மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Thursday, 10 September 2026

`கணினிப் படிப்புக்கு இங்கு முக்கியத்துவமே கொடுப்பதில்லை'- ஆசிரியர்கள் குமுறலும் அமைச்சர் விளக்கமும்!



தமிழ்நாட்டில் மட்டும்தான் கணினி அறிவியல் பாடமானது ஒதுக்கப்பட்ட பாடமாக இருக்கிறது” என கொந்தளிக்கிறார்கள் கணினி பட்டதாரி ஆசிரியர்கள். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்காக மத்திய அரசானது கணினி அறிவியல் பாடத்திற்கு நிதி ஒதுக்கியும், தமிழக அரசு அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை எனக் குற்றம்சாட்டுகிறார்கள்.



இது தொடர்பாக கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க மாநிலத் தலைவர் குமரேசனிடம் பேசினோம்:


“இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கணினி பாடமானது முக்கியமானது என மத்தியக் கல்வி அமைச்சகம் ஆய்வு செய்து ‘சமக்ர சிக்ஷா’ (Samagra Shiksha) என்ற திட்டத்தைக் கடந்த 2018-2019-ஆம் ஆண்டு கொண்டு வந்தது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணினி அறிவை வளர்க்கவும், தகவல் தொடர்புத் துறை பற்றி பள்ளி வயது முதலே தெரிந்துகொள்ளச் செய்யவுமே இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இதை மற்ற மாநிலங்கள் அனைத்தும் தங்களது பள்ளிகளில் நடைமுறைப்படுத்திவிட்டன. குறிப்பாக, பக்கத்து மாநிலமான கேரளாவில் கணினி அறிவியலை 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஆறாவது பாடமாகக் கட்டாயமாக்கியிருக்கிறார்கள்.


ஆனால், தமிழக அரசானது இதில் இதுவரை எந்த ஆர்வமும் காட்டவில்லை. 2021 முதல் தற்போது வரை கணினி அறிவியலுக்காக மத்திய அரசானது தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ₹400 கோடிக்கும் மேல் ஒதுக்கியும், அதைச் சம்பந்தப்பட்ட பாடத்திற்குப் பயன்படுத்தவில்லை. இல்லம் தேடி கல்வியில் பள்ளிப் படிப்பைக் கூட சரியாக முடிக்காமல் தற்காலிகமாகப் பணியில் சேர்ந்தவர்களுக்கும், பள்ளிக் கல்வித் துறையில் தரவுப் பதிவு (Data Entry) செய்பவர்களுக்கும் கடந்த திமுக அரசு ஆட்சியில் இருந்தபோது அந்த நிதியைப் பயன்படுத்தியது.


👉குமரேசன்:


மத்திய அரசு கணினி அறிவியலுக்காக ஒதுக்கிய இந்த நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என உத்தரவும் வந்தது. நீதிமன்ற உத்தரவு வந்த பிறகும் அரசே இதை முறைப்படுத்தி கணினிப் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை.


தற்போது மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகங்கள் செய்முறைத் தேர்வின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே பயன்படுகின்றனவே தவிர, முழுமையாகக் கணினியைப் பற்றி மாணவர்கள் தெரிந்துகொள்வதில்லை. மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தலைதூக்கியிருக்கும் இந்தக் காலத்தில், கணினியை எப்படிப் பயன்படுத்துவது என்ற சாதாரண விஷயம்கூட கிராமப்புற மாணவர்களுக்குத் தெரியவில்லை.


கல்வியில் தமிழகம்தான் முன்னிலை எனப் பெருமைகொள்ளும் அரசானது இந்த விஷயத்தில் மட்டும் பின்தங்கியே நிற்கிறது. எனவே, மற்ற பாடங்களைத் தனிப் பாடமாகப் கற்பிப்பது போல கணினி அறிவியலையும் சேர்ப்பதோடு, அதற்கான தகுதியான ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும்” என்றார் கோரிக்கையாக.


இது குறித்து ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் பால் ஜெயகுமாரிடம் கேட்டோம்:


“பள்ளிப் பருவத்தில் நாம் படிக்கும் எந்த ஒரு படிப்பும் எதிர்காலத்தில் நமக்கு உதவத்தான் போகிறது; அது கணினிப் படிப்பிற்கும் பொருந்தும். மேல்நிலைப் பள்ளிகளில் குறிப்பாகக் கணினி அறிவியலைப் பாடமாக எடுத்துப் படிக்கும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும்தான் கணினியைப் படிக்க வேண்டும் என்ற தற்போதைய நடைமுறை முற்றிலும் முரணானது. இதில் தமிழ் வழிக் கல்வியை அடிப்படையாகக் கொண்டு படிக்கும் ஏழை மாணவர்களே அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.


மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ மாணவர்களுக்கு 6-ஆம் வகுப்பு படிக்கும் போதே கணினியை ஒரு பாடமாக வைத்து, அதைப் பற்றிய புரிதலைச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.


👉பால் ஜெயகுமார்:

ஆனால், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அது எட்டாக்கனியாக இருக்கிறது. இதற்காகத்தான் மத்திய அரசு ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தைக் கொண்டு வந்தது. கிராமப்புற ஏழை மாணவர்கள் கணினி அறிவியலில் மேம்படுவதோடு, பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரிகளில் சிறந்து விளங்க கணினி ஒரு அடிப்படைக் கருவியாக இருக்கும் என்பதால் தான் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.


இன்றைய தலைமுறைப் பிள்ளைகள் கைப்பேசியிலும் சமூக ஊடகங்களிலும் மூழ்கியிருந்தாலும், அடிப்படையான கணினி விஷயங்கள் தெரியாததால் வேலைக்குச் செல்லும்போது பெரும் சிரமங்களைச் சந்திக்கிறார்கள். எனவே, அரசானது கணினி அறிவியலை ஊக்குவிக்க மத்திய அரசின் இத்தகைய திட்டங்களை அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் செயல்படுத்தித் தர வேண்டும்” என்றார் ஆதங்கத்துடன்.



👉ராஜ்மோகன்:



பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் இது குறித்து விளக்கம் கேட்டோம்:


”கல்வியை ஊக்குவிப்பதும் புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவதும்தான் தற்போதைய அரசின் பிரதான குறிக்கோள். கணினி அறிவியல் பாடத்திற்காக மத்திய அரசானது நிதியைப் போதுமான அளவு வழங்கவில்லை. வழங்கப்பட்ட நிதியை இதற்கு முந்தைய அரசு தற்காலிகப் பணியாளர்களுக்கும் ஆய்வகப் பராமரிப்பிற்கும்தான் பயன்படுத்தியது. தற்போதைய ஆண்டிற்கான நிதியைக் கல்வித் துறை சார்பில் கோரியிருக்கிறோம். ஆனால், அந்த நிதி இன்னும் எங்களுக்கு வரவில்லை. எனவே, மத்திய அரசு வழங்கும் நிதியைத் தவறாகப் பயன்படுத்தாமல் நிச்சயமாகச் சம்பந்தப்பட்ட கணினிப் பாடத்திற்கே பயன்படுத்துவோம்” என்றார்.

News Source: Vikatan


https://www.vikatan.com/education/tn-govt-school-computer-lab-issues


வெ.குமரேசன்,

மாநிலப் பொதுச் செயலாளர் ,

9626545446 ,

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

Thursday, 13 August 2026

Kerala text book

கணினி பாடத்தை அரசுப்பள்ளியில்
கொண்டுவராமல் மத்திய அரசின் நிதிக்காக
'என்னமா கத வுடுறாங்க'...

900 கோடி மத்திய அரசு கணினி கல்விக்காக ஒதுக்கீடு செய்தாது ஆனால் மாநில அரசோ 2011ம் வருடத்திலிருந்து இன்று வரை செலவு செய்யாமல் கிராமப்புற மாணவர்களின் கணினி கல்விக்கு வந்த நிதியை முறையாக பயன்படுத்தாமல் அரசு பள்ளிகளை மூடும் நிலையை உருவாக்கி கொண்டிருக்கிறது.எதை கேட்டாலும் நிதியை காரணம் கூறும் ஆளும் அரசு வந்த நிதியை செலவு செய்யமால் வைத்திருப்பது தான் அவலத்தின் உச்சகட்டம்..வந்த நிதியை முறையாக பயன்படுத்திய மற்ற மாநிலங்களில் கேரள மாநிலம் ஒன்று  இன்று தமிழில் கூட 1-10 வகுப்புவரை கணினி அறிவியல் பாடபுத்தகங்களை வெளியிட்டு 4இலட்சம் மாணவர்களை அரசுப்பள்ளியில் இணைத்தற்க்கு காரணமே 45000அரசுப்பள்ளிகள் நவீன கணினி ஆய்வகங்கள் உருவாக்கி

1-10வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் மலையாளம் ,ஆங்கிலம்,தமமிழ் என மூன்று மொழிகளில் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்ல கணினி பாடத்தை ஆறவாது பாடமாகி கொண்டு வந்தோடு நிறுத்தி விடமால்  பொதுத் தேர்வில் கணினி பாடத்தில் கட்டாயம் தேரச்சி பெற வேண்டுமாம்.

நமது சமச்சீர் கல்வியை பின் பற்றிய கேரள மாநிலத்தின் தற்போதைய நிலை அறிய ..
https://kite.kerala.gov.in/KITE/


கேரள மாநிலத்தில் 1-10கணினி அறிவியல் பாடபுத்தகம் நம் தமிழ் மொழியிலும்

*ICT TEXT BOOKS TAMIL MEDIUM - KERALA*

ICT Text Book 1st standard Tamil Medium - Kerala state


http://doozystudy.blogspot.com/2017/12/ict-text-book-1st-standard-tamil-medium.html


ICT Text Book 2nd standard Tamil Medium - Kerala state


http://doozystudy.blogspot.com/2017/12/ict-text-book-2nd-standard-tamil-medium.html


ICT Text Book 3rd standard Tamil Medium - Kerala state


http://doozystudy.blogspot.com/2017/12/ict-text-book-3rd-standard-tamil-medium.html


ICT Text Book 5th standard Tamil Medium - Kerala state


http://doozystudy.blogspot.com/2017/12/ict-text-book-5th-standard-tamil-medium.html


ICT Text Book 6th standard Tamil Medium - Kerala state


http://doozystudy.blogspot.com/2017/12/ict-text-book-6th-standard-tamil-medium.html


ICT Text Book 7th standard Tamil Medium - Kerala state


http://doozystudy.blogspot.com/2017/12/ict-text-book-7th-standard-tamil-medium.html


ICT Text Book 8th standard Tamil Medium - Kerala state


http://doozystudy.blogspot.com/2017/12/ict-text-book-8th-standard-tamil-medium.html


ICT Text Book 9th standard Tamil Medium - Kerala state


http://doozystudy.blogspot.com/2017/12/ict-text-book-9th-standard-tamil-medium.html


ICT Text Book 10th standard Tamil Medium - Kerala state


http://doozystudy.blogspot.com/2017/12/ict-text-book-10th-standard-tamil.html
தமிழக அரசு 2011ல் வெளிவந்த 6-10வகுப்பு வரை வந்த கணினி பாடபுத்தகங்களை முடக்கியது மட்டும் அல்லாமல் புத்தகங்களை குப்பை தொட்டியில் போட்டு அன்றே அழகு பார்த்தது தான் சாதனையின் உச்சம் (RTI தகவலில் குப்பை கழிவாக மாற்றியது பற்றி குறிப்பிட்டுள்ளது ..

வந்த நிதியும் பால் ,கொடுத்த புத்தகமும்  வீண் :
எங்கு மாணவர்கள் சேர்கை உயரும் பெயருக்கு கணினி கணினி என்றும் 3000, 5000 ஸ்மார்ட் வகுப்பு விரைவில்  என்று பல வருடங்களாக கூறும் ஆளும் அரசு ! வாய் பேச்சுடுன் முடித்து கொள்கிறது செயலில் நிலை பூஜ்ஜியம் என்றால் மிகையாகாது.

அரசுப்பள்ளியில் மடிக்கணினிகள் கொடுக்கு அரசு வாக்கு வங்கிக்காக கொடுக்கிறதா??

அரசுப்பள்ளில் மேல்நிலை வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வாரி வழங்குவது சாதனை தான் ஆனால் அரசுப்பள்ளி கணினி ஆய்வகத்தில் எத்தனை கணினிகள் உள்ளன அவற்றுள் எத்தனை செயல்படுகிறது என்று என்னியது உண்டா?
பள்ளி மாணவர்களுக்கு ஒரு பள்ளிக்கு 400க்கும் மேற்ப்பட்ட மடிக்கணினி கொடுக்கின்ற அரசு அதன் பயன்பாடும் அவை எதற்க்காக பயன்படுத்த வேண்டும் என்றும் கற்றுக் கொடுத்தது உண்டா..?
      கணினியில் 3விதமான பாடபுத்தகம் தந்த அரசு முறையாக செயல்படும் 3 கணினி கொடுத்துள்ளது  இதில் செய்முறை தேர்வு எங்கு சாத்தியம்..???
        தனியார் பள்ளிகள் கணினி ஆய்வகங்களில் குறைந்தது 150 கணினிக்கு குறைவாக எங்கும் இல்லை கோடி கணிக்கி மடிக்கணினி முறையாக 10கணினி கொண்ட ஆய்வகம் இருந்தால் அரசுப்பள்ளி அதிசியப்பள்ளி தான்..

புதிய பாடத்திட்டத்தில் ICT நாடகம் ..
         மத்திய அரசின் நிதியை  பெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்க்காக அறிவியல் பாடத்தில் வெறும் 3பக்கத்தை இணைத்துள்ளது தமிழக அரசு.மற்ற மாநிலங்களான கேரள தெலுங்கானா ஆந்திர  மாநிலத்தில் முறையான கலைத்திட்டம் பின்பற்றப்படுகிறது.

ICT அனைத்து மாநில அரசுக்காண கலைத்திட்ம்:
http://ictcurriculum.gov.in/mod/page/view.php?id=36

மத்தியரசின் கலைத்திட்டம் அனைத்து மாநிலத்திற்கும் பொதுவான கலத்திட்டத்தை வழங்கியுள்ளது.
(வந்த நிதியை சோற்றில் மறைந்த  பூசனிக்காய் போல  விலிங்கிக்கொண்டது)

தமிழகத்தின் நிலை:
      ICT என்ற வார்த்தை இல்லா விட்டால் மத்திய அரசு நிதி வருடந்தோறும் வருவது நிறுத்தப்படும்  என்ற காரணத்திற்காக தான் புதிய பாடத்திட்டத்தில் ஊறுகாய் போல அறிவியல் பாடத்தில் கணினி பாடம் 3பக்கமாக   ICT இணைக்கப்பட்டுள்ளது.

கல்வியில் மாற்றமா?
      சீருடையும் 5பாடங்களையும் மாற்றினால் உலகத்தரத்திற்கு இணையான கல்வி அரசுப்பள்ளியில் எவ்வாறு சாத்தியமாகும்.?
       தமிழக்தின் தனியார் பள்ளிகளின் கலைத்திட்டத்திறகு தடை போடுமா தமிழக அரசு??

              CBSE,மெட்ரிக் பள்ளிகளின் கலைத்திட்டத்தில் தமிழ்,ஆங்கிலம், கணிதம்,அறிவியல்,சமூக அறிவியல் பாடங்கள் போன்று  கணினி அறிவியல் பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் தந்து  1ம் வகுப்பிலிருந்து கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக கற்றுக் கொடுக்கிறது ஆனால் இங்கே நிதியை பெற்றுக்கு கொண்டு  பெயரளவில் 3ம் வகுப்பிலிருந்து கொண்டு வருவதாக கூறிய அரசு கணினி  பாடத்தை 6 மற்றும் 9ம் வகுப்பில் இந்த கல்வியாண்டில்  ஆண்டு 3பக்கமாக   அறிமுகம்  செய்துள்ளது தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்காக. இதே நிலை தொடர்ந்தால் விரைவில் அரசுப்பள்ளிகளை மூடி விட்டு பள்ளிக்கல்வியை தனியாருக்கு தாரை வார்க்காளம்..

* ஆசிரியர்கள் இன்றி
மேல்நிலைப்பள்ளி கணினி பாடத்தின் அவள நிலை:
(மேல்நிலை இரண்டு ஆண்டிற்கும் பொதுத் தேர்வு ).
      இன்று வரை கணினி ஆசிரியர்கள் இன்றி செயல்படும் 800 அரசு மேல்நிலைப்பள்ளிகள் .கணினி என்ற பாடம் தமிழகத்தில் மட்டும் மேல்நிலையில் மட்டும் தான்.இதில் நீட் TNPSC தேர்வுகள் ஆன் லைன் வாயிலாக நடைபெற்றால் அரசுப்பள்ளி ஏழை மாணவர்கள் நிலை என்றும் கேள்விக்குறிதான் ..
 (தமிழக மேல்நிலை வகுப்புகளில் கணினி பாடத்தை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தான் கணினி பற்றிய தெரியும் மற்ற பாட மாணவர்களின்  நிலை அடிப்படை கணினி அறிவு இன்றி உயர்நிலை கல்விக்கூடங்களுக்கு செல்கின்றன).

அரசுப்பள்ளி கணினி ஆசிரியர்கள் எண்ணிக்கை:

      தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளியில் மட்டும் தான் கணினி  ஆசிரியர்கள் 1800 பணிபுரிகின்றனர் (தொடக்க,நடுநிலை,உயர்நிலைப்பள்ளிகளில்  கணினி பாடமும் இல்லை ஆசிரியர்களும் இல்லை)
தமிழகம் முழுதும் சுமார் 3000த்திற்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில்   800கணினி ஆசிரியர்கள் இன்று வரை பெற்றோர் ஆசிரியர்கள் கழகத்தின் சார்பில் கூட நியமிக்கவில்லை..

       2016ம் ஆண்டு கல்வி மான்யக் கோரிக்கையில் 748 பணியிடங்களை 110விதியின் கீழ் அறிவித்தது ஆனால் 2018 காலண்டுத் தேர்வு மடிந்தும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இன்றி கற்கும் சூழலை உருவாக்கிவிட்டது. இதே நிலை நிடித்தால் பொதுத் தேர்வையும் ஆசிரியர்கள் இன்றி எழுதும் நிலை உருவாகும்.

    தற்காலிக PTA ஆசிரியர் நியமனத்தில் கூட கணினி ஆசிரியர்களுக்கு இடமில்லாமல் தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது !
     1474 தற்காலிக முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்ய  தமிழக அரசு அரசாணை வெளியிட்ட நிலையில் மாநில முழுவதும் 800க்கும் மேற்ப்பட்ட கணினி ஆசிரியர்கள் பணியிடம் இன்று வரை காலியாகவே உள்ளது ..

மேல்நிலை வகுப்புகளில் பிளஸ் 1,பிளஸ் 2 ஆகிய இரு வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு நடைபெற்று வருகின்றது.புதிய பாடத்திட்டத்தில் கணினி பாடம் பிளஸ் 1 வகுப்பிற்க்கு 3 வகையான பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது

1.கணினி அறிவியல்- (கணித பிரிவு ),
2.கணினி பயன்பாடு -(வரலாறு, பொருளியல், வணிகக் கணிதம்),
3.கணினியில் தகவல் தொழில்நுட்பம் -(அனைத்து வகை தொழிற்கல்வி பிரிவுகளுக்கும்).இந்தப் புதிய பாடங்கள் இந்த ஆண்டு பிளஸ்1 வகுப்புக்கு நடைமுறைக்கு வந்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் பிளஸ்2 வகுப்புக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது பிளஸ்1க்கு கடந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடைபெற்று வருகின்றது.

2016ஆம் ஆண்டு கல்வி மான்ய கோரிக்கையில் அரசு அரசுப்பள்ளியில் 748 கணினி ஆசிரியர் பணியிடம் நியமிக்க உத்திரவிட்டுள்ளது .ஆனால் இன்று வரை அவை காலிப்பணியிடங்களாகவே உள்ளது.

   இந்நிலையில்  கடந்த ஜூன்(2018) மாதம் கணினி ஆசிரியர்கள் பணியிட மாற்றத்திற்கு பிறகு தலா 800 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் காலியாகவே உள்ளது. இதனால் பொதுத் தேர்வை எதிர்நோக்கும் கணினி பயிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் இன்றி  தவித்து வருகின்றனர்.
     காலியாக உள்ள மற்ற  ஆசிரியர்கள் பணியிடங்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நியமிக்க   அரசு உத்தரவிட்டுள்ளது. அதிலும் கூட கணினி ஆசிரியர்களுக்கு ன எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில் பொதுத் தேர்வை எதிர் கொள்ளும் கணினி மாணவர்கள் காலாண்டுத் தேர்வு வரை ஆசிரியர்கள் இன்றி இன்று வரை தவித்து வருகின்றனர்.எனவே நிரந்தர கணினி ஆசிரியர்கள் நியமிக்கும் வரை அரசு  உடனடியாக பெற்றோர் ஆசிரியர்கள் கழகத்தின் வாயிலாக பி.எட் பயின்ற கணினி ஆசிரியர்களை நியமிக்க 23.8.2018 அன்று துறை அமைச்சரிடம் கோரிக்கை
வைக்கப்பட்டும் நிரைவேற்றப்படவில்லை.

தற்போது மாவட்டம் வாரியாக காலியாக உள்ள கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள்..
      அரியலூர்  -10,கோவை-29,கடலூர்-32, தர்மபுரி -09,திண்டுக்கல் -21,ஈரோடு-21,காஞ்சிபுரம்  -24,கன்னியாகுமரி-10,கரூர்  -25,கிருஷ்ணகிரி -06,மதுரை-27,நாகை -31,நாமக்கல்-08,பெரம்பலூர் -09,புதுக்கோட்டை -43,ராமநாதபுரம் -21,சேலம் -25,சிவகங்கை -19,தஞ்சாவூர் -43,நீலகரி-14,தேனி-11,திருவள்ளூர்        -17,திருச்சி -25,நெல்லை             -19,திருப்பூர்-25,திருவண்ணாமலை -55,
வேலூர் -52,விழுப்புரம் -83,விருதுநகர் -36.


மொத்தம் மாவட்டம் வாரியாக ஜூன் மாதம் நடைபெற்ற கணினி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கு  பிறகு   800 அரசு
மேல்நிலைப்பள்ளிகளில் இன்று வரை காலியாக உள்ள  பணியிடங்கள்.

தமிழக அரசு வெளியிட்ட தற்காலிக ஆசிரியர்களுக்காண அரசாணை:

        G.O. 619 நாள் : 19.09.18
அரசாணை வெளியிட்ட நாள்:28.9.2018
PTA - PG Teachers for handling XI & XII STD.
தற்காலிகப் பணியிடங்கள்.. (செப்-18 முதல் பிப்.19 வரை  6 மாதங்கள் ஒப்பந்த அடிப்படையில்..)தொகுப்பு ஊதியம் ரூ.7500/-

பாடங்கள் :
       தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், பொருளியல்

(11 பாடங்கள் மட்டும் கணினி அறிவியல் பாடம் தவிர்த்து)

 ஆசிரியர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது ஆனால் 7500 ரூபாய் சம்பளத்தில் கூட கணினி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை தமிழக அரசு..
இதே நிலை நிடித்தால் 800பள்ளிகளில் பயிலும் பொதுத் தேர்வு மாணவர்கள் முற்றிலும் ஆசிரியர்கள் இன்றி பொதுத்தேர்வை எதிர்நோக்கும் நிலை உருவாகிவிடும்.
****
வேலையின்றி வாடும்
54,000 கணினி ஆசிரியர் (பட்டதாரி) தற்போதைய நிலை..

1.TET,TRB போன்ற ஆசிரியர் தகுதித் தேர்வு   இல்லை ,

2.DEO,AEEO அடிப்படை கல்வித் தகுவி பி.எட் அந்த தேர்வு எழுத கணினி ஆசிரியர்களை அனுமதி இல்லை..

3.பகுதி நேர சிறப்பாசிரியர் 7700மாத சம்பளத்திலும்  கணினியில் பி.எட் முடித்த ஆசிரியர்களை ஆளும் அரசு நியமிக்கவில்லை...

"ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தி  ஆசிரியர்களை நியமனம் செய்யும் அரசு."

(2012ல் பகுதி நேர சிறப்பு  ஆசிரியர்கள் நியமனத்தில்
12வகுப்பு படித்தவரை கூட  ஆசிரியர்களாக  மாற்றி அழகு பார்த்தது ஆளும் அரசே!
இந்த கொடுமையும் தமிழகத்தில் மட்டும் தான் அதற்காண தகவல் RTI வழங்கப்பட்டுள்ளது)


4.கடந்த வாரம் பெற்றோர் ஆசிரியர்கள்  கழகத்தின் வாயிலாக 7500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்துள்ளனர் அதிலும் கூட கணினி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்க வில்லை தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில்  அதிக காலிப்பணியிடங்கள் உள்ள துறை கணினி ஆசிரியர் துறை மட்டும்  தான் 800 பணியிடங்கள் தற்போது வரை காலியாகவே உள்ளது கணினியை  3பாடமாக வைத்த அரசுக்கு கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை மாணவர்கள் நலன் கருதி பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் நியமிக்க (இதற்காண மனு 23.9.2018 மாண்பமிகு பள்ளிக்கல்வித்தறை அமைச்சர் அவர்களிடம் வழங்கப்பட்டது ஊடகங்களில் PTA  கணினி ஆசிரியர்கள் நியமிப்பதாக பேட்டி கொடுத்த அவர் அந்த வாரமே 26.9.2018 அன்று அரசாணை எண்:619 வெளியிட்டது அதிலும் கணினி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கமால் பொதுத் தேர்வு எழுதும்  மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இன்றி தேர்வு எழுதும் நிலையை உருவாக்கி விட்டது)
கணினி பாடத்தை கலைஞர் கொண்டு வந்த ஒரே காரணத்திற்க்காக கணினி கல்விக்கே வஞ்சகம்செய்துள்ளது ஆளும் அரசு.)


7வருடங்களாக ஒரே துறைக்கு 7அமைச்சரர்களுக்கு  மனுக் கொடுத்தே மாய்ந்துவிட்டது கரங்கள் மட்டும் அல்ல 54000 கணினி ஆசிரியர்கள் குடும்பங்களின் மனமும்   தான்...
****

மாணவர்கள் கல்வி நலன் சார்ந்த

 கோரிக்கையை  ஏற்றுக்கொண்டு பொதுத் தேர்வு  மாணவர்களின்  நலனையை கருத்தில்  கொண்டாவது  மற்ற பாட ஆசிரியர்கள் போன்று காலியாக உள்ள கணினி ஆசிரியர்கள்  பணியிடங்களையும் உடனடியாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வாயிலாக நியமிக்க தமிழக அரசு  உடனடியாக உத்தரவிட வேண்டும்.

திரு வெ.குமரேசன்,
9626545446,
மாநிலப் பொதுச்செயலாளர் ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.655/2014.

Thursday, 20 February 2025

தமிழகத்தில் உள்ள அனைத்து பி.எட் பயின்ற கணினி ஆசிரியர்கள் கவனத்திற்கு..


14663 கணினி ஆசிரியர் பணியிடங்கள்.


  *  6 to 10th 38 மாவட்ட கணினி ஆசிரியர்கள் குழு*

 *38 மாவட்டங்களும்  சங்கமிப்போம்* 


*சென்னை* மாவட்ட6-10 கணினி ஆசிரியர்கள்.

👉https://chat.whatsapp.com/BhqoofJ6kKl316gsPpFhA0


*செங்கல்பட்டு* மாவட்ட கணினி ஆசிரியர்கள்

👉https://chat.whatsapp.com/BzP65ZeO0POAlevA64Mg9a


*ராணிப்பேட்டை* மாவட்ட கணினி ஆசிரியர்கள் 

👉https://chat.whatsapp.com/GWbxfvVA72IJUuhO7DRLTJ


*காஞ்சிபுரம்* மாவட்ட கணினி ஆசிரியர்கள்

👉

https://chat.whatsapp.com/FlbDXPLcH3iL99ldm6LS7x


*திருப்பத்தூர்* மாவட்ட கணினி ஆசிரியர்கள்

👉

https://chat.whatsapp.com/CWAfarg7KkG9u5z3U71Q0x


*திருவள்ளூர்* மாவட்ட கணினி ஆசிரியர்கள்

👉https://chat.whatsapp.com/BIrQudYwSWvD9frcok1p05


*வேலூர்* மாவட்ட6-10 கணினி ஆசிரியர்கள்.

👉https://chat.whatsapp.com/DPPGBS8Wd3E6Xe6joeSrEY


*கள்ளக்குறிச்சி* 6-10மாவட்ட கணினி ஆசிரியர்கள்.

👉https://chat.whatsapp.com/LmrW8XZJqes35D0kre5iy5


*விழுப்புரம்* 6-10மாவட்ட கணினி ஆசிரியர்கள்.

👉

https://chat.whatsapp.com/G7USyGCJ9zG6XZmGZ6VpEU


*திருவண்ணாமலை* 6-10மாவட்ட கணினி ஆசிரியர்கள்.

👉

https://chat.whatsapp.com/CxY5Mh4dOvMJiqacwUQ50W



*சேலம்* மாவட்ட 6-10 கணினி ஆசிரிய்கள்.

👉

https://chat.whatsapp.com/DZt3MmioSJ6FozZNahzuSz

*தர்மபுரி* மாவட்ட 6-10 கணினி ஆசிரிய்கள்.

👉https://chat.whatsapp.com/CISDJwIWZjU67e2Scx821I


*கிருஷ்ணகிரி* மாவட்ட 6-10 கணினி ஆசிரிய்கள்.

👉https://chat.whatsapp.com/IjuDABTxyCS7q74rm8YqTg


*நீலகிரி* மாவட்ட 6-10 கணினி ஆசிரிய்கள்.

👉https://chat.whatsapp.com/Eumawd123Kc5HjBhrXG737


*கோவை* மாவட்ட 6-10 கணினி ஆசிரிய்கள்.

👉https://chat.whatsapp.com/LMuQQhmULn2HZq4aAzoLS0


*திருப்பூர்* மாவட்ட 6-10 கணினி ஆசிரிய்கள்.

👉https://chat.whatsapp.com/J5pgwHYRf40JvrX5Dv6Meg


*ஈரோடு* மாவட்ட 6-10 கணினி ஆசிரிய்கள்.

👉https://chat.whatsapp.com/BufrPCrp8dxAyD5qaKXXYX


*நாமக்கல்* மாவட்ட 6-10 கணினி ஆசிரிய்கள்.

👉https://chat.whatsapp.com/K4buz1TjfXoIy6v4Uvie1E


*கரூர்* மாவட்ட 6-10 கணினி ஆசிரிய்கள்.

👉https://chat.whatsapp.com/Elr6EtqiFav8BSm7qEIsGx


*கன்னியாகுமரி* மாவட்ட 6-10 கணினி ஆசிரியர்கள்.

👉https://chat.whatsapp.com/HpLLmtP2juy3BqJFJ09Fal


*தென்காசி* 6-10மாவட்ட கணினி ஆசிரியர்கள்.

👉https://chat.whatsapp.com/BDGpSbYFNcg1gi6IJlIy1k


*தூத்துக்குடி* மாவட்ட6-10 கணினி ஆசிரியர்கள்.

👉https://chat.whatsapp.com/Img3ZKGCL2UGjJbI6ClPcG


*திருநெல்வேலி* மாவட்ட6-10கணினி ஆசிரியர்கள்.

👉https://chat.whatsapp.com/G6Wby29f6MPGJYYADnKhsq


*ராம்நாடு*  6-10மாவட்ட கணினி ஆசிரியர்கள்.

👉https://chat.whatsapp.com/CIIRnYcPwsTEZPsCeQDFnF


*விருதுநகர்* மாவட்ட6-10 கணினி ஆசிரியர்கள்.

👉https://chat.whatsapp.com/K70l0pV2nBsIHznRlQCkLq


*மதுரை* மாவட்ட6-10 கணினி ஆசிரியர்கள்.

👉https://chat.whatsapp.com/CaartjKTIlC3tA9p80YPfV


*தேனி* மாவட்ட6-10 கணினி ஆசிரியர்கள்.

👉https://chat.whatsapp.com/HRkxvED7q1h2CvxwSNPl1U


*திண்டுக்கல்* மாவட்ட6-10 கணினி ஆசிரியர்கள்.

👉https://chat.whatsapp.com/El6NrgHNAphHbCDYm4Lvb2


*சிவகங்கை* மாவட்ட கணினி ஆசிரியர்கள்.

👉https://chat.whatsapp.com/KofS9KIbUyW0e2uKwaJ2E9


*புதுக்கோட்டை* மாவட்ட கணினி ஆசிரியர்கள்.

👉https://chat.whatsapp.com/L5AHeOV3hh0E9gA7PiC55o


*திருச்சி* மாவட்ட கணினி ஆசிரியர்கள்.

👉https://chat.whatsapp.com/CLH22RWdDImEnwaiYpKl7P


*பெரம்பலூர்* மாவட்ட கணினி ஆசிரியர்கள்.

👉

https://chat.whatsapp.com/KIgn0AKFyvY6CsXOoyDCLL


*அரியலூர்* மாவட்ட கணினி ஆசிரியர்கள்.

👉https://chat.whatsapp.com/HCU8dVF4fomCG8NXv27RDf


*தஞ்சாவூர்* மாவட்ட கணினி ஆசிரியர்கள்.

👉https://chat.whatsapp.com/I5oLQkgmLiv9hYI8DJyGir


*திருவாரூர்* மாவட்ட கணினி ஆசிரியர்கள்.

👉https://chat.whatsapp.com/L9ICjRKFnHg2tjcstUa00k



*மயிலாடுதுறை* மாவட்ட6-10 கணினி ஆசிரியர்கள்

👉https://chat.whatsapp.com/CAgSaiCdK2D0LTSFID5bKV


*நாகை* மாவட்ட6-10 கணினி ஆசிரியர்கள்.

https://chat.whatsapp.com/DomoDoT00Nj6rysrGt2OKH


*கடலூர்* மாவட்ட6-10 கணினி ஆசிரியர்கள்.

👉https://chat.whatsapp.com/Be4P3Dtea5j4iKeEYnHajD


✍️ *குறிப்பு*


குழுவில் உள்ளவர்கள் கவனத்திற்கு 38 மாவட்டங்களைச் சார்ந்த கணினி ஆசிரியர் தங்கள் மாவட்ட குழுவில் மட்டும் இணையவும். மற்ற மாவட்ட குழுவில் இணைய வேண்டாம் என்று தங்களை பொறுப்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

*நமது இலக்கும்  ஒன்றுதான்*

அனைவரும்

 இணைவீர்!🤝

இணைப்பீர்!!🤝🤝

வாழ்வில் உயர்வீர்!!!🤝🤝🤝


🙏வெ.குமரேசன்,

962654545446.

*TNBEDCSVIP's*

Thursday, 13 February 2025

தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு "கணினி அறிவியல் கல்விக்காக" மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி நிதி எங்கே?” - அண்ணாமலை கேள்வி.

 சென்னை: தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்துக்காக மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.



இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது குழந்தைகள் அனைவருக்கும் தரமான, சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2018-2019 ஆம் ஆண்டு, சமக்ர சிக்‌ஷா திட்டத்தைக் கொண்டு வந்தார். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றான, தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி (ICT) தொடர்பாக, சில விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது.

இதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், ஆறாம் வகுப்பிலிருந்து. 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், தனிப் பாடமாக இடம்பெற வேண்டும் என்றும், இதற்காக, ஒவ்வொரு பள்ளிகளிலும், ICT Labs அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவற்றை அமைக்க, மூலதனச் செலவுகளுக்காக, ரூ.6.40 லட்சமும், இந்தப் பாடத்தைப் பயிற்றுவிக்கும் பயிற்றுனருக்கு மாத ஊதியமாக ரூ.15,000 மற்றும் இதர செலவுகள் சேர்த்து, ஆண்டுக்கு ரூ. 2.50 லட்சமும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.


இதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி (ICT) பாடத்திட்டத்துக்காக, மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கியுள்ள நிதி ரூ.1,050 கோடி. ஆறாம் வகுப்பிலிருந்து, 12 ஆம் வகுப்பு வரை, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்பது தனிப்பாடமாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில், அறிவியல் பாடத்தின் ஒரு பகுதியாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. இதனால், சிறு வயதிலிருந்தே, தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் நமது குழந்தைகள் சிறந்து விளங்க வேண்டும் என்ற இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமே சிதைந்திருக்கிறது.


டெல்லி, தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களில் எல்லாம், ஆறாம் வகுப்பில் இருந்தே பாடத்திட்டத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்பது தனிப்பாடமாக அமைக்கப்பட்டுள்ளது. திமுகவின் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் கேரள மாநிலத்தில், தமிழ் உட்பட மும்மொழிகளில், ஆறாம் வகுப்பில் இருந்தே தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்விப் பாடம் உள்ளது. குறைந்தபட்சம், கேரள மாநிலத்திடம் இருந்து, தமிழில் இருக்கும் அந்தப் பாடநூலையாவது வாங்கி, நமது ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குக் கொடுத்திருக்கலாம்.


ஆனால், திமுக செய்திருப்பது என்ன? இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் செயல்பட்ட தன்னார்வலர்களை, கேரள மாநில அரசு நிறுவனமான Keltron நிறுவனத்தின் கீழ், மாதம் ரூ.11,500 ஊதியத்தில், அலுவலகப் பணியாளர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பயிற்றுனர் என்ற புதிய பணியிடத்தை உருவாக்கிப் பணியில் அமர்த்தியுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு, உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி, கணினி அறிவியல் ஆசிரியர்கள், B.Ed பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியலில் முறையான கல்வித் தகுதி பெறாதவர்களை, அலுவலகப் பணியாளர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பயிற்றுனர் என்ற பெயரில் நியமித்து உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை மீறியிருக்கிறது திமுக அரசு.


தமிழகம் முழுவதும், கணினி பயிற்சி பெற்ற B.Ed பட்டதாரிகள் சுமார் 60,000 பேர் இருக்கையில், அவர்களுக்குப் பணி நியமனம் வழங்காமல் வஞ்சித்திருப்பது ஏன்? கடந்த மூன்று ஆண்டுகளில், சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்திற்காக, மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது?

அரசு மற்றும் அரசு உதவி பெறும் எத்தனை பள்ளிகளில், ICT Labs செயல்பாட்டில் உள்ளது? ஏன் ஆறாம் வகுப்பிலிருந்தே, தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி, தனிப் பாடமாக அமைக்கப்படவில்லை? இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்குத் கடமைப்பட்டிருக்கிறார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


News Source:

Hindu tamil chennai:

https://www.hindutamil.in/news/tamilnadu/1350690-where-is-the-rs-1-050-crore-provided-by-the-central-government-for-the-information-technology-curriculum-annamalai.html

Tuesday, 20 August 2024

அரசு பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படும் கம்ப்யூட்டர் கல்வி!


கூகுளின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தொடங்கி உலகின் பல டெக் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் தமிழர்கள் கோலோச்சுகிறார்கள். சென்னை டைடல் பார்க்கும், ராஜீவ்காந்தி சாலையெங்கும் நிறைந்திருக்கும் நிறுவனங்களும், தமிழகம் முழுக்க தொடங்கப்படும் மினி டைடல் பார்க்குகளும் கம்ப்யூட்டர் நிபுணர்களின் தேவையைப் பறைசாற்றுகின்றன. இந்தியாவிலேயே அதிகம் பேர் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது.


சரி, இவர்களுக்கு கம்ப்யூட்டர் குறித்த அடிப்படைகளைத் தர வேண்டிய பள்ளிகள் எப்படி இருக்கின்றன? 'குழந்தைகளை கோடிங் கிளாஸூக்கு அனுப்புங்கள்' என்று எஜூடெக் நிறுவனங்கள் ஒருபக்கம் கல்லா கட்டுகின்றன. தனியார் பள்ளிகள் இந்த ரேஸில் முந்திக்கொள்கின்றன அடித்தட்டுக் குழந்தைகளின் ஒற்றை நம்பிக்கையான அரசுப் பள்ளிகளிலோ நிலைமை பரிதாபம்.


"பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணையாததால் மத்திய அரசு, தமிழகத்துக்குத் தரவேண்டிய சமக்ர சிக்ஷா திட்ட நிலுவைத் தொகையைத் தரமறுக்கிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ், கம்ப்யூட்டர் பயிற்றுவிப்பதற்குத் தரப்பட்ட  நிதியை வைத்துத் தமிழக அரசு EMIS ஆபரேட்டர்களைத் தேர்வு செய்துவிட்டது" என்று குமுறுகிறார்கள், தமிழகம் முழுவதும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் பி.எட் முடித்துவிட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிக்குத் காத்திருக்கும் ஆசிரியர்கள்.


""அண்ணாச்சி கடை முதல் அம்பானி கடை வரை எல்லா இடங்களிலும் வந்துவிட்டது. கம்ப்யூட்டர்,"".


கையிலிருக்கும் மொபைலில் ஒரு வாழ்க்கையையே வாழ்ந்துவிடலாம். இப்படி எல்லாமே நவீனமாகிவிட்ட காலத்திலும் நம் அரசுப்பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை மாணவர்கள் கம்ப்யூட்டர் பற்றி பெரிதாக எதையும் படிப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் 10-ம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் என்று ஒரு பாடத்திட்டமே இல்லை. அறிவியல் பாடப் புத்தகத்தில் மூன்று பக்க அளவில் ஒரு பாடமாக மட்டுமே இருக்கிறது கம்ப்யூட்டர்.


பிளஸ் ஒன்,பிளஸ்டூவில் மட்டும் விருப்பப் பாடங்களில் ஒன்றாக கம்ப்யூட்டரை வைத்திருக்கிறோம். எஸ்.எஸ்.ஏ திட்டம் மூலம் எடுக்கப்பட்ட 2400 பகுதி நேர கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு திரைப்படம் திரையிட்டுக் காட்டும் பணியையும் பள்ளியில் இருக்கும் எழுத்துப் பணிகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.



கம்ப்யூட்டர் சார்ந்த தகவல் தொழில்நுட்பக் கல்வியைத் தொடக்கக் கல்வி முதல் பிளஸ்டூ வரைக்கும் எல்லா மாணவர்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்காக சமக்ர சிக்ஷா திட்டத்தின் ஒரு அங்கமாக ICT (Information and Communications Technology) என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் நவீன கம்ப்யூட்டர் லேப் அமைக்க ரூ. 6.8 லட்சமும், அதைப் பயிற்றுவிக்கும் கணினிப் பயிற்றுநருக்கு (Computer Instructor) ஆண்டுக்கு ரூ.1.8 லட்சமும் வழங்கப்படுகிறது.


மாநிலங்கள் இந்த நிதியைப் பெறுவதற்கு மத்திய அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கம்ப்யூட்டருக்கு என தனிப்பாடப்புத்தகத்தை அந்தந்த மாநில பாடநூல் நிறுவனங்கள் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கவேண்டும். தலைமை ஆசிரியர்கள் தினசரி பாடவேளைகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தைச் சேர்ப்பதை உறுதி செய்யவேண்டும். தகுதி வாய்ந்த கணினிப் பயிற்றுனர்கன் மாணவர்களுக்கு அதைப் பயிற்றுவிக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனிப் பாடத்திட்டத்தை ஐ.சி.டி வகுத்துத் தந்துள்ளது.



கேரளாவில் 2016 முதலே ஒன்றாம் வகுப்பில் இருந்து கம்ப்யூட்டர் சேர்த்துவிட்டார்கள். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திலும் தேர்ச்சி பெறவேண்டும். 6-ஆம் வகுப்புக்கு 56 பக்கத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் 61 பக்கத்திலும் கர்நாடகாவில் 139 பக்கத்திலும், டெல்லியில் 146 பக்கத்துக்கும் 6-ம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பிளஸ்ஒன், பிளஸ்டூவில் கணிதம் கம்ப்யூட்டர் சயின்ஸ், காமர்ஸ் + கம்ப்யூட்டர் சயின்ஸ் என இரண்டு பிரிவுகள் உண்டு. இந்தப் பாடங்களுக்கென எல்காட் நிறுவனம் மூலம் பி.ஜி.டி.சி.ஏ படித்த 1,880 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். நான்கைந்து ஆண்டுகள் கழித்து இவர்களை நிரந்தரப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட தேர்வில்  652 பேர் தேர்ச்சி பெறவில்லை. அதனால் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், இனிமேல் தனியாருக்கு ""டெண்டர் விடாமல் அரசே கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்ய வேண்டும்.""

 கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து பி.எட் முடித்தவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமனம் செய்யவேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பிறகு பணி நீக்கம் செய்யப்பட்ட இடங்களுக்கு பதிவுமூப்பு அடிப்படையில் கம்பயூட்டர் சயின்ஸ் மற்றும் பி.எட் முடித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். 

பிறகு, 2019-ல் 824. கம்யூட்டர் ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டார்கள். இப்போது மேல்நிலைப்பள்ளிகளில் மொத்தம் 2704 கணினி ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பத்தாம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் பாடத்திட்டமே இல்லாத சூழலில், மத்திய அரசின் ஐ.சி.டி திட்டத்தின் மூலம் 2019-ல் 6,454 உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் தொடங்கப்பட்டன. உயர்நிலைப் பள்ளிக்கு 10 கம்ப்யூட்டர்கள், மேல்நிலைப்பள்ளிக்கு 20 கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டன. மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் இந்த ஆய்வகத்தை நிர்வகித்து பயிற்றுவித்தார்கள். ஐ.சி.டி விதியின்படி, உயர்நிலைப்பள்ளிகளுக்கும் பாடப்புத்தகம் வழங்கி பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும் ஆனால் எதுவுமே நடக்கவில்லை.


பள்ளிகளின் ஒட்டுமொத்த செயல்பாடு களையும் EMIS என்னும் இணையதளம் மூலம் ஒருங்கிணைக்கிறது பள்ளிக்கல்வித்துறை. வருகைப்பதிவு முதல் மாணவர்களின் அங்க அடையாளங்கள் வரை எல்லா விவரங்களையும் இந்தத் தளத்தில் பதிவு செய்யவேண்டும். இந்த டேட்டா என்ட்ரி வேலையச் செய்ய பள்ளியில் ஊழியர்கள் இல்லாதால் ஆசிரியர்களே செய்ய வேண்டியிருந்தது. இது மிகப்பெரும் நெருக்கடியை உருவாக்குவதாக ஆசிரியர்கள் தரப்பில் தொடர்ந்து புகார் கூறப்பட்டது.


இந்தச் சிக்கலைத் தீர்க்க டேட்டா என்ட்ரி பணிக்காக தனியார் நிறுவனம் மூலம் 6,000 தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. ஒரு ஊழியர் இரண்டு அல்லது மூன்று பள்ளிகளின் டேட்டா என்ட்ரி பணிகளைக் கவனிப்பார் என்றும் கூறப்பட்டது.


இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐசிடி திட்டத்தின் மூலம் 8,209 அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளில் ஆய்வகம் அமைக்க, கேரள அரசின் கெல்ட்ரான் நிறுவனத்துக்கு ரூ1,076 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அதோடு சேர்த்து 8,209 தற்காலிக ஊழியர்களைத் தேர்வு செய்யும் பணியும் இந்த நிறுவனத்துக்குத் தரப்பட்டது. கெல்ட்ரான் நிறுவனம் இந்தப்பணியை அனலாக் அண்ட் டிஜிட்டல் லேப்"என்ற நிறுவனத்துக்கு துணை ஒப்பந்தம் வழங்கியுள்ளது. அதன்மூலம் 6,890 பேர் தேர்வு செய்யப்பட்டு பணியில் இணைத்துவிட்டார்கள்.


மத்திய அரசின் ஐ.சி.டி. விதிமுறைப்படி கம்ப்யூட்டர் ஆய்வகம் என்பது மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பாடம் கற்றுக் கொடுப்பதற்கான இடம். இதற்கென தனி பாடநூலை உருவாக்க வேண்டும் அதைப் பயிற்றுவிக்க தகுதி வாய்ந்த பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும். பயிற்றுநர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்க வேண்டும். 



தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தில் பணியாற்றியவர்கள், பிளஸ்டூ முடித்தவர்கள் கம்ப்யூட்டர் சாராத பட்டப் படிப்புகளை முடித்தவர்களும் இதில் இருக்கிறார்கள். இவர்களுக்கு மாதச் சம்பளமாக 11,500 நிர்ணயிக்கப்பட்டு பிடித்தம் போக 9,700 ரூபாய் வழங்கப்படுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எட் முடித்தவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் ஐ.சி.டி விதிமுறைப்படி ஆசிரியர்களை நியமிக்காமல் அந்த நிதியில் EMIS டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்களை நியமித்திருக்கிறார்கள் என்பதுதான் கம்ப்யூட்டா ஆசிரியர்களின் குற்றச்சாட்டு

"2005 முதல் அரசின் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பி.எட் முடித்துவிட்டு வேலை கிடைத்துவிடும் என்று பல ஆயிரம் பேர் காத்திருக்கிறோம். EMIS டேட்டா என்ட்ரி பணி என்று கல்வித்துறை செயலரும் அமைச்சரும் அறிவித்திருந்ததால் நாங்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் திடீரென்று, ஆய்வக மேலாளர் மற்றும் பயிற்றுநர்கள் (Administrator cum Instructor) என்ற பெயரில் அறிவித்துவிட்டு மறுநாள் தேர்வு வைத்துவிட்டார்கள். முறைப்படி விண்ணப்பித்தவர்களுக்குக்கூட தேர்வுக்கான லிங்க அனுப்பப்படவில்லை. 


இவர்களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகள் என்று தரப்பட்டுள்ள 12 பொறுப்புகளில் ஒன்றில்கூட கம்ப்யூட்டர் பயிற்றுவிப்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. 'EMIS & UDISE+  சார்ந்த தரவுகளின் பதிவுகளை பள்ளிகளுக்கு மேற்கொள்வது இவரது பொறுப்பு என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.


மத்திய அரசை ஏமாற்ற இந்தப்பணிக்கான பெயர் மட்டும் (Administrator cum Instructor) வைத்துவிட்டார்கள். கம்ப்யூட்டர் பாடம் நடத்துவதற்காக தரப்பட்ட நிதியை EMIS ஆப்ரேட்டர் பணிக்குப் பயன்படுத்திவருகிறது. தமிழக அரசு" என்கிறார் தமிழ்நாடு கணினி அறிவியல் பி.எட் வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் குமரேசன்.


இது தொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் ஏராளமான தகவல்களைப் பெற்றுள்ளார் குமரேசன், "2022-22ம் ஆண்டில் ஐ.சி.டி. திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 1,172 முழுநேர கணினிப் பயிற்றுநர்கள், 763 பகுதிநேர கணினிப் பயிற்றுநர்கள் பணியில் இருப்பதாகக் கூறி பணம் பெற்றுள்ளது தமிழக அரசு 1,172 கணினிப் பயிற்றுநர்கள் என்று இவர்கள் காட்டுவது மேல்நிலையில் பணியாற்றும் ஆசிரியர்களைதான். அவர்கள் பள்ளிக்கல்வித்துறையின் சம்பளம் பெறும் நிரந்தர ஆசிரியர்கள். இவர்களைக் காட்டி கணினி பயிற்றுநர்களுக்கான சம்பளமாக ஐசிடி திட்டத்தின் கீழ் சமக்ரா சிக்ஷா நிதியை தமிழக அரசு பெற்றுள்ளது.


உயர்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்களே இல்லை. கம்ப்யூட்டர்கள் மாணவர்களுக்குப் பயன்படுவதேயில்லை. ஆசிரியர்களே பயன்படுத்துகிறார்கள்.


 பாடப்புத்தகம் இல்லை, பாடவேளையும் இல்லை, பயிற்றுநர்களும் இல்லை என்றால் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பற்றிய புரிதலே இருக்காது. நிதியில்லை, அதனால் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமிக்கவில்லை என்றது தமிழக அரசு.  இப்போது மத்திய அரசே நிதி தரும்போது அதையும் வாங்கி வேறு பணிகளுக்குப் பயன்படுத்துவது சரியல்ல என்கிறார் குமரேசன்

""தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வருப்பு முதலே கம்பயூட்டருக்கு தனிப் பாடப்புத்தகம் வழங்குகிறார்கள் அரசுப்பள்ளியில் படிக்கும் குழந்தைக்கு பத்தாம் வகுப்பு வரைக்கும் அதற்கான வாய்ப்பே இல்லை என்பது ஆகப்பெரிய துயரம்.""


அதற்கெனவே மத்திய அரசு தரும் நிதியை வேறு பணிகளுக்குப் பயன்படுத்துவது சரியா?   சமக்ர சிக்ஷா திட்ட இயக்குநர் ஆரத்தியிடம் இதுகுறித்துப் பேசினோம்.


"தற்போது பணிக்கு எடுக்கப் பட்டவர்கள் ஐ.சி.டி திட்டத்தின் கீழ் தான் எடுக்கப்பட்டார்கள். அவர்கள் ஆய்வகத்தை நிர்வகிக்க வேண்டும். SEART உருவாக்கித் தரும் பாடத்திட்டத்தை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். அதற்கான பயிற்சியை அவர்களுக்குத் தருவோம் அவர்கள் ஆசிரியர்கள் அல்லர் ஆனாலும் குறைந்தபட்சம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்.: தெரிந்தவர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளார்கள். இந்த ஊழியர்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கெல்ட்ரான் நிறுவனம்தான் அவர்களைத் தேர்வு செய்துள்ளது. மூன்று விதமான டெஸ்ட் வைத்தே எடுக்கப்பட்டுள்ளார்கள். இது எல்லா மாநிலங்களிலும் இருக்கும் நடைமுறை தான்.   SCERT மூலம் கம்ப்யூட்டர் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் ரெடியாகிவிடும் ஐ.சி.டி திட்டத்தில் இந்தப்பணிக்கு இவ்வளவு தொகை என்றெல்லாம் பிரித்துத்தரமாட்டார்கள். அந்தந்த மாநிலங்களின் தேவைக்கேற்ப அவர்கள் தரும் நிதியைச் செலவு செய்து கொள்ளலாம்"  என்றார் அவர்.

மத்திய அரசின் ஐசிடி மூலம் தமிழகத்தில் இப்போது அரசு, அரசு உதவிபெறும் நடுநிலை பள்ளிகளில் 8,209 ஆய்வகங்கள், அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் 5,815 ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 14,000 பயிற்றுநர்களுக்கான சம்பளத்தையும் மத்திய அரசு தருகிறது அதை தகுதியான கம்ப்யூட்டர் ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பியிருக்கலாமே! கம்ப்யூட்டர் என்பது தவிர்க்க முடியாத அங்கமாகிப்போனபிறகும் வகுப்பறைகளில் தம் பிள்ளைகளுக்கு அதை மறுப்பது சரிதானா!"


வெ.குமரேசன்,

மாநிலப் பொதுச் செயலாளர் ,

9626545446 ,

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.


News source:

ஆனந்த விகடன் ஆசிரியர் நீலகண்டன்.https://www.vikatan.com/education/computer-education-denied-for-government-school-students

POPULAR POSTS