மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில், கணினி ஆசிரியர் பணியிடங்கள், ஓரிரு நாளில் நிரப்பப்படும், என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
தமிழக அரசு, மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளது*
இப்பணி, முற்றிலும் தற்காலிகமாக, மாதம், 7,500 ரூபாய் என்ற சம்பளத்தில் நியமிக்கப்படுவர். மூன்று மாதங்களுக்கு மட்டும் இப்பணி வழங்கப்படும், என தெரிவித்துள்ளனர். பி.எஸ்.சி., அல்லது இணையான கல்வித்தகுதி உடையவர்கள் மட்டும், தற்காலிக கணினி ஆசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்*
அந்தந்த பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் காலிப்பணியிடம் குறித்து அறிந்து, விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, 21 கணினி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. அவை உடனுக்குடன் நிரப்பப்பட்டு விட்டது*
எனினும், மலைப்பகுதிகளில், குறிப்பாக, பர்கூர், தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில், கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இப்பணியிடங்கள், ஓரிரு நாளில் நிரப்பப்படும் என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்*
*SOURCE DINAMALAR WEBSITE*

அடுத்த கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன், அரசு சார்பில், நிரந்தர கணினி ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படுவர், என, அதிகாரிகள் தெரிவித்தனர்
*SOURCE DINAMALAR WEBSITE*