மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Saturday 14 July 2018

ஆசிரியர்கள் இன்றி 3கணினி பாடபுத்தகம் பொதுத்தேர்வு எழுதும் கணினி பிரிவு மாணவர்கள் கதறல்!!



மூன்ற புதிய புத்தகங்களை வழங்கிய மாண்புமிகு தமிழக அரசுக்கு கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

பிளஸ்1 வகுப்புக்கு மூன்று விதமான கணினி புத்தகம் அறிமுகம்  செய்துள்ளது போதுமான ஆசிரியர்கள் இன்றி பொதுத்தேர்வு எழுதும்  அரசுப்பள்ளி மாணவர்கள்  அவதி..

குறிப்பு:தமிழகத்தில் உள்ள மொத்த கணினி ஆசிரியர்கள் எண்ணிக்கை 1800.

மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 வகுப்புக்கு 3 விதமான கணினி புத்தகம் நடைமுறைக்கு வந்துள்ளது இதனால் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் அவதியுறுகின்றனர் .மேலும் அடுத்த ஆண்டு பிளஸ் 2வகுப்பிற்கும் இதை விட மோசமான நிலை உருவாகும் சூழல் உள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ்1 வகுப்புகளுக்கு புதிய பாடதிட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது*

ஒவ்வொரு பாடத்தின், புதிய பாடதிட்ட புத்தகங்கள் அதிக பக்கங்களை கொண்டதாகவும், தரமாக இருப்பதாக ஆசிரியர்கள் கூறி வருகின்றனர்*

மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 வகுப்புக்கு இந்த ஆண்டு 3 விதமான கணினி பாடபுத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கணித பாடத்துடன் வரும்   கணினி பிரிவுக்கு கணினி அறிவியல் தொடர்பான பாடங்கள், கலைப்பிரிவுக்கு கணினி பயன்பாடுகள், தொழிற்கல்வி பிரிவுக்கு கணினி தொழில்நுட்பம் தொடர்பான பாடங்களும் இடம்பெற்ற புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது


இதற்கு முன் பிளஸ்1, பிளஸ்2 வகுப்புக்கு ஒரே மாதிரியான புத்தகங்கள் தான் இருந்தது அது மட்டும் அல்லமால் மேல்நிலை இரண்டு வகுப்புகளுக்கும் பொதுதுதேர்வு உள்ளது ஆதலால் பொதுத்தேர்வை எதிர்நோக்கும் ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் மிகுந்த சிரமத்தை அடைகின்றனர்.

*தற்போது அது 3 ஆக மாற்றப்பட்டுள்ளது. தொழிற்கல்வி பிரிவில் உள்ள 2 செய்முறை பாடத்தில் ஒரு பாடம் நீக்கப்பட்டு, அதற்கு பதில் கம்ப்யூட்டர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் கணினி ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் மேலும் மூன்று பாடத்திற்கும் தனித்தனியாக செய்முறை பயிற்சி கொடுக்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடம் 1000பள்ளிகளில் காலியாக உள்ளது. மற்ற பள்ளிகளில் 400 மாணவர்களுக்கும்  ஓர் கணினி ஆசிரியர் தான் பணியில் இருக்கிறார். தற்போது ஒவ்வொரு கணினி ஆசிரியர்களும் குறைந்தபட்சம் வாரம் 21 பாடவேளை பாடம் நடத்த வேண்டியுள்ளது

மேல்நிலைப்பள்ளியில் கணினி பாடத்திற்கு மட்டும் மாணவர்களக்கு (40:1)தகுந்த ஆசிரியர் நியமனம் இல்லை .
மாணவர்கள் அதிகம் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அதனால் அதிக பாடவேளை ஒதுக்கப்படுகிறது.

அரசு பள்ளி கணினி ஆசிரியர்களக்கு மட்டம்   அதிகமான பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. போதுமான அளவு கணினிகளும் ஆய்வகங்களில் இல்லை.   மேல்நிலைப்பள்ளியில் இரண்டு வகுப்பிற்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டியுள்ளது. தமிழக அரசு 2017-18ம் ஆண்டு கல்வி மான்ய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட 748 ணியிடங்களை கூட இன்னும் நியமனம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .

அரசுப்பள்ளியில் பயிலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு காலியாக உள்ள கணினி ஆசிரியர்கள் பணியிடங்களையும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நியமிக்க  வேண்டும் மேலும் கணினி ஆய்வகங்களில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கணினிகளையும் வழங்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்..

COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD


thank: INDIAN EXPRESS.

Friday 13 July 2018

டி.சி., கேட்கும் கணினி மாணவர்கள்: திரிசங்கு நிலையில் தலைமையாசிரியர்



கலந்தாய்வில் பல பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றுச்சென்றுவிட்டதால் மாணவர்கள் டி.சி.கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 2,570 மேல்நிலைப் பள்ளிகளில் கணினிஅறிவியல் பாடப்பிரிவு உள்ளது. இதில் 800 பள்ளிகளில் நிரந்தர கணினி ஆசிரியர்கள் இல்லை. பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் கணினிஆசிரியர்களை நியமித்தனர்.சமீபத்தில் நடந்த பொதுமாறுதல் கலந்தாய்வில் 600 க்கும் மேற்பட்ட கணினிஆசிரியர்கள் இடம் மாற்றம் பெற்று சென்றனர்.

அந்த பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடம் காலியாகிவிட்டது. அதே நேரம் இடமாறுதல் பெற்றவர்கள் பணியில் சேரும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டனர்.மேலும் நிரந்தர ஆசிரியர்கள் மாறிச் சென்றதால், அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் காலியிடங்கள் ஏற்பட்டன. சமீபத்தில் 'புதிதாக கணினி ஆசிரியர்களை நியமிக்க போவதாக,' பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவித்தார். இதனால் அப்பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கமுடியவில்லை.
ஒரு மாதமாகியும் பாடம் நடத்தாததால் மாணவர்கள் மாற்றுச் சான்று கேட்டு வருகின்றனர். இதனால் திரிசங்கு நிலையில் தலைமை ஆசிரியர்கள் உள்ளனர்.தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் இளங்கோவன் கூறியதாவது: பழைய பாடத்திட்டத்தில் கம்ப்யூட்டர்-மேக்ஸ், ஆர்ட்ஸ்-கம்ப்யூட்டர் என பிரிவுகளுக்கும் கணினி அறிவியல் பாடம் நடத்தப்பட்டது.
புதிய பாடத்திட்டத்தில் கம்ப்யூட்டர்-மேக்ஸ் பிரிவுக்கு கணினிஅறிவியல், ஆர்ட்ஸ்-கம்ப்யூட்டர் பிரிவுக்கு கணினி பயன்பாடு, புதிதாக தொழிற்கல்விக்கு கணினி தொழில்நுட்பம் என, மூன்று பாடப்புத்தகங்கள் உள்ளன. கணினி ஆசிரியர் இல்லாமல் பாடம் நடத்த முடியாது. அப்பணியிடங்களை நிரப்பாவிட்டால் மாணவர்கள் வெளியேறிவிடுவர், என்றார்..

Thursday 12 July 2018

தமிழகத்தில் அடுத்த வாரம் 3,000 பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' துவக்கம்'



திருவண்ணாமலை: ''தமிழகத்தில், அடுத்த வாரம் முதல், 3,000 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் துவங்க உள்ளது,'' என, அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த, தளரப்பாடி, சகாயபுரம், பூமாட்டு காலனி ஆகிய, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கட்டடம், சமையற்கூடம், கழிவறை மற்றும் ஆரணியில், ஒரு கோடியே, 61 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடம் ஆகியவற்றை, அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.இதை தொடர்ந்து, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக, சேலம், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய, ஐந்து மாவட்டங்களை சேர்ந்த, 21 பேருக்கு கனவு ஆசிரியர் விருதுகளும், 13 பள்ளிகளுக்கு, புதுமைப் பள்ளி விருதுகளும் வழங்கப்பட்டன.


நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: பள்ளிக்கல்வித்துறைக்கு, 27 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில், 68 கல்வி மாவட்டத்தை, 120 கல்வி மாவட்டமாக மாற்றியமைத்து, 892 வட்டார கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வட்டார கல்வி அலுவலர், 35 முதல் 40 பள்ளிகள் வரை ஆய்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், 3,000 பள்ளிகளில் அடுத்த வாரம் முதல், ஸ்மார்ட் வகுப்பு துவங்கப்பட உள்ளது. ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முற்றிலும் கணினி மயமாக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் பேசினார். கலெக்டர் கந்தசாமி, அமைச்சர் ராமச்சந்திரன், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பரிதீப்யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

POPULAR POSTS