மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Wednesday 6 June 2018

கம்ப்யூட்டர், வகுப்பறைகள் இருக்கு... ஆன ஆசிரியர்கள், இல்லையே.. !மாநகராட்சி பள்ளி: மாணவர்கள் கடும் அவதி




அம்பத்தூர்: கொரட்டூர், சாவடி தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வகுப்பறைகள், ஆய்வக வசதிகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.     அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட 84வது வார்டான கொரட்டூர், சாவடி தெருவில் மாநகராட்சி மேல்நிலை பள்ளி உள்ளது. மேற்கண்ட பள்ளிகளில் 450க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் உள்பட 28 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், இதே வளாகத்தில் 25 குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி மையமும் அமைந்துள்ளது.'கணினி கல்வியின் புதுமை' மேற்கண்ட பள்ளிகள் பல ஆண்டாக செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் அடிப்படை வசதிகள் சரி வர இல்லாததால் மாணவர்கள் தினமும் அவதிப்பட்டு தான் படிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘கொரட்டூரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு போதுமான வகுப்பறைகள் இல்லை. இதனால் இட நெருக்கடியில் தான் கல்வி கற்க வேண்டியது உள்ளது. தனித்தனியாக ஆய்வக வசதி கிடையாது. இதனால் முறையான பயிற்சி பெற முடியாமல் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கம்ப்யூட்டர் பாட பிரிவு ஆய்வக வசதி இருந்தும் ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் கணினியை முறையாக கையாளுவது இல்லை. இதனால், கம்ப்யூட்டர் பாட பிரிவை மாணவர்கள் சரி வர பயில முடிவதில்லை.

வகுப்பறைகளுக்கு  போதுமான மேஜை, நாற்காலிகள் இல்லை. பள்ளி வளாகத்தில் உள்ள தொட்டிகளில் வாரத்திற்கு இரு முறை தான் மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் நிரப்பி வருகிறது. இதனால் போதுமான குடிநீர் இன்றி மாணவர்கள் தாகத்தால் நாக்கு வறண்டு போய் விடுகின்றனர். போதுமான கழிப்பறை வசதியின்றி மாணவ - மாணவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க அவதிப்பட்டு வருகின்றனர். இந்த கழிப்பறைகள் சுகாதாரம் இன்றி இருப்பதால் மாணவர்கள் தொற்று நோய்க்கும் ஆளாகி வருகின்றனர்.

ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை மாணவ - மாணவர்கள் விளையாட போதுமான விளையாட்டு திடல் வசதியின்றி இட நெருக்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், பள்ளிக்கு காவலாளி இல்லாததால் நள்ளிரவில் சமூக விரோதிகளின் கூடராமாக மாறி வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பல முறை மாவட்ட நிர்வாகத்திற்கும், கல்வி துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார்கள் அனுப்பி உள்ளனர். இருந்த போதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகவே உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொரட்டூர், சாவடி தெருவில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

துப்புரவு பணி செய்யும் மாணவ, மாணவிகள் 

கொரட்டூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த துப்புரவு ஊழியரை பள்ளி கல்வி துறை இயக்குனர் அலுவலகத்திற்கு பணிமாற்றப்பட்டு உள்ளார். இதனால் பள்ளியில் துப்புரவு பணிகளை செய்ய ஊழியர் இல்லாததால், குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. சில நேரங்களில் மாணவர்கள் தான் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்..



ஆசிரியர் தகுதித் தேர்வு: வெயிட்டேஜ் இல்லாமல் தேர்வு செய்ய நடவடிக்கை



ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வு செய்யும் முடிவு அரசின் பரிசீலனையில் இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார்.

 அப்போது, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக, வேலைவாய்ப்பினை இளைஞர்கள் பெற முடியாத நிலை கவலை அளிப்பதாக உள்ளது.

 கடந்த ஆண்டு தேர்வு வாரியம் மூலமாகத் தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ்கள் இதுவரை வழங்கப்படவில்லை.

 ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை தயவு செய்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில்:

கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 42 ஆயிரத்து 724 பேர் தேர்வு பெற்றார்கள்.

அதில், 13 ஆயிரத்து 781 பேர் பணியிடங்களைப் பெற்றனர். மீதம் உள்ளோருக்கு ஏழு ஆண்டுகள் அவகாசம் இருக்கிறது.

பட்டதாரி ஆசிரியர்களில் 52 ஆயிரத்து 646 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 20 ஆயிரத்து 275 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
அரசின் கடமையல்லதகுதித் தேர்வைப் பொருத்தவரையில், தேர்வர்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்க முடியுமே தவிர, அவர்கள் அத்தனை பேருக்கும் வேலைவாய்ப்பு அளிப்பது என்பது அரசின் கடமையல்ல*

 ஆனாலும், 2014-ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 938 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வில் சான்றிதழ் வழங்குவது குறித்துப் பேசப்பட்டது. இதுதொடர்பான விசாரணை, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இதனால் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைந்து அந்தப் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வெயிட்டேஜ் முறையை நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.


ஆசிரியர் தகுதித் தேர்வு: வெயிட்டேஜ் இல்லாமல் தேர்வு செய்ய நடவடிக்கை..


ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வு செய்யும் முடிவு அரசின் பரிசீலனையில் இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார்.

 அப்போது, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக, வேலைவாய்ப்பினை இளைஞர்கள் பெற முடியாத நிலை கவலை அளிப்பதாக உள்ளது.

 கடந்த ஆண்டு தேர்வு வாரியம் மூலமாகத் தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ்கள் இதுவரை வழங்கப்படவில்லை.
 ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை தயவு செய்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில்:

கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 42 ஆயிரத்து 724 பேர் தேர்வு பெற்றார்கள்.

 அதில், 13 ஆயிரத்து 781 பேர் பணியிடங்களைப் பெற்றனர். மீதம் உள்ளோருக்கு ஏழு ஆண்டுகள் அவகாசம் இருக்கிறது.

பட்டதாரி ஆசிரியர்களில் 52 ஆயிரத்து 646 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 20 ஆயிரத்து 275 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

அரசின் கடமையல்ல:

தகுதித் தேர்வைப் பொருத்தவரையில், தேர்வர்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்க முடியுமே தவிர, அவர்கள் அத்தனை பேருக்கும் வேலைவாய்ப்பு அளிப்பது என்பது அரசின் கடமையல்ல*

 ஆனாலும், 2014-ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 938 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வில் சான்றிதழ் வழங்குவது குறித்துப் பேசப்பட்டது. இதுதொடர்பான விசாரணை, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனால் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைந்து அந்தப் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வெயிட்டேஜ் முறையை நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என்றார் அமைச்சர் .

Tuesday 5 June 2018

என்னைப் படிக்க உள்ளே விடுங்கள்' - தந்தையுடன் பள்ளி வாயில் முன்பு போராடும் மாணவன்..




திருப்பூர் தனியார் பள்ளியில் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலமாக இலவசக் கல்வி பயிலும் 1-ம் வகுப்பு மாணவனை, ''பணம் கட்டினால்தான் உள்ளே விடுவோம்'' எனப் பள்ளி நிர்வாகம் வெளியேற்றியதாகப் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

திருப்பூரில் இயங்கிவரும் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 1-ம் வகுப்பு பயின்று வருகிறார் மாணவர் காந்திஜி.

இப்பள்ளியில் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலமாக எல்.கே.ஜி முதலே இலவசக் கல்வி பெற்றுவரும் மாணவர் காந்திஜியை, இன்றைய தினம் பள்ளிக்குள் வர விடாமல், நுழைவுவாயில் பகுதியிலேயே தடுத்து நிறுத்தி, நிர்வாகத்தினர் திருப்பி அனுப்பியதாகத் தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் தந்தை பழனிக்குமார், தன் மகனுக்கு நீதி கேட்டு பள்ளி நுழைவுவாயில் முன்பாகக் காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினார்.

 மாணவனும் தந்தையும் பள்ளி வளாகத்தின் முன்பாக சாலையில் நின்றுகொண்டு போராட்டம் நடத்தியதால் அப்பகுதி வழியே சென்ற பொதுமக்கள் கூட்டமாகக் கூடி வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மாணவனின் தந்தை பழனிக்குமார், "என் மகன் இந்தப் பள்ளியில்தான் எல்.கே.ஜி-யிலிருந்து படித்து வருகிறான்.

 கல்வி உரிமைச் சட்டத்தின் மூலமாக இலவசக் கல்வியைப் பெற மிகவும் போராடியே இங்கு என் மகனை சேர்த்திருக்கிறேன். எல்.கே.ஜி முடியும்வரை பள்ளி நிர்வாகத்தினர் என் மகனுக்கு புத்தகங்களே கொடுக்கவில்லை.



 பின்னர், தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்து, நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் என் மகனுக்கு யு.கே.ஜி-யில் பாடப் புத்தகங்களைக் கொடுத்தார்கள்.



மேலும் சென்ற ஆண்டு கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், இந்தப் பள்ளியில் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் இலவசமாகப் படிக்கும் மாணவர்களிடம், பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தி பணம் வசூலித்ததைத் தெரிவித்தேன்.



 அதைத்தொடர்ந்து இலவசக் கல்வி பெரும் மாணவர்களிடம் வசூலித்த பணத்தை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்குமாறு பள்ளி நிர்வாகத்துக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் பள்ளி நிர்வாகத்துக்கு என்மீது கோபம் அதிகரித்தது



அதையடுத்து பள்ளியில் நடைபெறும் எந்தவொரு பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திலும் என்னைக் கலந்துகொள்ள அனுமதிக்கமாட்டார்கள்.



 இந்த ஆண்டு கோடை விடுமுறை முடிந்து நேற்றைய தினம் மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. நேற்றைய தினமே என் மகனை உள்ளே விடாமல் தடுக்க முயன்றார்கள்.



நான் எதிர்த்துக் கேள்வி கேட்டதால் பின்னர் உள்ளே அனுமதித்தார்கள். நான் மகனை பள்ளிக்குள் அழைத்துச் சென்று 1-ம் வகுப்பு அறையில் அமர வைத்துவிட்டு வந்தேன்.



 இந்நிலையில் இன்றைய தினம் வழக்கம்போல என் மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்றபோதுதான், பள்ளியின் நுழைவுவாயில் பகுதியில் நின்றுகொண்டு இருந்த உடற்கல்வி ஆசிரியர்களும் செக்யூரிட்டிகளும் என் வாகனத்தைத் தடுத்து நிறுத்தி, சாவியைப் பறித்துக்கொண்டார்கள். மேலும் 20,000 வரை கட்டணம் செலுத்தினால்தான் என் மகனை பள்ளிக்குள் அனுமதிப்போம் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவித்தார்கள். அப்படியென்றால் அதை எழுத்துபூர்வமாக எழுதித் தாருங்கள் என்று கேட்டேன்.



 அதற்கு அவர்கள் சம்மதிக்காமல் என்னையும் என் மகனையும் வெளியேற்றிவிட்டார்கள். இலவசக் கல்வி பயிலும் மாணவனிடம் எதற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும்.



 என் மகனுக்கு நீதி கிடைக்கும்வரை என் போராட்டத்தைத் தொடருவேன்'' என்றார் கோபமாக.
புகார் குறித்து பள்ளியின் துணைத் தலைவர் கோவிந்தப்பனிடம் பேசினோம். "
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தப் பள்ளியில் பயிலும் எந்த மாணவர்களிடமும் நாங்கள் கல்விக் கட்டணம் வசூலிப்பது இல்லை.

ஸ்டேசனரீஸ், ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட Extra curricular activities-க்கான கட்டணத்தை மட்டுமே வசூலிக்கிறோம்.

 அதுவும் அவரிடம் கேட்டது ரூபாய் 7,585 மட்டுமே. இது இங்கு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும்.

 அதற்குண்டான ரசீதும் வழங்கிவிடுகிறோம். ஆனால், சம்பந்தப்பட்ட நபர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் செயல்பட்டு பள்ளிக்கு களங்கத்தை ஏற்படுத்த முயல்கிறார்'' என்றார்.

''அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டும்'' என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Monday 4 June 2018

எனக்கு ஒன்னும் புரியமாட்டேங்குது ..!





1.பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு 1000₹ வழங்கினோம்
2.சொந்த செலவில் ஸ்மார்ட் போர்டு வைத்தோம்
3.தரமான சீருடை கொடுத்தோம்
4.தரமான காலணி கொடுத்தோம்
5.பள்ளிக்கு வண்ணம் பூசினோம் வண்ண ஓவியம் வரைந்தோம்
6.ஸ்பான்சர் பிடிச்சி வகுப்பறை கட்டினோம் சுற்றுச்சுவர் கட்டினோம்
7.பசங்க பள்ளிக்கு வர சொந்த செலவில் வாகன வசதி செய்தோம்
8.கணினி வாங்கினோம் கக்கூஸ் கட்டினோம்
9.தரையோடு பதித்தோம்
10.குளிரூட்டப்பட்ட அறை அமைத்தோம்
       #இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ஆசிரியர்களின் செயல்பாடுகளை...இது எ ல்லாம் எதற்கு யாருக்கும் இல்லா அக்கறை ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் ஏன் ஏன்....
        #தன்னை காப்பாற்றிக்கொள்ளவா
       #மாணவர்களை தக்க வைக்கவா
       #அரசுக்கு இல்லா அக்கறை ஆசிரியர்களுக்கா
       #அரசு பள்ளிகளை காப்பாற்றவா
       #மாணவர்கள் மீது உண்மை அக்கறையா
       #மற்ற துறையில் உள்ளோர் தன் பணிபுரியும் இடத்தை முன்னேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் #கல்வித்துறையில் மட்டும் இந் நிலை ஏன்
         #ஆக்கபூர்வ பதிலை எதிர்நோக்கி உங்களில் ஓர் ஆசிரியை by facebook.

நீட் சோகம்!



தமிழகம் 39.5%


நீட்:தமிழக நிலை


டாப் 50  தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி ! 

POPULAR POSTS