மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Saturday 26 May 2018

கணினி ஆசிரியர்கள் நிலை!!


மேல்நிலை தொழிற்கல்வி பாடங்களில் கணினி அறிவியல் பாடம் சேர்ப்பு..


"பள்ளி திறக்கும் நாளன்று அனைத்து ஆசிரியர்களும் ஸ்மார்ட் போன் கையாள தெரிந்து பள்ளிக்கு வரவேண்டும்: பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தகவல்




வேலூர், மே 26: பள்ளி திறக்கும் நாளன்று அனைத்து ஆசிரியர்களும் ஸ்மார்ட் போன் கையாள தெரிந்து கொண்டு பள்ளிக்கு வரவேண்டும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளை தமிழக மாணவர்களும் எளிதில் எதிர்கொள்ளும் வகையில் பழைய பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 2018-19ம் இந்த கல்வியாண்டில் 1, 6, 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பியில் தீவிரமாக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் புதிய பாடத்திட்டத்தின்படி குயிக் ரெஸ்பான்ஸ் கோடு மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். இந்த திட்டத்துக்கு ஸ்மார்ட் போன் இருந்தால்தான் பாடங்களை கற்பிக்க இயலும். எனவே அனைத்து ஆசிரியர்களும் ஸ்மார்ட் போன் வாங்கி கையாள தெரிந்து கொண்டு பள்ளி திறக்கும் நாளன்று பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழத்தில் இந்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிபிஎஸ்சி பாடத்திற்கு இணையாக பாடப்புத்தங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. சில முக்கிய பாடங்கள் அனைத்தும் கணினி மூலம் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குயிக் ரெஸ்பான்ஸ் கோடு இணைவது குறித்து அனைத்து ஆசிரியர் குழுவிற்கும் வாட்ஸ் அப் அனுப்பப்பட்டுள்ளது.
ஐ��

மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீடு அரசாணை:பள்ளிக்கல்விஇயக்கனர் செயல்முறைகள்



12TH RESULT PUBLIISHED!!!

Friday 25 May 2018

'சென்டம் எண்ணிக்கை சரிந்தது'



'சென்டம்' மாணவர் எண்ணிக்கை குறைவு  பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், ஒரு பாடத்தில், 507 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், அதிகபட்சமாக, சமூக அறிவியிலில், 424 பேர் சென்டம் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில், 67 பேர், கணிதத்தில், 16 பேர் சென்டம் பெற்றுள்ளனர். இவ்வாறு, 507 பேர் 'சென்டம்' பெற்றனர். கடந்த ஆண்டு கணிதத்தில், 542 பேர்; அறிவியலில், 487; சமூக அறிவியலில், 2,585 பேர், என மொத்தம், 3,614 பேர் 'சென்டம்' வாங்கி இருந்தனர். நடப்பாண்டு இது, 507 ஆக குறைந்து விட்டது குறிப்பிடத்தக்கது

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு தொடர்பாக வருகிற 28ம் தேதி பேச்சுவார்த்தை...

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு தொடர்பாக வருகிற 28ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைக்கப்பட்டுள்ளனர்.

ஊதிய முரண்பாடுகளை களைய நிதித்துறையில் அரசு செயலாளராக உள்ள (செலவினம்) எம்.ஏ.சித்திக் தலைமையில் தமிழக அரசினால் ஒரு நபர் குழு மே முதல் வாரம் அமைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் சங்கம், ஓய்வூதியதாரர்கள் சங்கம் சார்பில் இந்த குழுவிடம் மனு அளித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட குழுவினர், மே 28ம் தேதி (நாளை மறுதினம்) காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் சந்திக்க வரும்படி அனைத்து சங்கங்களுக்கும் தனித்தனியாக பதில் கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். அப்படி, வரும்போது சங்கம் சார்பில் 5 பேர் மட்டுமே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

அரசுப்பள்ளியில் புதிய ஆசிரியர் நியமனம்..

மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்க அரசு பள்ளிகளில் உளவியல் ஆசிரியர்கள் நியமனம்...

வேலூர்: மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்க ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் இரு உளவியல் ஆசிரியர்கள் நியமனம்  செய்யப்பட வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியிலான பிரச்னைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண மாநில அளவில் ஒரு குழுவினை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பள்ளிக்கல்வி இயக்குனர் தலைவராகவும், நாட்டு நலப்பணி திட்ட இணை இயக்குனர் செயலாளராகவும், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் உறுப்பினர்களாகவும், உளவியல் மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்களை கொண்டு மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து அதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியிலான பிரச்னைகளை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவர்கள் தேர்வு பயம் உட்பட உளவியல் பிரச்னைகளை எதிர்கொள்வதில் சிக்கல்கள், வளர் இளம் பருவ பிரச்னைகள், மன அழுத்தம் உள்ளிட்ட உளவியல் பிரச்னைகளுக்கு எளிதல் பாதிக்கப்பட்டு எதிர்மறையான செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களுக்கு உளவியல் தொடர்பான பிரச்னைகளுக்கு தேவையின் அடிப்படையில் உளவியல் ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களது நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் பணிமூப்பு, தகுதியும் திறமையும் உள்ள ஒரு ஆண் ஆசிரியர் மூலம் மாணவர்களுக்கும், ஒரு பெண் ஆசிரியை மூலம் மாணவிகளுக்கும் தேவையின் அடிப்படையில் உளவியல் ஆலோசனைகளை வழங்க பொறுப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இதனை செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் பொறுப்பு ஆசிரியர்களாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் மற்றும் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் மூலம் நடத்தப்படும் இதர பயிற்சிகளை போன்று பயிற்சி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் பொறுப்பு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் பெயர், பதவி உள்ளிட்ட விவரங்களை பெற்று முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒரு தனி பதிவேட்டில் பராமரிக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு பொறுப்பு ஆசிரியர்கள் வழங்கிய  ஆலோசனை விவரங்களை பதிவு செய்ய ஒரு காலமுறை பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். மாணவர்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளை தங்களது மாவட்டத்தில் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி மற்றும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday 24 May 2018

FLASH NEWS::புதிய பாடத்திட்ட நூல்கள்:மே 31 இல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

1,6,9,11 வகுப்பு பாடநூல்கள் மே 31 இல் வெளியிடப்படும்..

புதிய பாடத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட 1, 6, 9, 11 ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்களை புதன்கிழமை முதல் இணையதளத்தில் படிப்படியாகப் பதிவிறக்கம் செய்யலாம் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கான மாநிலப் பாடத் திட்டம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள், வல்லுநர்களின் வழிகாட்டுதலில் உருவான புதிய பாடத் திட்ட நூல்களை முதல்வர் எடப்பாடிபழனிசாமி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் கடந்த மே 4-ஆம் தேதி வெளியிட்டனர்.

இதையடுத்து வரும் கல்வியாண்டில் 1, 6, 9, 11 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடநூல்களின் அடிப்படையில் கற்றல், கற்பித்தல் பணிகள் நடைபெறவுள்ளன. இந்த நிலையில் மாணவர்கள், பெற்றோர் நலன் கருதி 1, 6, 9, 11 ஆம் ஆகிய வகுப்புகளுக்கான பாடநூல்கள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன (எஸ்சிஇஆர்டி) வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பதிவேற்றம் செய்யப்பட்ட புதிய பாடத்திட்ட நூல்களை http://www.textbooksonline.tn.nic.in/?language=LG-1&status=Active

 என்ற இணையதள முகவரியில்  மே 31 முதல் பதிவிறக்கம் செய்யலாம்.வழக்கமான புத்தகங்களில் உள்ள தகவல்களைக் காட்டிலும் இதில் கூடுதல் தகவல்கள் இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Wednesday 23 May 2018

54,000 கம்யூட்டர் பட்டதாரிகளின் ஆசிரியர் கனவு: கலையாமல் காக்குமா தமிழக அரசு!

தமிழகத்தில் இப்போது பல்வேறு அரசியல் குழப்பங்கள் இருந்தாலும், அரசு இயந்திரம் இயந்திரகதியாகவே இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆட்சியை மக்கள் விரும்பும் நல்லாட்சியாக காட்டிக் கொள்ள ஒவ்வொரு துறை அமைச்சர்களும் தங்கள் பங்குக்கு ஏதேதோ சொல்லிக் கொண்டும் செய்து கொண்டும் தான் இருக்கிறார்கள்.



குறிப்பாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்த சில மாதங்களுக்கு முன் அதிரடியாக பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார்.  நீட் தேர்வு தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டப் பின் கல்வித் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்துவது போல் அவருடைய அறிப்புகள் இருந்தன என்றால் மிகையில்லை. 

தமிழகத்தில் தொலைதூரப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகமுள்ள இடங்களில் 30 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்.  புதுமையான கற்பித்தல் முறைகளைப் பின்பற்றுதல் உள்பட கல்வி வளர்ச்சிக்காக சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளைக் கண்டறிந்து விருதுகள் அளிக்கப்படும். அதன்படி, ஒரு மாவட்டத்துக்கு ஒரு தொடக்கப் பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி என நான்கு பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சமும், சான்றிதழ்களும் அளிக்கப்படும்.
 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சமும், சான்றிதழ்களும் கொடுக்கப்படும். தமிழக பிளஸ் 2 மாணவர்கள், 'நீட்' தேர்வை எதிர்கொள்ளும் வகையில், மாநில அளவில், 412 பயிற்சி மையங்கள் திறக்கப்படும்.   

அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளிகளுக்கு கணினி ஆசிரியர்கள் (748 காலியிடங்கள் 2 மாதத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்றும் அறிவித்தார். ஆனால் இன்று வரை கணினி ஆசிரியர் பணி நியமனம் குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.  இந்த அரசின் எத்தனையோ திட்டங்கள், திட்டங்களாகவும் அறிவிப்புகள் வெற்று காகிதங்களாகவும் கிடப்பது போல் அமைச்சர் செங்கோட்டையனின் அறிவிப்பும் வெறும் கவர்ச்சி பேச்சாகி இருப்பதாகவே மக்கள் வருத்தம் கொள்கின்றன. 

கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் படி ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் புத்தகங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு வருடம் மட்டும் புத்தகங்கள் கொடுக்கப்பட்டு, அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த 2005-ஆம் ஆண்டில் மாதம் ரூ. 4000 ஊதியத்தில் பகுதி நேரமாக நியமிக்கப்பட்ட 682 கணினி ஆசிரியர்களுக்குப் பிறகு நியமனம் கிடையாது. ஏற்கெனவே குறைந்த ஊதியத்தில் பணியில் நியமிக்கப்பட்டவர்கள் பல பள்ளிகளுக்கும் சென்று பணியாற்ற வேண்டிய நிலைதான் உள்ளது. தொடர்ந்து நீதிமன்ற வழக்கு, பணி நியமனத்தில் இடஒதுக்கீடு முறை சரியாகப் பின்பற்றப்படவில்லை போன்ற காரணங்களால் பி.எட். முடித்த கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் பாதிப்புக்குள்ளாகினர் 

இந்தப் பட்டதாரிகள் ஒருங்கிணைந்து 2014-ஆம் ஆண்டு கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தை ஆரம்பித்திருக்கின்றனர். இச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் குமரேசன் கூறுகையில், 1992-ஆம் ஆண்டுல இருந்தே கம்ப்யூட்டர் சயின்ஸ் பி.எட். இருக்கு. நான் படிச்சது பி.எட். ஆனா,டெக்ஸ்டைல்ல வேலை பாத்துட்டு இருக்கேன். 

இதுவரைக்கும் கிட்டத்தட்ட 54000கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள்வேலை இல்லாமஇருக்காங்க. ஒரு படிப்புனு இருந்தா அதுக்கான வேலை வாய்ப்பு இருக்கணும். வருஷா வருஷம் ஆயிரக்கணக்கான பேர் படிச்சுட்டு வெளியே வராங்க. ஆனா, ஏற்கெனவே படிச்சுவேலைவாய்ப்பு அலுவலகத்தில பதிவு செய்திருக்கிற யாருக்குமே வேலை இல்லை. பின்ன ஏன் இந்தப்படிப்ப இன்னும் வச்சிருக்காங்கன்னு புரியல" என்று குமுறுகிறார்..


'அரசுப் பள்ளிகள் மூடப்படுவது தனியாருக்கு மட்டுமே சாதகம்!' - கொதிக்கும் கல்வியாளர்கள்!


தமிழகத்தில் உள்ள 836 அரசுப் பள்ளிகள் மூடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. `தனியார் பள்ளிகளின் நலனுக்காகவே இப்படியொரு நடவடிக்கையை அரசு மேற்கொள்ள உள்ளது' எனக் கொதிக்கின்றனர் கல்வியாளர்கள்.

தமிழகத்தில் மொத்தம் 44, 214 பள்ளிகள் உள்ளன. மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க, தமிழக அரசு சார்பில் மத்திய உணவுத் திட்டம், சீருடைகள், புத்தகங்கள் காலணிகள் உள்ளிட்ட பல இலவச நலத்திட்டங்கள் நடைமுறையில் செயல்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் உயர்ந்ததாகத் தெரியவில்லை. இதனால், 10-க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் அரசு தொடக்கப்பள்ளிகளை மூடிவிடலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நேற்று கல்வி அலுவலர்கள் கூடி ஆலோசித்தனர் என்ற தகவல் வெளியாகியது.

இது குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம், ``தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைந்துள்ளதுக்கான காரணம் என்ன? முறையான கட்டமைப்பு வசதி பள்ளிகளில் இருக்கிறதா? சத்துணவுத் திட்டம் சரியாகச் செயல்படுகிறதா ? மாணவர்களுக்குப் போதிய பாதுகாப்பு உள்ளதா? பெற்றோர்கள் மத்தியில் அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? கழிப்பறை வசதி பள்ளிகளில் உள்ளனவா? இவை, எதையும் பள்ளிக் கல்வித்துறை கவலைப்படவில்லை. அதற்கான ஆய்வு நடவடிக்கைகளைத் தொடரவில்லை. ஆனால், 10-க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் அரசு தொடக்கப்பள்ளிகளை மூடுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கையில் ஒன்றுக்குப் பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும்'' என்றார்.

இதனையடுத்து, தமிழ்நாடு பெற்றோர் மாணவர் நலச் சங்க மாநிலத் தலைவர் அருமைநாதனிடம் பேசினோம். `தமிழக அரசின் இந்த நடவடிக்கை தனியார் பள்ளிகளுக்குச் சாதகமாக எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையானது 45 சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும் பல பகுதிகளில் ஒரு அரசுப் பள்ளியைச் சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகளின் கல்வித்தரங்களை உயர்த்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபடவில்லை. ஆர்வமும் காட்டவில்லை. இதனால், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அருகிலிருக்கும் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல், தனியார் பள்ளிகள் வசூலிக்கும் அதிகக் கல்விக் கட்டணத்தால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தமிழக அரசு மறைமுகமாகக் கல்வியைத் தனியாரிடம் ஒப்படைத்து வருகிறது. தனியார்ப் பள்ளிகளை ஊக்குவித்தும் வருகிறது'' என்றார்.

``அரசின் இந்த நடவடிக்கை ஆசிரியர்களையும் பாதிக்கும்'' என்கிறார் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைப்பொதுச் செயலாளர் க.சாந்தகுமார். இது குறித்து அவர் பேசுகையில், ``தனியார்ப் பள்ளிகளில், 25 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஒதுக்கீட்டின் கீழ் பெரும்பாலும் அரசுப் பள்ளி மாணவர்கள்தாம் விண்ணப்பிக்கின்றனர். சுமார் ஒரு லட்சத்து முப்பத்து இரண்டாயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் தற்போது தனியார் பள்ளிகளுக்குப் படிக்கச் சென்றுவிட்டனர். இதனால், 4,400-க்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் தமிழகத்தில் காலியாக இருக்கின்றது. எனவே, தமிழக அரசு கல்வியைத் தனியார் மயமாக்கி வருகிறது'' என்றார்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளிடம் பேசினோம், ``தமிழக அரசின் இயக்குநரகம் கட்டுப்பாட்டில் அரசுப் பள்ளிகள் - 629 மாநகராட்சிப் பள்ளிகள் - 436, நகராட்சிப் பள்ளிகள் - 839 மற்றும் நர்ஸரி மற்றும் பிரைமரிப் பள்ளிகள் - 6308, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு நலத்துறைப் பள்ளிகள் எனத் தமிழகத்தில் மொத்தம் 44, 214 பள்ளிகள்உள்ளன. இதில், பத்துக்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் தொடக்கப்பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்குச் சம்பளமாக லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. இதனால்தான் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளோடு இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். தற்போதைய சூழலில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு அரசுப் பள்ளி செயல்படுகிறது. இதனால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும், கடந்த கல்வி ஆண்டிலும் அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகின்றன. இதனால் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு கல்வி ஆண்டும் அதிகரித்துத்தான் வருகின்றன. இதனை இன்னும் அதிகரிக்கவே கணக்கெடுப்பு நடத்தப்பட்டது'' என்றார். பள்ளிகள் மூடப்படுவதாக வெளியான தகவலை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், `அரசு தொடக்கப் பள்ளிகளை மூடும் எண்ணமில்லை’ என்று தெரிவித்துள்ளார்

ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கும் 01.01.2018 முதல் 31.12.2020 வரை தொடர் நீடிப்பு அரசாணை.

ஆசிரியர்களுக்கு பயிற்சி!! பரிசீலித்து வரும் அரசு!கணினி பாடத்திற்கு தனியாக ஆசிரியர் நியமனம் செய்யுமா??


புதிய பாடத்திட்டம் குறித்து  அளிக்க அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளது. சிறைச்சாலையில் இருந்து படித்து தேர்வு எழுதிய 186 பேரில் 76 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசு சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தோல்வி அடைந்தவர்கள் 4417 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு கவுன்சிலிங் பெறலாம். பள்ளி கல்வித்துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள ‘ஹெல்ப் லைன்’ மூலம் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தகுந்த அறிவுரை வழங்கப்படும். அவர்கள் ஜூன் 28-ந் தேதி மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பை அரசு அளித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்ச்சி பெற்று பிளஸ்-1 அல்லது வேறு படிப்புகளுக்கு உடனே செல்ல முடியும். எனவே தோல்வியுற்ற மாணவர்கள் சோர்வடைய வேண்டாம். அடுத்ததாக வெற்றிபெறும் ஆலோசனைகளையும் தலைமை ஆசிரியர் வழங்குவார்.

சில பள்ளிகள் மாணவர்களின் மதிப்பெண்களை வைத்து விளம்பரம் செய்வதாக கேள்விப்பட்டேன். அப்படி விளம்பரம் செய்யக்கூடாது என அந்த பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மீண்டும் விளம்பரம் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இனிமேல் பிளஸ்-1 வகுப்பில் 600 மதிப்பெண்ணும், பிளஸ்-2 வகுப்பில் 600 மதிப்பெண்ணும் சேர்த்து தான் 1,200 மதிப்பெண் கணக்கிடப்படும். ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண் என்று மாற்றி அமைக்கப்பட உள்ளது. தேர்வு நேரத்தையும் 3 மணி நேரத்தில் இருந்து 2.30 மணி நேரமாக குறைத்திருக்கிறோம்.

ஒரு மாணவர் கூட இல்லாத 29 அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன. தமிழகம் முழுவதும் கணக்கெடுத்து பார்க்கும்போது, 10-க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் 890 அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. என்றாலும், அந்த பகுதியில் உள்ள மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்களின் கருத்தை அறிந்து, அதன் பிறகு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு பரிசீலிக்கும். அதுபோன்ற பள்ளிகளில் கூடுதல் மாணவர்களை சேர்க்க மக்களுடன் இணைந்து ஆசிரியர்களும் செயல்படுவார்கள்.

கூடுதல் மாணவர்களை சேர்க்க கிராமங்களுக்கு ஆசிரியர்கள் சென்று, மாணவர்கள், பெற்றோரை சந்தித்து, தனியார் பள்ளிகளைவிட அரசு பள்ளிகளில் கிடைக்கும் சலுகைகள், புதிய பாடத்திட்டங்கள் பற்றி பேசி வருகின்றனர். செப்டம்பர் வரை இதற்கான அனுமதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டங்கள் மூலம் அனைத்து பொதுத்தேர்வுகளையும் சந்திக்க முடியும் என்பதை எடுத்துச்சொல்லும் வகையில் ஊர்வலமாகவும், முரசு கொட்டியும் கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர். செப்டம்பரில் மாணவர் சேர்க்கை குறைந்து இருந்தால் அதுபற்றி அரசு பரிசீலிக்கும்.

புதிய பாடத்திட்டம் வெளியிட்டபோது காணப்பட்ட ஒரு சில பிழைகள் சரி செய்யப்பட்டுவிட்டன. ஜூன் மாதம் புத்தகங்களை வழங்கும்போது எந்த பிழையும் இருக்காது. புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதை, ஜூன், ஜூலை மாதங்களில் மேற்கொள்ளலாம் என அரசு பரிசீலிக்கிறது.

2013-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு எழுதியவர்கள் 93 ஆயிரம் பேர். 2014, 2017-ம் ஆண்டுகளிலும் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு அவர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஆனாலும் ‘வெயிட்டேஜ்’ பற்றி அரசு பரிசீலிக்கிறது. மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க அரசு என்னென்ன முயற்சிகள் எடுக்கலாம் என்பது பற்றி துறை ஆய்வு செய்து வருகிறது. விரைவில் நல்ல முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்கள் பலர் மருத்துவ கல்விக்கான ‘நீட்’ தேர்வை எழுவதாக கூறப்படும் கருத்தின் அடிப்படையில் அந்த பாடத்திட்டத்தில் பலர் சேர்கின்றனர். ஆனால் இந்த ஆண்டு அப்படி இருக்காது.

அரசு பள்ளிகளில் படித்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். பயிற்சி பெற்ற ஆயிரம் மாணவர்களாவது மருத்துவ படிப்பில் சேர வாய்ப்புள்ளது. எனவே எதிர்காலத்தில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை நாடாமல் அரசு பள்ளிகளை நாடும் நிலை உருவாக்கப்படும்

அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்படுமா ??


10-ம் வகுப்பில் சதமடித்து சாதனை !உடலில் மட்டும் தான் ஊனம் உள்ளத்தில் இல்லை என்பதை நிருபித்த மாணவர்கள்!



கோவை: பத்தாம் வகுப்பு தேர்வு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து, ஊனம் என்பது கல்விக்கு எப்போதும் தடையில்லை என்பதை நிரூபித்து உள்ளனர் கோவை மாநகராட்சி பள்ளியில் படித்த காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத மாணவர்கள்
கோவையை அடுத்த ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள கோவை மாநகராட்சியின் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய ஏழு பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர்

சைகை மொழியே சொந்தம்

தேர்ச்சி அடைந்து உள்ளனர் என்பது இவர்களுக்கு சாதாரண காரியமாக இல்லாத போதிலும், இதற்கும் மேலாக இருந்து, கணித பாடத்தில் அனைத்து மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதித்து உள்ளனர். சைகை மொழி மட்டுமே தனக்கே உரித்த பாணியில் ஒவ்வொரு நாளையும் சாதனையாக கடந்து வரும் இந்த மாணவிகள் மேலும் தற்போது ஒரு படி சாதனையை உயர்த்தி காண்பித்து உள்ளனர்
பெற்றோரின் ஆதரவே காரணம்

கை கொடுத்த கடின உழைப்பு

மற்ற பாடங்களை காட்டிலும் கணித பாடத்தை இந்த மாணவர்கள் புரிந்து கொள்ள பல கடினங்களை சந்தித்து வந்தாலும், கடின உழைப்பாலும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதரவாலும் இந்த மதிப்பெண்ணை எடுத்துக் காட்டி உள்ளனர். பல காரணங்களால் சில நாட்கள் வீட்டில் முடக்கி வைத்து இருந்த தனது பிள்ளையை இதுபோன்ற ஒரு பள்ளியில் படிக்க வைத்தது தற்போது பெருமை அளிப்பதாகவும் இவரை போன்று உள்ள குழந்தைகளை அனைத்து பெற்றோர்களின் கல்வி அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைக்கின்றனர்

சிறப்பு கவனம்

பெருமைப்படும் ஆசிரியர்கள்

சாதாரண மாணவர்களை விட இதுபோன்று சிறப்பு மாணவர்களுக்கு தனி கவனத்துடன், பல்வேறு இடர் பாடுகளுடன் பாடங்களை கற்பித்து வருவதாகவும், இருப்பினும் இவர்களின் தேர்ச்சி தங்களுக்கு பெருமையை அளிப்பதாக உள்ளதாக கூறுகின்றனர் ஆசிரியர்கள். இதனால் மற்ற காது கேளாத, மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு மாணவிகளின் இந்த மதிப்பெண்கள் ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிடயிடங்களக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன



மேல்நிலைப்பள்ளி கணினி அறிவியல் பாடம் :கணினி பயன்பாடு ,தொழில்நுட்பம் என மூன்றாக மாறியது..



Tuesday 22 May 2018

5456 அரசுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி , பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம்




பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் 96.4%, மாணவர்கள் 92.5% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்- அமைச்சர் செங்கோட்டையன்...

பத்தாம் வகுப்பு தேர்வில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு..

"சிவகங்கை மாவட்டம் 98.5% தேர்ச்சியுடன் 10 ஆம் வகுப்புத் தேர்வில் முதலிடம்"


10thResult பாடவாரியான தேர்ச்சி விகிதம்


BIG FLASH NEWS:சிவகங்கை மாவட்டம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகித்தில் முதலிடம் மாவட்ட வாரியான தேர்ச்சி விகித பட்டியல்..


பத்து இலட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று ..

உடனுக்கு உடன் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள:CLICK HERE

சற்றுநேரத்தில்:10th MARCH 2018 RESULT - Tamilnadu Government Official Website Link..

இந்நிலையில் இத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளன. தேர்வு முடிவுகள் tnresults.nic.in  என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மேலும்

10th MARCH 2018 RESULT - Tamilnadu Government Official Website Link

tamil nadu.indiaresults.com,


examresults.net/tamilnadu


nresults.nic.in


dge.tn.gov.in


dge1.tn.nic.in 



ஆகிய இணையதளங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள கீழ்கண்ட வழிமுறைகளை கையாளவும்
  1. tnresults.nic.in என்ற இணையதளத்துக்கு செல்லவும்.
  2. அதில் Tamil Nadu Result 2018 என்னும் லிங்கை கிளிக் செய்யவும்.
  3. தொடர்ந்து TN SSLC Result 2018, Tamil Nadu SSLC Result 2018 என்னும் லிங்கை கிளிக் செய்யவும்.
  4. உங்களது பதிவு எண்ணை அதில் குறிப்பிடவும்.
  5. தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகின்றனர். 2017-இல் 9,82,097 மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். இதில், 94.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் முதல்முறையாக 1911-ஆம் ஆண்டு நடைபெற்றன. 1975 பிப்ரவரி மாதம் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தோற்றுவிக்கப்பட்டது

இனி கணினி அறிவியல் பாடம் வரும் கல்வியாண்டு முதல் மூன்று வகைகளாக அறிமுகப்படத்தப்படுகிறது அவை குறித்த:பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறை..









தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் பாடப் பெயர்கள் மாற்றம் மற்றும் முதன்மை பாடங்கள் மாற்றம் குறித்த :பள்ளிக்கல்வி இயக்கனர் செயல்முறைகள்



Monday 21 May 2018

யார் காரணம் ?ஆட்சியாளர்களா? Vs ஆசிரியர்களா?



கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளியில் சேர 1.32 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை கோட்டூர்புரத்தில் பேட்டி அளித்தார்.*

*அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்*

********************

*தனியார் பள்ளிகளில் 25%இடங்களை ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என அரசு உத்தரவு போட்டது.*

*இதன் காரணமாக 1,32,000 ஏழை மாணவர்கள் இலவசமாக தனியார் பள்ளியில் கல்வி பெறப்போகிறார்கள்...*

*இவ்வளவு மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியதன் மூலம் கஷ்டப்பட்டு படித்து டெட் தேர்ச்சி பெற்று பணிக்கு வந்த ஆசிரியர்களுக்கு அரசு பட்டை நாமம் போட்டுள்ளது..*

*30மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் 4,400 ஆசிரியர் பணியிடங்கள் போட்டிருக்க வேண்டும்..*

*அனைத்தும் தனியார் மயமாக்கி விட்டு அப்புறம் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது வருத்தம் அளிக்கிறது.*

*கேரளாவில் தனியார் பள்ளிகள் அரசுடமையாக்கப்பட்டு வருகிறது, ஆனால் தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட்டு தனியார் வசம் சென்றடைகிறது.*

********************

*பள்ளிகளை மூடினால் தனியார் பள்ளிகளுக்கு மகிழ்ச்சி. இதுதான் அரசின் போக்கு என்பது நியாயம் இல்லை.*

*பிள்ளைகள் இல்லாத பள்ளிகளை உயர் அதிகாரிகள் வரை தனி கவனம் செலுத்தி அந்த பள்ளிக்கு திறமையான ஆசிரியர்களை நியமித்து தனி சலுகைகள் கொடுத்து வாழ வைக்க தெரியாமல் மூட நினைப்பது நொண்டி குதிரைக்கு சறுக்கினது சாக்கு என்பதே பொருந்தும்.*

*பிள்ளைகள் இல்லாத பள்ளி உள்ள ஊர் மக்களை திரட்டி பள்ளிகளை செம்மைபடுத்த எந்த உயர் அதிகாரியாவது நினைத்ததுண்டா அதுபோல் கூட்டம் போட்டு மக்களுக்கு விழிப்புணர்வு தந்த்துண்டா. இல்லையே. ஆசிரியர்களை மட்டுமே குறை கூறுவார்கள்.*

*அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்தால் மகிழ்ச்சி என்று கூறும் மாண்புமிகு கல்வி அமைச்சர் ஏன் MLA கள் மற்றும் அமைச்சர்களின் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்தால் மகிழ்ச்சி என்று கூறவில்லை.*

அரசு பள்ளிகள் மூடும் நடவடிக்கை - பொதுமக்கள் கடும் கண்டனம்


தமிழக அரசு சார்பில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன.
தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது.


 குழந்தைகளின் தொடக்கக்கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக மதிய உணவு திட்டம், விலையில்லா சீருடைகள், புத்தகங்கள், காலணி போன்ற திட்டங்களை அரசு செயல் படுத்தி வருகிறது.

எனினும் அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் மிகவும் குறைவாக இருப்பதாக தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கம், தொடக்கக்கல்வி இயக்கம் ஆகியவை ஆய்வு நடத்தி கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது.

இதையடுத்து அரசு தொடக்கப்பள்ளிகளில் எத்தனை குழந்தைகள் படிக்கிறார் கள்? எத்தனை ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள்?

 எத்தனை சத்துணவு ஆயாக்கள் இருக்கிறார்கள்? போன்ற விகிதாச்சார விவரங்களை தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை கணக்கில் எடுத்தது.

அரசு நடத்திய ஆய்வில் 890 தொடக்கப்பள்ளிகளில் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக இருப்பது தெரிய வந்தது.

 29 பஞ்சாயத்து யூனியன் தொடக் கப்பள்ளி, 4 நகராட்சி தொடக் கப்பள்ளி என 33 தொடக்கப்பள்ளிகளில் ஒரு மாணவ- மாணவி கூட படிக்கவில்லை என்பதும், அங்கு ஆயாக்கள் மட்டுமே தினமும் வந்து செல்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்தது.

பெரும்பாலான பள்ளிகளில் ஒற்றை இலக்கில் மாணவ- மாணவிகள் எண்ணிக்கை இருந்தது தெரிய வந்தது.

 இதனால் அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பள்ளிகளில் படிக் கும் மாணவ-மாணவிகளை வேறு பள்ளிகளில் சேர்த்துவிட அரசு முடிவு செய்துள்ளது.

அப்படியே அந்த மாணவர் கள் அருகில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று விட்டாலும், இயங்காமல் இருக்கும் இந்த பள்ளிக்கூடங்களை, மாணவர்கள் அங்கு வந்து படிப்பதற்கு நன்கு வசதி உள்ள இடங்களாக மாற்றுவதற்கு அரசு உத்தேசித்துள்ளது.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் 32 மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் 10-க்கும் குறைவான மாணவ-மாணவிகள் படிக்கும் 890 தொடக்கப்பள்ளிகளில் மாற்றுத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது
எனவே 890 தொடக்கப்பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

50 கோடிப் பேருக்குத் திறன் பயிற்சி!


தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2022ஆம் ஆண்டுக்குள் 50 கோடி இந்தியர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா புவனேஷ்வரில் மே 21ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடியால் 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டம் நாட்டு மக்களுக்கு பல்வேறு தொழில் பிரிவுகளில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குவதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. வெல்டிங் முதல் கணினி தகவல் வரையில் பல்வேறு வகையான வேலைகளுக்கான திறன் பயிற்சி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

புவனேஷ்வரில் அமைக்கப்பட்டுள்ள திறன் மேம்பாட்டு நிறுவனம் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதேபோன்ற திறன் மேம்பாட்டு நிறுவனங்களை விசாகப்பட்டினம், கொச்சி, அகமதாபாத், கவுகாத்தி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டு நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 60 ஏக்கர் நிலத்தில் 46.17 ஏக்கர் நிலம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் மிகப்பெரிய மாதிரி திறன் மேம்பாட்டு அகாடமியை சர்வதேசத் தரத்துக்கு அமைக்கும் பணி தொடங்கவுள்ளது. இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க இயலும்” என்றார்


New Books குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி தர உள்ளதால் கோடை விடுமுறையை நீட்டிக்க முடியாது: அமைச்சர் ! ஜூன் 1-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் ..!


திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் வெப்பம் நிலவி வருகிறது. பிற மாவட்டங்களில் மழை பெய்து வெப்பத்தை தணித்து வருகிறது. புதிய பாடத்திட்டத்தின்படி பாடங்களை மாணவர்கள் கற்க வேண்டும் என்பதால், கோடை விடுமுறையை நீட்டிக்க முடியாது. திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


   


நேற்று வந்த தின சுவடி செய்தி:


பள்ளி கல்வித்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் , அப்போது அவர் கூறியதாவது :
கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 7-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என  அறிவித்துள்ளார். Sengottaiyan
பள்ளிகள் திறக்கப்படும் அன்றே பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் பள்ளிகள் திறந்து ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் கோடை வெப்பம் அதிகமாக நிலவுகிறது. வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைக் கடந்து வாட்டிவதைத்துக் கொண்டிருக்கிறது.Image result for ஜூன௠ 7 ம௠ தேதி பள௠ளிகள௠ திறக௠கப௠பட௠ம௠ 2018
மேலும் அவர் கூறும் போது அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதியை  மேம்படுத்துவதற்காக பல்வேறு தொழில் முனைவோருடன்  கலந்து ஆலோசிக்கபட்டுள்ளது  எனவே தன இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்Related image
இந்த அறிவிப்பு தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் கூறினார்

" நீட் தேர்வால் தொடரும் சோகம் !"


நீட் தேர்வால் தொடரும் சோகம் !மதிப்பெண் குறைவாக கிடைக்கும் என்ற அச்சத்தில் மாணவர் தற்கொலை!

 கடலூர் அருகே உண்ணாமலைசெட்டி சாவடியில் மாணவர் மின்விசிரியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக கிடைக்கும் என்ற அச்சத்தில் மாணவர் அருண்பிரசாத் தற்கொலை செய்து கொண்டார். நீட் ஆன்ஸர்-கீ பார்த்ததிலிருந்து மாணவர் மன உளைச்சலில் இருந்ததாக பெற்றோர் தகவல் தெரிவித்துள்ளனர்..

WhatsApp-ல் Delete செய்த படங்கள் & வீடியோவை திரும்ப பெறுவது எப்படி?



இந்தியாவில் பல மில்லியன் மக்கள் வாட்ஸ் அப் செயலியை அதிகம் உபயோகம் செய்கின்றனர், குறிப்பாக குறுந்தகவல் முதல் தொழில் சம்மந்தப்பட்ட அனைத்து பயன்பாட்டிற்கும் இந்த செயலி அதிகளவு பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த வாட்ஸ்அப் செயலி. மேலும் வாட்ஸ்அப் புதிய அப்டேட்டின் மூலம் நீக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை மிக எளிமையாக திரும்ப பெறலாம் என வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயன்பாடு பல்வேறு மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும்,பெறப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பயனர்கள் நீக்கிவிட்டால் அதனை மீண்டும் பெறுவது என்பது இயலாத காரியம், ஆனால் தற்சமயம் கொண்டுவந்துள்ள புதிய அப்டேட் மூலம் மிக எளிமையா போட்டோ மற்றும் வீடியோக்களை திரும்பபெற முடியும். இப்போது வாட்ஸ்ஆப் செயலியில் ரீடவுன்லோடு (WhatsApp) எனும் புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது, இதன்மூலம் அனுப்பப்பட்ட புகைபடங்கள், வீடியோக்களை எளிமையாக திரும்ப பெற முடியும்.

நீங்கள் ஆசிரியர் ஆக முடியுமா??




லக்னத்திற்கு 10ம் இடம் ஜீவன ஸ்தானம். இந்த ஸ்தானத்திற்கு சூரியன், குரு, செவ்வாய் ஆகிய கிரகங்களின் பார்வை சம்பந்தம் பெற்றாலும் பத்தாம் வீட்டில் இருந்தாலும் ஆசிரியர் ஆகலாம்..


சூரியன் சந்திரன் சேர்ந்தால் அமாவாசை யோகம். இந்த அமைப்பு ஒருவரை சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், சொற்பொழிவாளர், கவிஞர், கல்லூரிப் பேராசிரியராக மிளிர வைக்கும்.

லக்னம் 4, 7, 10ல் புதன் இருந்து லக்னாதிபதியின் சம்பந்தம் ஏற்பட்டால் கணக்கு ஆசிரியராகலாம்.

திரிகோண ஸ்தானங்கள் எனும் 1, 5, 9 ஆகிய இடங்களில் சுக்கிரன், குரு, புதன் சம்பந்தப்பட்டால் மொழி ஆசிரியராகலாம். தமிழில் பாண்டித்யம் உண்டாகும். வரைகலை, ஓவியம், அனிமேஷன் மூலம் புகழ் கிடைக்கும்.

லக்னம் மற்றும் 4, 7, 10 ஆகிய ஸ்தானங்களுக்கு சனியின் பார்வை, சேர்க்கை சம்பந்தம் ஏற்பட்டால் பள்ளி, கல்லூரியில் அல்லது புத்தக ஆசிரியராகவும், பதிப்பக வெளியீட்டாளராகவும் இருப்பார்கள்.

செவ்வாய் அல்லது சந்திரன் புதனுடன் சேர்க்கை பெற்றால் கம்ப்யூட்டர் ஆசிரியராக பணி புரியலாம். இரண்டாம் அதிபதி பலமாக இருந்து குரு ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம், வர்கோத்தமம் அடைந்தால் தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர் என வர முடியும்.

பத்தாம் இடத்திற்கும், குருவிற்கும், இரண்டாம் அதிபதிக்கும் ஏதாவது ஒரு வகையில் சம்பந்தம் ஏற்பட்டால்தான் ஆசிரியராக பணி புரிய முடியும். இல்லையென்றால் படித்த படிப்புக்கும், பார்க்கும் வேலைக்கும் சம்பந்தம் இருக்காது

BREAKING NEWS:நாளை மறுநாள் வெளியாகிறது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்,28 அன்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்..!



தமிழகம், புதுச்சேரியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளன. தேர்வு முடிவு வெளியான  சில நிமிடங்களில் பெற்றோரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. இத்தேர்வு முடிவுகள் tnresults.nic.in    www.dge1.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 28.05.2018 அன்று பெற்றுக் கொள்ளலாம்

FLASH NEWS: 800 அரசு பள்ளிகளை மூட போறாங்களாம்

#BreakingNews 800 அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு என தகவல்.

* 10க்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை திட்டம்.

* மூடப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க பரிந்துரை.

* விரைவில் அரசாணை வெளியாகும் என தகவல்.

கணினி ஆசிரியர்கள் நிலையை சித்தரிக்கும் படம்..



ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்தால் மகிழ்ச்சி :அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


Sunday 20 May 2018

BREAKING NEWS:இன்று பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்..


பிளஸ் 2 தேர்வு எழுதியோருக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று (மே 21 திங்கள்) பிற்பகலில்  பள்ளிகளில் வழங்கப்படுகிறது...!

ஆன்லைனிலும் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்...!


17 ஏ குறிப்பாணை!! 4,322 ஆசிரியர் அதிர்ச்சி!


அனுமதியின்றி உயர்கல்வி பயின்றோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் 4,322 ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஆசிரியர்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்கப்படுத்த அரசு ஊக்க ஊதிய உயர்வு அளிக்கிறது. கடந்த காலங்களில் தொடக்கக்கல்வித் துறை ஆசிரியர்கள் உயர்கல்வி படிக்க முறையாக அனுமதி பெற்றனர். காலப்போக்கில் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் உயர்கல்வி படிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அனுமதி பெறாமலேயே உயர்கல்வி பயின்று, பின்னேற்பு ஆணை பெற்று வந்தனர். திடீரென பின்னேற்பு ஆணை வழங்குவதை கல்வித்துறை நிறுத்தியது.
இதனால் மாநிலம் முழுவதும் அனுமதி பெறாமல் பயின்ற 4,322 பேர் பாதிக்கப்பட்டனர். பின்னேற்பு அனுமதி வழங்க வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள் போராடின. பாதிக்கப்பட்டோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் அனுமதியின்றி உயர்கல்வி பயின்றதால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. 
இதையடுத்து 17 ஏ குறிப்பாணை கொடுத்து ஆசிரியர்களிடம் விளக்கம் பெறப்பட்டு வருகின்றன. தொடர்ந்து அவர்களது பணிப்பதிவேட்டில் 'கண்டனம்' என்ற தண்டனை பதியப்பட்டு வருவதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உயர்கல்விக்கு பின்னேற்பு ஆணையும் வழங்கப்படுகின்றன

அரசுப் பள்ளிகளில் `ஆல் பாஸ்’ எண்ணிக்கை குறைந்தது ஏன்...? பள்ளிக்கல்வித்துறை ஆய்வு..



மே 16-ம் தேதி வெளியிடப்பட்ட பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகுறித்து, பல்வேறு விமர்சனங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இதில், அரசுப் பள்ளி மாணவர்களின் மதிப்பெண் குறைந்திருப்பதற்கு என்ன காரணம் என்பதுகுறித்து, பள்ளிக்கல்வி துறையும் ஆசிரியர்களும் ஆராய்ந்துவருகின்றனர். 
அரசுப் பள்ளி
தமிழ்நாட்டில் உள்ள 6,754 மேல்நிலைப் பள்ளிகளில் 1,907 பள்ளிகளில் முழு அளவில் தேர்ச்சிபெற்றுள்ளனர். இதில் 2,574 அரசுப் பள்ளிகளில் 238 பள்ளிகளில் மட்டுமே 100 சதவிகிதம் தேர்ச்சிபெற்றுள்ளனர்.  அதாவது, 10 சதவிகிதத்துக்கும் குறைவான பள்ளிகளில் மட்டுமே முழு தேர்ச்சி என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 


தனியார் பள்ளிகளுடன்  போட்டிபோடும் திறன் குறைந்திருப்பதற்கு என்ன காரணம் என்பதுகுறித்து பள்ளி ஆசிரியர்களிடம் பேசினோம். 
அரசுப் பள்ளிதமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவர் அருளானந்தம், ``தனியார் பள்ளிகள், `பத்தாம் வகுப்பில் 480 மதிப்பெண் பெற்றவர்களுக்கு உயிரியல் பாடப்பிரிவிலும், 450 மதிப்பெண் பெற்றவர்களை இதர பிரிவுகளிலும் கட்டணமில்லாமல் சேர்த்துக்கொள்கிறோம்' என்று விளம்பரம் செய்து, பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களைச் சேர்த்துக்கொள்கின்றனர். இதனால் நன்கு படிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் அரசுப்பள்ளிகளுக்கு வருவது தடுக்கப்படுகிறது. மேலும், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விருப்பப்படி பள்ளிகளில் அனைத்து பிரிவுகளிலும் இடம் வழங்கப்படுகிறது. முதலில் மாணவர்கள் ஆர்வத்தில் கணிதம், உயிரியல் பிரிவில் சேர்வார்கள். பிறகு, கணிதப் பிரிவில் நிலைக்க முடியாமல் `வேறு பிரிவுக்கு மாற வேண்டும்' என்பார்கள்.  காலம் தாழ்ந்து வேறு பிரிவுக்கு மாற முடியாததால், பொதுத்தேர்வில் வெற்றியைப் பெற முடிவதில்லை. 
ஒவ்வொரு முறையும் தேர்வுத்தாள் திருத்தும்போது மொழிப்பாடங்களுக்கு முழு மதிப்பெண் வழங்குவதில்லை என்ற எழுதப்படாத சட்டம் இருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதப் பாடங்களுக்கு மதிப்பெண் குறைத்து வழங்க தேர்வுத் துறை உத்தரவிட்டது. இதனால் ஏராளமான மாணவர்களின் மதிப்பெண் குறைக்கப்பட்டது. இதனால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் செயல்பாடு எங்கெல்லாம் சிறப்பாக இருக்கிறதோ அங்கெல்லாம் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கின்றனர். சமூகப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளே அரசுப் பள்ளியை நாடுகின்றனர். இப்போது, கட்டாயக் கல்விச் சட்டத்தில் தனியார் பள்ளியில் காலி இடங்கள் இருக்கும்போது அரசுப் பள்ளியில் நன்றாகப் படிக்கும் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ளவும் பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்குகிறது. இதனால் நன்றாகப் படிக்கும் ஒன்றிரண்டு மாணவர்களும் தனியார் பள்ளியில் சேர்கின்றனர். 
மேலும், ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்கள் முப்பருவக் கல்விமுறையில் பயில்கின்றனர். ஒவ்வொரு தேர்விலும் குறிப்பிட்ட பாடங்களைப் படித்தால் மட்டும் போதுமானதாக இருந்தது. ஆனால், பத்தாம் வகுப்பில் முழுப் புத்தகத்தையும் படித்துத் தேர்வு எழுதவேண்டிய நிலைக்கு உள்ளாகி, ஐந்து பாடங்களைத் தட்டுத்தடுமாறி தேர்ச்சி பெறுகின்றனர். 
பத்தாம் வகுப்பு வரை ஒரு பாடத்துக்கு ஒரு பாடநூல். ஆனால், 11-ம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்துக்கும் இரண்டு பாடநூல்கள், தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு தாள்கள் என பாடச்சுமைகள் கூடுகின்றன. பத்தாம் வகுப்பில் கஷ்டப்பட்டு தேர்ச்சி பெறுபவர்கள் 11 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற சிரமப்படுகின்றனர். இதுவும் மாணவர்கள் முழுமையாகத் தேர்ச்சி பெறாததற்கு முக்கியக் காரணம்" என்றார். 
அரசுப் பள்ளிதமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் மைக்கேல்ராஜ், ``கடந்த ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் முழு அளவில் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்துவந்தது. ஆனால், முழு அளவில் தேர்ச்சி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதற்குக் காரணம், பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் சிறந்த முறையில் முழு பணியாற்றுவதுதான். 
தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது மட்டுமே அரசுப் பள்ளியில் முழு அளவில் தேர்ச்சிபெறுவது என்பது குறைவாக இருக்கிறது. இதற்குக் காரணம், தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதுவும் முழு அளவில் வெற்றி பெறாமல்போனதற்குக் காரணம். அறிவியல் பாடங்களில் செய்முறைத் தேர்வுகள் மாணவர்கள் தேர்ச்சிபெறக் கைகொடுக்கின்றன. ஆனால், கணிதம், வணிகவியல் போன்ற பாடங்களில் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைந்திருந்தாலும் அவர்களைப் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கிறோம். இதுவும் தேர்வின் முடிவில் எதிரொலிக்கிறது" என்றார். 
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ``தமிழகத்தின் வட மாவட்டங்களில் மதிப்பெண் குறைந்ததற்கு, வட மாவட்டங்களில் பணியாற்றும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் இடமாற்றத்தால், வட மாவட்டங்களில் ஆசிரியப் பணியிடங்கள் காலி இடங்களாக இருக்கின்றன. இதனால்தான் தேர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது. அடுத்த கல்வியாண்டில் காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்" என்கிறார். 
இந்த ஆண்டு பள்ளிக்கல்வித் துறைக்கு மட்டும் 27,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு. ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். மேலும், பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படுவதும் நடந்துவருகிறது. ஆனால், பள்ளித் தேர்வு முடிவு  மட்டும் யோசிக்கவைக்கிறது

POPULAR POSTS