கல்வி, வேலைவாய்ப்பு
ஆலோசனை பெற கல்வி வழிகாட்டி உதவி மையம் "14417".
கணினி ஆசிரியர்கள் : தமிகத்தின் புதிய பாடத்தில் கணினி அறிவியல்பாடத்தின் நிலை பற்றியும்,தங்களின் நிலைபற்றியும் தங்கள் கருத்துக்களை தவறாமல்"14417" என்ற எண்ணிற்கு பதிவு செய்ய வேண்டுகிறேன்.
மாணவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனைகளை பெற கல்வி வழிகாட்டி உதவி மைய சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார். 2017-18 பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இதர கல்வி சார்ந்த துறைகளின் தகவல்கள், தெளிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் வழியாக தொடர்பு கொள்ளும் வழிகாட்டி உதவி மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 2 கோடி செலவில், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இதர கல்வி சார்ந்த துறைகளின் தகவல்கள், தெளிவுரைகள் மற்றும் ஆலோசனை பெறுவதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் 14417 வழியாக தொடர்பு கொள்ளும் 24 மணிநேர கல்வி வழிகாட்டி உதவி மைய சேவையை தலைமை செயலகத்தில் முதல்வர்
துவக்கி வைத்தார்.
No comments:
Post a Comment