![]() |
➠❄கணினி கல்வியின் புதுமை❄➠ |
புதிய பாடத்திட்டத்தில் பல மாற்றங்களை கொண்டுவரும் அரசு கணினி பாடத்தை அறிவியலின் துணைப் பாடமாக கொண்டுவர உள்ளது . முறையான ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் ஆய்வாகங்கள் அமைக்காமல் , செய்முறை பயிற்சி இன்றி வெறும் பாடத்தை மட்டும் பெயரளவில் இணைத்து என்ன பயன்.
தமிழக அரசு கணினியை ஒரு பாடமாக மாணவர்களுக்கு கற்பிக்க வைப்பதன் ஒரு முயற்சியாக 2011-ம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் 6, 8 மற்றும் 10 ஆகிய வகுப்புகளுக்கு கணிப்பொறி பாடத்திற்கென புத்தகங்களை அச்சிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் அரசுப் பள்ளி களில் பயிலும் மாணவர்களுக்கு விநியோகம் செய்தது.
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கணினிக் கல்வியை ஊக்குவிப்பதன் பொருட்டு அரசால் கொண்டு வந்த இந்த கணினி கல்வி மாணவர்கள் மற்றும் மக்களிடமும் அதிக வரவேற்பைப் பெற்றது. இதற்காக எல்லா அரசுப் பள்ளிகளுக்கும் தேவையான கணிப்பொறி உபகரணங்கள் வழங்கத் தேவையான நிதி ஒதுக்கி கணிப்பொறிகள் வழங்கவும் பட்டன.
ஆட்சி மாற்றத்திற்குப் பின் 2011-ம் கல்வியாண்டில் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருந்ததே தவிர, மாணவர்களுக்கு எவ்வித பயனும் அளிக்கவில்லை. அரசு மற்றும் தனியாரின் எல்லா துறைகளும் நவீனமயமாக்கப்பட்ட (கணினி மய மாக்கப்பட்ட) இக்காலத்தில் கணினியின் அடிப் படை அறிவு மாணவர்களுக்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது.
எந்த தனியார் பள்ளியில் கணினி பாடம் கற்று கொடுக்கவில்லை.? முதல் வகுப்பிலிருந்தே கணினி பாடம் கற்றுக் கெடுகக்கப்படுகிறது அதற்கும் அரசு அங்கிகாரம் தருகின்றது .
மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.சி. போன்ற அனைத்து வகை பள்ளி களிலும் கணிப்பொறி பாடமானது கடந்த 15 ஆண்டுகளாக கற்பிக்கப்பட்டு வருகின்றது. மேலும் எல்லா மேல்நிலைப்பள்ளிகளிலும் கணிப்பொறி அறிவியல் ஒரு பாடமாக கடந்த 15 ஆண்டுகளாகக் கற்பிக்கப்பட்டு வருகின்றது.
ஆனால், சமச்சீர் கல்வி செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்புவரை கற் பிக்கப்படும் கணினி கல்வி அரசுப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அனை வராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் புத்தகங்களை மட்டும் இரண்டு கல்வியாண்டுகள் விநியோகித்து, கணினி கல்வியை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்காதது ஏன்?
மக்களின் அடிப்படைத் தேவைகளான எல்லா செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்ற நிலையில், தமிழக அரசு ஏற்கெனவே விநியோகம் செய்து வந்த புத்தகங்களைக் கூட கடந்த சில ஆண்டுகளாக நிறுத்திவிட்டது. இதுகுறித்து பெற்றோர்கள் மத்தியிலும், கல்வி யாளர்கள் மத்தியிலும்கூட போதுமான ஈர்ப்பைப் பெறவில்லை என்பது ஆச்சரியமானதே!
இவ்வளவுக்கும் கணினி அறிவியல் படித்த பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் 53670 பேர்களுக்குமேல் இருக்கிறார்கள். இவர்களைப் பயன்படுத்திக்கொண்டு, இந்த நவீன யுகத்தில் மிகவும் இன்றியமையாததான கணினிப் பயிற்சி யைக் கற்றுக் கொடுக்கவேண்டியது அரசின் கடமையாகும்.
"தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெ .குமரேசன் அனுப்பிய மடல் இங்கே வெளியிடப்படுகிறது"
இதில் ஏன் தமிழ்நாடு அரசு கருத்துச் செலுத்தவில்லை?
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண் ணிக்கை குறைந்து வருகிறது; அதன் காரணமாக அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்த நிலைக்கு மிக முக்கியமான காரணமே கணினிப் பயிற்சி போன்ற மிகவும் தேவையான பயிற்சியை அரசுப் பள்ளிகள் புறக்கணிப்பதுதானே?
தனியார்ப் பள்ளிகளில் மாணவர்கள் குவிகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் கணினிப் பயிற்சி போன்ற கல்விக்கு அப்பள்ளிகளில் முக்கியத்துவம் கொடுப்பதுதானே! கல்வி மானியக் கோரிக்கையின்போது, மூன்று சட்ட மன்ற உறுப்பினர்கள் இதுபற்றிப் பேசியும் பயன் இல்லை.
அரசுப் பள்ளிகளில்தான் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், முதல் தலைமுறையாக கல்விக் கூடங்களில் காலடி எடுத்து வைக்கும் வாய்ப்பு பெரும்பாலும் இருக்கிறது.
அப்படி இருக்கும்பொழுது கிராமப்புற ஒடுக்கப்பட்ட, ஏழை – எளிய குடும்பங்களைச் சேர்ந்த இருபால் மாணவர்களுக்குக் கணினிக் கல்வி அவசியம் அல்லவா? அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய கணினிப் பயிற்சி அவசியம் அல்லவா!
ஏன் கிராமப்புற ஏழை எளிய அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கணினி கல்வி கிடைக்க கூடாதா ?
அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தந்து ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாய பாடமாக கொண்டுவர வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை, எளிய, மாணவர்களின் நலனுக்காகவும் அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கிலும் அரசு பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டும் ஆரம்ப கல்வி முதல் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயக் பாடமாக கொண்டு வர வேண்டும். மெட்ரிக், CBSE பாடத்திட்டத்தில் ஆரம்ப கல்வியிலேயே கணினி அறிவியல் பாடம் உள்ளது.சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடத்தை நடப்பு கல்வி ஆண்டிலே நடைமுறைப்படுத்த வேண்டும்.
கணினி அறிவியல் பாடப்பிரிவு இல்லாத தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகள்.
மேல்நிலைப்பள்ளிகள் (ம) தற்போது தரம் உயர்த்தப்படும் 800-க்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் பல பள்ளியில் கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவு இல்லை . கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவை கொண்டு வரவேண்டும். பல பள்ளிகளில் கணினி ஆசிரியர்களே இல்லை. உலகமே கணினி மயமாக மாறிக்கொண்டு வரும் காலகட்டத்தில் கணினியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசு பள்ளியில் மாணவர்கள் அதிகம் கணினி அறிவியல் பாடத்தைத் தேர்வு செய்கின்றனர்.மாணவர்களின் விகிதம் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.
மத்திய அரசின் திட்டத்தின் கீழ்
புதிய கல்விக் கொள்கை மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை ஆரம்ப பள்ளி முதலே கட்டாயப்பாடமாக அறிவிக்கவேண்டும். இந்தியாவின் வாழும் கோடிக்கணக்காண கிராமப்புற ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர்.
பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமனம் செய்யவேண்டும் தமிழக அரசு.
கணினி இன்றியமையாத சூழலில் தொடக்க, நடுநிலை,உயர்நிலை பள்ளிக்கு குறைந்தது ஓர் கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்யவேண்டும்.
53670-க்கும் மேற்பட்ட பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களின் குடும்பங்கள் இன்று வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றன.
1992-ம் ஆண்டிலிருந்து இன்று வரை 53670 பேருக்கும் மேற்பட்ட பி.எட் கணினி ஆசிரியர்கள் உள்ளனர். அனைவரும் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள்.
1) TET, TRB போன்ற ஆசிரியர் தகுதித் தேர்வு இல்லை.
2) AEEO, DEO தேர்வுக்கு அடிப்படை கல்வி பி.எட் ஆனால் கணினி அறிவியலில் பி.எட் பட்டம் பெற்ற இந்த ஆசிரியர்களுக்கு அதிலும் வாய்ப்பு இல்லை.
3) “தொழிற்கல்வி” பாடங்களுக்கான “சிறப்பாசிரியர்” நியமனத்தில்கூட கணினி அறிவியல் பி.எட் படித்த பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டனர்.
4).அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி ,தனியார் பள்ளிகள் என எங்கு சென்றாலும் புறக்கணிக்கப்படுகின்றனர்.
"'அரசுப்பள்ளியின் சொத்து கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் தான் இவர்களுக்கு முறையான கல்வி வழங்க வேண்டமா இலவச கணினி ஆசிரியர்கள் மனுவை கூட நிராகரிப்பு செய்துவிட்டதான் வேதனை...""
திரு வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச்செயலாளர் ,
9626545446,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்.பதிவு எண்:655/2014.
மாநிலப் பொதுச்செயலாளர் ,
9626545446,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்.பதிவு எண்:655/2014.
No comments:
Post a Comment