மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Saturday 2 June 2018



குரூப்-2 தேர்வு உட்பட 6 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஜூன் மாதம் 15-ம் தேதிக்குள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி தெரிவித்தார்.

தமிழக அரசுப் பணியில் பல்வேறு துறைகளுக்கான ஊழியர்களும், அலுவலர்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.


ஓராண்டில் என்னென்ன பணிகளுக்கு என்னென்ன தேர்வுகள் நடக்கின்றன? அதற்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும்? தேர்வுகள், தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? என்பன உள்ளிட்ட விவரங்களை கொண்ட வருடாந்திர தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில், 2018-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு காலஅட்டவணையில் இடம்பெற்ற பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகள் திட்டமிட்டபடி குறித்த காலத்தில் வெளியிடப்படவில்லை

 ஃபாரஸ்ட் அப்ரடண்டீஸ் தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் 3-வது வாரத்திலும், உதவி சிஸ்டம் என்ஜினியர், உதவி சிஸ்டம் அனலிஸ்ட் தேர்வுகளுக்கான அறிவிப்பு ஏப்ரல் முதல் வாரத்திலும், மீன்வள ஆய்வாளர், மீன்வள உதவி ஆய்வாளர் பணி தேர்வுகளுக்கான அறிவிப்பு ஏப்ரல் 2-வது வாரத்திலும், அரசு உதவி வழக்கறிஞர் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 3-வது வாரத்திலும், குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு மே முதல் வாரத்திலும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இதுவரையில் அந்த தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.

வருடாந்திர தேர்வு காலஅட்டவணையில் இடம்பெற்றுள்ள தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்து டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "வருடாந்திர தேர்வு காலஅட்டவணையில் இடம்பெற்று மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டிய அனைத்து தேர்வுகளுக்கான அறிவிப்புகளும் ஜுன் மாதம் 15-ம் தேதிக்குள் வெளியிடப்பட்டுவிடும்.

அதன்பிறகு இதர தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வருடாந்திர தேர்வு காலஅட்டவணையில் உள்ளபடி குறித்த காலத்தில் வெளியிடப்படும்" என்றார்.

கலந்தாய்வுக்கு குறைந்த எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் இன்ஜினியரிங் கல்லூரிகளில் 50% இடங்களே நிரம்ப வாய்ப்பு..


கடந்த ஆண்டு, ஒரு லட்சத்து 76 ஆயிரம் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள்  விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த மாணவர்களில் சுமார் 2 ஆயிரம் மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

 ஒரு லட்சத்து 46 ஆயிரம்  மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். 30 ஆயிரம் இடங்களில் யாரும் விண்ணப்பிக்கவில்லை. இந்த நிலையில்,  இன்ஜினியரிங் கலந்தாய்வின் முடிவில், 89 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன.


 மொத்த இடங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில்  மாணவர்கள் சேரவில்லை.

இந்த ஆண்டு முழுமையாக இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுவதால் தகுதியுள்ளவர்களின் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதனால்  விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க முடியும்.

முக்கிய அரசுக்கல்லூரிகள் அல்லது பிரபலமான தனியார்  கல்லூரிகளில் சேர்ந்தால் மட்டுமே இன்ஜினியரிங் படித்து முடித்தும் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்கும் என்று  மாணவர்கள், பெற்றோர் நினைக்கிறார்கள்.

 இதனால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும், 50 சதவீத இடங்கள் காலியாக இருக்க வாய்ப்புள்ளதாக  இன்ஜினியரிங் பேராசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் அலைமோதல்: `மெரிட்’ இருந்தும் `சீட்’ இல்லை


கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவ-மாணவிகள் சேர அதிக ஆர்வம் காட்டுவதால் பல கல்லூரிகளில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு மெரிட் இருந்தும் சீட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளாக கலை அறிவியல் கல்லூரிகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.

 15 ஆண்டுகளுக்கு முன்னர் பொறியியல் கல்லூரிகள் மீது ஆர்வம் அதிகம் இருந்தது. அப்போது ஏராளமான புதிய பொறியியல் கல்லூரிகளும் தோன்றின.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை தோராயமாக 650ஐ கடந்தது. இந்திய அளவில் தமிழகத்தில் ஏராளமான பொறியியல் பட்டதாரிகள் தோன்றினார்கள்.

 அவர்களுக்கு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்புகள் தேடிவந்தன.

இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக பொறியியல் கல்வி மீதான ஆர்வம் குறைந்து வருகிறது.

 அதே நேரத்தில் மீண்டும் கலை அறிவியல் பட்டப்படிப்புகளை பயில மாணவர்கள் விரும்பத் தொடங்கினர். இதனால் இக்கல்லூரிகளில் இடம் பிடிக்க போட்டி அதிகரித்துள்ளது.

பல கல்லூரிகளில் 2 ஷிப்ட் முறை அறிமுகப்படுத்திய பின்னரும் 2 ஷிப்டுகளிலும் சேர்ந்து பயில மாணவர்கள் அலைமோதுகின்றனர்.

 தனியார் பள்ளிகளில் 2ம் ஷிப்ட் சுயநிதி பிரிவாக செயல்படுகிறது. இதில் பயில கல்விக்கட்டணம் முதல் ஷிப்டை விட சில மடங்கு அதிகமாக உள்ளது.

இந்த சீட்டுகளை முதலில் நிரப்ப சில கல்லூரிகள் ஆர்வம் காட்டுகின்றன. ஆயினும் இதில் இடம் கிடைத்தாலும் பரவாயில்லை என்ற மனப்பான்மையுடன் இப்பிரிவிலும் ஏராளமானோர் விண்ணப்பிக்கின்றனர்.

இந்த ஆண்டு பல அறிவியல் கலைக்கல்லூரிகளில் பிளஸ்2 ரிசல்ட் வந்த 2 நாட்களுக்குள் 4 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை விண்ணப்பங்கள் குவிந்தன. தோராயமாக 65 இருக்கைகளுக்கு 500 முதல் 600 பேர் போட்டிபோடும் நிலை உருவானது.

குறிப்பாக பி.காம், பிஎஸ்சியின் முக்கிய பாடப்பிரிவுகள் மற்றும் பிஏ ஆங்கில இலக்கியம் போன்ற பாடப்பிரிவுகளில் இடம் பிடிக்க போட்டி கடுமையாக இருந்தது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் போட்டி மேலும் அதிகமாக உள்ளது. இங்கு கலை அறிவியல் பட்டம் பெற அதிக செலவு கிடையாது.

பெற்றோர் ஆசிரியர் கழக நிதி, போன்றவைகளுக்காக சில கல்லூரிகளில் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.2 ஆயிரம் பெறப்படுகிறது. இங்கு பாடப்பிரிவுகளில் மட்டுமின்றி அரசு மாணவர் விடுதிகளில் சேரவும் போட்டி உள்ளது.

இதனால் ஒற்றை சாளரமுறையில் மாணவர்களின் மதிப்பெண், இடஒதுக்கீட்டு பிரிவு உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி சேர்க்கை நடத்துகின்றனர்.

இவ்வாறு பல கோணங்களில் மாணவ மாணவிகள் சேர்க்கை நடத்தும் நிலையில் போட்டி அதிகமாக இருப்பதால் உச்சபட்ச மதிப்பெண் எடுத்தவர்கள்கூட அவர்கள் விரும்பும் கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்காமல் திண்டாடும் நிலை உள்ளது.

95 சதவீதத்திற்குமேல் மதிப்பெண் எடுத்தவர்கள் நெல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் சில பாடப்பிரிவுகளுக்கு இருக்கிற சீட் எண்ணிக்கையை விட அதிகமானோர் விண்ணப்பித்து இருந்ததால் மதிப்பெண் மெரிட் உள்ள அவர்களுக்கு அந்த கல்லூரியில் இடம் கொடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 போட்டி அதிகமாக இருப்பதால் பரிந்துரைகள், சிபாரிகள் எடுபடுவதில்லை.

 இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில் கலை அறிவியல் படிப்பு மீதான இந்த ஆர்வம் மேலும் சில ஆண்டுகளுக்கு தொடரலாம். அதற்கேற்ப உயர்கல்வித்துறையினர் கண்காணித்து உரிய கல்வி வசதிகளை மேம்படுத்தவேண்டும் என்றனர்.


சீட் எண்ணிக்கை உயருமா?

கலை அறிவியல் படிப்புகளுக்கு போட்டி அதிகமாக இருப்பதால் அதிக மதிப்பெண் எடுத்தும் ஏழை மாணவ-மாணவிகள் சீட் கிடைக்காமல் அல்லாடுகின்றனர்.

 இவர்கள் தனியார் கல்லூரிகளில் அதிக பணம் கொடுத்து சேர வசதியில்லாத நிலையில் உள்ளனர்.

 எனவே போட்டி அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முக்கிய பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான சீட் எண்ணிக்கையை அரசு உயர்த்தி உத்தரவிடவேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Friday 1 June 2018

தமிழக அரசு அறிவிப்பு: ELCOT மூலம் பயோமெட்ரிக் முறையை அமல் படுத்துகிறது



தமிழக அரசு அறிவிப்பு:

ஜூலை முதல் வாரத்தில் ELCOT மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல் படுத்துகிறது.

முதல் சுற்றில் ஆசிரியர்களுக்கு மட்டும் பயன்படும் வகையில் செயல்படுத்தப் பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆசிரியர்கள் பயன்படுத்துவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைக் களைந்த பின்னர் 2ஆம் பருவம் முதல் அதே மெஷினில் EMIS எண்ணை இணைத்து மாணவர்களுக்கும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே செவிலியர்களுக்கு இம்முறையிலான வருகைப் பதிவு முறை பின்பற்றப்படுகிறது.

கணினி இயக்க தெரியாத அமைச்சர்களுக்கு 'கல்தா' : நேபாள பிரதமர் அதிரடி



காத்மண்டு : 6 மாத காலத்திற்குள் லேப்டாப் இயக்க கற்றுக் கொள்ளாத அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என நேபாள பிரதமர் சர்மா ஒலி எச்சரித்துள்ளார்.

இரண்டாவது முறையாக நேபாள பிரதமராக பதவியேற்றுள்ள அவர், அலுவலகத்தை முற்றிலும் கணினிமயமாக்க முடிவு செய்துள்ளார். தேசிய ஆசிரியர் கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசிய சர்மா ஒலி, அலுவலகப் பணிகளை முற்றிலும் கணினிமயமாக்குவது தொடர்பாக ஏற்கனவே அமைச்சர்களுடன் பேசி முடிவு செய்து விட்டதாக தெரிவித்தார்.

மேலும், 6 மாத காலத்திற்குள் லேப்டாப்களை இயக்க தெரியவில்லை என்றால் , எந்த அமைச்சராக இருந்தாலும் பிரியா விடை கொடுத்து அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று எச்சரித்தார்

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்: விரைவில் வழங்க ஏற்பாடு


தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்னும் சில தினங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 16-ஆம் தேதி வெளியிடப்பட்டன.


 எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு மே 6-ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட உள்ளன.


 இந்நிலையில் எம்.பி.பி.எஸ். பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே அதிகரித்துள்ளது.
 இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை உயரதிகாரி கூறியது:


 மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல் குறிப்பேடு தமிழக அரசின் ஒப்புதலுக்கு இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. அதனை உடனடியாகச் சமர்ப்பிக்கும்படி மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு தினங்களில் குறிப்பேடு சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கு அரசு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 தகவல் குறிப்பேடுக்கான ஒப்புதல் பெற்ற பிறகு விண்ணப்ப விநியோகம் தொடங்கும். எனவே, இன்னும் சில தினங்களிலேயே விண்ணப்ப விநியோகம் தொடங்கும்.

தொடக்கக்கல்வி - 2018-19 கல்வியாண்டு கல்வி செயல்பாடுகள்

*SABL இல்லை.

*படிநிலை(Ladder) இல்லை

 *அடைவுத்திறன் அட்டவணை இல்லை.

*1 முதல் 3 வகுப்புகள் PILOT METHOD.

*4 முதல் 5 வகுப்புகள் SALM METHOD.

*ஈராசிரியர் பள்ளிகள் 1 -3 வகுப்புகள் -ஒருவர் 4-5 வகுப்புகள்-ஒருவர்

*மூன்றாசிரியர் பள்ளிகள் 1-2 வகுப்புகள் ஒருவர் 3-4 வகுப்புகள் ஒருவர் 5 ம் வகுப்பு ஒருவர்.
3ம் வகுப்பில் மட்டும் எண்ணிக்கை அதிகமாக இருப்பின் - ஒருவர் 4-5 வகுப்பில் ஒருவரும் எடுக்கலாம்.

 *1 முதல் 3 வகுப்புகள் வாரந்தோறும் பாடக்குறிப்புகள் எழுத வேண்டும். (Pilot Method)

*9.30 முதல் 11.00 மணி வரை முதல் பாடவேளை

*11.10 முதல் 12.40 மணி வரை இரண்டாம் பாடவேளை

*1.15 முதல் 1.50 மணி வரை கல்வி இணைசெயல்பாடுகள்

*2.00மணி முதல் 3.20 மணி வரை மூன்றாம் பாடவேளை

*3.30 மணி முதல் 4.10 வரை யோகா,Phonetics CD பயன்பாடு.

 *ஒவ்வொரு பாடத்திற்கும் துணைக்கருவிகள் கட்டாயம்.

*4 முதல் 5 வகுப்புகள் SALM முறைப்படி பாடக்குறிப்புகள் வாரந்தோறும் எழுத வேண்டும்.

*CCE சார்ந்த அனைத்து மதிப்பீடுகளும் உண்டு.( FA(a) , FA(b),SA )


அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2,283 Smart வகுப்புகள்:முதலமைச்சர் அறிவிப்பு



அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப் பிரிவுகள்..! முதலமைச்சர் அறிவிப்பு

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2 ஆயிரத்து 283 ஸ்மார்ட் வகுப்பறைகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப் பிரிவுகள் உள்ளிட்ட அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் வெளியிட்டார்.

சட்டப் பேரவை விதி எண்.110-ன் கீழ், முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, 2,283 ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும். அனைத்து ஆசிரியர்களுக்கும் பணியிடை பயிற்சி, மாவட்டத்திற்கு ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும்.

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கான திறன் அட்டையில் ஆதார் எண் உள்ளிட்டவை இணைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட திறன் அட்டையாக வழங்கப்படும். ((உயர்கல்வித் துறை)) இதேபோல, 41 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அனைத்தும்  நடப்பு கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும்.  ((சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை))   வனத்துறை பணியாளர்களுக்கு காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கும், காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்பதற்கும் பயிற்சி அளிக்கப்படும்.

வேளச்சேரியில் அமைந்துள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வனத்துறை தலைமை அலுவலகக் கட்டடம் 70,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இரு தொகுதி கட்டடங்களாக 30 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். ((தகவல் தொழில் நுட்பவியல் துறை))தொழில் முனைவோர்களுக்கு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் அதனைச் சார்ந்த வணிகத்தை தொடங்க ஏதுவாக, கோவை மாவட்டம்,  விளாங்குறிச்சியில் எல்கோசெஸ்ஸில் 2 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் திருச்சியில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், இரண்டு தகவல் தொழில்நுட்பக் கட்டடங்கள் கட்டப்படும்.

தமிழ்நாடு அரசின் தகவல் தொழில் நுட்பவியல் உட்கட்டமைப்புகளை இணைய அச்சுறுத்தல்கள் மற்றும்  தடைகளிலிருந்து கண்காணித்து, தடங்கலற்ற மற்றும் பாதுகாப்பான இணைய சேவையினை வழங்கும் பொருட்டு "தமிழ்நாட்டிற்கான இணைய பாதுகாப்பு கட்டமைப்பு திட்டம்" 21 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எல்காட் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் டிஜிட்டல் கேபிள் டிவி சேவையை மேம்படுத்தும் விதமாக, ஹெச்டி செட்டாப் பாக்ஸ் வாயிலாக சேவை வழங்கப்படும் என்ற அறிவிப்புகளையும் விதி எண்.110-ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்டார்

Thursday 31 May 2018

சாதி மதம் குறிப்பிடாமல் பள்ளியில் சேர்க்க: அரசாணை .

தமிழகத்தில் சாதி மதம் குறிப்பிடாமல் பள்ளியில் சேர்க்க: அரசாணை  . 

அதற்கான அரசாணை நகல் இது.
சாதி மதம் குறிப்பிடவிரும்பாதவர்கள் 
இதை நகல் எடுத்து விண்ணப்பப் படிவத்துடன்
கொடுக்கலாம்..

41 நாளுக்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு



கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன*

ஏப்ரல், 21ல் துவங்கிய கோடை விடுமுறை, 41 நாட்களை கடந்து, நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, வகுப்புகள் துவங்க உள்ளன. சில தனியார் பள்ளிகள் மட்டும், பள்ளி திறப்பை, 4ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளன

புதிய கல்வி ஆண்டு துவங்குவதை ஒட்டி, மாணவர்கள் தேர்ச்சியின் அடிப்படையில், இன்று புதிய வகுப்புகளுக்கு மாற்றப்படுகின்றனர். பல பள்ளிகளில், புதிய வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு, வாழ்த்து கூறுவதோடு, இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கும்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு பிரார்த்தனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்*


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இலவச பாட புத்தகங்களும், நோட்டு புத்தகங்களும் இன்று வழங்கப்பட உள்ளன. அதேபோல, மதிய உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு, இலவச சீருடையும் வழங்கப்படுகிறது*

 புதிய கல்வி ஆண்டில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும், ஒன்பது, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கும், சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது. ஆறு முதல் எட்டு வரையிலான மாணவர்களுக்கு, பழைய நிறத்திலேயே சீருடை வழங்கப்படுகிறது




வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசின் உதவித்தொகை பெற :ஆட்சியர் அறிவிப்பு



வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற, சாந்தோமில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வேலைவாய்ப்பு அலுவலகங்களால் வழங்கப்படுகிறது.

 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித்தகுதிகளைப் பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல், வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற, சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டும்.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் உதவித்தொகை விண்ணப்பத்தைப் பெற, சாந்தோமில் உள்ள தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டும்.

 வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு உயிர்ப்பதிவேட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள், கிண்டி மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

வருமான உச்சவரம்பு இல்லை
இவர்களுக்கு கல்வித்தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்ப படிவத்தை சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.

ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிந்தவர்கள், சுய உறுதிமொழி ஆவணத்தை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு எண், உதவித்தொகை எண் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசில் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்க ஜூன் 29 கடைசி

தமிழக அரசில் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்க ஜூன் 29 கடைசி

தமிழ்நாடு நீதித்துறையில் துறையில் காலியாக உள்ள 16 மொழிபெயர்ப்பாளர், மொழிபெயர்ப்பாளர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முதுநிலை தமிழ், பி.எல். மூன்று அல்லது ஐந்தாண்டு படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Translator (மொழிபெயர்ப்பாளர்)
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.36,400 - 1,15,700
தகுதி: தமிழில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம், சட்டத்துறையில் மூன்று அல்லது ஐந்தாண்டு பி.எல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழில்  எழுத் பேச தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Translation Officer (மொழிபெயர்ப்பாளர் அதிகாரி)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
தகுதி: தமிழில் முதுகலை பட்டம், சட்டத்துறையில் மூன்று அல்லது ஐந்தாண்டு பி.எல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத் பேச தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் வங்கி அட்டைகள் பயன்படுத்தி செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  “www.tnpsc.gov.in” என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.06.2018

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 01.07.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:  18.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_11_Translation_Officer.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.



கோடை விடுமுறை முடிவு: ஜூன் 1-பள்ளி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு


கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளன.

தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைப் போன்றே ஏப்ரல் மூன்றாவது வாரம் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.

கோடை விடுமுறை வியாழக்கிழமை முடிவுக்கு வருகிறது. இதையடுத்து அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திறக்கப்பட உள்ளன.

இதனை முன்னிட்டு, மாணவ, மாணவியருக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாணவர்கள் காலை 9.15 மணிக்குள் பள்ளியில் இருக்க வேண்டும்.

புதிய சீருடையுடன் நாளை பள்ளிக்கு வர வேண்டும். பிறந்தநாள் உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் சீருடையில்தான் பள்ளிக்கு வர வேண்டும்.

இடுப்பு தெரியும் வகையிலோ அல்லது இறுக்கமான வகையிலோ சீருடை இருக்கக் கூடாது.

 மாணவர்கள் சட்டையை இன் செய்திருக்க வேண்டும். இன் செய்ய வசதியாக சீருடை தைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கோடை விடுமுறைக் காலத்தைப் பயன்படுத்தி, பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். வாகனங்களை சரியாக பராமரிக்க வேண்டும் என ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

 கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் கல்வித்துறை அதிகாரிகளும், போக்குவரத்து அதிகாரிகளும் பள்ளிகளில் ஆய்வு நடத்தினர்.

இதையடுத்து சரியாகப் பராமரிக்கப்படாத வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அடிப்படை வசதி மற்றும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.

 அதேவேளையில் பள்ளிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் செய்து வருகின்றனர்.

பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பாடநூல்கள், சீருடைகள் வழங்கப்படவுள்ளன. இந்த ஆண்டு முதல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.


 பள்ளி திறக்கும் நாளிலேயே பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளும், தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

Wednesday 30 May 2018

புதியபாடத்திட்டத்தில் கணினி அறிவியல் கற்பிக்க கணினி அறிவியல் பாடத்தில் பிஎட் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு வழங்குமா? தமிழக அரசு .முதலமைச்சர் தனிபிரிவில் மனு.


11-ஆம் வகுப்பு 3விதமான புதிய கணினி அறிவியல் பாடம் பாடபுத்தகம்

 









புதிய பாடப் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்..
👉👉

புதிய பாடப் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்..




[Text Book Online] is good,have a look at it! http://tnscert.org/tnscert/ebooks/

6-ஆம் வகுப்பு புதிய பாடபுத்தகத்தில் கணினி அறிவியல் பாடம்.

6-ஆம் வகுப்பு புதிய பாடபுத்தகத்தில் கணினி அறிவியல் பாடம்.



புதிய பாடப் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்..
👉👉


9-ஆம் வகுப்பு புதிய பாடபுத்தகத்தில் கணினி அறிவியல் பாடம்.

9-ஆம் வகுப்பு புதிய பாடபுத்தகத்தில்  கணினி அறிவியல் பாடம்.

புதிய பாடப் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்..
👉👉




நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த புதிய பாடபுத்தம் இதோ! இணையதளத்தில்

நீங்கள்  ஆவலுடன் எதிர்பார்த்த புதிய பாடபுத்தம் இதோ! இணையத்தில்..

இணைய முகவரி:

புதிய பாடப் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். 

[Text Book Online] is good,have a look at it! 


*http://tnscert.org/tnscert/ebooks/

பிளஸ் 1 பொதுத் தேர்வில், 'ஜீ பூம்பா' தேர்ச்சி எகிறியது எப்படி?




பிளஸ் 1 தேர்வில், வினாக்கள் மிக கடினம் என, மாணவர்கள் புலம்பிய நிலையில், 'ஜீ பூம்பா' மந்திரம்போல், தேர்ச்சி விகிதம், பிளஸ் 2வை விட அதிகரித்துள்ளது.

தமிழக பாடத்திட்ட மாணவர்கள், தேசிய அளவிலான போட்டி தேர்வு களில் தேர்ச்சி பெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டு, நீண்ட காலமாக உள்ளது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாணவர்களை தயார்படுத்த, பிளஸ் 1 வகுப்புக்கும், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு, முதல் முறையாக நடந்த பொது தேர்வில், வினாத்தாளில் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகள் இடம்பெற்றன. ஐ.ஐ.டி., நடத்தும், ஜே.இ.இ., மற்றும் மருத்துவ கவுன்சில் நடத்தும், 'நீட்' போன்ற நுழைவு தேர்வுகள் போன்று, பிளஸ் 1 பொது தேர்வில், வினாக்கள் கேட்கப்பட்டன.

அதனால், பெரும்பாலான மாணவர்கள், பதில் எழுத திணறினர்.வினாக்கள் கடினமாக இருந்ததாக, பெற்றோரும், ஆசிரியர்களும் கவலை தெரிவித்தனர். அதனால், சலுகை மதிப்பெண் தேவை என்றும், கோரிக்கை எழுந்தது.

ஆனால், தேர்வுத் துறை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில், பிளஸ் 1 தேர்வில், 91.3 சதவீத மாணவர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர்.இது, எப்படி நிகழ்ந்தது என, ஆசிரியர்களும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர் .

40 சதவீதத்துக்கும் மேல், மாணவர்களின் தேர்ச்சி பாதிக்குமோ என, விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள், அச்சத்தில் இருந்தனர். ஆனால், அனைத்துக்கும் நேர்மாறாக, தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது.இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது


பிளஸ் 1 தேர்வு முறையும், வினாத்தாள் முறையும் மிக கடினமாக இருந்தது. ஆனால், பள்ளிக் கல்வித் துறையின் முயற்சி, இறுதியில் மாறி விட்டதாக தெரிகிறது. வழக்கம்போல், அரசியல் ரீதியாக, தேர்ச்சி சதவீதம் காட்டப்பட்டதோ என்ற, சந்தேகம் எழுந்துள்ளது

விடை திருத்தத்தில் வராத மதிப்பெண், இறுதி பட்டியலில், அதிகம் வந்ததுபோல் தெரிகிறது.எனவே, மதிப்பெண்ணை பதிவு செய்வதில், 'டேட்டா என்ட்ரி' முறை பின்பற்றப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது.

பொது தேர்வு முறையில், எத்தனை மாற்றங்கள் கொண்டு வந்தாலும், மதிப்பீடு முறையும், மதிப்பெண்ணை இறுதியாக பதிவு செய்யும் முறையும், வெளிப்படை தன்மையுடன் நடந்தால் மட்டுமே, மாணவர்களின் சரியான கல்வித் திறன் தெரிய வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இணைய தளத்தில் புதிய பாடபுத்தகங்கள் இன்று வெளியீடு


 தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் புதிய பாடபுத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. 1, 6, 9, 11ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகம்  31/05/2018 ஆன இன்று இணையத்தில் வெளியி உள்ளது.

இணைய முகவரி:
புதிய பாடப் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். 

[Text Book Online] is good,have a look at it! 

*http://tnscert.org/tnscert/ebooks/

http://www.textbooksonline.tn.nic.in



FLASH NEWS:சட்டப்பேரவையில் கல்வித்துறைக்கான மானிய கோரிக்கையில் நிகழ்ந்தவை...

பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை..


நூலகங்களில், 'வைபை' ஆசிரியர்களுக்கு, 'பயோமெட்ரிக்'

''அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவு, 'பயோமெட்ரிக்' முறைக்கு மாற்றப்படும். நுாலகங்களில், 'வைபை' வசதி ஏற்படுத்தப்படும்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்தார்.சட்டசபையில், நேற்று பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக, செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள்:அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவுகள், மின்னணு வருகைப் பதிவு எனப்படும், 'பயோமெட்ரிக்' முறைக்கு மாற்றப்படும். அதற்கு, ஒன்பது கோடி ரூபாய் செலவிடப்படும்.அரசு பள்ளிகளில், 6.23 கோடி ரூபாய் மதிப்பில், நுாலகங்கள் அமைக்கப்படும்.மாணவர்கள், திறன் சார்ந்த கல்வியை பெறும் வகையில், 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 3.55 கோடி ரூபாய் செலவில், தொழிற்கல்வி திட்டம் செயல்படுத்தப்படும்.தொன்மை வாய்ந்த கட்டடம், அரிய வகை நுால்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாக்கும் வகையில், 1.50 கோடி ரூபாய் செலவில், குளிர்சாதன வசதியுடன், கன்னிமாரா நுாலகம் புதுப்பிக்கப்படும்.காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள மூன்று நுாலகங்கள், 1.50 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன் கூடிய, மாதிரி நுாலகங்களாகமாற்றப்படும்.

காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், பெரம்பலுார், திருவாரூர், நாகப்பட்டினம், நீலகிரி மாவட்டங்களில், பள்ளிகளுக்கு மாணவர்களை ஈர்க்கும் திட்டம், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது.இத்திட்டம், இந்த கல்வியாண்டில், 1.28 கோடி ரூபாய் செலவில், அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.அனைத்து ஒன்றிய தலைமை இடங்களிலும், மாணவர்களின் பயன்பாட்டிற்காக, ஒரு கோடி ரூபாய் செலவில், 'ஆதார்' சேர்க்கை மையங்கள் ஏற்படுத்தப்படும்.மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில், ஒரு மாவட்டத்திற்கு ஒரு பள்ளி வீதம், 32 விளையாட்டு மேம்பாட்டு பள்ளிகள், 96 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.பார்வையற்ற மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்காக, 96 லட்சம் ரூபாய் செலவில், கணினி மூலமாக, நவீன தொழில்நுட்பத்துடன், பேசும் கருவி, பேசும் புத்தகம், மென்பொருள், கற்றல் உபகரணம், தொடுதிரை, தொடுகை வரைபடம், சிறப்பு விசைப்பலகை, ஒலிப்புத்தகம் ஆகிய வசதிகள், மாவட்ட மைய நுாலகங்களில் ஏற்படுத்தப்படும்.வரும் கல்வியாண்டில் இருந்து, ஒவ்வொரு மாதமும் பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடத்த, 90.97 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.மாணவர்கள் பயன்பெறும் வகையில், உயர் கல்வி நிறுவனங்களுடன், அரசு பள்ளிகளை இணைக்கும் திட்டம், 67 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.அரசு உயர்நிலை பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில், இடைநிலை கல்வி பயிலும் திறன்மிக்க மாணவர்கள், பிற மாநிலங்களில் உள்ள அறிவியல், தொழிற்நுட்பம், கல்வி சார்ந்த தேசிய நிறுவனங்களை பார்வையிட, வாய்ப்புகள் வழங்கப்படும்.இதற்காக, 40.20 லட்சம் ரூபாய் செலவிடப்படும். அனைத்து மாவட்ட நுாலகங்களிலும், 32 லட்சம் ரூபாய் செலவில், 'ஸ்மார்ட் டிவி அல்லது எல்.இ.டி., புரஜெக்டர்' வசதி ஏற்படுத்தப்படும்.குடிமைப் பணி தேர்வுகள் உட்பட, அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் தேவைப்படும் தகவல்கள், உரிய நேரத்தில் சென்றடையும் வகையில், பொது நுாலகங்களுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் செலவில், மென்பொருள் உருவாக்கப்படும்.மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் வகையில், 32 மாவட்டங்களிலும், தலா, 5,000 ரூபாய் வீதம், 'நுாலக ஆர்வலர் விருது' வழங்கப்படும்.முதற்கட்டமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை மாவட்ட நுாலகங்களில், 'வைபை' வசதி ஏற்படுத்தப்படும்.மாணவர்களுக்கு, பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு, 'இளம் படைப்பாளர் விருது' வழங்கப்படும். மாணவர்களுக்கு பயன் தரும் வகையில், பல்வேறு பாடப்பிரிவுகளை சார்ந்த, 5,000 வீடியோக்கள் தொகுக்கப்பட்டு, தமிழக அரசு கேபிள் வழியாக, ஒரு மணி நேரம்ஒளிபரப்பப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்

27 அறிவிப்புகளில் கணினி என்ற வார்த்தை வந்த அறிவிப்பு இது தான்...

சட்டப்பேரவை கல்வி மானிய கோரிக்கையில்:அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் கணினி என்ற வார்த்தை வந்த அறிவிப்பு இது மட்டும் தான்..

BREAKING NEWS:ஆசிரியர்கள் பொது மாறுதல் நெறிமுறைகள்: ஆணை.









கிழியாத காகிதத்தில் மதிப்பெண் சான்றிதழ்; தமிழ் பாடத்துக்கு ஒரே தேர்வு: செங்கோட்டையன்


கிழியாத காகிதத்தில் மதிப்பெண் சான்றிதழ்; தமிழ் பாடத்துக்கு ஒரே தேர்வு: செங்கோட்டையன்

இனி, பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு கிழியாத காகிதத்தில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.



தமிழக சட்டப்பேரவையில் இன்று பள்ளிக் கல்வித் துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.



அதில், மாணவ, மாணவிகளுக்கு இனி கிழியாத காகிதத்தில் அதாவது non tearable paperல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்றும், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக், இனி தமிழ்ப் பாடத்துக்கு இரண்டு தாளாக இல்லாமல் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.



மேலும் அவர் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்ய பயோ மெட்ரிக் முறை ஏற்படுத்தப்படும் என்றும், ரூ.9 கோடி செலவில் பயோ மெட்ரிக் முறையில் வருகைப் பதிவு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் செங்கோட்டையன் அறிவித்தார்.



அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகை நேரத்தை கண்காணித்து முறைப்படுத்தும் வகையில், பயோ மெட்ரிக் முறை ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.



மேலும், அரசுப் பள்ளிகள் உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைக்கப்படும் என்றும், அரசுப் பள்ளிகளில் உள்ள நூலகங்கள் கணினி மயமாக்கப்பட்டு, வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பு தகவல்

*பள்ளி உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்

*பள்ளி உள்கட்டமைப்பு வசதி,தேவைகேற்ப ஆசிரியர் நியமனம் உள்ளிட்டவையே முதன்மையான நோக்கம்

*மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

*1 முதல் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

*மாணவர்கள் சேர்க்கை விகிதம் உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.

*இடைநிற்றல் விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

அரசுப்பள்ளிகளின் சீருடை மாற்றம்- 1 முதல் 12 ஆம் வகுப்புவரை :சீருடை படங்களுடன்


Tuesday 29 May 2018

BREAKING NEWS: ஓர் பார்வையில் அனைத்தும்!


மாணவர்களை விட மாணவிகள் 7.2% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்..

2017-18ஆம் கல்வியாண்டில் முதல்முறையாக நடத்தப்பட்ட 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு

மொத்தமாக 91.3 சதவீதம் தேர்ச்சி

மாணவிகளில் 94.6 சதவீதம் தேர்ச்சி

மாணவர்களில் 87.4 சதவீதம் பேர் தேர்ச்சி

மாணவர்களை விட மாணவிகள் 7.2% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்

97.3% பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் மாநிலத்தில் முதலிடம்.

2-வது திருப்பூர் 96.4%

3-வது கோவை 96.4 %
இடங்களை பெற்றுள்ளன.

****

அரசுப்பள்ளி 83.9 % தேர்ச்சி ,188 பள்ளிகள் தான் 100% தேர்ச்சியாம்!

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் 83.9% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

2,724 அரசு பள்ளிகளில் 188 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன
***
பாடவாரியாக தேர்வு முடிவுகள்:

*இயற்பியல் - 93 %,*

 *வேதியல் - 92.7%,*

 *உயிரியல் - 92.6%,*

 *தாவரவியல் - 89.3%,*

 *விலங்கியல் -91.8%,*

 *கணிதம் - 92.5%,*

 *கணினி அறிவியல் - 95.3%*

***
14,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லையாம்!

14,000 மாணவர்கள் 11ம் வகுப்பு தேர்வு எழுதவில்லை

மாணவர்கள் வராதது ஏன்? ஆய்வு நடத்த வேண்டும் -கல்வி ஆய்வாளர்கள் எதிர்பார்ப்பு

மறு கூட்டலுக்கும் விடைத்தாள் நகல் பெறவும் ஜூன் 1-4ம் தேதி வரை பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்
***
அதிக மதிப்பெண் எடுத்தவங்க!
பிளஸ் 1 பொதுத் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் 36,380 மாணவ, மாணவிகள்

450 - 500 மதிப்பெண்களை 64,817 மாணவ, மாணவிகள்

426 - 450 மதிப்பெண்களை 48,532 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர்
*****

+1 Result - மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்!


11ம் வகுப்பு பொதுத் தேர்வில் பாடவாரியான தேர்ச்சி விகிதம்


FLASH NEWS:பொதுத் தேர்வு முடிவுகள் ஈரோடு மாவட்டம் 97.3%பெற்று முதலிடம்..


இந்தியாவிலேயே முதன்முறையாக கண்பார்வை இழந்த பெண் கேரளாவில் கலெக்டராக பொறுப்பேற்பு


கர்நாடக மாநிலம் உல்லாஷ் நகரை சேர்ந்தவர் என்.பி. பட்டில் என்ஜினீயராக உள்ளார். இவரது மனைவி ஜோதி. இவர்களது மகள் பிரஞ்ஜாலின் பட்டில். இவர் 2 வயதாக இருந்தபோது காய்ச்சலால் 2 கண்களின் பார்வை பறிபோனது.



இருந்தாலும் பெற்றோர் மகளுக்கு தைரியமும், ஊக்கமும் கொடுத்து வளர்த்தனர். பிரஞ்ஜாலின் பட்டில் வளர வளர சமூக சேவையில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் வந்தது. படிப்பிலும் தீராத தாகம் இருந்த அவர் தொடுதிரை உதவியுடன் நன்கு படித்து வந்தார். மும்பை கல்லூரியில் பட்டப்படிப்பை முடிதார்.

பின்னர் டெல்லியில் உள்ள சர்வதேச கல்லூரியில் எம்.பில். மற்றும் பி.எச்.டி. டாக்டர் பட்டம் முடித்தார். கடந்த 2014-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்.தேர்வு எழுதினார். 773-வது இடமே கிடைத்ததால் அவரால் கலெக்டர் ஆக முடியவில்லை. அதே நேரத்தில் ரெயில்வே துறையில் தேர்வாகி கணக்கு பிரிவில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் அவரது லட்சியமான கலெக்டர் கனவு அவரை வாட்டியது.

இதனையடுத்து அவர் 2017-ம் ஆண்டு மீண்டும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதினார். இந்த முறை 124-வது இடத்தை பிடித்தார். இந்த இடம் கலெக்டர் தேர்வுக்கு போதுமானதாக இருந்தது.


தேர்வில் வெற்றி பெற்ற அவர் நேற்று கேரள மாநிலம் எர்ணாகுளம் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி கலெக்டராக பொறுப்பேற்றார். தனக்கு ஊக்கமும், தைரியமும் கொடுத்து வளர்த்த தனது தாய் தன்னை இருக்கையில் அமர வைக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டார்.

நெகிழ்ச்சியடைந்த அதிகாரிகள் அதற்கு அனுமதியளித்தனர். அதன்படி அவரது தாய் ஜோதி மகளை கலெக்டர் இருக்கையில் அமர வைத்தார். நேரடி கலெக்டர் தேர்வில் இந்தியாவிலேயே கண்பார்வை இழந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கலெக்டராக பொறுப்பேற்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது

9ம் வகுப்பு புதிய பாடபுத்தகம்


இணையதள கல்விக் கழகம் மூலம் இணைய வழியில் கல்வி: தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அறிவிப்பு


இணையதள கல்விக் கழகம் மூலம் இணைய வழியில் கணினி தமிழ் பாடத் திட்டம்

இணையதள கல்விக்கழகம் மூலம் இணைய வழியில் கணினித் தமிழ் பாடம் கற்றுத் தரப்படும் என்று  அமைச்சர் மணிகண்டன் அறிவித்துள்ளார்

தமிழ் மொழியை கணினிக்கு கொண்டு செல்லும் கட்டாயம் உள்ளது

எனவே, கணினித் தமிழ் பாடத்திட்டத்தை பட்டயப் படிப்பாக இணைய வழியில் இணையதள கல்விக் கழகம் பயிற்றுவிக்க உள்ளது

அரசுத் துறைகளுக்கு தேவைப்படும் பட்சத்தில், தகவல் தொழில்நுட்ப பணியாளர் தொகுப்பில் இருந்து பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்

 அரசுத் துறைகளின் இணையதளங்கள் உரிய கால இடைவெளியில் பாதுகாப்பு தணிக்கை செய்யப்படும்




அரசு பள்ளிகளின் தரத்தை கண்காணிக்க ஆணையம் அமைக்கப்படுமா?

மக்கள் நீதி மய்யம் கேள்வி

*சட்டசபையில் இன்று பள்ளி மற்றும் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளதையொட்டி அரசு பள்ளிகளின் தரத்தை கண்காணிக்க ஆணையம் அமைக்கப்படுமா? என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது*


சட்டசபையில் 30-ந்தேதி (இன்று) பள்ளி கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் கேள்விகள் வருமாறு

அரசு பள்ளிகளின் தர நிர்ணயத்தை ஆய்வு செய்து அவற்றை கண்காணிக்கக்கூடிய தன்னிச்சையான ஆணையம் அமைப்பதற்கு அரசு முயற்சி எடுக்குமா?

2017-18 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த கணினி வழிக்கல்வி மையங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றனவா?


மாணவர்கள் பொது அறிவு மற்றும் மொழித்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் வகையில் 31 ஆயிரத்து 322 பள்ளிகளுக்கு ரூ.4.83 கோடி மதிப்பிலான சிறுவர் நாளிதழ்கள், இதழ்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பின் தற்போதைய நிலை என்ன?



*குழந்தைகளுக்கான வகுப்புகளை அரசு பள்ளிகளில் உடனடியாக தொடங்கவேண்டும் என்ற கோரிக்கை குறித்து பள்ளி கல்வித்துறை எப்போது முடிவு எடுத்து நடைமுறைப்படுத்தும்?*


சட்ட திருத்தம்

துணை வேந்தர்களின் மீதான தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள் கல்வித்துறையின் மீதான நம்பிக்கையை குறைத்துக்கொண்டிருக்கிறது

*இந்த சூழ்நிலையில் துணை வேந்தர்களை தேர்ந்தெடுப்பதற்கு தன்னிச்சையான அமைப்புகளை உருவாக்குவதற்கான சட்ட திருத்தத்தை கொண்டுவருமா?*

*பட்டதாரி மாணவ-மாணவிகள் வேலை வாய்ப்பு இன்றி கிடைக்கின்ற வேலை செய்யும் நிலையை போக்குவதற்கு, திறன் மேம்பாடு கல்வி திட்டத்துக்கு என்ன வகையான முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டுள்ளது?*

*இவை அனைத்தையும் ஆராய்ந்து சட்டங்கள், மசோதாக்கள், மானியக் கோரிக்கைகள் போன்றவற்றை பரிசீலிக்க அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய சட்டமன்ற நிலைக்குழுக்கள் அமைக்கப்படவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது*





இன்று காலை 9 மணிக்கு பிளஸ் 1 ரிசல்ட் வெளியாகிறது.!தேர்வு முடிவுகள் அறிந்து கொள்ள..





தேர்வு முடிவுகள் இன்று காலை  9 மணிக்கு
www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
 www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படுகிறது


மதிப்பெண் பட்டியல்

 பிளஸ் 1 தேர்வு எழுதியோருக்கு இணைய தளம் மூலமாக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்

அரசுத்தேர்வுத்  துறையால் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்று வழங்கப்படும் வரை மட்டுமே இந்த மதிப்பெண் பட்டியல் செல்லும்

ஜூன் 4ம் தேதி பிற்பகல் முதல் மாணவர்கள் தங்கள் பள்ளி அல்லது தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். மேலும் www.dge.tn.nic.in  இணைய தளத்தில் இருந்தும் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

இந்த மதிப்பெண் பட்டியல்களில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது தேர்வு மைய பள்ளித் தலைமை ஆசிரியர் கையெழுத்து போட்டிருந்தால் மட்டுமே செல்லும்



விடைத்தாள் நகல், மறுகூட்டல்:

 *பிளஸ் 1 விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு  விண்ணப்பிக்க விரும்புவோர் பள்ளி மற்றும் தேர்வு எழுதிய மையங்கள் மூலமாக ஜூன் 1, 2, 4ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்

விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே மறு மதிப்பீடு கேட்டு விண்ணப்பிக்–்க முடியும். விடைத்தாள் பெற்ற பிறகே மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க வேண்டும்


கட்டணம்:

விடைத்தாள் நகல் பெறுவதற்காக பகுதி 1 மொழிப்பாடத்துக்கு ரூ.550, மொழிப் பாடம் 2 (ஆங்கிலம்), ரூ.550, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும்

மறுகூட்டல் செய்ய மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியல் பாடங்கள் தலா ரூ.305, மற்ற பாடங்களுக்கு தலா ரூ.205 செலுத்த வேண்டும். கட்டணங்கள் அந்தந்த பள்ளிகளில் பணமாக செலுத்த வேண்டும்

சிறப்பு துணைத் தேர்வு:


 பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி தனியாக அறிவிக்கப்படும்*

விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழக அரசில் 805 காலிப் பணியிடங்கள்





 தமிழக அரசில் காலியாக உள்ள 805 உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூன் 24க்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
மொத்த காலியிடங்கள்: 805
பணி: Assistant Horticultural Officer (Code No.3104) – 757
பணி: Assistant Horticultural Officer (Code No.3104) – 48
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அல்லது தோட்டக்கலை மற்றும் பெருந்தோட்ட பயிர்கள் இயக்குநர் அல்லது காந்திகிராம் கிராம நிறுவனம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இரண்டு ஆண்டு தோட்டக்கலை டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பில்லை.
சம்பளம்: மாதம் ரூ.20,600 – 65,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு கட்டணம்: ரூ.100, பதிவுக் கட்டணம் ரூ.150.
விண்ணப்பிக்கும் முறை:www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.06.2018
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:11.08.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://tnpsc.gov.in/notifications/2018_10_AHO.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

11ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் வழங்குவது தொடர்பாக:அரசு தேர்வுத்துறை சுற்றறிக்கை


1, 6, 9, 11 ஆகிய 4 வகுப்புகளுக்கு வீடியோ, ஆடியோ வசதியுடன் புதிய பாடத்திட்டம்



1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வருகிற கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது. மாணவர்கள் வீடியோ மற்றும் ஆடியோ வசதியுடன் பாடப்புத்தகங்களை விரும்பி படிக்கும் வகையில் இந்த பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் த.உதயச்சந்திரன் கூறினார்.

பல வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் புதிய பாடத்திட்டம் 1, 6, 9, 11 ஆகிய 4 வகுப்புகளுக்கு 2018-2019-ம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுகுறித்து சென்னையில் பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் த.உதயச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பள்ளிக்கூட அளவில் புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக இந்தியாவில் சிறப்பான பாடப்புத்தகங்களை கொண்டுள்ள முக்கிய மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர் உள்பட பல வெளிநாடுகளில் பாடப்புத்தகங்கள் எவ்வாறு உள்ளன என்று முதலில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் உள்ள நல்ல கருத்துகள் மட்டும் எடுக்கப்பட்டு புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஒவ்வொரு பாடப்புத்தகத்திலும், ஒவ்வொரு பாடத்திலும் அதை விரிவாக மாணவர்கள் படிக்க விரும்பினால் அதற்க ான புத்தகங்களின் தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பாடப்புத்தகங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் படிக்கலாம். அதன் காரணமாக ஒவ்வொரு புத்தகத்திலும், ஒவ்வொரு பாடத்திலும் வார்த்தைகள் அகராதி போல இடம் பெற்றுள்ளன. அதாவது தமிழ்மொழியில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்ட அர்த்தங்கள் இடம் பெற்றுள்ளன. அவை பாடத்தின் பின்புறத்திலும் மட்டுமல்ல, புத்தகத்தின் பின்பக்கத்திலும் இடம் பெற்று இருக்கிறது.

11-வது வகுப்பு, 12-வது வகுப்பு மாணவ-மாணவிகள் ‘நீட்’ உள்ளிட்ட போட்டித் தேர்வை எதிர்கொள்ள பாடப்புத்தகங்களில் கடந்த சில ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்களுடன் இடம் பெற்றுள்ளன.

பாடங்கள் அனைத்தும் மாணவர்கள் விரும்பி படிக்கும் வகையில் பல வண்ணங்களில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் அடுத்து என்ன படித்தால் நல்லது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்த படிப்புகளின் முழு விவரமும் கொடுக்கப்பட்டுள்ளன.

மருத்துவம், என்ஜினீயரிங் மற்றும் நிறைய படிப்புகள் உள்ளன. என்ன படிப்பை எங்கே படிக்கலாம் என்ற விவரமும் தொகுத்து தரப்பட்டு இருக்கிறது. அதன்மூலம் மாணவ- மாணவிகள் மேல்படிப்பை மேற்கொள்வது பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.

பாடங்களில் விரைவு கோடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை இணையதளம் கொண்ட செல்போனில் படம் எடுத்து அதை செயல்படுத்தினால் அதற்குரிய வீடியோ மற்றும் ஆடியோவை காணலாம். அவை அனைத்தும் பாடத்துடன் இணைந்ததுதான். அந்த விரைவு கோட்டை பள்ளிகளில் கம்ப்யூட்டர் மூலம் பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

அதாவது வீடியோ மற்றும் ஆடியோ வசதியுடன் புதிய பாடத்திட்டம் அமைந்திருக்கிறது. பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலை வீடியோ மற்றும் ஆடியோ வாயிலாக வழங்கினால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து படிப்பார்கள்.

தொழிற்கல்வி மாணவ- மாணவிகளுக்கு பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு 20 வருடங்கள் ஆகி விட்டது. எனவே அந்த பாடத்திட்டம் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. அதிகம் கம்ப்யூட்டர் படிக்கும்படி பாடத்திட்டம் உள்ளது.

அடிப்படை எந்திரவியல், அடிப்படை பொறியியல், அடிப்படை மின் பொறியியல், அடிப்படை மின்அணு பொறியியல், அடிப்படை கட்டிட பொறியியல், ஊர்தி பொறியியல், நெசவியல், செவிலியம், வேளாண் அறிவியல் உள்ளிட்ட தொழில்கல்வி படிப்புகளில் நிறைய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த பாடத்திட்டம் மாணவர்களின் அறிவு சிந்தனையை தூண்டி வேலை வாய்ப்பை முன்நிறுத்தியும் போட்டித்தேர்வை எதிர்கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

முதலில் மாநில அளவில் ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி அளிக்கப்படும். அதன்பிறகு மாவட்டத்தின் முன்னணி ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும். அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பார்கள்.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் பணி பாதிக்காத வகையில் 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு பருவத்திற்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும். பயிற்சி அளிக்க அட்டவணை வெளியிடப்படும்.

POPULAR POSTS