விழுப்புரம்:விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டிற்கான ஆயத்த கூட்டம் நடைபெற்றது.விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடந்த கூட்டத்தில், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் உள்ள 133 அரசு பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு தலைமை தாங்கி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பேசியதாவது:அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் சேர்க்கையை அதிகபடுத்துவதோடு, அது சம்பந்தமாக விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்த வேண்டும். அதில், அரசு பள்ளிகளின் பெருமை மற்றும் மாணவர்களின் சேர்க்கை, பள்ளி வளாகத்தை துாய்மையாக வைத்து கொள்ளுதல் ஆகியவற்றை வெளிப்படுத்த வேண்டும். பள்ளிகளின் சுற்றுசுவற்றில் ஒட்டப்பட்டுள்ள சினிமா மற்றும் அரசியல் சுவரொட்டிகளை அகற்றி விட்டு, திருக்குறள் வாசகங்களை எழுதி வைக்க வேண்டும்.அது மட்டுமின்றி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த வழிவகை செய்ய வேண்டும். ஆறு முதல் 9ம் வகுப்புகள் வரையுள்ள மாணவர்களின் தேர்வு முடிவுகளை வரும் 14ம் தேதி வெளியிட வேண்டும். இந்த கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் மட்டுமின்றி, வகுப்பறைகளில் ஆசிரியர்களும் கூட மொபைல் பயன்படுத்துதல் கூடாது என தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் நீலாம்பாள், சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர்கள் ராஜேந்திரன், காளிதாஸ், பள்ளி துணை ஆய்வாளர் இருதயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம். Reg No:655/2014. வெ.குமரேசன் , பொதுச் செயலாளர், EMail: tnbedcsvips@gmail.com WhatsApp: 9626545446
மலர்கள்
BREAKING NEWS
Flash News
Wednesday, 9 May 2018
ஆசிரியர்கள் பள்ளி நேரத்தில் செல்போன் பேச தடை: CEO தகவல்
விழுப்புரம்:விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டிற்கான ஆயத்த கூட்டம் நடைபெற்றது.விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடந்த கூட்டத்தில், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் உள்ள 133 அரசு பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு தலைமை தாங்கி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பேசியதாவது:அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் சேர்க்கையை அதிகபடுத்துவதோடு, அது சம்பந்தமாக விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்த வேண்டும். அதில், அரசு பள்ளிகளின் பெருமை மற்றும் மாணவர்களின் சேர்க்கை, பள்ளி வளாகத்தை துாய்மையாக வைத்து கொள்ளுதல் ஆகியவற்றை வெளிப்படுத்த வேண்டும். பள்ளிகளின் சுற்றுசுவற்றில் ஒட்டப்பட்டுள்ள சினிமா மற்றும் அரசியல் சுவரொட்டிகளை அகற்றி விட்டு, திருக்குறள் வாசகங்களை எழுதி வைக்க வேண்டும்.அது மட்டுமின்றி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த வழிவகை செய்ய வேண்டும். ஆறு முதல் 9ம் வகுப்புகள் வரையுள்ள மாணவர்களின் தேர்வு முடிவுகளை வரும் 14ம் தேதி வெளியிட வேண்டும். இந்த கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் மட்டுமின்றி, வகுப்பறைகளில் ஆசிரியர்களும் கூட மொபைல் பயன்படுத்துதல் கூடாது என தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் நீலாம்பாள், சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர்கள் ராஜேந்திரன், காளிதாஸ், பள்ளி துணை ஆய்வாளர் இருதயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
POPULAR POSTS
-
14663 கணினி ஆசிரியர் பணியிடங்கள். * 6 to 10th 38 மாவட்ட கணினி ஆசிரியர்கள் குழு* *38 மாவட்டங்களும் சங்கமிப்போம்* *சென்னை* மாவட்ட6-10 கண...
-
கூகுளின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தொடங்கி உலகின் பல டெக் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் தமிழர்கள் கோலோச்சுகிறார்கள். சென்னை டை...
-
சமச்சீர் கல்வியில் கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிக்கு கொண்டுவர அரசுப்பள்ளி மாணவர்கள் ,60000வேலையில்லா கணினி ஆசிரியர...
-
தமிழக அரசு நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிக்கு ஓர் கணினி பயிற்றுநர் பணி நியமனம் செய்ய உள்ளது. தமிழக அரசு வருகின்ற கல்வியாண்டு ஜீன் முதல் 6992...
No comments:
Post a Comment