டெல்லி: காவிரி விவகாரத்துக்காக தனது பதவியை ராஜினாமா செய்த 2-ஆவது அரசியல்வாதியாக முத்துகருப்பன் அறியப்படுகிறார்...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது 100 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போராட்டம். மத்தியில் யார் தலைமையில் ஆட்சி நடைபெற்றாலும் காவிரிக்காக தமிழக அரசு கர்நாடகத்துடன் போராடும் நிலையே உள்ளது.
காவிரி நீரை பெற்று தரவும், மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் அரசியல்வாதிகள் அரசியல் செய்து வருகின்றனர்.
ராஜினாமா
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் என்று பொதுமக்கள், நடுநிலையாளர்களின் கோரிக்கை ஆகும். ஆனால் பதவியை விட்டு கொடுக்க மனமில்லாத அரசியல்வாதிகள் போராட்டம், மிரட்டல் என ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யாமல் உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கெடுவை வீணடித்துவிட்டனர்..
ராஜினாமா செய்த அரசியல்வாதி
இந்நிலையில் காவிரி நீர் இல்லாத நிலை பதவி ஒரு கேடா என்று ஆவேசமடைந்த முத்துகருப்பன் கடந்த வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதன்படி இன்று குடியரசு துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
முத்துகருப்பன் 2-ஆவது அரசியல்வாதி
காவிரிக்காக முத்துகருப்பன் தனது பதவியை உதறியதன் மூலம் அவரது நோக்கம் பதவியல்ல, மக்கள் நலன்தான் என்பதை நிரூபித்துவிட்டார். இதன் மூலம் காவிரிக்காக மக்கள் நலனுக்காக பதவியை துறந்த 2-ஆவது அரசியல்வாதியாக முத்துகருப்பன் மக்கள் மனதில் இடம்பெறுவார்
No comments:
Post a Comment