகையில், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின்  மாநிலம் தழுவிய  ஆர்ப்பாட்டம் நேற்று (11.4.2018) மாலை நடைபெற்றது. புதுக்கோட்டை நகரில், பி.யூ.சின்னப்பா பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அதில், ஆசிரியர்கள் பிடித்திருந்த பேனர் எல்லாருடைய கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. அதாவது, முழுவதுமாக வறண்ட நிலையில் இருக்கும் தமிழ்நாடு, இந்திய தேசத்திடம் 'தண்ணீர் கொடு தேசமே' என்ற கோரிக்கை மனுவைக் கொடுப்பதுபோல் சித்திரம் வரையப்பட்டிருந்தது. வந்திருந்த ஆசிரியர்கள் காவிரி நதிநீர் குறித்தும் ஸ்டெர்லைட் ஆலை குறித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். 
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் இதுகுறித்துப் பேசுகையில்,  ``காவிரி நீர் நமது உரிமை. அதனை கர்நாடகா அரசிடமிருந்து பெற்றுத்தரவேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும். இதில், கர்நாடகா மாநிலத்தின் தேர்தல் வெற்றியை மனதில் வைத்துச் செயல்படுவது, ஒரு கண்ணில் சுண்ணாம்பும், மற்றொரு கண்ணில் பாலையும் வைப்பதற்குச் சமம். தமிழகத்தின் நலன்கருதி  காவிரி நதிநீர்  மேலாண்மை வாரியத்தைக் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அமைக்க வேண்டும்.

அதுபோல், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் புறக்கணிக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழகத்தில் தொடர்ச்சியாக இயங்க அனுமதிக்கக்கூடாது. தமிழர்கள் இந்தியாவில் இருக்கும் குடிமக்களா? அல்லது, அகதிகளா?. மத்திய அரசு  எப்படி இந்தியா முழுமைக்கும் ஒரே வரியை அறிமுகம் செய்ததோ, அதைப்போல இந்தியா முழுவதும் சமத்துவமான நீர் பகிர்மான கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்'' என்றார்..

வளர்ந்து வரும் அரசுப்பள்ளி ! முடக்கும் நினைக்கும் தனியார் பள்ளிகள்!


தனியார் பள்ளி மோகத்தால் படையெடுக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு விண்ணப்பம் வாங்குதற்காக காத்திருக்கும் பெற்றோர்கள் என்றெல்லாம் செய்திகள் படித்திருக்கிறோம். எப்படியாவது யாரைப்பிடித்தாவது தன் பிள்ளையை அந்த தனியார் பள்ளியில் சேர்த்து விட்டாலே போதும் அதுவே தன் வாழ்நாள் லட்சியமாக கருதும் பெற்றோர்கள் தான் தற்போது அதிகமாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் காலத்தில் ஓர் அரசுப்பள்ளி 2018-2019 கல்வி ஆண்டிற்கான அட்மிசன் இல்லையென்று பள்ளிக்கு வெளியே போர்டு வைத்திருக்கிறார்கள் என்றால் அது ஆச்சர்யமாகத் தானே இருக்கும்.


சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ராமநாதன் செட்டியர் உயர்நிலைப்பள்ளியானது இயங்கி வருகிறது. இப்பள்ளி காரைக்குடி நகராட்சி பள்ளியாகும்.  இங்கு ``6-ம் வகுப்பு ஆங்கில வழி கல்வியில் 50 மாணவர்களும், 6-ம் வகுப்பு தமிழ்வழி கல்வியில் 35 மாணவர்களும் மட்டுமே சேர்க்க இடவசதி உள்ளது. மேலும் பிற வகுப்புகளுக்கு மாணவர்களைச் சேர்க்க இயலாத நிலையில் உள்ளோம் என்பதை கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதற்கு பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு தந்து உதவுமாறு அன்புடன் கேட்க்கொள்கிறோம்' என்று விளம்பர பலகை வைத்திருப்பதை பார்த்து பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் மல்லுக்கு நிற்கிறார்கள்.
கூடுதல் வகுப்பறை, கழிப்பறைகள் எல்லாம் பற்றாக்குறையாக இருப்பதால் அட்மிசன் போட முடியாமல் அவதிப்பட்டு வருகிறார் தலைமை ஆசிரியர் பீட்டர்ராஜா. தனியார் பள்ளிக்கு போட்டியாக தமிழ், ஆங்கிலத்தில் மாணவ, மாணவிகள் தங்கள் திறமைகளை இங்கு வெளிக்காட்டி வருகிறார்கள். ஆகையால் பெற்றோர்கள் இந்த அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்காக எம்.எல்.ஏ, எம்.பி சிபாரிசு கடித்தை பெற்றுக்கொண்டு வந்து குவிகிறார்கள். ஆனால் தனியார் பள்ளிகள் இந்த அரசுப்பள்ளியை முடக்கி வைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அதில் ஒன்று தான் அடிப்படை வசதிகள், இடவசதி குறைவுகள். நகராட்சி ஆணையர் இப்பள்ளி வளர்ச்சி பெறுவதை விரும்பவில்லை என்கிற குற்றச்சாட்டை பெற்றோர்கள் முன் வைக்கிறார்கள். இதே அரசுப்பள்ளியில் தான் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது

பள்ளிகளில் விரைவில் யோகா ஆசிரியர்கள் நியமனம்!!!


அரசுப்பள்ளி கணினி ஆய்வகத்தின் இன்றைய நிலை..


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் அசிஸ்டெண்ட் வேலை !!


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: பண்ணை மேலாளர் 
காலியிடங்கள்: 2 
கல்வித் தகுதி: பி.விஎஸ்சி தேர்ச்சி அடைந்த பிறகு 2 ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது எம்.வி.எஸ்.சி. முடித்திருக்க வேண்டும். 


பதவி: புராஜக்ட் அட்மினிஸ்ட்ரேட்டர் 
காலியிடம்: 1 
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். திட்ட மேலாண்மை/ கணக்கு/ அலுவலக நிர்வாகம்/ கொள்முதல் போன்றவற்றில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 


பதவி: புராஜக்ட் அசிஸ்டெண்ட் 
காலியிடங்கள்: 2 
கல்வித் தகுதி: பி.டெக் (பயோடெக்னாலஜி, பயோஇன்ஃபார்மட்டீக்ஸ் உள்ளிட்ட படிப்புகள்) அல்லது உயிரி அறிவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


பதவி: கம்ப்யூட்டர் அசிஸ்டெண்ட் 
காலியிடம்: 1 
கல்வித் தகுதி: உயிரி அறிவியல்/ கணினி அறிவியல்/ தொழில்நுட்ப அறிவியல் படிப்புகளில் இளநிலைப் பட்டம். 
மேலும், வெப் டிசைன், டெக்னிக்கல் ரைட்டிங் துறைகளில் அனுபவம். 
நேர்முகத் தேர்வு: விண்ணப்பதாரர்கள் தங்களது நிஜ சான்றிதழ்கள், அடையாள அட்டை ஆகியவற்றோடு கீழ்க்காணும் முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 18-04-2018 காலை 11 மணி.

முகவரி: The ProjectDirector,  Translational Research Platformfor VeterinaryBiologicals(TRPVB),  2nd Floor,CUL building,CAHS,TANUVAS,Chennai - 600 05l. மேலும் விவரங்களுக்கு: http://www.tanuvas.ac.in/nea/vacancies/Advt_915_TRPVB_2018.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

சூழலியல் காக்கும் கழிவறையை உருவாக்கிய கரூர் அரசுப் பள்ளி மாணவர்!!!


சாதிக்கும் எண்ணமும் விடாமுயற்சியும் இருந்தால், எங்கிருந்தாலும் வெற்றியாளனாக வலம்வர முடியும் என நிரூபித்துக் காட்டியிருக்கிறார், ம.ஹரிஹரன்


கரூர் மாவட்டம், வெள்ளியணை கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் டூ படிக்கிறார் ஹரிஹரன். இவரின் அறிவியல் ஆர்வம், ஜப்பானுக்குச் செல்லும் வாய்ப்பை வழங்கியுள்ளது. அதுகுறித்து பள்ளியின் ஆசிரியர் பெ.தனபால், ``நான் இந்தப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக, இளம் விஞ்ஞானிகள் குழு வழிகாட்டிப் பணியாற்றி வருகிறேன். 12 ஆண்டுகளாக மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தையும் சிந்தனையையும் வளர்த்தெடுக்க, பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறேன். மாணவர்களும் ஆர்வம் மற்றும் உற்சாகத்துடன் பங்களித்து வருகிறார்கள். நான் கல்லூரியில் படிக்கும்போது ஓர் அறிவியல் ஆராய்ச்சி மையத்துக்குச் சென்றிருந்தேன். ஆனால், சரியான சூழல் இல்லாததால் அங்கே தேர்ந்தெடுக்கப்படவில்லை. என்னால்தான் இதுபோன்ற பெரிய அறிவியல் மையங்களுக்குச் செல்லமுடியவில்லை. என்னிடம் படிக்கும் மாணவர்களையாவது உயர்த்த தகுந்த பயிற்சி அளிக்க வேண்டும் என உறுதியேற்றேன்.

GOOD NEWS:விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு! ஓரிரு நாட்களில் அரசாணை வெளியீடு!!

விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு! ஓரிரு நாட்களில் அரசாணை வெளியீடு!!

கடந்த மார்ச் மாதம் 7 ந் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கு 2சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் கோப்பில் கையொப்பம் செய்துள்ளதாகவும் ஓரிரு நாட்களில் அரசாணை வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2 சதவீத அகவிலைப்படி உயர்வும், ஜூலை மாதம் முதல் ஒரு சதவீத அகவிலைப்படி உயர்வும் வழங்கப்பட்டது. இதுவரை மொத்தம் 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது மேலும் 2 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கினால் மொத்தம் 7 சதவீதம் கிடைக்கும்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியை கணக்கிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்   என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணீர் அஞ்சலி!



திருமதி ஜெனிபர் ,
சென்னை மாவட்ட செயலாளர்,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல்  வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் வீரப்பெண் போராளிக்கு

                   """கண்ணீர்  அஞ்சலி "''''


"திருமதி ஜெனிபர் இன்று இறைவனுக்கு ஆசிரியராக சென்றார்"

ஆழ்ந்த இரங்கல் அனைத்து வேலையில்லா கணினி ஆசிரியர்கள் சார்பில்..

தமிழ்நாடு   பி.எட்  கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள்   சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்..

கொளுத்தும் வெயிலில்….!!! கோரிக்கையோடு போராட்டம் நடத்தும் மாணவிகள்…!!!

சேலம் நெத்திமேட்டில் அரசின் விலையில்லா மடிக்கணினி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை காவல் உதவி ஆய்வாளர் மிரட்டியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

நெத்திமேடு பகுதியில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் ஜெயராணி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் லேப்டாப் வழங்காததை கண்டித்து, +2 முடித்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், மாணவிகளை கைது செய்யப்போவதாகவும், கல்லூரியில் சேர முடியாதவாறு செய்துவிடுவதாகவும் ஒருமையில் பேசினார். இதனால், மாணவிகளுக்கும், காவல் உதவி ஆய்வாளருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், தங்களது பிள்ளைகளை தங்கள் கண்முன்னே ஒருமையில் மிரட்டியதும், தரக்குறைவாக பேசியதும் பெற்றோர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது

Tuesday 10 April 2018

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு அரசாணை வெளியீடு!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு. .

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆசிரியர்களுக்கு 2 % அகவிலைப்படி உயர்வு! அரசாணை வெளியீடு!





*➠➠❄கணினி கல்வியின் புதுமை❄➠➠*

ஒரே நாளில் 'நீட்', டி.என்.பி.எஸ்.சி., கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி...

 நாடு முழுவதும் மருத்துவ படிப்படிற்கான நீட் நுழைவு தேர்வு, மே 6ல் நடக்கிறது. இத்தேர்வை சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. இதற்காக மாவட்டம் தோறும் தேர்வு மையங்கள் சி.பி.எஸ்.இ., சார்பில் தேர்வு செய்யப்பட்டு விட்டது. அப்பள்ளிகளுக்கு உரிய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.*_

_*◼அதே நாளில் (மே 6) டி.என்.பி.எஸ்.சி.,யின் தடயவியல் துறையில் ஆய்வக உதவியாளர் பணிக்கும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.*_

_*◼இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: கல்வி அதிகாரிகளுக்கே தெரியாமல் நீட் தேர்வுக்கான மையங்களை சி.பி.எஸ்.சி., ஏற்பாடு செய்து விட்டது. பல பள்ளிகள், 'தங்கள் பள்ளியில் நீட் தேர்வு நடப்பதால், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மையப் பொறுப்பிலிருந்து தங்கள் பள்ளிகளை விடுவிக்க வேண்டும்,' என கடிதம் அனுப்பி வருகின்றன. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது, என்றார்.*_

_*︿︿︿︿ 💯% NEWS ︿︿︿︿*_

UPPSC யில் 1548 கணினி ஆசிரியர் காலிப்பணியிடம் ...



UPPSC computer science Notification april 2018..



NEW DELHI: 
Uttar Pradesh Public Service Commission (UPPSC


is starting recruiting process online for trained male and female teachers for 10,768 posts from March 15, 2018.
This is the largest recruiting exam as far as the number of vacancies is concerned. UPPSC has released a brief notification in this regard. The commission is going to release a detailed advertisement on March 15, 2018.

Post Name: LT (Licentiates Teacher) Grade Assistant Teacher

Important dates

  • Starting date: March 15, 2018
  • Last date to apply: April 16, 2018
  • Last date for depositing fees: April 12, 2018

Age Limit (as on 01-July-2018)

  • Minimum: 21 years
  • Maximum: 40 years
(Born between 02-Jul-1978 to 01-Jul-1997)

For more details, candidates are advised to visit the UPPSC official website — http://uppsc.up.nic.in/


Category wise vacancy details for UPPSC LT Grade TeachersMale: 5364 posts

Female: 5404 posts

SubjectVacancies (Male)Vacancies (Female)
Agriculture180
Art195221
Biology281253
Commerce2303
Computer773775
English573608
Hindi573636
Home Science01260
Mathematics438448
Music0755
Physical Education131134
Sanskrit231234
Science443456
Social Science710739
Urdu6657
Total posts53645404





Application FeeFor General/OBC candidates: Rs 100
For SC/ST candidates: Rs 40
For PH candidates: Nil

Note: The Application Fee can be paid online through credit/debit card, net banking or through eChallan at Bank.

Educational QualificationGraduation from a recognized university with B.Ed.

For Computer Teacher Post: 

Graduate in Science in Computer Application OR Graduate in Computer Application OR Candidates with B.E./ B.Tech in Computer Science OR Graduate with A Level Course OR any other Equivalent Qualification & Candidates must have done B.Ed or any equivalent exam.



Pay Scale:
Rs. 9300 - 34800 with Grade Pay 4800/- & Other Allowances

Pay Scale:
Rs. 9300 - 34800 with Grade Pay 4800/- & Other Allowances

Source:
https://timesofindia.indiatimes.com/home/education/news/uppsc-10768-lt-grade-teacher-recruitment-2018-apply-online/articleshow/63207337.cms

POPULAR POSTS