Breaking:அரசுப்பள்ளிகள் மூடப்படும் அபாயம்- பள்ளி கல்வித்துறை இயக்குனர் அதிரடி உத்தரவால்!!
நகர்ப்புற அரசு மேல்நிலை பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள வகுப்புகளை மூட வேண்டும்
"கிராமப்புற அரசு மேல்நிலை பள்ளிகளில் 15 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால் வகுப்புகளை மூட வேண்டும்"
குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள வகுப்புகளை மூடவேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி..
![]() |
அரசுப்பள்ளிக்கு விரைவில் பூட்டு |
தமிழகத்தில் அனைத்து மாணவர்களும் கல்வி கற்கவேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் அரசு பள்ளிகளை நடத்தி வருகிறது. நிதி இல்லாமல் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது.
பல்வேறு அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்து வருவதால், ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாக அரசுக்கு புகார்கள் வந்தன.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உள்ள வகுப்புகளை மூடவேண்டும் என பள்ளிக்கல்வி துறை இன்று உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற அரசு மேல்நிலை பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள வகுப்புகளை மூட வேண்டும். இதேபோல், கிராமப்புற அரசு மேல்நிலை பள்ளிகளில் 15 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால் வகுப்புகளை மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை இயக்குனரின் இந்த அதிரடி உத்தரவால் பல பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்
அப்படியே இத்தனை அதிகாரிகளுக்கு எதுக்கு வெட்டி சம்பளம் தரணும்னு பள்ளிகல்வி அலுவலகத்தை மூடிவிடலாமே
ReplyDeleteநல்ல பதிவு
Delete