மருத்துவ படிப்புக்கான ‘நீட்’தேர்வு நேற்று நடந்தது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 12 மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் வயலூர் அமிர்தா வித்யாலயா பள்ளியில் 540 பேரும், வயலூர் பாரதியார் நகர் காவேரி குளோபல் பள்ளியில் 660 பேரும், திருச்சி கமலா நிகேதன் பள்ளியில் 840 பேரும், துப்பாக்கி தொழிற்சாலை அருகில் உள்ள எண்-01 கேந்திர வித்யாலயா பள்ளியில் 600 பேரும், எண் 2 கேந்திர வித்யாலயா பள்ளியில் 1,200 பேரும், தென்னூர் மகாத்மா காந்தி நூற்றாண்டு நினைவு வித்யாலயா பள்ளியில் 480 பேரும், காட்டூர் மாண்ட்போர்ட் பள்ளியில் 660 பேர், திருச்சி காஜா நகர் சமத் மேல்நிலைப்பள்ளியில் 1,200 பேர், பஞ்சப்பூர் சாரநாதன் என்ஜினீயரிங் கல்லூரியில் 1,440 பேர், ஸ்ரீரங்கம் ஸ்ரீவிகாஷ் வித்யாஸ்ரமம் முதுநிலை இடைநிலைப்பள்ளியில் 720 பேர், திருச்சி சென்னை ரிங் ரோடு அருகே உள்ள ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளியில் 600 பேர், திருவானைக்கோவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி வித்யாலயா பள்ளியில் 480 பேர் என மொத்தம் திருச்சி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 420 மாணவ- மாணவிகள் தேர்வு எழுத ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டது.
வெளிமாநிலத்திற்கு ‘நீட்’ தேர்வு எழுதச் சென்ற மாணவ-மாணவிகளுக்குத் தேவையான உதவிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறினாலும், பலர் தன்னார்வலர்கள் உதவியுடனும், சொந்த செலவிலும் கேரளா மாநிலம் எர்ணாகுளம், திருப்பதி போன்ற பகுதிகளுக்குச் சென்றனர்.
இன்று காலை 10 மணிக்குத் தேர்வு துவங்கியது. தேர்வு எழுத மத்திய மண்டலத்தில் உள்ள புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் எனப் பல மாவட்டங்களில் இருந்து மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்குப் பெற்றோர்களுடன் குவிந்தனர். இதனால் காலையில் இருந்தே பரபரப்பு நிலவியது. காலை 9.30 மணிக்குப் பிறகு வருபவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்காததால் பலர் தடுமாறிப் போனார்கள். ‘நீட்” தேர்வு மையங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தாலும், மாணவிகளுக்குத் தேர்வு அறைக்குள் செல்ல அதிகரித்த நெருக்கடிகளால் மாணவர்கள் தவித்தார்கள்
அதுமட்டுமல்லாமல் காதணிகள், கொலுசுகள் அணிந்திருந்த மாணவிகள், அவற்றைக் கழற்றிய பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களுக்கான சோதனைகள் கடுமையாக நடைபெற்றது. கலாச்சாரம் சார்ந்த உடைகள்
அணியும் மாணவர்கள் 8.30 மணிக்கு முன்பாகவே அனுமதிக்கப்பட்டனர். இந்தக் கட்டுப்பாடுகளாலும், நெருக்கடிகளாலும் திருச்சி நீட் தேர்வு மையங்களில் மிக நீண்ட கியூ நின்றது. கம்பல், தோடு என அனைத்தையும் பெற்றோரிடம் கழட்டிக் கொடுத்த மாணவிகள், ஜடைகளை அவிழ்த்து தலைவிரி கோலமாக தேர்வறைக்குள் சென்றனர். தேர்வு முடித்து வெளியே வந்த மாணவர்கள் நம்மிடம்,“வினாத்தாள் எளிமையாக இருந்தது. சமச்சீர்க் கல்வி திட்டத்தில் கேள்விகள் வந்தது. தேர்வை நல்ல முறையில் எழுத நினைத்தாலும், இந்த அதிகாரிகள் தேர்வு எழுதுவதற்கு முன்பு செய்த நெருக்கடிகள் அதிகமான மன உலைச்சலுக்கு ஆளாக வைத்தது. இப்படியெல்லாம் செய்வாங்க என நாங்கள் நினைத்துக் கூட பார்த்தது இல்லை”எனப் புலம்பினார்கள்.

இன்று திருச்சி மாவட்டத்தில் நீட் தேர்வு 12 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வு எழுதுவதற்காக 9420 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இன்று நடைபெற்ற நீட் தேர்வில் 9056 நபர்கள் தேர்வு எழுதினர். 364 நபர்கள் ஆப்சென்ட் ஆனார்கள். நீட் தேர்வு முடிந்தாலும் அதிகாரிகள் கொடுத்த நெருக்கடிகள் பரபரப்பை ஏற்படுத்தியது
No comments:
Post a Comment