போபால் பிளாட்பாரத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் அநாதையாகக் கிடந்துள்ளார். அவரை வாட்ஸ் அப் வீடியோ மூலம் அடையாளம் கண்ட மாணவர்கள், குடும்பத்தினருடன் ஆசிரியரைச் சேர்க்க முயற்சி செய்துவருகின்றனர்.

(PC -TOI)
இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ் அப் மூலம் அடையாள காணப்படுபவர்கள் அதிகமாகிவிட்டனர். அந்ததளவுக்கு வாட்ஸ் அப் மக்களுக்குப் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் போபாலில் பிளாட்பாரத்தில் முதியவர் ஒருவர் மயங்கிக் கிடந்தார். அவரை அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்தும், பார்க்காதப்படி கடந்து சென்றனர். முதியவர் மீது இரக்கப்பட்ட ஒருவர், தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து, அதை வாட்ஸ்அப் பில் பதிவிட்டுள்ளார். அந்த வாட்ஸ் அப் வீடியோ பல குரூப்களுக்கு ஷேர் செய்யப்பட்டது.
இந்தச் சமயத்தில் முதியவரின் வீடியோவைப் பார்த்த ஒருவர் அதிர்ச்சியடைந்தார். வீடியோவில் இருக்கும் முதியவர், தனக்கு இயற்பியல் பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியர் விஜய் சோபி என்று அடையாளம் கண்டார். உடனடியாக தன்னுடைய பள்ளி நண்பர்களுக்கு அந்த வீடியோவை ஷேர் செய்தார். அதோடு ஆசிரியரை மீட்கும் நடவடிக்கையில் நண்பர்களுடன் ஈடுபட்டார்.
பிளாட்பாரத்திலிருந்த ஆசிரியர் விஜய் சோபியை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். பிறகு, ஆசிரியரின் குடும்பத்துடன் அவரைச் சேர்க்க நடவடிக்கை எடுத்துவருகின்றனர். ஆனால், ஆசிரியரின் குடும்பம் எங்கு இருக்கிறது. அவர் எப்படி இங்கு வந்தார் போன்ற விவரங்கள் கிடைக்கவில்லை.
இதுகுறித்து விஜய் சோபியிடம் கல்வி கற்ற மாணவர்கள் கூறுகையில், ``ஆசிரியர் விஜய் சோபி, 1990 ல் நாலந்தா பள்ளியில் பணியாற்றினார். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். போபால் நகரில் உள்ள கதார் சாலை பிளாட்பாரத்தில் பிச்சைக்காரர் போல மயங்கிக் கிடந்துள்ளார். அந்த வீடியோவைப் பார்த்து அவரை மீட்டுள்ளோம். விரைவில் அவரின் குடும்பத்தினருடன் சேர்த்துவிடுவோம். தற்போது ஆசிரியர் பேசும் நிலையில் இல்லை. இதனால் அவரின் குடும்ப விவரங்களைச் சேகரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது'' என்றனர்.
No comments:
Post a Comment