மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Tuesday 20 March 2018

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை; கல்வித்தரம் எப்படி மேம்படும்?-அன்புமணி சாடல்..

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை; கல்வித்தரம் எப்படி மேம்படும்?-அன்புமணி சாடல்

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், கல்வித்தரம் எவ்வாறு மேம்படுத்தப்படும் என, பாமக. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (திங்கள் கிழமை) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

“வெறும் கைகளால் முழம் போடுவதைப் போல கல்வித்தரத்தை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் தமிழகத்தில் கல்வித்தரம் மேம்படுத்தப்படும் என வெற்று முழக்கத்தை பினாமி அரசு எழுப்பி வருகிறது. கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு அடிப்படைத் தேவையான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்குக் கூட பினாமி அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதுதான் கல்வித்தரம் குறைவதற்குக் காரணம் என்று பா.ம.க. குற்றம்சாட்டி வருகிறது. அக்குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்கள் உறுதி செய்துள்ளன. தமிழ்நாட்டில் 918 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கூடங்களில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்று கருப்பையா என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெற்ற புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்திருப்பதாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. இது புதிய செய்தி இல்லை என்றாலும், இதன் பின்னணியில் தமிழக அரசு காட்டி வரும் அலட்சியம் எவ்வளவு மோசமானது என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் வெளிப்படுத்தவே இச்செய்தியை சுட்டிக்காட்டுகிறேன்.

தமிழகத்தில் 884 உயர்நிலைப் பள்ளிகளிலும், 34 மேல்நிலைப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் இரு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக கிடப்பதுதான் கொடுமை ஆகும். கடந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் 900 உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. அவற்றில் 100 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அவற்றுக்கு பதிலாக, 150 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதனால் 950 உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ஆசிரியர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அப்பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. தமிழக அரசு நினைத்திருந்தால் அந்த வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவந்து பணியிடங்களை நிரப்பியிருக்கலாம். ஆனால், ஆட்சியாளர்கள் அதை செய்யவில்லை. அரசின் அலட்சியம் காரணமாக இரு ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 1000 பள்ளிகள் தலைமை ஆசிரியர்களின்றி தடுமாறுகின்றன.

அதுமட்டுமின்றி, மேல்நிலைப்பள்ளிகளில் 1640 ஆசிரியர் பணியிடங்கள், உயர்நிலைப்பள்ளிகளில் 2405 பணியிடங்கள் உட்பட 4963 பணியிடங்கள் காலியாக உள்ளன. வரும் மே மாதத்துடன் முடிவடையும் கல்வியாண்டின் இறுதியில் இது 10 ஆயிரத்தை நெருங்கக்கூடும். ஆனால், இந்த பணியிடங்களை நிரப்ப கடந்த இரு ஆண்டுகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்காமல் கல்வித் தரத்தை எவ்வாறு உயர்த்த முடியும்? மாணவர்களால் எவ்வாறு அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்வி கற்க முடியும்? ஆட்சியாளர்களின் இத்தகைய அலட்சியம் காரணமாகத் தான் ஒரு காலத்தில் அனைவரும் அரசு பள்ளிகளில் படித்த நிலை மாறி, இப்போது அரசு பள்ளிகள் என்றாலே மக்கள் விலகி, ஒதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அரசு பள்ளிகளை சீரழிப்பதில் ஆட்சியாளர்களின் கைங்கர்யம் இத்துடன் முடிவடைந்துவிடவில்லை. பள்ளிக் கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தென் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட 4742 ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது. இதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் ஒப்புக்கொண்டிருக்கிறார். நிர்வாக இட மாறுதல் என்ற பெயரில் பணம் வாங்கிக்கொண்டு ஆசிரியர்களுக்கு இட மாறுதல் வழங்கியதுதான் இந்த நிலைக்குக் காரணமாகும். ஒருபுறம் வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாத நிலையில், தென் மாவட்டங்களில் ஒரு பாடத்தை நடத்த பல ஆசிரியர்கள் உள்ளனர். கல்வித்துறையைப் பொறுத்தவரை இரு தமிழகங்கள் இருப்பதையே இது காட்டுகிறது.

பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதும், வட மாவட்டங்களில் ஆசிரியர்களே இல்லாமல், தென் மாவட்டங்களில் கூடுதலாக ஆசிரியர்கள் இருப்பதும் இப்போது புதிதாக ஏற்பட்ட சிக்கல் இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளாகவே இந்த நிலை காணப்படுகிறது. ஆனால், ஊழல் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தும் ஆட்சியாளர்கள் இதில் கவனம் செலுத்துவதில்லை. ஏழைகளின் கல்வி ஆதாரமாக அரசு பள்ளிகள் தான் திகழ்கின்றன. ஏழைகள் பயில்கிறார்கள் என்பதாலேயே அரசு பள்ளிகளை ஆட்சியாளர்கள் சீரழித்து விடக்கூடாது. நடப்புக் கல்வியாண்டு நிறைவுக்கு வரும் நிலையில், தென் மாவட்டங்களில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் மூலம் தேவைப்படும் இடங்களில் பணியமர்த்த வேண்டும். அதன்பிறகும் காலியாக உள்ள பணியிடங்களை போட்டித்தேர்வு மூலமும், தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்று பணிக்காக காத்திருப்பவர்கள் மூலமும் நிரப்ப வேண்டும்”
என அந்த அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

POPULAR POSTS