![]() |
➠❄கணினி கல்வியின் புதுமை❄➠ |
``எங்களது பல கோரிக்கைகளை நிறைவேற்றும் எந்த முயற்சிகளையும் இந்த அரசு எடுக்கவில்லை. அதற்கான அறிகுறியும் தெரியவில்லை. எனவே, திட்டமிட்டபடி வரும் மே 8-ம் தேதி கோட்டை முற்றுகைப் போராட்டம் நடக்கும்" என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது.
மேலும், 40 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரியர்களைக் கணக்கிட்டு இதரப் பணியிடங்களை உபரிப் பணியிடங்களாக அரசு கணக்கிட முடிவெடுத்திருக்கிறது. இந்தப் போக்கு, மாணவர்களின் உயர்கல்வி கனவை தகர்ப்பதோடு எதிர்காலத்தில் கல்வி கற்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதைக் கவனத்தில் கொண்டு தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும். தேவையான புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஒரு கண்ணில் வெண்ணெய் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்ற மாற்றான்போக்கு மனநிலையை அரசு செயல்படுவதைத் தவிர்த்துவிட்டு, அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர் அனைவருக்கும் ஊதியக்குழு நிலுவையை வழங்கிட அரசு முன்வர வேண்டும். சத்துணவு திட்டம் 10 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையை மேலும், விரிவுபடுத்தி பசியோடு கல்வி கற்கும் ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
ஏனைய பாடங்களைப்போல, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களுக்கும் ஒரே தாள் முறையை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். நடுநிலைப்பள்ளிகளில் கடந்த காலங்களில் நேரடி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முறையான பதவி உயர்வு வாய்ப்பு கிடைக்காத சூழ்நிலை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, நேரடியாக நியமிக்கப்படும் முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 50 சதவிகித பணியிடங்களாக வகைமாற்றம் செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும். கல்லூரிகளில் முழுவதுமாக நேரடி நியமனங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. உரிய அனைத்து தகுதிகளுடன் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களைக் கல்லூரி விரிவுரையாளர்களாக ஈர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்திட அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்
No comments:
Post a Comment