கடலூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கான அரசு பயிற்சி மையத்தில் பயின்றவர்களில் 20 சதவீதம் பேர் மட்டுமே அந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது.http://csthalaimurai.blogspot.in
மருத்துவக் கல்வி பயில வேண்டுமெனில் பிளஸ்-2 முடித்த பிறகு மத்திய அரசால் நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வை மாணவ, மாணவிகள் எழுத வேண்டும். இதில் தேர்ச்சி பெற்றவர்களே மதிப்பெண் அடிப்படையில் http://csthalaimurai.blogspot.in
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்தத் தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு உள்ள நிலையிலும், கடந்தாண்டு இந்தத் தேர்வு முறையே கடைப்பிடிக்கப்பட்டது. நிகழாண்டு இந்தத் தேர்வு மே 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தேர்வை தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் 412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு, பிளஸ்-2 அறிவியல் பாடம் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி கடலூர் மாவட்டத்தில் 14 சிறப்பு நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டன. இதில், 1,962 பேர் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தனர்.
இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக, ஒவ்வொரு பாடத்துக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்புப் படி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், இந்தத் தேர்வை எழுதுவதற்காக அரசின் சிறப்புப் பயிற்சி பெற்று வந்தவர்களில் 396 பேர் மட்டுமே தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது.
http://csthalaimurai.blogspot.in
இது பயிற்சி பெற்றவர்களில் வெறும் 20.18 சதவீதம் மட்டுமே ஆகும். இந்தப் பயிற்சிக்காக ஒவ்வொரு மாணவருக்கும் அரசு சில ஆயிரங்களை செலவு செய்துள்ள நிலையில், தேர்வுக்கு 20 சதவீதத்தினர் மட்டுமே விண்ணப்பித்துள்ளது கல்வியாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே கல்வியில் பின்தங்கிய மாவட்டமான கடலூரில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசு, அரசு உதவிப்பெறும் மாணவர்களின் எண்ணிக்கைக் குறைவு தொடர்பாக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். மாணவ, மாணவிகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமென கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
http://csthalaimurai.blogspot.in
தற்போது விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே ஏப்.6-ஆம் தேதி முதல் முழுநேரமாக பயிற்சி வழங்கப்படுமென கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், அவர்களுக்கு தமிழக அரசின் இலவச மடிக் கணினி திட்டத்தின்கீழ் உடனடியாக மடிக் கணினி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

No comments:
Post a Comment