ஆசிரியர்கள் நேரத்திற்கு பணிக்கு வராததால் பூட்டு போட்டு மாணவ-மாணவிகள் போராட்டம்!!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆசிரியர்கள் நேரத்திற்கு பணிக்கு வராததால்,பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளியைப் பூட்டு போட்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
விருதுநகர் மாவட்டம், சின்ன அத்திக்குளம் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த ஒருஆண்டுகளாக, ஆசிரியர்கள் சரிவர வருகைதரவில்லை எனக்கூறப்படுகிறது. மேலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமாகத்தான் வருகை புரிவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், மாணவர்களின் பெற்றோர்கள் பலமுறை ஆசிரியர்களிடம் எடுத்துச்சொல்லியும், ஆசிரியர்கள் முறைப்படி, பள்ளிக்கு வருகைதரப்படுவதில்லை எனப்புகார் எழுந்துள்ளது. இதைக்கண்டித்து, மாணவர்கள் தாமாக முன்வந்து, நடுநிலைப்பள்ளிக்கு பூட்டுபோட்டு, பள்ளி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசின் நியமனத்தில் 35 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் என்ற இலக்கே இருந்து வருகிறது என்றும், ஆனால், இங்கு 21 மாணவர்களுக்காக 5 ஆசிரியர்கள் இருந்தும், மாணவர்களுக்கு சரியானநேரத்தில் வருகைபுரிந்து கல்வி கற்பிக்காத சூழலால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment