6-ம் வகுப்பு ஆசிரியர்களைவிட, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குக் குறைந்த சம்பளம் வழங்கப்படுவதைக் கண்டித்தும், கோடை விடுமுறை எடுக்க முடியாத அளவுக்கு விடைத்தாள்கள் திருத்தும் பணி இருப்பதைக் கண்டித்தும், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் தனித்தனியாகப் போராட்டம் அறிவித்துள்ளன.
முதுகலை ஆசிரியர்கள், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்குப் பாடம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு, 6-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு வழங்குவதைவிட குறைந்த சம்பளம் வழங்குவதைக் கண்டித்து, பாதி விடைத்தாள்களை மட்டும் திருத்தும் பணியில் ஈடுபடும் போராட்டம் அறிவித்துள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் மணிவாசகம் பேசும்போது, ''முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 6-ம் வகுப்பு ஆசிரியர்கள் வாங்கும் சம்பளத்தைவிட மாதம் தோறும் 3,500 ரூபாய் குறைவான சம்பளம் வழங்கப்பட்டுவருகிறது. இதைக் கண்டித்து, வரும் 12-ம் தேதி தொடங்கும் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில், பாதி வேலை மட்டும் செய்ய இருக்கிறோம். அதாவது, ஒவ்வொரு ஆசிரியரும் தினமும் 20 விடைத்தாள்கள் திருத்துவதற்கு பதில், 10 விடைத்தாள்கள் மட்டும் திருத்தும் போராட்டம் நடத்த இருக்கிறோம்'' என்றார்.

No comments:
Post a Comment