மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Saturday 10 November 2018

சங்க மாநில இணை அமைப்பாளர் திருமண வாழ்த்துக்கள்

திருமண  வாழ்த்துக்கள்..


 சங்க மாநில இணை அமைப்பாளர்   திரு முத்துவிஜயன்-வேதஸ்ரீ  அவர்களின் திருமணம் (9.11.2018)இன்று திண்டுக்கல் மாவட்டம்  நத்தம் கோவில்பட்டியில்   நடைபெற்றது ..

மணமகள் வேதஸ்ரீ  என்னும் நிலாவை கைப்பற்றி
நிறைவிழா காணும் மணமகன் முத்துவிஜயன் அவர்களுக்கு என்றென்றும் வாழ்த்துக்கள்!""

அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு மணமக்கள்  அகிலம் போற்ற இனிதாய்  வாழ்ந்திட!...🤝

என்றும் அன்புடன் வாழ்த்துகிறேன்...

திரு வெ.குமரேசன்
மாநிலப் பொதுச்செயலாளர்,
9626545446,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.655/2014.

Friday 9 November 2018

கணினி ஆசிரியர்கள் நியமன அரசாணை வெளியீடு புதுவை அரசு!




பிராந்திய ரீதியிலான பணிநியமன ஒதுக்கீடுக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளித்தது தவறு என்று புதுவை சட்டப்பேரவையின் அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து  புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:
புதுவை மாநிலத்தில் ஏற்கெனவே இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு நேர்மாறாக எந்த மாநிலத்திலும் இல்லாத விதத்தில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் பிராந்திய ரீதியில் இட ஒதுக்கீட்டை அரசியல் ரீதியான குறுகிய கண்ணோட்டத்தில் ஒதுக்கியதால், புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் தகுதியான, அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும் உயர் கல்வி பயில முடியாத ஒரு சூழ்நிலையை ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
தற்போது வேலைவாய்ப்பிலும் அந்தந்த பிராந்திய பகுதியில் இருப்பவர்களை கொண்டு நிரப்புவது என முடிவு செய்திருப்பது சட்டவிரோதமான செயலாகும்.  இது புதுவை அரசின் பணிநியமன விதிகளுக்கு நேர்மாறான ஒன்றாகும்.  தற்போது கல்வித்துறை மூலம் புதுவை மாநிலத்தில் பாலசேவிகா, பட்டதாரி ஆசிரியர்கள், . இதில் காரைக்காலில் மட்டும் 145 பணியிடங்களுக்கு,  காரைக்காலை சேர்ந்தவர்களை மட்டுமே கொண்டு நிரப்ப அரசாணை வெளியிட்டிருப்பது தவறான ஒன்று.  இது எதிர்காலத்தில் படிக்கும் மாணவர்களிடையே பிரிவினையை தூண்டக்கூடிய செயலாகும்.  இதற்கு துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இது எந்த மாநிலத்திலும் இல்லாத ஒன்று.  சம்பந்தப்பட்ட அமைச்சர் காரைக்காலைச் சேர்ந்தவர். அவர் காரைக்காலுக்கு நன்மை செய்வதாகக் கருதி, இதுபோன்ற தவறான முடிவெடுத்து அரசிடம் ஒப்புதல் பெற்றிருப்பது தவறான முன்னுதாரணம்.
இதுபோன்ற குறுக்குவழி பணி நியமனத்துக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது தவறானது. ஆகவே, இந்த பணிநியமன முறையை ரத்து செய்துவிட்டு, பழைய முறையிலேயே பணிநியமனம் செய்ய வேண்டும்.
காங்கிரஸ் அரசு தனது கட்சியாளர்களை திருப்திபடுத்தும் விதத்தில் வாரியத் தலைவர் பதவியில் 25-க்கும் மேற்பட்டோரை நியமனம் செய்ய உள்ளதாக தகவல் வருகிறது. எம்எல்ஏக்கள் இல்லாமல் வெளியாள்களை நியமனம் செய்வதை தடுக்கும் விதமாக அதிமுக சார்பில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடந்தகால வாரிய செயல்பாடுகள், தற்போதுள்ள நிதிநிலை குறித்தும் கடிதம் அளிக்க உள்ளோம். சிக்கன நடவடிக்கை குறித்து பேசும் துணை நிலை ஆளுநர் இந்த விஷயத்தில் முதல்வருடன் ஒத்துப்போகிறாரா என்பது தெரியவில்லை.  வாரியத் தலைவர்கள் நியமனம் குறித்து அரசிடமிருந்து கடிதம் வந்துள்ளதா என்பது குறித்து துணை நிலை ஆளுநர் தெளிவுபடுத்த வேண்டும்  என்றார்.
திமுக எதிர்ப்பு: புதுவையில் பிராந்திய ரீதியில் பணிநியமன ஒதுக்கீடு வழங்க திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ.  புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுவை அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பிராந்திய இடஒதுக்கீட்டில் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பிராந்திய ரீதியான துவேசத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
காரைக்கால் மாவட்டம் பின்தங்கியபகுதி என்ற காரணத்தைக்கொண்டு உயர்கல்வியில் மாணவர்களுக்கு பிராந்திய  இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.  இந்த பிராந்திய ஒதுக்கீட்டால் புதுச்சேரியில் அதிக மதிப்பெண் எடுத்தும்
தகுதியுள்ள மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.  இதனால் கல்வியில் பிராந்திய ரீதியிலான ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் திமுக குரல் கொடுத்தது.
தற்போது அதே காரணத்தை சுட்டிக்காட்டிபிராந்தியஅடிப்படையிலான பணி நியமன ஒதுக்கீடு என்பது எப்படி சாத்தியமாகும்?  அப்படி பார்த்தால் புதுச்சேரியில் அதிக கிராமப்புறங்களை கொண்டு பின்தங்கி உள்ள அரியாங்குப்பம், பாகூர், நெட்டப்பாக்கம் கொம்யூன்களை பின்தங்கிய பகுதியாக அறிவிக்க அரசு முன்வருமா?
இது அரசியல் சட்ட விதிகளுக்கு புறம்பானது. சட்டம் படித்தவர் இந்த மாநிலத்தின் முதல்வராக இருக்கிறார்.   முதல்வர் எப்படி இதற்கு ஒப்புதல் அளித்தார்?  மக்கள் நலத்திட்டங்களுக்கு அரசு மூலம் அனுப்பப்படும் கோப்புகளை எல்லாம் திருப்பி அனுப்பும் ஆளுநர், இந்த கோப்புக்கு எவ்வாறு அனுமதி அளித்தார்?
பிராந்திய இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் முன் கல்வியாளர்கள்,  சட்டப்பேரவை உறுப்பினர்கள், நடுநிலையாளர்களை அழைத்து அதன் சாதக, பாதகங்களை விவாதித்திருக்க வேண்டும்.  காரைக்காலை சேர்ந்த கல்வி அமைச்சர் தனது சொந்த விருப்பத்துக்காக தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளார். இதை திமுக வன்மையாக கண்டிக்கிறது.
 படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை பாதிக்கும் இந்த பிராந்திய ரீதியிலான இடஒதுக்கீடு பணிநியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.  இல்லாவிட்டால் படித்த இளைஞர்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தை திமுக நடத்தும் எனத் தெரிவித்துள்ளார் சிவா எம்.எல்.ஏ.

Thursday 8 November 2018

தமிழகத்தில் நாளை முழு வேலை நாள்


தீபாவளிக்கான கூடுதல் விடுமுறையை ஈடுகட்ட, பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு, நாளை முழு வேலைநாளாகும்.தீபாவளி பண்டிகை, நவ., 6ல் கொண்டாடப்பட்டது; அன்று, அரசு விடுமுறை அதேநேரத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கையை ஏற்று, தீபாவளிக்கு முதல் நாளான, நவ., 5ம் தேதி திங்கள் கிழமையும் விடுமுறை நாளாக, தமிழக அரசு அறிவித்தது.

இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில், நாளை தமிழகம் முழுவதும், முழு வேலை நாளாகும் அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள், நாளை முழு நாளும் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது அதேபோல, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளும், முழு நாளும் வேலை நாளாக பின்பற்றி, பணிகளை பார்க்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Wednesday 7 November 2018

அரசுப்பள்ளிக்கு குவியும் பரிசு மழை! தங்கம் வென்ற அரசு பள்ளி தங்கங்களுக்கு குவிந்த பாராட்டுகளும் ..! பரிசுப் பொருட்களும்..! அரசுப்பள்ளி நமது பள்ளி அனைவரும் உதவிடுவோம்!



அரசுப்பள்ளிக்கு குவியும் பரிசு மழை!
தங்கம் வென்ற அரசு பள்ளி தங்கங்களுக்கு குவிந்த பாராட்டுகளும் ..! பரிசுப் பொருட்களும்..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம்,
கோ. இராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்
மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மண்டல போட்டிகளில் பங்கேற்று இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் என நான்கு பரிசுகளை வென்றனர்  மாணவி அனிதா 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மாணவி பிரமிளா பத்து கிலோமீட்டர் ரோடு சைக்கிளிங் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மாணவிகள் சவுந்தர்யா, கனிமொழி ஆகியோர் பத்து கிலோமீட்டர் ரோடு சைக்கிளிங் போட்டியில் தங்கம் வென்றார்கள். இவர்கள் அடுத்த மாதம் கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் மாநிலப் போட்டிகளில் பங்கேற்கவும் உள்ளனர்.

ரூபாய் 25000 மதிப்புள்ள  மிதிவண்டி
 மற்றும் ரூபாய்  5000 மதிப்பிளான விளையாட்டு உபகரணங்களை ஆசிரியர்களும் உதவும் காரங்களும் இணைந்து வழங்கினர்,


வைஸ்ணவ் என்பவர் இரண்டு கணினிக்காண உபகரணங்களை வழங்கினார்.

 இது போன்று கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பயிலும் அரசுப்பள்ளிக்கு  கணினி ஆய்வக உபகரணங்கள், கழிப்பறை வசதி ,சுற்றுச்சுவர் வசதி பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை உதவும் கரங்களும்  முன்னாள்  மாணவர்களும் ஏற்படுத்தி கொடுத்தால் மாநில அளவில் மட்டும் நின்று விடாமல் உலக அளவில் பல சாதனைகளை படைத்திடலாம் என்கிறார் தலைமை ஆசிரியர் ராஜசேகரன்..


"உங்களின் ஓர் சிறிய உதவியும் நிச்சயம் சாதனை படைக்கும்" தாங்களும் அரசுப்பள்ளிக்கு  உதவிட :9965515675.



மாநில அளவிளான போட்டிகளின் பங்கேற்கும் எங்கள் மாணவச் செல்வங்களை ஊக்குவிக்கும் விதமாக பலரும் உதவிகரம் நீட்ட முன் வந்துள்ளனர்.

பள்ளியில் பணிபுரியும் பள்ளி தலைமையாசிரியர் ராஜசேகரன்



 , உதவித் தலைமை ஆசிரியர்கள் நாராயணசாமி, அய்யாக்கண்ணு மற்றும் கணேசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தீனதயாளன் மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள் முனியப்பன், செந்தில் வடிவு, சத்திய ஜோதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும்  பாராட்டினர் .அதோடு நீன்றுவிடாமல் மாநில போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பரிசு மழையும் குவியத் தொடங்கின.

உதவியவர்கும் இனி உதவிக்கரம் நீட்டும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றார்  திண்டுக்கல் மாவட்ட கோ.இராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ..
சாதனைகள் மட்டும் அரசுப்பள்ளியின்  நோக்கம் அன்று பலரின் சாதனைகளை வெல்வது அரசுப்பள்ளியின்  பள்ளியின் இலட்சியம்..


SOURCE:சைக்கிளிங் போட்டி.. தங்கம் வென்ற அரசு பள்ளி தங்கங்கள்.. சபாஷ் போடுங்க வாங்க!
http://dhunt.in/4YQ8Q?s=a&ss=pd
via Dailyhunt
செயலியை பெற
http://dhunt.in/DWND

Monday 5 November 2018

வாழ்வில் ஒளி என்னும் வெள்ளம் பெருக இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்


தீபம் + ஒளி=தீபாவளி
- ஆம்,
தமக்குள் நிறைந்திருக்கும்
மாய இருள்தனைப் போக்க
அறிவுத்தீயை தீட்டி
வரிசை வரிசையாய் அகல் ஒளி ஏற்றி
வெளிச்சத்தை மூட்டி
நமக்குள் மறைந்திருக்கும்
தீய எண்ணங்களை
சாதி மத பேதம் துறந்து
பொறாமை கோபம் போன்ற
அழுக்குகளை இன்றோடு அகற்ற
நல்ல எண்ணெய் தேய்த்து குளித்து
மன மாற்றம் பெற்றிட
புத்தாடைகள் வாங்கி அணிந்து
புத்துணர்வோடு வெளிவந்து
ஒருவரோடு ஒருவர் பேசி
உணர்ந்து புரிந்து
அனைவரும் சமமாய் இணைந்து
இனிப்புகளைப் பகிர்ந்துண்டு
விட்டுக்கொடுத்து கொண்டாடி மகிழ்வோம்
இவ்வாண்டிலிருந்து... !

அனைவருக்கும் இனிதான தங்கள் இல்லத்தில் இறைவன் வாழ்த்த
தீப ஒளி திருநாள்  வாழ்த்துக்கள்

இவண்..
திரு வெ.குமரேசன்,
9626545446,
மாநிலப் பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.® பதிவு எண்:655/2014.

Sunday 4 November 2018

Flash News : TRB - ஆசிரியர் தேர்வில் முறைகேடு - ஆதரத்துடன் குற்றச்சாட்டு -

பள்ளிக்கல்வித்துறையில் இறுதிகட்ட பணிகள் முடியும் நிலையில் பரபரப்பு




பாலிடெக்னிக் தேர்வில் முறைகேடு,  கைது என அந்த பிரச்சனை முடிவதற்குள் சிறப்பாசிரியர் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக ஆதாரத்துடன் வெளியிடப்பட்டுள்ள வீடியோ!

https://youtu.be/SdRFtEjoxa8

POPULAR POSTS