சமச்சீர் கல்வியில் கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிக்கு கொண்டுவர அரசுப்பள்ளி மாணவர்கள் ,60000வேலையில்லா கணினி ஆசிரியர்கள் கோரிக்கை:
மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அய்யா அவர்கள்,மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர்.
தமிழ்நாடு
அரசுப்பள்ளி மேன்மை அடையவும்,கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வித்தரத்தை உலகத்தரத்திற்கு இணையாக உயர்த்திட அரசுப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் அனைத்து நிலைகளிலும் கணினி அறிவியல் கல்வியை கட்டாயக் கல்வியாக கொண்டுவர வேண்டுகிறோம்.
அ) அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டும்.
ஏழை மாணவர்களுக்கு நல்க்கல்வி கிடைத்திட மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக முதன் முதலில் கணினி அறிவியல் பாடத்தை 6ம்வகுப்பிருந்து அறிமுகம் செய்தவர் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர் கொண்டு வந்த ஒரே காரணத்திற்க்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய கணினி கல்வியை 10 ஆண்டுகளாக முடக்கி வைத்துள்ளது அதிமுக அரசு. கலைஞர் தந்த கணினி கல்வியை நமது கழக ஆட்சியில் நடைமுறை படுத்த வேண்டுகிறோம்.
குறிப்பு:நம்மை பின்பற்றி அண்ட மாநில கேரள அரசு மற்ற மாநில அரசு பள்ளிகளில் 1வகுப்பு முதல் கட்டாயப்பாடமாகவும் ஆறாவது பாடமாக கொண்டுவந்துள்ளது.(பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணினி பாடத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்)
ஆ) சமச்சீர் கல்வியில் கலைஞர் தந்த கணினி பாடம் மீண்டும் உதிக்க:
ஆ, சமச்சீர் கல்வியில் 2011ம் ஆண்டு(6 முதல் 10ம் வகுப்பு வரை)கலைஞரால் கொண்டுவரப்பட்ட கணினி அறிவியல் பாட புத்தகம் பல கோடி செலவில் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு பயன்படாத வண்ணம் இன்று வரை கடந்த 10 ஆண்டுகள் முடக்கப்பட்டுள்ளதை நடைமுறை படுத்த வேண்டும்.
இ)தரம் உயர்த்தம் செய்த அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் கணினி பாடப்பிரிவை கட்டாயமாக்க வேண்டும்.
கணினி பாடத்திற்கு மூன்று புத்தகங்கள் வழங்கிய அதிமுக அரசு 2011லிருந்து இன்று வரை தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளில் கணினி பாடப்பிரிவு உருவாக்கித்தரவில்லை
ஈ) பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும்.
கணினி இன்றியமையாத சூழலில் தொடக்க(1-5), நடுநிலை(6-8), உயர்நிலை(9-10), மேல்நிலைப்) பள்ளிகளுக்கு(11-12 குறைந்தது பட்சம் ஓர் கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்யவேண்டும் நமது கழக ஆட்சியில்.
"கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழகத்தில் வாழும் கோடிக்காணக்கான கிராமப்புற அரசு பள்ளி ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவார்கள்".
**********&**********
சமச்சீர் கல்வியில் மாண்புமிகு கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிகளில் கொண்டுவர கடந்த 10வருடங்களாக ஒரே துறைக்கு 7அமைச்சரர்களுக்கு மனுக் கொடுத்தே மாய்ந்துவிட்டது எங்கள கரங்கள் மட்டும் அல்ல 60000 வேலை இல்லா வேலையில்லா கணினி ஆசிரியர்கள் குடும்பங்களின் மனமும் தான்.
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.