சென்னை : தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை : ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக ஜெயந்தி ஐ.ஏ.எஸ்., தொழில்முனைவோர் வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மைய இயக்குனராக இறையன்பு ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்பட்டனர். பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துணை ஆணையராக அசோக் டோங்ரே ஐ.ஏ.எஸ்., ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை துணை செயலாளராக செந்தாமரை ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை துணை செயலாளராக அமிர்தஜோதி ஐ.ஏ.எஸ்., பொதுத்துறை துணை செயலாளராக மோகன் ஐ.ஏ.எஸ்., நியமனம் செய்யப்பட்டனர். வரலாற்று ஆராய்ச்சி துறை ஆணையராக சந்தியா வேணுகோபால் ஷர்மா ஐ.ஏ.எஸ்., தொழிலாளர் நல ஆணையராக நந்தகோபால் ஐ.ஏ.எஸ்., மற்றும் வேளாண் கூடுதல் இயக்குனராக குமரவேல் பாண்டியன் ஐ.ஏ.எஸ்., நியமனம் செய்யப்பட்டனர்
No comments:
Post a Comment