வி.ஐ.டி. பி.டெக் நுழைவுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டதில் டெல்லி, தெலங்கானா, ஒடிசா, தமிழக மாணவர்கள் முதல் 10 இடங்களை பிடித்து சாதித்துள்ளனர். வி.ஐ.டி. பல்கலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வி.ஐ.டி. வேலூர், சென்னை, போபால் மற்றும் அமராவதி வளாகங்களில் இந்த ஆண்டு (2018) பி.டெக் பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு கடந்த 4ம் தேதி முதல் 16ம் தேதி வரை துபாய், குவைத், மஸ்கட், கத்தார் ஆகிய வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள 124 முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்ட 175 மையங்களில் கணினி முறையில் நாள்தோறும் 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் 2 லட்சத்து 12 ஆயிரம் ேபர் தேர்வு எழுதினர். நுழைவுத்தேர்வு முடிவுகள் www.vit.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதில் டெல்லியை சேர்ந்த கலாஸ் குப்தா முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். தெலங்கானாவை சேர்ந்த சரிகொண்ட அனந்த ராமாராவ் 2வது இடத்தையும், ஒடிசாவை சேர்ந்த அனிருத் பானிகிரஹி 3வது இடத்தையும் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த எஸ்.விஷால் 9ம் இடத்தை பிடித்துள்ளார். கர்நாடகாவை சேர்ந்த சாய் அனிருத், ஜார்கண்ட்டை சேர்ந்த சுபம்கர், மேற்கு வங்கத்தை சேர்ந்த சுபம் அகர்வால், சண்டிகரை சேர்ந்த பிரனவ் கோயல், டெல்லியை சேர்ந்த சான்சிட் அகர்வால் ஆகியோர் முறையே 4முதல் 8 வரையிலான இடத்தை பிடித்துள்ளனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த அன்மோல் குப்தா 10வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment