கரும்பலகையில் கணினிபாடம் நடத்திய கானா நாட்டு ஆசிரியருக்கு கம்ப்யூட்டர் வழங்கிய இந்திய நிறுவனம்..
ஆப்பிரிக்க நாடான கானாவில் ஆசிரியர் ஒருவர் கணினி குறித்து மாணவர்களுக்கு கணினி இல்லாமல் வகுப்பு எடுத்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
இதையடுத்து, இந்தியாவைச் சேர்ந்த கனிணி நிறுவனம் அந்த பள்ளிக்கு கம்ப்யூட்டர்களை இலவசமாக அளித்துள்ளது
கானா நாட்டில் செக்யிடோமேஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் அப்பையா அகோடோ. இவர் அங்குள்ள பெட்டாநேஸ் ஜூனியர் உயர்நிலைப்பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளியில் கம்யூட்டர் வாங்கும் அளவுக்கு வசதி இல்லாத காரணத்தால், கரும்பலகையில், ‘விண்டோஸ் வேர்ட்’ குறித்த படத்தை வரைந்து அதன் மூலம் பாடம் நடத்தி வந்தார். ஏறக்குறைய 2011ம் ஆண்டில்இருந்து இதே முறையை அப்பையா பின்பற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், மாணவர்களுக்கு ‘விண்டோஸ் வேர்ட்’ குறித்து கரும்பலகையில் வரைந்து பாடம் எடுக்கும் காட்சியை வீடியோவா எடுத்து சமூக வலைதளத்தில் அப்பையை பதிவேற்றம் செய்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
இந்தக் காட்சியை பேஸ்புக் மூலம் இந்தியாவின் ‘என்ஐஐடி’ கம்யூட்டர் கல்வி நிறுவனம் கவனித்துள்ளது. கானாவில் என்ஐஐடி நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து, அந்த பள்ளிக்குச் சென்று ஆசிரியர் அப்பையாவை பாராட்டி என்ஐஐடி நிறுவனம், மாணவர்களுக்கு உண்மையான கணினி மூலம் கல்வி கற்க 5 கம்ப்யூட்டர்கள், ஒரு லேப்டாப், கணினி பாடப்புத்தகங்களை இலசமாக அளித்தது.
இது குறித்து அக்ரா நகரில் உள்ள என்ஐஐடி மையத்தின் மேலாளர் ஆஷிஸ் குமார் கூறுகையில்,’ பேஸ்புக் மூலம் அப்பையா பதிவிட்டிருந்த வீடியோவைப் பார்த்தோம். மாணவர்களுக்கு அவர் ஈடுபாட்டுடன் கல்வி கற்பித்து கொடுக்கும் முறையை பார்த்து வியப்படைந்தோம். இதையடுத்து அந்த பள்ளிக்கு உதவும் வகையில், கம்ப்யூட்டர்களை இலசமாக அளித்திருக்கிறோம். பள்ளிக்கூடத்துக்கு புதிதாக கம்ப்யூட்டர் அளிக்கப்பட்ட செய்தியை மாணவர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்’ எனத் தெரிவித்தார்..
குறிப்பு:
இந்ததியாவில் தமிழகத்திற்கு உதவி வேண்டி:
புதிய பாடத்திட்டத்தில் பல மாற்றங்களை கொண்டுவரும் அரசு கணினி பாடத்தை அறிவியலின் துணைப் பாடமாக கொண்டுவர உள்ளது .நிதி பிரச்சனை காரணம் காட்டி முறையான ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் ஆய்வாகங்கள் அமைக்காமல் , செய்முறை பயிற்சி இன்றி வெறும் பாடத்தை வைத்து மட்டும் பெயரளவில் இணைத்து என்ன பயன்.
எந்த தனியார் பள்ளியில் கணினி பாடம் கற்று கொடுக்கவில்லை.? முதல் வகுப்பிலிருந்தே கணினி பாடம் கற்றுக் கெடுகக்கப்படுகிறது.
ஏழைக்கு கல்வி வழங்குவதில் ஏன் இந்த பாரபட்சம்(Partiality)? அரசுப்பள்ளியின் சொத்து கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் தான் இவர்களுக்கு முறையான கல்வி வழங்க வேண்டமா இலவச கணினி ஆசிரியர்கள் மனுவை கூட நிராகரிப்பு செய்துவிட்டதான் வேதனை ..
இலவச கணினி ஆசிரியர் மனு நிராகரிப்பு..
No comments:
Post a Comment