தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம். Reg No:655/2014. வெ.குமரேசன் , பொதுச் செயலாளர், EMail: tnbedcsvips@gmail.com WhatsApp: 9626545446
மலர்கள்
BREAKING NEWS
Flash News
Saturday, 8 September 2018
Friday, 7 September 2018
தமிழக அரசுப்பள்ளிகளில் கணினி பாடத்தை முதல் வகுப்பிலிருந்து உருவாக்கிட தமுமுக சார்பில் கோரிக்கை..
கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கணினி பாடத்தை 1ம் வகுப்பிலிருந்தை அரசுப் பள்ளியில் உருவாக்கிட தமிழக அரசுக்கு தமுமுக சார்பில் கோரிக்கை..
மதிப்புமிகு என்.ஹைதர் அலி
தமுமுக பொதுச் செயலாளர் ஐயா அவர்களுக்கு 54000 கணினி ஆசிரியர்கள் சார்பாகவும்
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லை பட்டதாரி ஆசிரியர்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றிகள் பல..
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.
Thursday, 6 September 2018
பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்..
திருச்சி, செப்.7: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலன் கருதி 800 அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் உடனடியாக நியமிக்க வேண்டுமென கணினி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதிய பாடத்திட்டத்தில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 3 வகையான கணினி பாடபுத்தகம் உள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல் கணினி தொடர்பான இரண்டு புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. தமிழக பள்ளி கல்வியில், முதல் கட்டமாக, 1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல், புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும்தொழிற்கல்வி குரூப் மாணவர்களுக்கும், ‘ஆர்ட்ஸ் குரூப்’ மாணவர்களுக்கும், புதிதாக இரண்டு பாடங்கள் சேர்க்கப்பட உள்ளன.இந்த ஆண்டே இந்தப் புதிய கணினி பாடங்கள், அமலுக்கு வந்துள்ளது. அதாவது, கணித பிரிவு மாணவர்களுக்கு கணினி அறிவியல் என்ற பாடமும், வரலாறு, பொருளியல், வணிகக் கணிதம் போன்ற ஆர்ட்ஸ் பாடப்பிரிவினருக்கு கணினி பயன்பாடுகள் பற்றிய கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் என்ற பாடம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோன்று அனைத்து வகை தொழிற்கல்வி பிரிவுகளுக்கும் கணினி தொழில்நுட்பம் என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பாடங்கள் இந்த ஆண்டு பிளஸ்1 வகுப்புக்கு நடைமுறைக்கு வந்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் பிளஸ்2 வகுப்புக்கும் அறிமுகம் செய்யப்படுகின்றன. பிளஸ்1க்கு கடந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.இரண்டு மாதங்களுக்கு முன்பு கணினி ஆசிரியர்கள் பணியிட மாற்றத்திற்கு பிறகு தலா 800 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் காலியாகவே உள்ளது. இதனால் பொதுத் தேர்வை எதிர்நோக்கும் கணினி பயிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் இன்றி தவித்து வருகின்றனர்.எனவே நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கும் வரை அரசு உடனடியாக பெற்றோர் ஆசிரியர்கள் கழகத்தின் வாயிலாக பி.எட் பயின்ற கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று அறிக்கை
யில் கூறப்பட்டுள்ளது.
நன்றி:தினகரன்
source Dinkaran Trichy:
http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884309
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்..
அரசுப்பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர் காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் - கல்வி அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் ஆசிரியர்பணியிடங்களில் காலியிடமே இல்லை என்ற நிலையை அரசு உருவாக்கும் என தமிழகபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "தமிழகம் முழுவதும் உள்ள 412 நீட் பயிற்சி மையங்கள், இன்று முதல் செயல்படத்தொடங்கும். சுமார்3000 ஆசிரியர்களை கொண்டு 3 மணி நேரம் பயிற்சி வழங்கப்படும்.ஜெ.இ.இ தேர்வை தமிழ் மொழியில் எழுத மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்களில் காலியிடமேஇல்லை என்ற நிலையை தமிழக அரசு ஏற்படுத்தும். அரசுப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்து கொள்ளலாம். சட்ட சிக்கல் தீர்ந்த பின் அவர்கள் நியமன தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்றார்
Subscribe to:
Posts (Atom)
POPULAR POSTS
-
தமிழக அரசு நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிக்கு ஓர் கணினி பயிற்றுநர் பணி நியமனம் செய்ய உள்ளது. தமிழக அரசு வருகின்ற கல்வியாண்டு ஜீன் முதல் 6992...
-
கூகுளின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தொடங்கி உலகின் பல டெக் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் தமிழர்கள் கோலோச்சுகிறார்கள். சென்னை டை...
-
60,000 கணினி ஆசிரியர்களும் ஒரே மாதிரியான (subject)தலைப்புகளில் ஈமெயில் செய்வோம்.. Subject: கலைஞரின் கனவு திட்டமான கணினி அறிவியல் பாடத்தை அரச...
-
சமச்சீர் கல்வியில் கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிக்கு கொண்டுவர அரசுப்பள்ளி மாணவர்கள் ,60000வேலையில்லா கணினி ஆசிரியர...