.
கல்வி மேம்பாட்டு செலவை ஈடுகட்டுவதற்காக அசாமில் விரைவில் லாட்டரி டிக்கெட்
➠❄கணினி கல்வியின் புதுமை❄➠
* 28 சதவீதம் வரி கிடைப்பதால் மாநில அரசு நடவடிக்கை
கவுகாத்தி: லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி கிடைக்கும் என்பதால் லாட்டரி விற்பனை செய்வதற்கான மசோதாவை அசாம் மாநில அரசு தயாரித்து வருகிறது. ஜிஎஸ்டி வரி திட்டத்தின் கீழ் லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு 28 சதவீதம் வரி என்பதால் ்அதன் மூலம் மத்திய மாநில அரசுக்கு அதிக நிதி கிடைக்கின்றன. கேரள மாநிலத்தில் லாட்டரி தொழில் சிறப்பாக நடைபெறுகிறது.
லாட்டரி டிக்கெட் விற்பனை செய்வதன் மூலம் ரூ.2450 கோடி வருவாய் தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவுக்கு கிடைத்துள்ளது. இதுபோல் மேற்கு வங்க மாநிலத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடியும், மகாராஷ்டிராவுக்கு ரூ.700 கோடியும் லாட்டரி டிக்கெட் விற்பனையின் மூலமாக கிடைத்துள்ளது. பஞ்சாப் உள்ளிட்ட வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையின் மூலமாக மொத்தம் ரூ.5150 கோடி வருவாய் கிடைத்துள்ளதால் தற்போது அசாம் மாநில அரசும் லாட்டரி விற்பனைக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது.
இதற்கான மசோதா தயார் செய்யும் பணியில் அம்மாநில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு பிறகு பல்வேறு மாநிலங்களின் நிதி வருவாய் குறைந்துவிட்டது. லாட்டரிக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால் அதன் மூலமாக கிடைக்கும் வருவாய் கல்வி மேம்பாட்டு செலவினங்களை ஈடுகட்ட பயன்படுத்தலாம் என்ற நோக்கத்தில் அசாம் மாநில அரசு லாட்டரிக்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது.

No comments:
Post a Comment