மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Saturday, 29 September 2018

மாணவர் சேர்க்கை குறைந்தால் மத்திய அரசின் நிதி நிறுத்தம்:Samagra Shiksha 3003 பள்ளிகளுக்கு திடீர் நிறுத்தம்..



சமக்ரா சிக்‌ஷா அபியான்’ திட்டம் :3,000 அரசு பள்ளிகளுக்கு மானியம் திடீர் நிறுத்தம்: 15 மாணவர்கள் இல்லாத பள்ளிகளை மூட திட்டம்.

சமக்ரா சிக்‌ஷா அபியான் திட்டத்தில் கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் செயல்பட்டு வருகின்ற 15  மாணவர்களுக்கும் குறைவான  எண்ணிக்கையில் உள்ள 3 ஆயிரம் பள்ளிகளுக்கு அரசின் ஒருங்கிணைந்த பள்ளி மானியம் நிறுத்தப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஆண்டுதோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளி மானியமும், அரசு பள்ளிகளுக்கு பராமரிப்பு  மானியமும் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது 2018-19ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ்  (சமக்ரா சிக்‌ஷா அபியான்) அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நல்ல சூழலில் கல்வி கற்பதற்கு ஏற்றவாறு தேவையான வசதிகளை மேம்படுத்த  ஒருங்கிணைந்த பள்ளி மானியம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

2018-19ம் ஆண்டு வரைவு திட்ட ஒப்புதலில் தமிழகத்தில் 31 ஆயிரத்து 266 அரசு ெதாடக்க பள்ளிகள் மற்றும் அரசு நடுநிலை பள்ளிகளுக்கு ₹97 கோடியே 18  லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ஆனால் ஆண்டு வரைவு திட்ட ஒப்புதலில் 15 மாணவர்கள் எண்ணிக்கைக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே  இந்த மானியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல்கட்டமாக 15 மாணவர்கள் எண்ணிக்கைக்கு மேல் உள்ள 28 ஆயிரத்து 263 அரசு தொடக்க  மற்றும் மாவட்ட நடுநிலை பள்ளிகளுக்கு மட்டும் ₹89.67 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

15 மாணவர்கள் எண்ணிக்கைக்கு மேல் உள்ள நிதி ஒதுக்கீடு பெறப்பட்டிருக்கும் அரசு, ஊராட்சி, நகராட்சி, ஆதி திராவிடர், கள்ளர் சீரமைப்பு, வனத்துறை, சமூக  நலத்துறையின் கீழ் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மட்டுமே மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் இந்த மானியம் வழங்கப்பட வேண்டும்.

நிதி ஒதுக்கீடு தொகைக்கு கூடுதலாக எந்த காரணத்தை கொண்டும் ஒருங்கிணைந்த பள்ளி மானியம் வழங்கக்கூடாது என்று சமக்ரா சிக்‌ஷா அபியானின் மாநில  திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார். மேலும் விடுவிக்கப்படுகின்ற பள்ளி மானிய  தொகையில் 10 சதவீதம் ஸ்வச்சா திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் 15 மாணவர்கள் எண்ணிக்கைக்கு குறைவாக உள்ள பள்ளிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான அறிவுரைகள் சுற்றறிக்கையில்  தெரிவிக்கப்பட வில்லை

தமிழகத்தில் 3003 பள்ளிகள் 15 மாணவர்களின் எண்ணிக்கைக்கு குறைவாக உள்ளவை என்று கண்டறியப்பட்டுள்ளது.  இதனால் இந்த பள்ளிகளுக்கு மூடு விழா நடத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது

தமிழக அரசு ஏற்கனவே 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை அருகே உள்ள பள்ளிகளுடன் இணைக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில்  தற்போது 15 மாணவர்களுக்கும் குறைவாக மாணவர்கள் எண்ணிக்கையுடன் செயல்படுகின்ற பள்ளிகளை அருகே உள்ள நடுநிலை, உயர்நிலை  பள்ளிகளுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாலேயே ஒருங்கிணைந்த பள்ளி மானியம் நிறுத்தப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள்  குற்றம்சாட்டுகின்றனர்
இதன் காரணமாக பல்வேறு கிராமங்களில் அரசு பள்ளிகள் இல்லாத நிலை ஏற்படும்

தமிழக அரசு பள்ளிகள் மாணவர்கள் எண்ணிக்கை:

தமிழகத்தில் 2018-19ம் கல்வியாண்டு கணக்கின்படி 31,266 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன

15 முதல் 100 மாணவர்கள் வரை எண்ணிக்கையில் 21 ஆயிரத்து 378 அரசு பள்ளிகள் செயல்படுகின்றன
101 முதல் 250 மாணவர்கள் வரை எண்ணிக்கையுடன் 6167 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது 251 முதல் 1000 மாணவர்கள் வரை உள்ள பள்ளிகள் 714 ஆகும்.ஆயிரம் மாணவர்களுக்கு மேல் 4 பள்ளிகள் மட்டுமே உள்ளன 3003 பள்ளிகளில் 15க்கும் குறைவான மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்

Wednesday, 26 September 2018

வேலையில் சேரும்போதே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை..



அரசு பள்ளிகளில் காலி பணியிடங்களுக்கு ஏற்ப அரசு தேர்வாணையம் மூலம் புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


வேலையில் சேரும்போதே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை என்று பள்ளி கல்வி துறை  அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை தமிழக அரசு சிறப்பு ஆசிரியர்கள் என்ற அடிப்படையில்  பணி நியமனம் செய்தது.  இதுபோன்று தமிழகம் முழுவதும் 16,500 ஆசிரியர்கள் உள்ளனர். பணியில்  சேரும்போது ரூ.5 ஆயிரமும், பின்னர் படிப்படியாக  தற்போது ரூ.7,700 சம்பளம்  வழங்கப்படுகிறது. வேலைக்கு சேரும்போதே பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது  என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது

ஆனாலும்,  இவர்கள் சொந்த ஊர்களுக்கு  பணிமாறுதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரத்துக்கு 3 நாட்களும்,  அந்த மூன்று நாட்களும் 2 மணி நேரம் மட்டுமே  இவர்கள் பணி செய்வார்கள்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை.  போராட்டம் நடத்தும் ஆசிரியர்களிடம் துறை செயலாளர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது

தமிழகத்தில் 82 ஆயிரம் ஆசிரியர்கள் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை ஆசிரியர் தகுதி ேதர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தமிழக அரசு  பள்ளிகளில் காலி பணியிடம் இல்லாததால் காத்திருப்போர் பட்டியலில் அவர்கள் இருக்கிறார்கள்.

இனிமேல் அந்த நிலை இருக்கக்கூடாது என்ற  நிலையில்தான் 2013ல் இருந்த ஆசிரியர்களுக்கும் இப்போது இருக்கும் ஆசிரியர்களுக்கும் வெயிட்டேஜ் என்ற முறையில் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.  அதை நாங்கள் வாபஸ் பெற்றிருக்கிறோம்.

அன்றைய மதிப்பெண் வேறு, இன்றைய மதிப்பெண் வேறு. இதை மாற்றி அமைத்ததற்கு பிறகு அரசு பள்ளிகளில் காலி  பணியிடங்கள் எவ்வளவு என்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்

அந்த காலி பணியிடங்களுக்கு ஏற்ப அரசு தேர்வாணையம் மூலம் புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.தமிழகத்தில் 32 மாவட்டங்களில் தலா 50  லட்சம் ரூபாய் செலவில் மாடர்ன் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது


சென்னையில், எழும்பூரில் உள்ள பிரின்ஸ் பள்ளியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் 7  குழந்தைகள் சேர்ந்துள்ளனர். புதிதாக ஆரம்பித்துள்ளோம். அரசின் பணியை பார்த்துக்கொண்டு இன்னும் நிறைய குழந்தைகள் வருவார்கள். இவ்வாறு அவர்  கூறினார்..

பெற்றோர் ஆசிரியர்கள் கழகத்தில் 1474 ஆசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியீடு...

தமிழக அரசுப் பள்ளிகளில்.. 
1474 காலிப் பணி இடங்கள்

G.O. 619 நாள் : 19.09.18

PTA - PG Teachers for handling XI & XII STD.
தற்காலிகப் பணியிடங்கள்.. (செப்-18 முதல் பிப்.19 வரை  6 மாதங்கள் ஒப்பந்த அடிப்படையில்..)

தொகுப்பு ஊதியம் : ரூ.7500/-

பாடங்கள் : 
தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், பொருளியல் (11 பாடங்கள் மட்டும்..)

காலிப்பணியிட விபரங்கள் :
அரியலூர் - 21
சென்னை - 14
கோவை - 45
கடலூர் - 35
தர்மபுரி - 17
திண்டுக்கல் - 21
ஈரோடு - 61
காஞ்சிபுரம் - 77
கன்னியாகுமரி - 17
கரூர் - 23
கிருஷ்ணகிரி - 33
மதுரை - 15
நாகை - 135
நாமக்கல் - 30
பெரம்பலூர் - 20
புதுக்கோட்டை - 46
ராமநாதபுரம் - 28
சேலம் - 30
சிவகங்கை - 12
திருவண்ணாமலை - 117
தஞ்சாவூர் - 60
நீலகிரி - 67
தேனி - 11
நெல்லை - 35
திருப்பூர் - 36
திருவள்ளூர் -106
திருவாரூர் - 97
திருச்சி - 31
தூத்துக்குடி - 32
வேலூர் - 120
விழுப்புரம் - 62
விருதுநகர் - 20
.

Tuesday, 25 September 2018

FLASH NEWS:பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது :பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்..



இதுகுறித்து அவர் சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
நிதி நெருக்கடி காரணமாக பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது. நூலகங்களுக்கு புதிய புத்தங்கள் தொடர்ந்து வாங்கப்பட்டு வருகிறது.

சென்னை, திருவள்ளூர, காஞ்சிபுரம், கோவையில் உள்ள நூலகங்களுக்கு தனியார் மூலம் இணைய சேவை வழங்கப்படு வருகிறது என்றார்.

பணி நிரந்தரம் செய்யக் கோரி 2,000-த்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாதது கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்



ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தை தமிழக ஆட்சியாளர்கள் இன்று வரை செயல்படுத்தாதது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழக அரசு பள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி  ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்கும் திட்டத்தை அதிமுக அரசு கடந்த 7 ஆண்டுகளாக செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது. மத்திய அரசு பலமுறை எச்சரித்தும், ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தை தமிழக ஆட்சியாளர்கள் இன்று வரை செயல்படுத்தாதது கடுமையாக கண்டிக்கத்தக்கது.


நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும், மாணவர்களின் கற்றல் திறனையும் மேம்படுத்தும் நோக்குடன் ஸ்மார்ட் வகுப்பறைகளை ஏற்படுத்தும் திட்டத்தை அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின் கீழ் மத்திய அரசு உருவாக்கியது. அனைத்து வகுப்புகளுக்குமான பாடநூல்களின் உள்ளடக்கத்தைக் கணினிமயமாக்கி மையக் கணினி மூலமாக வகுப்பறைகளில் வழங்குவது தான் இந்தத் திட்டமாகும். அதுமட்டுமின்றி, தலைசிறந்த ஆசிரியர்களின் விரிவுரைத் தொகுப்புகளும் செயற்கைக் கோள் மூலமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்புகளில் பயிற்றுவிப்பதும் இத்திட்டத்தில் சாத்தியமாகும்.

அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான இத்திட்டம் கடந்த 2011-12 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன்பின் 7 ஆண்டுகளாகியும் தமிழக அரசு பள்ளிகளில் இத்திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. தில்லியில் கடந்த மே 17-ஆம் தேதி நடைபெற்ற மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிக் கல்வித் துறையின் திட்ட அனுமதி வாரியக்கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனுமதி  அளிக்கப்பட்ட 5265 பள்ளிகளில் 4340 பள்ளிகளில் இன்னும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படாதது ஏன்? என்று கேட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை கடந்த ஜனவரி இரண்டாம் தேதியே பிறப்பிக்கப்பட்டு விட்டதாகவும், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டிருப்பதாகவும் அக்கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக்கல்வி செயலர் பிரதீப் யாதவ், மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு இயக்குனர் அறிவொளி, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின் இயக்குனர் இராமேஸ்வர முருகன் ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்.

ஆனால், அதை ஏற்காத மத்திய அரசு இத்திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்தி முடிக்க வேண்டும் என்று  எச்சரித்துள்ளது. ஏற்கனவே 2015-16 ஆம் ஆண்டிலும் இதேபோன்று தமிழகம் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. இது தமிழகத்திற்கு பெரிய அவமானம்; இதற்காக ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டும். ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தை செயல்படுத்துவது கடினமான ஒன்றல்ல. மாறாக, கல்வி வளர்ச்சிக்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு இல்லாததும், மாணவர்களின் நலனுக்கான இந்தத் திட்டத்தில் கூட ஊழல் செய்ய வேண்டும் என்று ஆட்சியாளர்கள் துடித்ததும் தான் இதற்கு காரணமாகும். 2011-12 ஆம் ஆண்டில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ.23.41 கோடி, மாநில அரசின் சார்பில் ரூ.7.80 கோடி என மொத்தம் ரூ.31.21 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்பிறகும் இத்திட்டம் செயல்படுத்தப்படாததற்கு முக்கியக் காரணம் ஊழல் தான்.

ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்திற்காக இதுவரை மொத்தம் 5 முறை ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன.  இத்திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீட்டில் 25% கையூட்டாக தர வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு அஞ்சி முதல் 3 ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளில் ஒருவர் கூட பங்கேற்கவில்லை. பள்ளிக்கல்வித்துறை செயலாளராக உதயச்சந்திரன் இருந்தபோது, நான்காவது முறையாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. அப்போது ஒப்பந்தப்புள்ளி நடைமுறை நியாயமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமான நிறுவனங்கள் பங்கேற்றன. ஆனால், அவரை ஒதுக்கி விட்டு மொத்தம் ரூ.417 கோடி மதிப்புள்ள அந்த ஒப்பந்தத்தை வழங்க  ரூ.100 கோடி கையூட்டு கேட்டு  ஆட்சியாளர்கள் தரப்பில் பேரம் பேசப்பட்டது, ஆனால், அந்த அளவு கையூட்டு கொடுக்க யாரும் முன்வராததால் அந்த ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டது. இப்போது ஐந்தாவது முறையாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. பேரம் படியாத பட்சத்தில் இப்போதும் ஸ்மார்ட் வகுப்புத் திட்டம் நடைமுறைக்கு வருவது ஐயம் தான்.

தமிழக அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளைத் தொடங்கும் திட்டத்தை ஆட்சிக்கு வந்த புதிதில் 26.08.2011 அன்றே அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்பின் அதே திட்டத்தை 19.06.2017 அன்று புதிய திட்டம் போன்று இப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஜெயலலிதாவில் தொடங்கி பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என 3 முதல்வர்களையும், சி.வி.சண்முகம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர். சிவபதி, வைகைச்செல்வன், பி.பழனியப்பன், கே.சி வீரமணி, பி.பெஞ்சமின், மாஃபாய் கே. பாண்டியராஜன், கே.ஏ.செங்கோட்டையன் என 9 அமைச்சர்களையும் ஸ்மார்ட் வகுப்புத் திட்டம் சந்தித்து விட்டது. ஆனாலும் இன்னும் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.

மாணவர்கள் தான் தமிழகத்தின் எதிர்காலம். அவர்களின் நலனுக்கான அற்புதமானத் திட்டத்தை, கையூட்டை எதிர்பார்த்து 7 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு வைத்திருப்பதை விட பெரிய துரோகம் எதுவும் இருக்க முடியாது. இத்தகைய துரோகத்தை செய்த பினாமி அரசு இனி தமிழகத்தை ஆளும் தகுதியை இழந்து விட்டது. அதனால் பினாமி எடப்பாடி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Monday, 24 September 2018

பள்ளிக்கல்வி துறையில் 7,500 வழக்குகள் - சமாளிப்பது எப்படி? பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை...



ஒரே பள்ளி வளாகத்தில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரையிலான, வகுப்புகளை நடத்த, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் நிர்வாகங்களின் கீழ், 57 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதில், அரசு பள்ளிகள் மட்டும், 37 ஆயிரம். அவற்றில், 24 ஆயிரம் தொடக்க பள்ளிகள்; 7,200 நடுநிலை; 3,000 உயர்நிலை; 2,800 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. தொடக்க பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி என, தனித்தனி வளாகங்களில் இயங்குவதால், மாணவர்கள், அவ்வப்போது பள்ளி மாற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இதன் காரணமாக, பல மாணவர்கள், மாற்று சான்றிதழ் பெற்று, பின், எந்த பள்ளியிலும் சேராமல், படிப்பை பாதியில் விடுகின்றனர். அதை தவிர்க்க, ஒரே வளாகத்தில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை படிக்கும் வசதியை ஏற்படுத்த, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. 

அதன்படி, முதற்கட்டமாக, மாவட்டத்திற்கு ஒன்று என, 32 பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை, ஒரே பள்ளியில் படிக்க வசதி செய்யப்படுகிறது. இதை படிப்படியாக, வட்டார அளவில் விரிவுபடுத்தவும், பள்ளி கல்வி துறை முடிவு செய்து உள்ளது.

இதுகுறித்து, சென்னையில் நடந்த, முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில், பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் விவாதித்துள்ளார். அப்போது, 'இந்த திட்டத்தை, உடனே செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதுகுறித்து, அரசியல் ரீதியான பிரச்னைகள் வந்தால், அவற்றையும் எதிர்கொண்டு, இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்' என, அவர் குறிப்பிட்டு உள்ளார். இத்திட்டம் அமலுக்கு வந்தால், ஒன்றுடன் ஒன்று என, பல பள்ளிகள் இணைக்கப்படும். அதனால், குறைந்தபட்சம், 1,000 பள்ளிகளுக்கு மேல் மூடப்படும் என, தெரிகிறது.

பள்ளிகள் இணைப்பு ஏன்?

அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்ததால், பல பள்ளிகளில், 10க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர்; ஆனால், தலா, இரண்டு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களுக்கு, மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை, ஊதியமாக செலவிடப்படுகிறது. 

உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகளால், கடும் நிதிச்சுமை ஏற்படுகிறது. மாணவர் எண்ணிக்கை குறைவு காரணமாக, 3,003 பள்ளிகளுக்கு, மத்திய அரசின் நிதியுதவியும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த பள்ளிகளை, ஒன்றுடன் ஒன்று இணைக்க, பள்ளி கல்வி முடிவு செய்துள்ளது. இதற்காக, ஒரே வளாகத்தில், பிளஸ் 2 வரையிலான கல்வி என்ற திட்டத்தை, அமல்படுத்த வேண்டிய கட்டாயம், அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

Sunday, 23 September 2018

கணினி ஆசிரியர் உள்பட அனைத்து ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் :அமைச்சர் செங்கோட்டையன்


கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட் பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்



கோபிச்செட்டிப்பாளையம்: அரசு பள்ளிகளில் காலி பணியிடங்கள் நாளை முதல் நிரப்பப்படும். .  பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கி உள்ளது.

  பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ரூ.-7,500 சம்பளத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். அந்த பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் போது பகுதி நேர ஆசிரியர்கள் நீக்கப்படுவார்கள்.

  அதே நேரத்தில் 11ம் வகுப்பிற்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும். அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 12ம் வகுப்பிற்கு செல்ல முடியும். அதே போன்று மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, 12ம் வகுப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை மட்டுமே உயர் கல்விக்காக ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் 3000 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதே போன்று 9 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். அந்த பணிகள் முடிவுற்றவுடன், தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக கணிணி ஆசிரியர் பணியிடம் ரூ-.7,500 சம்பளத்தில் நிரப்பப்படும். கணிணி ஆசிரியர் பணியிடமும் பி.எட் பட்டம் பெற்றவர்களை கொண்டு மட்டுமே நிரப்பப்படுவர் என தெரிவித்தார்

தற்போது காலியாக உள்ள கணினி ஆசிரியர்கள் பணியிடம் மாவட்ட வாரியாக.


நன்றி:தினகரன்.

திரு வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

மாண்புமிகு தினகரன் அவர்களை நேரில் சந்தித்து கணினி ஆசிரியர்கள் கோரிக்கை மனு...


கணினி  ஆசிரியர்கள் சங்கத்தின் மகளிர் அணிச் செயலாளர்.
திருமதி ஸ்ரீநித்யா அவர்கள் நேரில் சந்துத்து மனு..

மனு கோரிக்கை விபரம்:


1). அரசு பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் (தனியார் பள்ளிகளுக்கு நிகராக).

2.) சமச்சீர் கல்வியில் கொண்டுவந்த கணினி அறிவியல்  பாடத்தை, மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காக அச்சிட்டப்பட்ட (6ம் வகுப்பு முதல் 10ம் வரை) பாட புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

 3.) 2006 ஆம் ஆண்டிலிருந்து புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறியவியல் பாடப்பிரிவு இல்லை. அங்கு கணினி அறியவியல் பாடப்பிரிவை  கொண்டுவந்து அதற்கு கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் .

  4) 800 அரசு மேனிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

5).பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும். கணினி இன்றியமையாத சூழலில்
தொடக்க(1-5),
நடுநிலை(6-8),
உயர்நிலை(9-10),
மேல்நிலைப்(11-12) பள்ளிகளுக்கு குறைந்தது ஓர் கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்யவேண்டும்.

திருமதி ஸ்ரீநித்யா ,
மகளிர் அணிச் செயலாளர்
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

POPULAR POSTS