மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Tuesday, 3 April 2018

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சட்ட விதிமுறைகள், அரசாணைகளுடன்.,

நடத்தை விதிகள் என்றால் என்ன?


அரசுப் பணியாளர்களுக்காக அரசு உருவாக்கியுள்ள
நடைமுறைகள் மற்றும் விதிகளை அவர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். சொத்து வாங்குதல், விற்றல், நிதி ஆதாரங்கள் உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை அரசுக்கு முறைப்படி தெரிவித்த பின்னரே மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை பணிபுரிபவர்கள் கடைபிடிப்பதற்காக தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள், 1976 உருவாக்கப்பட்டது.

இந்த விதிகள் அரசுப் பணியில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும். தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதி 2(5) &  (6) ன் கீழ்க்கண்டவர்கள் குடும்ப உறுப்பினர்களாக கருதப்படுவார்கள்.

தந்தை / வளர்ப்பு தந்தை

தாய் / வளர்ப்பு தாய்

கணவன்

மனைவி

மகன் / வளர்ப்பு மகன்

மகள் / வளர்ப்பு மகள்

சகோதரன்

சகோதரி

மனைவியின் தாய் மற்றும் தந்தை

கணவரின் தாய் மற்றும் தந்தை

சகோதரனின் மனைவி

சகோதரியின் கணவர்

மகளின் கணவர்

மகனின் மனைவி

இந்த உறவுமுறைகள் அனைத்தும் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியரின் குடும்ப உறுப்பினர்களாகவே கருதப்படுவர்.

உயர்கல்வி பெறுவது தொடர்பான அரசாணை :

தொலைதூரக் கல்வி, மாலைநேரக் கல்லூரி மற்றும் தனியாக படிக்க அரசு ஊழியர், தன் துறை தலைவரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி விண்ணப்பம் கிடைத்த 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் அந்த விவரங்கள் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். 15 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படவில்லை என்றால் கல்வி பயில்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அரசு ஊழியர் கருதிக் கொள்ளலாம்.

அரசாணை எண்  Ms. No - 200, P & A. R, dt - 19.401996 ன்படி அரசுப் பணியை தவிர எந்த பணியையும் அரசு ஊழியர் ஏற்கக்கூடாது.

அரசு ஊழியர் எவரும் பகுதி நேர வேலை எதையும் செய்யக்கூடாது. ( G. O. Ms - 893,P &  A. R, dt - 22.9.1983 மற்றும்  Rule 8(1)(aa)).ஆனால் Provision 6 under Rule 8(1)(a) ல் கண்டுள்ள விலக்களிப்பின்படி அரசு ஊழியர் ஒருவர் கல்வி நிலையங்களில் விரிவுரையாற்றி அதற்கென மதிப்பூதியம் பெறலாம்.

தனியாக வகுப்பு நடத்துதல் :

எந்த ஆசிரியரும் தனிவகுப்பு(Tution) நடத்தக்கூடாது. Tution  நடத்தும் எண்ணத்துடன் மாணவரிடமோ, அவருடைய பெற்றோரிடமோ அல்லது பாதுகாவலரிடமோ எந்த உறவையும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. இருப்பினும் பணம் எதுவும் பெறாமல் மாணவர்களுக்கு Tution எடுக்க தடை ஏதும் இல்லை. (Rule 6(17)).

விஞ்ஞானம், அறிவியல், இலக்கியம், கலை போன்ற பணிகளில் பங்கேற்பு :

அலுவலக வேலைக்கு பாதிப்பு ஏற்படாமல் ஒருவர் விஞ்ஞானம், அறிவியல், இலக்கியம், கலை போன்ற பணிகளில் பங்கேற்கலாம். ஆனால் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அலுவலகத் தலைவர் அறிவுறுத்தினால் அதுபோன்ற
வேலைகளில் ஈடுபடக்கூடாது. (Provision 1 under rule 8(1)(a)).

அசையாச் சொத்து தொடர்பான விதிகள் :

அரசு ஊழியரின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் சொந்த வருவாயிலிருந்து ஒரு சொத்தை கையகப்படுத்துவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ எவருடைய அனுமதியும் பெறத் தேவையில்லை. ஆனால் அரசு ஊழியரே குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ஒரு சொத்தை கிரையமாக பெற்றால் அதற்கு துறைத் தலைவரின் அனுமதியை பெற வேண்டும். ( G. O. Ms - 3158, Public (service - A) Dept, dt - 27.9.1974).

அரசு வேலையில் இருக்கின்ற கணவன், மனைவி இரு சேர்ந்து ஒரு சொத்தை கிரையம் வாங்கினால் அதன் விவரத்தை துறைத் தலைவருக்கு இருவரும் தனித்தனியாக தெரிவிக்க வேண்டும். ( Govt. Lr. No. 29546/80-4 P & A. R, dt - 22.10.1980).

மூதாதையர் சொத்து ஒன்று வாரிசுரிமையின் படி இறங்குரிமையின் மூலம் கிடைக்கும் தருவாயில் அந்த நிகழ்வை துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டாம். சொத்து அறிக்கையில் மட்டும் காட்ட வேண்டும். (Rule 7(3).

அரசு ஊழியர் பணிபுரியும் மாவட்டத்தில் எந்த சொத்தையும் கையகப்படுத்தக்கூடாது. முன்னர் பணிபுரிந்த மாவட்டமாக இருந்தால் இடம் மாறுதல் பெற்று 2 ஆண்டுகள் கடந்த பின்னர் தான் சொத்து ஒன்றினை கையகப்படுத்த வேண்டும் . ( Rule 7(14).

இருப்பினும் வீடு அல்லது வீட்டுமனை ஒன்றினை பணிபுரியும் அல்லது பணிபுரிந்த மாவட்டத்தில் வாங்கவே அல்லது விற்கவோ தடையில்லை. (Provision under rule 7(14)(a).

வருவாய்த்துறை அல்லது நிதித்துறையில் பணிபுரிபவர்கள் அத்துறையில் நடத்தப்படும் அசையும் அல்லது அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கையகப்படுத்தக்கூடாது. (Rule 7(16).

Record Sheet அல்லது Personal File - ஐ பராமரித்து வரும் அதிகாரி ஊழியர்களின் சொத்து விவரங்களையும் ஒரு பதிவேட்டில் பதிவு செய்து ( Rule 7(9).

கீழே குறிப்பிட்டுள்ள தொகைக்கும் அதிகமாக சொத்து வாங்கினாலோ அல்லது விற்பனை செய்தாலோ துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த Rule 7(2) as amended in G. O. Ms. No - 39, P & A. R. dt - 9.3.2010.

A Group Employees may Purchase upto Rs. 80,000/-

B Group Employees may Purchase upto Rs. 60,000/-

C Group Employees may Purchase upto Rs. 40,000/-

D Group Employees may Purchase upto Rs. 20,000/-

அரசு ஊழியர்கள் ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒருமுறை, 5 ஆண்டுகள் முடிவில் சொத்து அறிக்கை ஒன்றை துறைத் தலைவரிடம் தாக்கல் செய்ய வேண்டும். ( Rule 7(3).

அரசு ஊழியரின் அரசியல் செல்வாக்கு :

அரசு ஊழியர்கள் பொதுவாக அரசியல் செல்வாக்கு கொண்டு வருதல் அல்லது அமைச்சர்களிடம் முறையிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அரசு ஊழியர் எவரேனும் அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அவரை அலுவலகத் தலைவர் கூப்பிட்டு தவறு என்று அறிவுறுத்த வேண்டும். அந்த அறிவுரையை பொருட்படுத்தாமல் இரண்டாவது முறையாக ஒரு அரசு ஊழியர் திரும்பவும் அரசியல் செல்வாக்கை கொண்டு வந்தால் அவரை துறைத் தலைவர் எச்சரிக்கை செய்ய வேண்டும். அதற்கு பின்னரும் அரசு ஊழியர் தொடர அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அந்த அலுவலர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். (Govt. Letter No  9637/A/95-1,P & A. R. (A) Dept, dt - 24.4.1995).

அலுவலக பிரச்சினை தொடர்பாக அரசு ஊழியர் ஒருவர் அமைச்சரை நேரில் சந்தித்து முறையீடு செய்யலாம். பின்னர் அந்த முறையீடு விவரத்தை அலுவலகத் தலைவர் வழியாக துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். (G. O. Ms. No - 9, P & A. R (A) Dept, dt - 2.10.1985).

No comments:

Post a Comment

POPULAR POSTS