அரசு முடிவால் ஆசிரிய, மாணவர்கள் ஏமாற்றம்...
புதிய பாடத்திட்டத்தில் பல மாற்றங்களை கொண்டுவரும் அரசு கணினி பாடத்தை அறிவியலின் துணைப் பாடமாக கொண்டுவர உள்ளது .நிதி பிரச்சனை காரணம் காட்டி முறையான ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் ஆய்வாகங்கள் அமைக்காமல் , செய்முறை பயிற்சி இன்றி வெறும் பாடத்தை வைத்து மட்டும் பெயரளவில் இணைத்து என்ன பயன்.
எந்த தனியார் பள்ளியில் கணினி பாடம் கற்று கொடுக்கவில்லை.? முதல் வகுப்பிலிருந்தே கணினி பாடம் கற்றுக் கெடுகக்கப்படுகிறது அதற்கும் அரசு அங்கிகாரம் தருகின்றது .
ஏழைக்கு கல்வி வழங்குவதில் ஏன் இந்த பாரபட்சம்(Partiality)?
அரசுப்பள்ளியின் சொத்து கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் தான் இவர்களுக்கு முறையான கல்வி வழங்க வேண்டமா இலவச கணினி ஆசிரியர்கள் மனுவை கூட நிராகரிப்பு செய்துவிட்டதான் வேதனை
கணினியே இல்லாமல் கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் வெறும் பெயருக்காக மட்டும் அறிவியல் பாடத்துடன் இணைக்கும் தமிழக அரசு.புதிய பாடத்திட்டமும் பொய்த்து போனது ..
அறிக்கையில் மட்டும் கணினி பாடம் அரசுப்பள்ளியில் இல்லாத நிலை இன்றும் !
மடிக்கணினி மட்டும் இலவசமாக கொடுக்கும் அரசு அதற்கான கல்வியை மட்டும் கொடுக்க மறுப்பது ஏன்??? அதற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை என்பதுதான் அதில் வேதனை!
மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுப்பது வரவேற்புக்குரியது என்ற போதிலும் மாணவர்களுக்கு முறையான கணினி கல்வியை வழங்கினால் மடிக்கணினியை தனது சுய சம்பதியத்திலே வாங்கும் நிலையை தமிழக அரசு என்று ஏற்படுத்த போகிறது.கல்வியில் இலவசத்தை தவிர்த்து அதற்கான கல்வியை மட்டும் இலவசமாக தாருங்கள் அரசுப்பள்ளியும்,மாணவர்கள் மேன்மை அடைவர்கள்.
பல இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி மட்டும் இலவசம் பள்ளி ஆய்வகத்தில் கணினி எங்கே??
இந்த திட்டம் 2011-2012ஆம் கல்வி ஆண்டிலிருந்து இன்று வரை நடைமுறையில் இருந்த போதிலும் தமிழக அரசுப்பள்ளியில் மட்டும் கணினிப்பொறி இல்லா நிலையை உருவாக்கிவிட்டது அரசு.
கடந்த 2016-17ம் கல்வியாண்டில் மட்டுமே 5.6 இலட்சம் மடிக்கணினிக்கு ஒப்பந்தப்புள்ளியை வழங்கியுள்ளது.ஒரு மடிக்கணினியின் சராசரி விலை ரூ 16,785 ஆகும். மத்திய அரசின் தகவலின் படி தமிழக அரசுப்பள்ளியில் 36.72% கணினிகள் உள்ளன என்ற அதிர்ச்சி தகவலை தந்துள்ளது வேதனைக்குறியது.
தொடக்க,நடுநிலை,உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகள் என தமிழகத்தில் 50000 அரசுப்பள்ளிகள் உள்ளன பள்ளிகளில் 10கணினியை கொண்ட ஆய்வகம் அமைத்திருந்தால் அதாவது (50000*10=500000கணினி )ஒரு வருடாத்திற்கு இலவசமாக வழங்கும் மடிக்கணினியை அரசுப்பள்ளிக்கு வழங்கியிருந்தால் தமிழகம் 100% அரசுப்பள்ளிகள் கணினி பள்ளியாக மாற்றம் பெற்று இருக்கும்.
No comments:
Post a Comment