கேரள அரசுப்பள்ளிகளில் 1முதல் 10ம் வகுப்பு வரை 6வது பாடமாக கணினி அறிவியல் கட்டாயம்
ஒழுகும் சாலைகள், உடைந்த நாற்காலிகள், அழுக்கடைந்த கழிப்பறைகள் மற்றும் அலட்சியமான ஆசிரியர்கள் ஆகியவை காலாவதியாகி விட்டன. அடுத்தநாளன்று தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதற்காக முந்தைய நாளே கண்ணூரில் உள்ள அரசுப்பள்ளியின் வாசலில் பெற்றோர்கள் தற்போது உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்
இடதுசாரி அரசாங்கத்தின் "பொதுக்கல்வி பாதுகாப்பு இயக்கம்" என்ற முதன்மைத் திட்டம்தான் இத்தகைய மாற்றத்திற்கான காரணமாகும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களின் உள்கட்டமைப்பு மற்றும் பயிற்றுவிப்புத்தரம் ஆகிய இரண்டையும் உலகத்தரத்திற்கு இணையாக உயர்த்துவதை இந்தஇயக்கம் இலக்காகக் கொண்டது. கடந்த ஆண்டில், வழக்கத்தை விட 1 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் அதிகமாக அரசுப்பள்ளிகளில் சேர்ந்தனர்.
நடப்பாண்டைப் பொறுத்தவரை, அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படும்போது இரண்டு லட்சம் அதிக மாணவர்கள் என்பதையும் தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எட்டாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான 45 ஆயிரம் வகுப்பறைகள் உயர்தர தொழில்நுட்பம் கொண்டவையாக மாற்றப்பட்டுள்ளன. பெரும்பாலான வேலைகள் நிறைவு பெற்று விட்ட நிலையில், இதன் பலன்களைஅனுபவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
மடிக்கணினி, மல்டிமீடியா ப்ரொஜெக்டர், காட்சிப்படங்களைத் திரையிடும் வகையில் வர்ணம் அடிக்கப்பட்ட சுவர்கள்,ஒலிபெருக்கிகள், தடையில்லா இணைய இணைப்பு மற்றும் சமாக்ரா என்ற இணையதளத்தை எப்போதும் பார்ப்பதற்கான வசதி ஆகியவை கிட்டத்தட்ட 3 ஆயிரம் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளில் செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment