தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம். Reg No:655/2014. வெ.குமரேசன் , பொதுச் செயலாளர், EMail: tnbedcsvips@gmail.com WhatsApp: 9626545446
மலர்கள்
BREAKING NEWS
Flash News
Saturday, 22 September 2018
Friday, 21 September 2018
தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்திட தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வெள்ளிக்கிழமை மாலை வந்தார். அவரை கோயில் இணை ஆணையர் பா.பாரதி மற்றும் அலுவலர்கள் வரவேற்றனர்.
முன்னதாக, அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையில் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ஆரம்பிக்கப்பட உள்ளது. கல்வித் துறையில் உருவாக்கப்படும் மாற்றங்கள் மூலம் இந்தியாவிலேயே தமிழகம் திருப்புமுனையை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் காலிப் பணியிடமே இல்லாத நிலையை உருவாக்க பெற்றோர்- ஆசிரியர்கள் சங்கம் மூலம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்காக அரசாணை கடந்த வாரம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணை மாவட்டத்தோறும் உள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அதனை முதன்மை கல்வி அலுவலர்கள் செயல்படுத்துவார்கள்.
தமிழக பள்ளிகளில் ஆசிரியர்கள், பெற்றோர்களை பொருத்தவரையில் மாணவர்களின் எதிர்கால நலனை கொண்டு செயல்பட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பள்ளிக் கட்டமைப்பை பாதுகாக்கவும், மாணவர்களை வழிநடத்தவும் பெற்றோர்- ஆசிரியர் அமைப்பு உள்ளது. ஒருவேளை ஆசிரியர்களிடம் குறைகள் இருக்குமானால் பெற்றோர்கள் சுட்டிக்காட்டினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்
Monday, 17 September 2018
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை..!
*காலாண்டு தேர்வுகள் அனைத்து வகுப்பினருக்கும் வரும் 22 ஆம் தேதியுடன் முடிவடைவதால்*
*செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறையாக அரசு அறிவித்தது.*
*தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள் அனைத்தும் வருகின்ற 22 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.*
*ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு இன்று செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கி வருகிற 22-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.*
*அதே போல, 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையான வகுப்புகளுக்கு செப்டம்பர் 10-ஆம் தேதி தொடங்கிய காலாண்டு தேர்வு வரும் 22-ஆம் தேதி வரை நடக்கிறது.*
*தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு, 3 பகுதிகளாக தேர்வுகள் நடந்து வருகிறது. இத்தேர்வு முறையானது, காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு என மூன்று பகுதியாக தேர்வு நடந்து வருகிறது.*
*இந்நிலையில் தற்போது, காலாண்டு தேர்வுகள் அனைத்து வகுப்பினருக்கும் வரும் 22 ஆம் தேதியுடன் முடிவடைவதால் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறையாக அரசு அறிவித்தது.*
*மேலும், மீண்டும் பள்ளிகள் அக்டோபர் 3 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது.*
Subscribe to:
Posts (Atom)
POPULAR POSTS
-
தமிழக அரசு நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிக்கு ஓர் கணினி பயிற்றுநர் பணி நியமனம் செய்ய உள்ளது. தமிழக அரசு வருகின்ற கல்வியாண்டு ஜீன் முதல் 6992...
-
கூகுளின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தொடங்கி உலகின் பல டெக் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் தமிழர்கள் கோலோச்சுகிறார்கள். சென்னை டை...
-
60,000 கணினி ஆசிரியர்களும் ஒரே மாதிரியான (subject)தலைப்புகளில் ஈமெயில் செய்வோம்.. Subject: கலைஞரின் கனவு திட்டமான கணினி அறிவியல் பாடத்தை அரச...
-
சமச்சீர் கல்வியில் கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிக்கு கொண்டுவர அரசுப்பள்ளி மாணவர்கள் ,60000வேலையில்லா கணினி ஆசிரியர...