புது பாடத்திட்டம் குறித்த பயிற்சியை, பள்ளி துவங்கும் முன் வழங்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு பின், 2018 - 19 கல்வியாண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகளுக்கு, பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள் அச்சிடும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. புது பாடத்திட்டம் என்பதால், கற்பித்தல் முறை குறித்து, ஆசிரியர்களுக்கு, மூன்று முதல் ஐந்து நாள் பயிற்சியளிக்க, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதை, கோடை விடுமுறையில் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல ஆசிரியர் சங்கங்கள், இயக்குனரகத்தில் முறையிட்டு வருகின்றன. 'கோடை விடுமுறையிலேயே பயிற்சி வழங்கினால் தான், புது பாடத்திட்டத்தை நடத்தி முடிக்க முடியும்' என, ஆசிரியர்களில் ஒரு சாரார் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: புது பாடத்திட்டத்தை முறையாக நடத்தினால், எட்டு மாதங்கள் வரை, அவகாசம் தேவைப்படும். பழைய பாடத்திட்டங்களை போன்று, அரையாண்டு தேர்வுக்கு முன், அனைத்து பாடங்களையும் நடத்தி முடிப்பது, சவாலான விஷயம். இப்படியிருக்கும்போது, பள்ளி திறந்த பின், ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கினால், பல்வேறு குளறுபடி நடக்கும். உதாரணமாக, ஒரே கட்டமாக பயிற்சியளிக்க முடியாது. பகுதி, பகுதியாக பயிற்சியளிக்க வேண்டும். அதுவரை, கற்பித்தல் பணி பாதிக்கப்படும். இதனால், கல்வியாண்டுக்குள் பாடத்தை நடத்தி முடிப்பதில் சிக்கல் உருவாகும். கோடை விடுமுறை முழுவதும் பயிற்சியளிக்கப்போவதில்லை. ஐந்து நாட்கள் பயிற்சியில் பங்கேற்பதில், கற்றலில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை. விடுமுறை என்பதால், அனைத்து ஆசிரியர்களுக்கு ஒரே கட்டமாக பயிற்சியளிக்க முடியும். சில ஆசிரியர் சங்கங்களின் நெருக்கடிக்கு, மாணவர்கள் நலனை பறிகொடுக்காமல், பயிற்சியை, பள்ளி துவங்கும் முன் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
![]() |
➠❄கணினி கல்வியின் புதுமை❄➠ |

No comments:
Post a Comment