சென்னை: தாழ்த்தப்பட்ட மாணவருக்கான இட ஒதுக்கீட்டில் 1ம் வகுப்பு மாணவனை பள்ளியில் சேர்க்க ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்கிய கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வரை சிபிஐ கைது செய்துள்ளது.
சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் கேந்திர வித்யாலயா பள்ளியின் முதல்வராக ஆனந்தன் என்பவர் உள்ளார். கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான இடம் கோரி மாணவனின் பெற்றோர் முதல்வரை அணுகியுள்ளனர்.
பெற்றோரிடம் பள்ளி முதல்வர் ஆனந்தன் ரூ. 1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு லஞ்சம் தர பெற்றோர் ஒப்புக் கொண்டுள்ளனர். பெற்றோர் இது தொடர்பாக சிபிஐயிடமும் புகார் அளித்துவிட்டு இன்று காலையில் முதல்வர் ஆனந்தனை சந்தித்து பணத்தை தர முடிவு செய்துள்ளனர். பள்ளி வளாகத்திற்குள்ளேயே உள்ள முதல்வரின் வீட்டில் வைத்து ரூ. 1 லட்சம் லஞ்சப்பணத்தை கொடுக்கும் போது சிபிஐ ஆனந்தனை கையும் களவுமாக பிடித்தது..
இதனையடுத்து ஆனந்தனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நேரம் தொடங்கியுள்ள சமயத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

No comments:
Post a Comment