![]() |
இந்தாண்டு முதல் 670 அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி வகுப்புகள் குறைந்தது மூன்று மணி நேரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. |
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க மத்திய அரசின் கல்வி திட்டங்கள் எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் ஆசிரியர் கல்வி (டி.இ.) ஆகியவை மூலம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் விருப்பத் திறனை அறிந்து அவர்களுக்கு தொழில் பயிற்சி அளிப்பதன் மூலம் தொழில் சார்ந்த அறிவும், ஆற்றலையும் வளர்க்க முடியும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பள்ளிக் கல்வித் துறையின் மூலம் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க தமிழகம் முழுவதும் 670 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 67 பள்ளிகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் அனுமதி கிடைத்துவிட்டது.
பள்ளி வளாகத்திலேயே மாணவர்கள் விருப்பத்தை அறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வெவ்வேறு பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு சமமான தொழில் கல்வி அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின்படி ஒரு பள்ளியில் குறைந்தபட்சம் 80 மாணவர்களை தேர்வு செய்து தொழில் பயிற்சி அளிக்கப்படும்.
விவசாயம், ஆட்டோ மொபைல், ஜவுளி, எலக்ட்ரானிக், ஹார்டுவேர், சுகாதாரம், சுற்றுலா, அழகு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு தொழிற் பயிற்சிகள் மாணவர்கள் விருப்பம் அறிந்து அளிக்கப்படும்.

இப்பயிற்சி 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும். ஒரு மாணவனுக்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கிறது என்பதை கேட்டறிந்து அதற்கேற்றவாறு இத்தொழில் பயிற்சி அளிக்கப்படும். ஒரு வாரத்துக்கு குறைந்தது 3 மணி நேரம் தொழில் சார்ந்த பயிற்சி அளிக்கப்படும்.
உதாரணத்திற்கு வேளாண்மை துறையில் இன்றைய காலகட்டத்தில் நவீன மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. புதிய தொழில்நுட்பம், ஆர்கானிக் பயிர் வகைகள் போன்ற விவசாயத்தில் நவீன மாற்றங்களை மாணவர்களுக்கு பள்ளியில் கற்றுக் கொடுத்தால் உயர்கல்வி பெறும் நிலையில் ஒரு பெரிய தொழில் முனைவோராக உருவாக்க முடியும் என்ற நோக்கத்தில் மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பிக்கப்பட உள்ளது.
தொழிற்கல்வி பயிற்சி வருகின்ற கல்வி ஆண்டு முதல் மாணவர்களுக்கு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொழில் சார்ந்ததாகவும் இப்பயிற்சி அளிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பயிற்சி நிறைவு பெறும் ஆண்டில் மாணவர்களுக்கு தொழிற்கல்வி சான்றிதழ் வழங்கப்படும். 9-ம் வகுப்பில் அளிக்கப்படும் பயிற்சி தொடர்ந்து அடுத்த வகுப்பிற்கு மாறி செல்லும்போது தொழிற் பயிற்சியும் இடைவிடாமல் அளிக்கப்பட உள்ளது. இதற்காக அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி சிறப்பு ஆசிரியர்களையும் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பள்ளியில் 2 வகுப்பறைகள் இதற்காக வடிவமைக்கப்படுகிறது.
கோவை வருவாய் மாவட்டத்தில் 23 அரசு மற்றும் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் இத்திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
வேளாண்மை தொழிற் பயிற்சிக்கு 8 பள்ளிகளும், ஜவுளி தொழிற்பயிற்சிக்கு 5 பள்ளிகளும், எலக்ட்ரானிக் மற்றும் ஹார்டுவேர் பயிற்சிக்கு 7 பள்ளிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 2 அரசு பள்ளியும், ஒரு மாநகராட்சி பள்ளியும் கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டன. ஆனால் அவை ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
மாணவர்களின் ஆர்வத்தை பார்த்துதான் தொழிற்பயிற்சி திட்டம் தொடங்கப்படும். இதற்காக விரைவில் ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்க திட்டமிட்டுள்ளது
No comments:
Post a Comment