1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள லிங்க், பார்கோடுடன் 100 தலைப்பில் 1.70 கோடி புத்தகங்கள்: மே மாதம் பள்ளிகளுக்கு வழங்க முடிவு
தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டம் மாற்றிஅமைக்கப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து இருந்தார்.
பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு 100 தலைப்புகளில் 1.70 கோடி பாடநூல் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் கழகம் தொடங்கியுள்ளது. பிராந்திய மொழிகளிலும் பாடப்புத்தகம் அச்சிடப்படுகிறது.
இந்த புதிய புத்தம் வழவழப்பான அட்டை, திடமான தாளில் பல நிறங்களில் படங்கள் என்று மாணவர்களை கவரும் வகையில் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் பருவத்துக்கான புத்தகத்தை பொறுத்தவரையில் பாடப்புத்தகங்கள் எண்ணிக்கையில் 1 முதல் 3 வரை இருக்கும். பாடப்புத்தகங்களின் உள்ளே இடம் பெறும் பாடங்களுக்கு ஏற்ற பல நிறங்களில் படங்கள் அச்சிடப்படுகிறது. அதற்கு அருகில் ‘கியூ ஆர்’ எனப்படும் ‘கியூக் ரெஸ்பான்ஸ் கோட்’ அச்சிடப்படுகிறது.
அந்த படங்கள் குறித்து கூடுதல் தகவல் வேண்டும் மாணவர்கள் அந்த கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து செல்போனில் பார்த்தால் அந்த படங்கள் குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.
மேலும், முப்பரிமாணத்தில்(3டி) அந்த படத்தையும் பார்க்க முடியும். அதுமட்டும் இல்லாமல் சில இடங்களில் இணைய தளங்களின் லிங்க்-கும் குறிப்பிடப்படும். அதைக் கொண்டு மாணவர்கள் அந்த இணைய தளத்துக்கு சென்று கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்
மேலும், 9, 10, பிளஸ் 1 வகுப்பு பாடப்புத்தகங்களில், ஆங்காங்கே, மேற்படிப்பு குறித்த தகவல்களும் அச்சிட்டு வழங்கப்பட உள்ளன. இந்த பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி மே மாதம் இரண்டாவது வாரத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பணி முடிந்ததும் மே இறுதி வாரத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று சேரும்.
வழக்கம் போல பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்கப்படும். மற்ற வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் சுமார் 4.50 கோடி அச்சிடும் பணியும் நடக்கிறது
*�� கணினி அறிவியல் பாடத்திற்கு பகுதிநேர ஆசிரியர்களாக(Part Time Teachers PT) தற்போது வரை தமிழகம் முழுவதும் எத்தனை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்? CM CELL REPLY:Date: 26/03/2018*
ReplyDelete*�� Number of Temporary Computer Part Time Instructors Working in Tamilnadu Govt Schools: CM CELL REPLY: ��Date: 26/03/2018*
›
�� https://kaninikkalvi.blogspot.in/2018/03/part-time-teachers-pt-number-of_27.html?m=1
*⚠More Official Computer Science B.Ed Related News Visit only* - ��kaninikkalvi.blogspot.in��
*��Share This All CS B.Ed Graduates ����*