மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Saturday 17 March 2018

நான்கு மாதங்கள் கடந்தும் பதில் தராத பள்ளிக் கல்வித்துறை ..!!!

மாணவர்கள் நலனை கருத்தில் கொண்ட புதிய பாடத்திட்டம் மக்களின் கருத்துக்கு விடை தருமா???

குறிப்பு:27.11.2017 அன்று முதல்வர் தனிப்பிரிவுக்கு வழங்கப்பட்ட மனு.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நிலையும் முதல்வர் தனிப்பிரிவு பதிலும்..

கணினி ஆசிரியர்கள் கோரிக்கை மனு முதல்வர் தனிப்பிரிவில் ஏற்கப்பட்டதா ? நிராகரிகப்பட்டதா ??.

கேள்வியும்???

     

பதிலும்


அரசுப்பள்ளியின் கட்டாயத் தேவை கணினி அறிவியல் பாடம் ...!

அரசுப்பள்ளியின் கட்டாயத் தேவை கணினி அறிவியல் பாடம் கொண்டுவருமா தமிழக அரசு!!!



நன்றி:சரித்திரம் மாத இதழ்.

Friday 16 March 2018

வேலையில்லா கல்வி உருவாக்கிய அரசு! சரித்திரத்திரம் மாறுமா ? மாற்றப்படவேண்டுமா???

அரசுப்பள்ளியில் கட்டாயம் தேவை கணினி அறிவியல் பாடம் கொண்டுவருமா தமிழக அரசு!!!

அரசுப்பள்ளி இனி கணினி பள்ளி!





நன்றி :
" சரித்திரம் மாத இதழில்" 
மற்றும் ஆசிரியர் 
"உயர்திரு வசந்த சித்தார்த்தன்"* அவர்களுக்கும்  கணினி ஆசிரியர்கள் குடுமபத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.

Thursday 15 March 2018

துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்


வருவாய் துறைக்கு 6.144 கோடி

குடிமராமத்து பணிகளுக்கு ரூ.300 கோடி

நெடுஞ்சாலை துறைக்கு ரூ. 11,073.66 கோடி

பள்ளி கல்விதுறைக்கு ரூ.27.205.88 கோடி

பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333.36 கோடி

உயர்கல்வி துறைக்கு ரூ.4620 .20 கோடி

ரயில்வே பணிகள் திட்டத்திற்கு ரூ.513.66 கோடி

வறுமை ஒழிப்பு ரூ.519.81 கோடி ஒதுக்கீடு

மகளிர் திருமண உதவி திட்டத்திற்கு ரூ.724 கோடி

ஜெ., வீட்டை நினைவிடமாக்க ரூ.20 கோடி

தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு ரூ.347.59 கோடி

பேரிடர் நிவாரண நிதியத்திற்கு ரூ.786 கோடி
News hub
காவல்துறைக்கு ரூ.7877 கோடி ஒதுக்கீடு

மானிய டூவிலர் திட்டத்திற்கு ரூ.250 கோடி

மகளிர் சுகாதார திட்டத்தில் நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி

சுகாதார துறைக்கு ரூ.11,638.44 கோடி

உள்ளாட்சி தேர்தல் நடந்த ரூ.172 கோடி

வேளாண்மை துறைக்கு ரூ.8916 கோடி

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.972.86 கோடி
News hub
தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.1,074 கோடி

இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ.191.18 கோடி

உள்ளாட்சிதுறைக்கு ரூ.17,869 கோடி

குடிநீர் திட்டங்களுக்கு ரூ.1,853 கோடி

முதல்வரின் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,361.60 கோடி

அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ரூ.1,789 கோடி
News hub
பழங்குடியினர் நலனுக்கு ரூ.333.82 கோடி

முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.1,336 கோடி

இலவச சைக்கிள் திட்டத்திற்கு ரூ.71.01 கோடி

பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க 758 கோடி

கட்டாய கல்வி திட்டத்தை செயல்படுத்த 200.70 கோடி

சத்துணவு திட்டத்திற்கு ரூ.1747 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்...

பள்ளிக் கல்வி பட்ஜெட் 2018-2019.


பள்ளிக் கல்வி 
 தமிழக சட்டசபையில் நேற்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். அவர் ஆற்றிய உரை வருமாறு:



தமிழக பள்ளி க்கல்வி துறை

102. அனைத்து குழந்தைகளும் பள்ளிகளுக்குச் செல்வதை உறுதி செய்யவும், பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. 2016–-2017 மற்றும் 2017–-2018 ஆம் ஆண்டுகளில், 6 தொடக்கப் பள்ளிகள் புதிதாகத் துவங்கப்பட்டுள்ளதுடன், 4 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 169 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 102 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 2018-–2019 ஆம் ஆண்டில் 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். மேலும், இந்த அரசால் தற்போது கண்டறியப்பட்டுள்ள பள்ளிக்குச் செல்லாத 33,519 குழந்தைகளை 2018–-2019 ஆம் ஆண்டில் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். 
103. மாறி வரும் சூழலில் எதிர்நோக்கியுள்ள சவால்களைச் சமாளிப்பதற்கு, தேசிய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு கல்வி வாரிய பாடத்திட்டங்களுடன் ஒப்பீடு செய்து, பள்ளிப் பாடத்திட்டங்களில் உரிய மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மாணவர்களிடையே புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த, அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும், மேல்நிலைப் பள்ளிகளிலும் தற்போதுள்ள நூலகங்கள் புதுப்பிக்கப்படும். 2018-–2019 ஆம் ஆண்டில், 200 கோடி ரூபாய் செலவில் நபார்டு வங்கி உதவியுடன் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். 2018–-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த 333.36 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளிலுள்ள கழிவறைகளை தூய்மையாகவும், சுகாதாரத்துடனும் பராமரிப்பதற்காக, 2017–-2018 ஆம் ஆண்டில் 54.50 கோடி ரூபாய் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.




104. அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி அளிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், மாணவ, மாணவியருக்கு நான்கு இணை சீருடைகள், புத்தகப் பைகள், காலணிகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் வடிவியல் பெட்டிகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள், மிதிவண்டிகள் மற்றும் பேருந்துக் கட்டணச் சலுகைகளை இந்த அரசு விலையில்லாமல் தொடர்ந்து வழங்கி வருகிறது.2018-–2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மேற்கூறிய நலத்திட்டங்களுக்காக மொத்தம் 1,653.89 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளின் பள்ளி இடைநிற்றலைக் குறைப்பதற்காக, சிறப்பு ஊக்கத்தொகையாக அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தலா 5,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக, இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 313.58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
105. மாணவ, மாணவியருக்கு கல்வி கற்பிக்கும் முறையினை மேம்படுத்துவதற்காக, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை உகந்த முறையில் பயன்படுத்த பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. இணையவழி மூலமாகக் கற்கும் வகுப்பறைகள் 770 உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. 3,000 தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 60 கோடி ரூபாய் செலவில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிதியாண்டில் 3,090 உயர்நிலைப் பள்ளிகளிலும், 2,939 மேல்நிலைப் பள்ளிகளிலும் 462.60 கோடி ரூபாய் செலவில் 10 முதல் 20 கணினிகளுடன் கூடிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் செயல்படுவது உறுதிப்படுத்தப்படும். பள்ளி மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்குவதற்கு, 2018-–2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 758 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
106. ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ மற்றும் ‘அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின்’ கீழ், முந்தைய ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகை, முறையே 1,312.04 கோடி ரூபாய் மற்றும் 934.10 கோடி ரூபாயை மத்திய அரசு இதுவரை விடுவிக்காத நிலையிலும், இத்திட்டங்களை மாநில அரசு தொடர்ந்து தொய்வின்றி வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. 2018-–2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்காகவும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்திற்காகவும், முறையே 1,750 கோடி ரூபாய் மற்றும் 850 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ‘குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை’ திறம்படச் செயல்படுத்திட, 2018-–2019 ஆம் ஆண்டிற்கு 200.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
107. பள்ளிக்கல்வித் துறைக்காக, 2018-–2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 27,205.88 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. .

இலவசத்திற்கு கொடுக்கும் மதிப்பை இலவச கல்விக்கு கொடுக்கவில்லை அரசு!

மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க ரூ.758 கோடி ஒதுக்கீடு...





3,090 உயர்நிலைப் பள்ளிகள், 2,939 மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.462.60 கோடியில் கணினிகளுடன் கூடிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும்..



சிந்திக்க அனைவரும் :

நவீன கணினி ஆய்வகம் அமைக்க6029 பள்ளிகளுக்கு ரூபாய் :462.60 கோடி.
இலவச மடிக்கணினி வழங்க :758 கோடி .

நாட்டில்  இலவசத்திற்கு கொடுக்கும் மதிப்பை இலவச கல்வி வழங்குவதற்கு  தரவில்லை என்பது தான் வேதனையை தருகின்றது.

பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.27,205..

பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி ஒதுக்கீடு...




தமிழக பட்ஜெட் 2018-19 இன்று நடந்தவை.



தமிழக பட்ஜெட் 2018-19.

* சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுடன் மதுரை, தூத்துக்குடி, நெல்லை மண்டலங்களுக்கு வளர்ச்சி நெறித் திட்டம் உருவாக்கப்படும்

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்த ரூ.172.27 கோடி ஒதுக்கீடு

மாநில நிதிக்குழு பரிந்துரைப்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5,980.33 கோடியும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.4,834.75 கோடி பகிர்ந்தளிக்கப்படும்

மத்திய நிதிக்குழு பரிந்துரைப்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1,975.07 கோடியும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1,877.10 கோடி பகிர்ந்தளிக்கப்படும்

நெல்லை, மதுரை, குமரி மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 345 புதிய மருத்துவப் படிப்பு இடங்கள் உருவாக்கப்படும்

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.1,361.60 கோடி ஒதுக்கீடு

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளுக்கு இரண்டு நேரியல் முடுக்கிகள், 6 சி.டி. ஸ்கேன், 4 எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள் வாங்கப்படும்

விபத்து மற்றும் அவசரச் சிகிச்சைப் பிரிவுகள் பொன்னேரி மற்றும் நசரத் பேட்டையில் ரூ.24 கோடியில் அமைக்கப்படும்

விழுப்புரம், தருமபுரி, திருவண்ணாமலை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.34 கோடியில் புற்றுநோய் சிகிச்சைக்கு கோபால்ட் அலகுகள் அமைக்கப்படும்

விருதுநகர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராமநாதபுரம் மாவட்ட தலைமையிட மருத்துவமனைகளில் ரூ.80 கோடி செலவில் மகப்பேறு, குழந்தைகள் நலப் பிரிவுகள் தொடங்கப்படும்

தேசிய சுகாதார இயக்கத்துக்கு ரூ.1,551.22 கோடி ஒதுக்கீடு

கர்ப்பிணி பெண்களுக்கு ரத்த சோகை போக்கவும், குழந்தைகளின் எடையளவை உயர்த்தவும் ரூ.4,000 மதிப்பில் இரும்புச் சத்து டானிக், ஊட்டச்சத்து அடங்கிய அம்மா தாய்சேய் நல பெட்டகம் வழங்கப்படும்

100 நடுநிலைப் பள்ளிகள், 100 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்த திட்டம்

ரூ. 200 கோடி செலவில், நபார்டு வங்கி உதவியுடன் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த முடிவு

பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 333.36 கோடி ஒதுக்கீடு

பள்ளி மாணவர்களின் நலத்திட்டங்களுக்கு ரூ.1,653.89 கோடி ஒதுக்கீடு

3,090 உயர்நிலைப் பள்ளிகள், 2,939 மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.462.60 கோடியில் கணினிகளுடன் கூடிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க ரூ.758 கோடி ஒதுக்கீடு

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை செயல்படுத்த ரூ.200.70 கோடி ஒதுக்கீடு

பள்ளிக் கல்வித்துறைக்கு மொத்தமாக 27,205.88 கோடி ஒதுக்கீடு

கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரியின் விக்டோரியா விடுதி, ராணி மேரி கல்லூரியில் பாரம்பரியமிக்க கட்டிடங்கள் ரூ.26 கோடியில் புதுப்பிக்கப்படும்

பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பு நல்கைத் தொகை மாற்றியமைக்கப்படும்

அண்ணாமலை பல்கலை. உள்பட அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் மானியம் வழங்க ரூ.500.65 கோடி ஒதுக்கீடு

2018-19ல் உயர்கல்வித்துறைக்கு மொத்தமாக ரூ.4,620.20 கோடி ஒதுக்கீடு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.191.18 கோடி ஒதுக்கீடு

ஆதி திராவிடர் விடுதிகளுக்கு ரூ.46 கோடி மதிப்பில் 19 புதிய விடுதிக் கட்டிடங்கள் கட்டப்படும்

ஆதி திராவிடர் விடுதிகளில் உணவு கட்டணங்களுக்காக ரூ.118.48 கோடி ஒதுக்கீடு

பள்ளிக்கல்வி உதவித்தொகைக்கு ரூ.129.16 கோடி; உயர்கல்வி உதவித்தொகைக்கு ரூ.1,838.24 கோடி ஒதுக்கீடு

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.71.01 கோடி ஒதுக்கீடு

மத்திய சிறப்பு உதவித் திட்டத்துக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு

ஆதி திராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்படும் 

Wednesday 14 March 2018

கணினி ஆசிரியர்கள் வாழ்வில் பரிதாப நிலை! புதிய பாடத்திட்டமும் ஏமாற்றமே !

புதிய பாடத்திட்டமும் ஏமாற்றமே ! கணினி ஆசிரியர்கள் வாழ்வில் தொடரும் அவலநிலை மாற்றத்தை தருமா இனியாவது ???
   


புதிய பாடத்திட்டத்தில் பெயருக்காக மட்டும் இணைக்கப்படும் கணினி பாடம்.
ஆய்வகமும் ,அதற்கான முறையான ஆசிரியர்களும் இன்றி பெயரளவில் மட்டும் கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் கொண்டுவர இருக்கின்றது அரசு!!

 தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில் 3-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை, கணினி அறிவியல் பாடம் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாமல் பழைய நிலையில் உள்ள பாடத்திட்டத்தை புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கணினி ஆசிரியர்களுக்கு இச்செய்தி மகிழ்வை தந்தது; அடுத்த கணமே கணினி ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக அரசு பள்ளி *அறிவியல் ஆசிரியர்களுக்கு* கணினி பயிற்சி வழங்க முடிவு செய்தது 40,000 கணினி ஆசிரியர்களும் வாழ்வாதாரத்தை இழக்கும் விதமாக அமைந்துள்ளது அரசு..
இது எந்த விதத்தில் நியாயம்..??
 தமிழுக்கு-தமிழ் ஆசிரியர், ஆங்கிலத்திற்கு-ஆங்கில ஆசிரியர், கணிதத்திற்கு-கணித ஆசிரியர்… என மற்ற பாடங்களுக்கு அந்தந்த துறை சார்ந்த ஆசிரியர்கள் பணியில் இருக்கும்போது கணினி அறிவியலுக்கு கணினி ஆசிரியர்களை நியமனம் செய்யாமல், அறிவியல் ஆசிரியர்களுக்கு ஓர் நாள் பயிற்சி கொடுத்து  கணினி பாடத்தை கற்றுக் கொடுக்க நினைக்க முயற்சிப்பது எந்த விதத்தில் சரியாகும்..??
அரசு பள்ளிகளில் ஆசிரியர் ஆகிவிடலாம், என்ற கனவுகளுடன் கடன்பட்டு பி.எட்., படித்த 40,000-கும் மேற்பட்ட கணினி அறிவியல் பட்டதாரிகளை சபித்துவிட்டது தமிழக அரசு.
40,000 கணினி ஆசிரியர்கள் வாழ்வில் கண்ணீர் தந்த செய்தி:
இந்நிலையில், புதிய பாடத்திட்டத்தில் 3-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கணினி அறிவியல் பாடத்தை அறிவியல் பாடத்துடன் தகவல் தொழில்நுட்ப கல்வியாக இணைத்து வழங்கலாமா அல்லது துணை புத்தகமாக வழங்கலாமா என அதிகாரிகள் ஆலோசித்து அதற்கான கருத்து கேட்பும் நடைபெற்றது அதில் பலரும் கணினி பாடத்தை ஆறாவது பாடமாக கொண்டுவர பல கருத்துக்களை பதிவு செய்தனர் ஆனால் மக்களின் கருத்தும் இன்று காணல் நீர் ஆனது இன்று..
புதிய பாடத்திட்டம் வந்தால், கணினி பாடத்தை நடத்த அறிவியல் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது, பி.எட்., பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி.
தமிழகத்தில் கணினி ஆசிரியர்களின் நிலை…
மற்ற பாட ஆசிரியர்களுக்கு இல்லாத ஓர் உயரிய நிலை கணினி ஆசிரியர்களுக்கு மட்டும் உண்டு தமிழகத்தில்…
“கடந்த இரண்டு, மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரிகளுக்கு தமிழக அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்படும்” என்று முக்கிய கட்சிகள் வாக்குறுதிகள் அளித்துள்ளன… இதில், ஆளும் அரசும் அடக்கம். 
2006,2011ம்  ஆண்டு ஆளும் அரசு தேர்தல் அறிக்கையில் கணினி ஆசிரியர்களுக்கும் வாழ்வு கொடுக்கும் வண்ணம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது இன்று வரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்பதே உண்மை.மேலும்  ஆட்சிக்கு வந்ததும் வழக்கம்போல எங்களை மறந்துவிடுகிறார்கள். மாநிலம் முழுக்க 39,019 (as on 31-12-2016 RTI Report) பேர் இப்போது பி.எட்., படிப்பை முடித்துவிட்டு அரசு வேலை வழங்கும் என்று நம்பியிருந்த நிலையில் தமிழக அரசின் தொடர் புறக்கணிப்பு எங்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. 
மொத்தமாக 39,019 பேரும் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். இது தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவில் 2011ம் ஆண்டிலிருந்து  96 முறை கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஆனால் எந்த பலனும் இல்லை. பள்ளிக்கல்வித் துறையிலும் அதிகாரிகள் அனைவருக்கும் பலமுறை மனு அளித்துள்ளோம். அனைத்தும் நிரநிராகரிப்பு செய்துவிட்டது மேலும் இது *”அரசின் கொள்கைமுடிவு”* என்று கூறி  புறக்கணித்துவிடுகிறார்கள். கோரிக்கையை மட்டும் அல்ல எதிர்கால கல்வியும் சேர்த்து.
இறுதியாக எங்களுக்கு வேலை வழங்கக் கூடாது என்பதுதான் அரசின் கொள்கை முடிவா என்றால், அதற்கும் அவர்களிடம் பதில் இல்லை. 
தற்போது இருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் எங்களின் நிலையை விளக்கி 39-முறை கோரிக்கை மனு அளித்துள்ளோம். பள்ளி கல்வித்துறையில் உள்ள அனைவருக்கும் மனு கொடுத்தும் இன்று பயினல்லா நிலைக்கு எங்கள் வாழ்வு தள்ளப்பட்டு  உள்ளது.
இதுதான் தமிழக அரசின் கொள்கை முடிவா..??
மற்ற பாட ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி தந்து கணினி அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தால், அரசின் ஆசிரியர் பல்கலைக்கழகத்தில் (TNTEU) எதற்காக கணினி அறிவியல் பாடத்திற்கு பி.எட்..?? 
40,000 கணினி ஆசிரியர்கள் வேலையின்றி தவிக்கும் இந்த சோகத்தில் B.E., படித்தவர்களுக்கு பி.எட்., அங்கீகாரம் கொடுத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.
(குறிப்பு : B.E., பாடத்தில் எந்த பாடப்பிரிவை தேர்வு செய்து படித்திருந்தாலும் கணினி அறிவியல் பி.எட்., படித்தவர்கள் மட்டும் தான் இதனை பயில முடியும் என்பது கூடுதல் சிறப்பு). 
40,000 கணினி ஆசிரியர்களும் தனியார் பள்ளிகளில் கூட பணியாற்ற, தகுதியற்ற நிலைக்குக் கொண்டு சென்றதுதான் தமிழக அரசின் சாதனையா..?? இல்லை அரசின் கொள்கை முடிவா..??
கணினி அறிவியல் பாடத்தில் பி.எட்., படித்தவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு சலுகைகள்..
 தனியார் பள்ளிகளில் கூட பணி வாய்ப்புகள் இல்லை.
 ஆசிரியர்கள் தேர்வில் (TET, TRB) கணினி ஆசிரியர்கள் தொடர்ந்து புறக்கணிப்பு.
 AEEO, DEO தேர்வு எழுத முடியாத நிலையில் உள்ளோம்.
புதிய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்துடன் கட்டாயமாகும் கணினி அறிவியல் பாடத்திற்கு, பி.எட் படித்த கணினி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யமா மாணவர்கள் வாழ்வில் மாற்றத்தை விரும்பும் அரசு ??

வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.பதிவு எண் ®655/2014

பணத்திற்கு மட்டும் கணினி அறிவியல் பாடம்..

4225ரூபாய் மட்டுமே தனியார் பள்ளியில் வசூலிக்கப்படுகிறது...


LKGயில் கணினி அறிவியல் பாடம் கற்க கட்டணத்தை தெரிந்து கொள்ளுங்கள் ...

Tuesday 13 March 2018

பள்ளி கல்வித் துறைக்கு 35000கோடி நிதி!

2018-2019ம் கல்வியாண்டில் பள்ளி கல்வித்துறைக்கு 8000கோடி ரூபாய் கூடுதல் நிதியாக வழங்கப்பட உள்ளது


நன்றி தந்தி தொலைக்காட்சி.

Monday 12 March 2018

காசு கொடுத்தால் கணினி அறிவியல் கல்வி...?

காசுக்கு மட்டும் விற்பனை இன்றைய கல்விமுறை..

ஏழை மாணவர்கள் பயிலும் அரசுப்பள்ளி மாற்றம் எங்கே!!!!!

POPULAR POSTS