மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Wednesday 14 March 2018

கணினி ஆசிரியர்கள் வாழ்வில் பரிதாப நிலை! புதிய பாடத்திட்டமும் ஏமாற்றமே !

புதிய பாடத்திட்டமும் ஏமாற்றமே ! கணினி ஆசிரியர்கள் வாழ்வில் தொடரும் அவலநிலை மாற்றத்தை தருமா இனியாவது ???
   


புதிய பாடத்திட்டத்தில் பெயருக்காக மட்டும் இணைக்கப்படும் கணினி பாடம்.
ஆய்வகமும் ,அதற்கான முறையான ஆசிரியர்களும் இன்றி பெயரளவில் மட்டும் கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் கொண்டுவர இருக்கின்றது அரசு!!

 தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில் 3-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை, கணினி அறிவியல் பாடம் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாமல் பழைய நிலையில் உள்ள பாடத்திட்டத்தை புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கணினி ஆசிரியர்களுக்கு இச்செய்தி மகிழ்வை தந்தது; அடுத்த கணமே கணினி ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக அரசு பள்ளி *அறிவியல் ஆசிரியர்களுக்கு* கணினி பயிற்சி வழங்க முடிவு செய்தது 40,000 கணினி ஆசிரியர்களும் வாழ்வாதாரத்தை இழக்கும் விதமாக அமைந்துள்ளது அரசு..
இது எந்த விதத்தில் நியாயம்..??
 தமிழுக்கு-தமிழ் ஆசிரியர், ஆங்கிலத்திற்கு-ஆங்கில ஆசிரியர், கணிதத்திற்கு-கணித ஆசிரியர்… என மற்ற பாடங்களுக்கு அந்தந்த துறை சார்ந்த ஆசிரியர்கள் பணியில் இருக்கும்போது கணினி அறிவியலுக்கு கணினி ஆசிரியர்களை நியமனம் செய்யாமல், அறிவியல் ஆசிரியர்களுக்கு ஓர் நாள் பயிற்சி கொடுத்து  கணினி பாடத்தை கற்றுக் கொடுக்க நினைக்க முயற்சிப்பது எந்த விதத்தில் சரியாகும்..??
அரசு பள்ளிகளில் ஆசிரியர் ஆகிவிடலாம், என்ற கனவுகளுடன் கடன்பட்டு பி.எட்., படித்த 40,000-கும் மேற்பட்ட கணினி அறிவியல் பட்டதாரிகளை சபித்துவிட்டது தமிழக அரசு.
40,000 கணினி ஆசிரியர்கள் வாழ்வில் கண்ணீர் தந்த செய்தி:
இந்நிலையில், புதிய பாடத்திட்டத்தில் 3-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கணினி அறிவியல் பாடத்தை அறிவியல் பாடத்துடன் தகவல் தொழில்நுட்ப கல்வியாக இணைத்து வழங்கலாமா அல்லது துணை புத்தகமாக வழங்கலாமா என அதிகாரிகள் ஆலோசித்து அதற்கான கருத்து கேட்பும் நடைபெற்றது அதில் பலரும் கணினி பாடத்தை ஆறாவது பாடமாக கொண்டுவர பல கருத்துக்களை பதிவு செய்தனர் ஆனால் மக்களின் கருத்தும் இன்று காணல் நீர் ஆனது இன்று..
புதிய பாடத்திட்டம் வந்தால், கணினி பாடத்தை நடத்த அறிவியல் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது, பி.எட்., பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி.
தமிழகத்தில் கணினி ஆசிரியர்களின் நிலை…
மற்ற பாட ஆசிரியர்களுக்கு இல்லாத ஓர் உயரிய நிலை கணினி ஆசிரியர்களுக்கு மட்டும் உண்டு தமிழகத்தில்…
“கடந்த இரண்டு, மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரிகளுக்கு தமிழக அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்படும்” என்று முக்கிய கட்சிகள் வாக்குறுதிகள் அளித்துள்ளன… இதில், ஆளும் அரசும் அடக்கம். 
2006,2011ம்  ஆண்டு ஆளும் அரசு தேர்தல் அறிக்கையில் கணினி ஆசிரியர்களுக்கும் வாழ்வு கொடுக்கும் வண்ணம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது இன்று வரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்பதே உண்மை.மேலும்  ஆட்சிக்கு வந்ததும் வழக்கம்போல எங்களை மறந்துவிடுகிறார்கள். மாநிலம் முழுக்க 39,019 (as on 31-12-2016 RTI Report) பேர் இப்போது பி.எட்., படிப்பை முடித்துவிட்டு அரசு வேலை வழங்கும் என்று நம்பியிருந்த நிலையில் தமிழக அரசின் தொடர் புறக்கணிப்பு எங்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. 
மொத்தமாக 39,019 பேரும் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். இது தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவில் 2011ம் ஆண்டிலிருந்து  96 முறை கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஆனால் எந்த பலனும் இல்லை. பள்ளிக்கல்வித் துறையிலும் அதிகாரிகள் அனைவருக்கும் பலமுறை மனு அளித்துள்ளோம். அனைத்தும் நிரநிராகரிப்பு செய்துவிட்டது மேலும் இது *”அரசின் கொள்கைமுடிவு”* என்று கூறி  புறக்கணித்துவிடுகிறார்கள். கோரிக்கையை மட்டும் அல்ல எதிர்கால கல்வியும் சேர்த்து.
இறுதியாக எங்களுக்கு வேலை வழங்கக் கூடாது என்பதுதான் அரசின் கொள்கை முடிவா என்றால், அதற்கும் அவர்களிடம் பதில் இல்லை. 
தற்போது இருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் எங்களின் நிலையை விளக்கி 39-முறை கோரிக்கை மனு அளித்துள்ளோம். பள்ளி கல்வித்துறையில் உள்ள அனைவருக்கும் மனு கொடுத்தும் இன்று பயினல்லா நிலைக்கு எங்கள் வாழ்வு தள்ளப்பட்டு  உள்ளது.
இதுதான் தமிழக அரசின் கொள்கை முடிவா..??
மற்ற பாட ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி தந்து கணினி அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தால், அரசின் ஆசிரியர் பல்கலைக்கழகத்தில் (TNTEU) எதற்காக கணினி அறிவியல் பாடத்திற்கு பி.எட்..?? 
40,000 கணினி ஆசிரியர்கள் வேலையின்றி தவிக்கும் இந்த சோகத்தில் B.E., படித்தவர்களுக்கு பி.எட்., அங்கீகாரம் கொடுத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.
(குறிப்பு : B.E., பாடத்தில் எந்த பாடப்பிரிவை தேர்வு செய்து படித்திருந்தாலும் கணினி அறிவியல் பி.எட்., படித்தவர்கள் மட்டும் தான் இதனை பயில முடியும் என்பது கூடுதல் சிறப்பு). 
40,000 கணினி ஆசிரியர்களும் தனியார் பள்ளிகளில் கூட பணியாற்ற, தகுதியற்ற நிலைக்குக் கொண்டு சென்றதுதான் தமிழக அரசின் சாதனையா..?? இல்லை அரசின் கொள்கை முடிவா..??
கணினி அறிவியல் பாடத்தில் பி.எட்., படித்தவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு சலுகைகள்..
 தனியார் பள்ளிகளில் கூட பணி வாய்ப்புகள் இல்லை.
 ஆசிரியர்கள் தேர்வில் (TET, TRB) கணினி ஆசிரியர்கள் தொடர்ந்து புறக்கணிப்பு.
 AEEO, DEO தேர்வு எழுத முடியாத நிலையில் உள்ளோம்.
புதிய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்துடன் கட்டாயமாகும் கணினி அறிவியல் பாடத்திற்கு, பி.எட் படித்த கணினி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யமா மாணவர்கள் வாழ்வில் மாற்றத்தை விரும்பும் அரசு ??

வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.பதிவு எண் ®655/2014

No comments:

Post a Comment

POPULAR POSTS